தமிழ் சிறி

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம்

Recommended Posts

திமுக புறக்கணிப்பு

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம்

திமுக எம்பி டி.ஆர்.பாலு சொல்வதை பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது உறுதியாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றவில்லை என்று கேஎஸ் அழகிரி சொன்னது பெரிய அளவில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்கு திமுக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

அதேநேரம் டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை இதற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். எனினும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.

இதனால் திமுக காங்கிரஸ் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதோ என்று தகவல்கள் பரவியது. ஏனெனில் நேற்று டெல்லியில் தான் திமுக எம்பி டிஆர் பாலு இருந்தார். விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பங்கேற்றபோதும் திமுக சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய கூட்டத்தில் யாரும் பங்கேற்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கைவிட்டதே இந்த பிரச்சனைக்கு காரணம்.

காங்கிரஸ் இப்படி பொதுவில் பேசி இருக்க கூடாது. ஏதாவது மனக்கசப்பு இருந்திருந்தால் தனியாக பேசி இருக்கலாம். மாறாக காங்கிரஸ் பொதுவில் அறிக்கை வெளியிட்டு, திமுக குறித்து பேசி இருக்க கூடாது என்று ஸ்டாலின் கருதினாராம். அதனால் தான் நேற்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லையாம்.

இது தொடர்பாக திமுக எம்பி டிஆர்பாலு கூறுகையில், கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இதனிடையே கேஎஸ் அழகிரி நேற்று மாலையே திமுகவை சமாதானம் செய்யும் விதமாக அறிக்கை வெளியிட்டார். ப சிதம்பரமும் ஸ்டாலினை சமாதானம் செய்யும் வகையில் கேஎஸ் அழகிரியின் அறிக்கைக்கு புதிய விளக்கம் கொடுத்தார். எனினும் இதுவரை சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-congress-alliance-cracks-dmk-mp-tr-balu-says-if-any-problem-to-told-to-mk-stalin-374059.html

Share this post


Link to post
Share on other sites

0.jpg

ஓம்.. உலக மகா விரிசல் .. இயக்குனர் சங்கர் மனது வைத்தால் அடைப்பை சரி செய்ய வாய்ப்பு உள்ளது..😢

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

தமிழ்நாடு அரசியல்: திமுக - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குப் போதிய இடங்கள் ஒதுக்கப்படாதது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்த அறிக்கையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் போதுமான இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லையெனக் கூறி, மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியும் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் மாவட்ட அளவில் பேசி இடங்களைப் பெற்றுக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் அந்த முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லையென குற்றம்சாட்டிய அந்த அறிக்கை, 303 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் தங்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகக் கூறியது.

மேலும் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு பதவிகூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லையென்றும் இது கூட்டணி தர்மத்திற்கு முரணானது புறம்பானது என்றும் அந்த அறிக்கை கூறியது.

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?

இது எதிர்பார்த்ததைப் போலவே தி.மு.க. தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அழகிரி, அந்த விவகாரம் முடிந்துபோன ஒன்று எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 13ஆம் தேதியன்று தில்லியில் காங்கிரஸ் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இதனால், உள்ளாட்சித் தேர்தலையடுத்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் தொடர்ந்து பெரிதாகிறது என்ற விவாதங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், செவ்வாய்க் கிழமையன்று தில்லி சென்ற மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே,எஸ். அழகிரி சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

அதே நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு, தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை விளக்கினார்.

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"அந்த அறிக்கையைப் பார்த்த கழகத் தோழர்கள், நேரில் பார்க்கும்போதும் போனில் பேசும்போதும் சங்கடமாக இருக்கிறது. அவர்கள் நம் கூட்டணியில்தான் இருக்கிறார்களா என்று கேட்டார்கள். இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினேன். அந்த அறிக்கையில் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்கள். அதனை எங்கள் தலைவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாகக் கருதினோம். அதனால், சிஏஏ எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றபடி, கூட்டணி குறித்து காலம் பதில்சொல்லும்," என்று கூறினார்.

