• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறலுக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துக.!

Recommended Posts

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக இங்கிலாந்துடன் கலந்துரையாடல்.

images-12.jpg"

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இந்த சந்திப்பை அடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் கரேத் பேய்லி சந்தித்து பேசினார்.

இதன்போது பாதுகாப்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகள் குறித்தும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.vanakkamlondon.com/நல்லிணக்கம்-மற்றும்-பொறு/

டிஸ்கி

என்ன ராஜதந்திரமோ போங்கப்பா .😢

Share this post


Link to post
Share on other sites

பிரிட்டிஷ் பிர­தி­நிதி கரேத் பெய்லி இலங்­கைக்கு விஜயம்|தமிழ் மக்கள்அபிலாஷைக்கு தீர்வு தருமா ?

hehe.jpg

இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்­கின்ற   பிரிட்­டனின்  வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­ல­கத்தின் தெற்­கா­சிய  பிராந்­தி­யத்­திற்­கான பணிப்­பாளர் கரேத் பெய்­லியை நேற்­றைய தினம்   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர்   கொழும்பில்  சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே இந்த விடயம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்­கைக்­கான பிரிட்டிஷ் உயர்­தா­னி­கரின்  இல்­லத்தில்   நேற்று   முற்­பகல் 11 மணி முதல் 12 மணி­வரை நடை­பெற்ற   இந்த சந்­திப்பில் ஜெனிவா பிரே­ரணை மற்றும் அதன் அமு­லாக்கம்  தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பு அவர்­களின் அபி­லா­ஷைகள்   உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக விரி­வாக  பேச்சு நடத்­தப்­பட்­டது.

 எதிர்­வரும் மார்ச்  மாதம் ஜெனிவா மனித உரிமை பேர­வையின்  43 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை விவ­காரம் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் அவ­தா­னிப்பு அறிக்கை ஒன்றை வெ ளியி­ட­வுள்ளார். இந்த சூழலில் ஜெனி­வாவில்  இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள   பிரே­ரணை அமு­லாக்­கத்தின் அடுத்த கட்டம் தொடர்பில்  இலங்கை அர­சாங்­கத்­தி­னதும்   தமிழ் மக்­க­ளி­னதும்  நிலைப்­பா­டுகள் மற்றும்  எதிர்­பார்ப்­புக்கள்  என்­ப­வற்றை ஆராயும் நோக்­கி­லேயே   பிரிட்டிஷ் பிர­தி­நிதி  கரேத் பெய்லி இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருக்­கின்றார்.

 அதன்­படி   இலங்கை வந்­துள்ள பிரிட்டிஷ் பிர­தி­நி­தியை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  பிர­தி­நி­திகள்  சந்­தித்து ஜெனிவா விவ­காரம் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து விரி­வாக  பேச்சு நடத்­தி­யி­ருக்­கின்­றனர்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அர­சாங்­க­மா­னது  ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட   இலங்கை தொடர்­பான 30/1 என்ற பிரே­ர­ணையை  முழு­மை­யா­கவும் விரை­வா­கவும்  அமுல்­ப­டுத்த வேண்டும். இந்த  பிரே­ர­ணை­யி­லி­ருந்து அர­சாங்கம் ஒரு­போதும்  விலக முடி­யாது. அவ்­வாறு அர­சாங்கம் வில­கு­வ­தாக அறி­வித்தால் அடுத்த கட்­ட­மாக நாங்கள் சர்­வ­தேச சமூ­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி  தீர்­மானம் எடுப்போம்

http://www.vanakkamlondon.com/பிரிட்டிஷ்-பிர­தி­நிதி-க/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this