இதற்குப் பிறகு, தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரியிடம் டி.ஆர். பாலுவின் கருத்து குறித்து கேட்டபோது, "அவரது கருத்துக்கு பதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒரு குடும்பம் இருந்தால், ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும். வருத்தமும் கோபமும் கிடையாது. கூட்டணியில் சலசலப்பே இல்லை," என்று தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தி.மு.க. ஏன் வரவில்லை என்பது குறித்து டி.ஆர். பாலுதான் கூறவேண்டும் என்று கூறிய கே.எஸ். அழகிரி, இந்தப் பஞ்சாயத்துத் தேர்தல் விவகாரம் எந்த காலத்திலும் எங்களுக்கும் தி.மு.கவுக்கும் உள்ள உறவை எப்போதும் பாதிக்காது என்றும் தங்கள் இணைப்புக்குக் காரணம், இதன் பின்னாலிருக்கும் கொள்கைதான் என்றும் தெரிவித்தார். ஆகவே, கூட்டணி தொடருமென்றும் கூறினார்.

2004ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையிலும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாகச் செயல்பட்டன. ஈழப் பிரச்சனையை அடுத்த, அந்தக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது. இதற்குப் பிறகு, 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. பிறகு மீண்டும் 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றின.

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2019ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றபோது, தொகுதி பங்கீடு குறித்து மாவட்ட மட்டத்தில் பேசிப் பிரித்துக்கொள்ளும்படி தி.மு.க. தலைமை கூறியது. ஆனால், மாவட்ட மட்டத்தில் தங்களுக்குப் போதுமான ஒத்துழைப்பில்லையென காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல. கணேசன், காங்கிரஸ் கூட்டணியைவிட்டு தி.மு.க. விலகுவதே அக்கட்சிக்கு நல்லது எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

"இந்திய அளவில் ஒரு மாநிலக் கட்சியாக தி.மு.க. விமர்சித்ததைப் போல வேறு எந்தக் கட்சியும் பிரதமர் மோதியை விமர்சித்ததில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பெற்ற இடங்களில் குறிப்பிடத்தக்க இடங்களை தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பெற்றது. இந்தப் பின்னணியில்தான் இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும். கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்கிறார் டி.ஆர். பாலு. இதற்கு நடுவில் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆக, தி.மு.க. மீதான அழுத்தத்தை பா.ஜ.க. அதிகரித்து வருகிறது. தி.மு.க. என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மணி.

https://www.bbc.com/tamil/india-51105696

Share this post


Link to post
Share on other sites

கூட்டணி எப்படி

திமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு!

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை, அது காங்கிரசுக்கு தான் நஷ்டம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இந்த சண்டைக்கு கூட்டணி தர்மம்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் திமுகவை சமாதானப்படுத்தும் விதமான கே.எஸ் அழகிரி இரண்டு அறிக்கை வெளியிட்டார். ஆனால் திமுக இன்னும் காங்கிரஸ் தலைவர் மீதம், தமிழக காங்கிரஸ் கமிட்டி மீதும் கோபத்தில்தான் இருக்கிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. எங்களுக்கு என்ன வந்தது. எங்களுக்கு அதனால் துளி அளவு கூட பிரச்சனை கிடையாது.

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்.

எங்களுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகினாலும், வாக்கு வங்கி பாதிக்காது. அவர்களுக்கு வாக்கு வங்கி இருந்தால்தானே, நாங்கள் பாதிக்கப்படுவோம். எங்கள் கட்சியில் வேறு சிலர் வேறு மாதிரி சொல்லலாம். நான் நேரடியாக என்னுடைய பதிலை சொல்லிவிட்டேன், என்று துரைமுருகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

துரைமுருகன் கொடுத்த இந்த அதிரடி பேட்டியால் காங்கிரஸ் தரப்பு ஆடிப்போய் இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி இடையிலான விரிசல் இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக இதுவரை ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/it-won-t-be-a-problem-for-dmk-if-congress-alliance-says-duraimurgan-374167.html

Share this post


Link to post
Share on other sites

இன்று என்ன

வேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி.. பரபரப்பு!

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் திமுகவிற்கு இந்த ஞானம் வரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக காங்கிரஸ் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு கட்சிகளின் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்று கூறுகிறார்கள். இரண்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டு வருகிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார். இதுதான் சண்டைக்கு தொடக்கமாக அமைந்தது.

இந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்,என்றார் .

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தற்போது கேள்வி எழுப்பி உள்ளார். அதில், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை?. அப்போது மட்டும் காங்கிரஸ் கட்சியின் உதவி திமுக கவிற்கு தேவைப்பட்டதோ. இப்போது மட்டும் நாங்கள் தேவை இல்லை என்று திமுக எப்படி சொல்லலாம் என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

வேலூர் லோக்சபா தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அங்கு திமுக கூட்டணி மிகப்பெரிய இழுபறிக்கு பின்தான் வென்றது. கதிர் ஆனந்த் தோல்விக்கு அருகே சென்று 8141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கதிர் ஆனந்த் வென்றார்.

இதைத்தான் கார்த்தி சிதம்பரம் தற்போது சுட்டிக் காட்டியுள்ளார் என்று கூறுகிறார்கள். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக உடையும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக இன்னும் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/karthi-chidambaram-replies-to-duraimurgan-comment-on-dmk-congress-alliance-374172.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஆச்சி மனோரமாவைப் போட முடியவில்லை உண்மை வெளிவந்தது. வேறும் பல உண்மைகளைப் போட்டுடைக்க முயன்ற எத்தனைபேர் போடப்பட்டார்களோ? அறிவது கடினம்.
  • மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை அமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்களை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு சொர்ணவேல் அவர்கள் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் பற்றி ஒரு கட்டுரையை மின்னம்பலம் இதழுக்கு எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வணக்கம் லண்டன் மீள் பிரசுரம் செய்கிறது. கடந்த ஏழு வருடங்களாக தமிழீழக் குறும்படங்களை முக்கியமான திரைப்பட வெளிகளில் நண்பர்கள் கிருஷ்ணராஜா மற்றும் ரதன் வாயிலாகக் கண்டுவருகிறேன். எனக்குக் காணக் கிடைத்த படங்களில் சில படங்களை இங்கு ஆராய்கிறேன். முதலில் மதி சுதாவின் முக்கியமான குறும்படத்துடன் தொடங்குவது சரியாக இருக்குமென எண்ணுகிறேன். மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ ஆழமான அனுபவத்தை அளித்து நினைவில் நிற்கும் படமாக உருக்கொண்டுள்ளது. பொதுவாகக் குறும்படங்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்காமல் ஒரு முழுநீளப் படத்துக்கான உள்ளடக்கத்தைக் குறும்பட உருவில் அடைக்க நினைப்பதிலுள்ள சிக்கல்களைப் பற்றி முன்னர் விரிவாக எழுதியிருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் அத்தகைய முயற்சிகள் சீராக ஆரம்பித்து அவசர கதியில் முடியும். அல்லது நேர்க்கோட்டில் சென்ற கதையாடல் தனது லயமிழந்து துரித கதியில் வெட்டுண்டு சடாரென்று முடியும். துண்டு துண்டான அதன் அமைப்பு கோர்வையழகியலைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கமோ அரசியலோ அன்றி அமைந்திருக்கும். மதிசுதா என்னுடைய அத்தகைய (முன்)முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். மூன்று தலைமுறைகளை முன்வைத்து நகரும் கதையாடலைத் தேர்ந்த கதைசொல்லியாகச் செதுக்கி, அற்புதமான குறும்படத்தின் மூலம் போரின் பின்னணியில் தமிழருக்கு இருந்த உறுதியையும் போராட்டத்திலிருந்த பெருமையையும் விரித்தெடுக்கிறார். மதி சுதாவின் இயக்கத்தில் முல்லை ஜேசுதாசன், கமலாராணி, சங்கர், ஜசிதரன், கேசவராஜன், தர்சன் போன்றோரின் நடிப்பு இலங்கையில் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் கலைஞர்களின் இயல்பான ஆற்றலுக்குச் சான்றாக இருப்பதுடன் குறும்படம் எனும் சட்டகம் அத்தகைய அரிய கலைஞர்களின் திறமையை ஆவணப்படுத்தும் வெளியாக இருப்பதின் மகத்துவத்தையும் சொல்கிறது. ஜேசுதாசன், கமலாராணி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு மகுடம். ஜேசுதாசன் தனது பேரனுடன் பழகும் பாங்கு தீவுகளில் வாழும் மக்களுக்கு இயற்கையுடன் இருக்கும் இயல்பான உறவைத் திரையில் கவிதையாக வடிக்க உதவுகிறது. வெடிமணியமாகத் தமிழ்ச் சமூகத்தின் அன்பையும் ஆணாதிக்கத்தையும் ஒருசேர உருவகித்திருப்பதில் மதி சுதாவின் எழுத்தும் இயக்கமும் மிளிர்கின்றன. எசுத்தரம்மாவாக கமலாராணி வெடிமணியத்தின் சாதித்திமிருக்கு நறுக்கென்று தனது சொல்லால் வெடிவைப்பதும், கணவனாகக் கைப்பிடித்தவனின் வயோதிகத்தில் அவனுக்கு உறுதுணையாக இருப்பதும் தேர்ந்த இயக்குநராக மதி சுதா நடிகர்களைக் கையாள்வதிலுள்ள முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் காட்சிகளாகப் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. தனது கடைசி காலகட்டத்தில் உடம்புக்கு முடியாமல் படுக்கையில் கிடக்கும் ஒரு தாத்தாவை மையப்படுத்தித் தொடங்கும் கதையாடல் அவரருகிலிருந்து முன்னர் அவரிடமிருந்து விலகிச் சென்ற மகன் வந்து பராமரிப்பது மற்றும் அவரது மனைவியும் மருமகளும் காலமாகிவிட்டதை அவரது கட்டிலின் மேல் சுவரில் பெரிய சட்டத்தில் மாட்டப்பட்டிருக்கும் நிழற்படங்கள் மூலம் சொல்லும் மதி சுதா அந்த மருமகள் போரின் குண்டுவீச்சினால் இறந்துவிட்டதையும் நமக்குச் சொல்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே வெடிமணியத்தின் குழந்தையைப் பாதுகாக்க எசுத்தரம்மா இரண்டாம் தாரமாக அவ்வீட்டில் வந்து குடிபுகுந்தது நமக்கு விவரிக்கப்படுகிறது. அக்காட்சியின் தனித்துவம் என்னவென்றால் அது வெடிமணியத்தின் உயர் சாதிவெறியை அடிக்கோடிடுகிறது. அத்தகைய வன்முறை நிறைந்த இருண்மையான காலகட்டங்களில்கூடத் தமிழனது ரத்தத்தில் ஓடும் சாதியெனும் விஷம் / புற்றுநோயை மதி சுதா இயல்பாக ஆயினும் ஆழமாகச் சுட்டிச் செல்கிறார். கதாநாயகன் தமிழ்ச் சூழலிலுள்ள சாதிய, ஆணாதிக்கத் திமிருக்கு அடிமையாகத்தான் இருக்கிறான். அதற்கு எதிர்வினையாக எசுத்தரம்மா தனக்குக் குழந்தையைப் பராமரிக்க ஆள் வேண்டிய தருணத்தில் சாதி பற்றிய திமிர் வெடிமணியத்திற்கு எங்கு போச்சென்று வினவி வெடிமணியத்தின் கையாலாகாத்தனத்தையும் சூழ்நிலைக்கேற்ற சூழ்ச்சியையும் தாக்கி தான் கொண்டுவந்த சூடான தேநீரைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார். மதி சுதா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அவரது தேர்ந்த இயக்கத்தைப் படத்தின் தொடக்கக் காட்சிகளிலேயே நமக்குச் சொல்லிவிடுகிறது. வயோதிக காலத்தில் வெடிமணியம், எசுத்தரம்மாவின் உறவின் இயல்பான நெருக்கம், வெடிமணியம் இவ்வுலகை விட்டுப் பிரியக் காத்திருக்கும் காலகட்டத்துடன் அருமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய இணைவிற்கும் பிரிவிற்கும் ஊடாக வெடிமணியத்திற்குத் தனது பேரனின் மீதான அன்பும் வேட்டையாடுவதிலிருக்கும் ஈடுபாடும் கவிதைபோல ஓடுகின்றன. துப்பாக்கியைப் பராமரிப்பதிலிருந்து வேட்டையாடக் “குறி” பார்ப்பது, இலக்கைத் தப்பவிட்டால் மீண்டும் தன் கண்களை மூடி விரித்து ஆயத்தப்படுத்திக்கொள்வது போன்ற தாத்தாவிற்கும் பேரனுக்குமான வெளிப்புறங்களிலேயே சட்டகப்படுத்தப்பட்டிற்கும் இயல்பான இணக்கமான உறவு தமிழ் சினிமாவிற்குப் புதிது. அத்தகைய வேட்டையாடுவதில் வெடிமணியத்திற்கு இருந்த தேர்ச்சியைப் பெறுவது அவரது பேரனின் காலகட்டத்தில் (2007இல்) தன்னை அரசு எனும் இன அழிப்பு இயந்திரத்துடைய வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் துணிந்து எதிர்க்கவும் மட்டுமல்லாது, தனது தாத்தாவின் அல்லாடிக்கொண்டிருந்த உயிர் இவ்வுலகை விட்டு இனிதே பிரியவும் வகை செய்கிறது. நல்லதொரு சிறுகதையைப் போல மதி சுதாவின் படத்தின் முடிவும் கச்சிதமாக அமைந்துள்ளது. சிறுகதையின் இறுதித் தருணம் முக்கியமானது. முடிவு என்பது எதிர்பார்க்காத திருப்பமாக இருக்கலாம் அல்லது கவித்துவ அல்லது தத்துவ உச்சமாக இருக்கலாம். அல்லது மதி சுதாவின் இப்படத்தைப் போல அலகுகளின் நுண்ணிய ஒத்திசைவாக இருக்கலாம். போரின் ஈரமற்ற பேரிரைச்சலின் பின்னணியில் அன்பின் ஏக்கத்திற்கான ஆன்மாவின் பெருமூச்சாகவும் இருக்கலாம்! நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதையமைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, தொகுப்பு, இசையமைப்பு எல்லாம் காத்திரமாக இணைந்து மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ என்ற இக்காண்பியல் மொழிக் கவிதையைத் தமிழ்க் குறும்பட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக்குகின்றன. திரைக்கதையில் கவனம் செலுத்தினால் விரிந்த ஒரு காலகட்டத்தில் மூன்று தலைமுறையினரை வைத்துப் பின்னப்பட்ட கதையை லாவகமாகத் தேவையான காட்சிகளின் கோர்வையாகச் சிக்கன சுருக்க அழகியலின் ஆற்றலைக் கொண்டு ஒரு அருமையான குறும்படமாக உருவாக்க முடியும் என்று நமக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் மதி சுதா குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! படத்தின் தொடுப்பு இதோ – http://www.vanakkamlondon.com/mathisutha-04-06-2020/ டிஸ்கி : இவர் நம்முடைய கருத்துக்கள உறவா ..?
  • படிப்பு அறிவு அற்றவர்களைப் புலிகள் தங்கள் படையில் சேர்த்து... என்று யாழில் எழுதியவர்களுக்கும், அதற்குப் பச்சை போட்டவர்களுக்கும் இது சமர்ப்பணம்.   ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்!!. 
  • ஒடுக்குமுறைக்கு எதிராய் தனி ஒருவனாகப் போராடிய பொன். சிவகுமாரன். அண்மைய நாட்களில் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்த்தரப்பினரும் தலைவர் பிரபாகரன் அவர்களை சிறந்த தலைவர் என போட்டி போட்டு பேசியபடியுள்ளனர். வரலாறு உன்னதமான தலைவர்களையும் போராளிகளையும் ஒரு நாள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். இதனால்தான் வரலாறு என்னை விடுவிக்கும் என்றார் பிடல் காஸ்ரோ. இத்தகைய தலை சிறந்த போராளிகளின் ஒரு அதிசய நாயகனாக, வியப்பூட்டும் உன்னத போராளியாக மதிப்பு பெறுகிறார் மாவீரன் பொன். சிவகுமாரன். இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தெழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுமாரன் பிறந்தார். பொன்னுத்துரை, அன்னலட்சுமி இவரது பெற்றோர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது சிவகுமாரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார். கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தாக்குதலையும் பொன். சிவகுமாரனே நடத்தினார். கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட சிறிமா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடித்த யாழ் நகரத் தந்தை அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் சிவகுமாரன் குண்டு பொருத்தினார். எனினும் துரையப்பா வருவதற்கு முன்பாகவே அந்தக் குண்டு வெடித்தமையால் அதிலிருந்து அவர் தப்பினார். பின்னர் துரையப்பா கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரன் தனித் தாக்குதல் முயற்சிகளுடன் உண்ணாவிரதப் போராடட்டம் போன்றவற்றில் தன்னை இணைத்தார். இளைஞர் பேரவையின் உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1970களில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசில் அமைச்சரவையில் இடம்பெற்ற சோமவீர சந்திரசிறியின் வாகனத்திற்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரனிடத்தில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. படுகொலைகளை நடத்திய சந்திரசிறியை கொலை செய்ய வேண்டும் என்று சிவகுமாரன் வெளிப்படையாக கூறும் நிலையை அடையுமளவில் சினத்திற்குள்ளானார். இதனால் சிவகுமாரன் தேடப்படும் நபரானார். கோப்பாயில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட சிவகுமாரன் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். ஜூன் 05, 1974இல் தன்னுடைய 24ஆவது வயதில் தன்னை மாய்த்த சிவகுமாரனின் 44 ஆவது நினைவுதினம் இன்றாகும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர்நீத்தவர் சிவகுமாரனே. இவரே ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் என்றும் முக்கியம் பெறுகிறார். தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடும் வல்லமையை இளைஞர்களிடத்தில் சிவகுமாரன் ஏற்படுத்தினார். இவரது மரண நிகழ்வின்போது முதன் முதலில் பெண்கள் சுடலைக்கு வருகை தந்த மாற்றமும் இடம்பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சிவகுமாரனின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் ஈழத் தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டபோதும் சிவகுமாரன் போராட்டத்தை கையில் எடுத்தார். இலங்கை அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார். தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் பிரயோகித்த போது சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார். சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவர் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவர் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினார். அவர் எல்லா மாணவர்களின் நலனிலும் கவனம் செலுத்தினார். அவர் ஈழ மக்களின் நலனில் கவனம் செலுத்தினார். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காது, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என உணர்ந்தார். தனி ஒருவனாய் சிவகுமாரன் முன்னெடுத்த போராட்டமே பின்னர் ஈழவிடுதலை ஆயுதப் போராட்டமாக விரிந்தது. சிவகுமாரன் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தார் என்பதையும் அவர் எப்படியான காலத்தில் தன் தாக்குதல்களை நடத்தினார் என்பதையும் இன்றைய நாளில் ஆராய்வது மிகவும் அவசியமானது. சிவகுமாரனின் தனிமனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும். ஈழமும் இளைய தலைமுறையும் என்றுமே மறக்க முடியாத, மறக்கக்கூடாத ஒரு மாவீரனே பொன். சிவகுமாரன். கவிஞர் தீபச்செல்வன் நன்றி – தமிழ்க்குரல் http://www.vanakkamlondon.com/theepachelvan-05-06-2020/
  • பாராளுமன்ற பதவிகளையும்,  கோடிக் கணக்கான சொத்துக்களையும் கொடுத்தால்... எந்தத் தந்தையும்,  நல்ல தந்தைதான். 😜