• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
poet

ஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள்.
”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை;
.

Image may contain: 3 people, people smiling, indoor

.

என் கதை
வ.ஐ.ச.ஜெயபாலன்

*
அவள் தனி வனமான ஆலமரம்.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.
நானோ அவளை
கீழே நகரும் பாலையில் தேங்கிய
பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.

*
ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி
ஜாடை காட்டினாள்.
மறுநாள் அங்கிருந்தது என் கூடு.
இப்படித்தான் தோழதோழியரே
எல்லாம் ஆரம்பமானது.
தண்ணீரை மட்டுமே மறந்துபோய்
ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்
பாலை வழி நடந்த காதலர் நாம்.

*
அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.
நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.
சிறகுகளில் மிதக்கும் எனக்கோ
நிலைத்தல் இறப்பு.
மண்ணுடன் அவள் எனை
வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,
நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்
எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.

*
உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.

*
ஓரு வழியாக இறுதியின் இறுதியில்
கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்
சமரசமானோம்.
மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு
நம் காதலாய் அரங்கேறியதோ
உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்
என்றோ எழுதிய நாடகச் சுவடி.

*
இப்போது தெளிந்தேன்.
சந்திக்கும் போதெலாம்
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”
மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்
” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்.”

*
இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.

  • Like 11

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, poet said:

1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள்.
”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை;

7deea12a7d62a0c0d941d8f21c37bb78.gif

என்ன பொயட், காலம் கடந்து ஒன்னே ஒன்னுன்னு

ரொம்பவும் வருத்தப்படுறாப்புல தெரியுதே..! :)

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

அப்பவே அற்புதமாய் கவிதை எழுதியுள்ளீர்கள் ஐயா ......உங்களிடம் திருட்டு முழியும், அவரிடம் நேர்கொண்ட தீர்க்கமான பார்வையும் தெரிகின்றது.....மகிழ்ச்சி. நீடுழி வாழவேண்டும்.....!  💐

1 hour ago, ராசவன்னியன் said:

7deea12a7d62a0c0d941d8f21c37bb78.gif

என்ன பொயட், காலம் கடந்து ஒன்னே ஒன்னுன்னு

ரொம்பவும் வருத்தப்படுறாப்புல தெரியுதே..! :)

காலாகாலத்தில் ஒன்று இரண்டு இருந்தாலும் கடைசி காலத்தில ஒன்றுடன் இருப்பதுதான் பாதுகாப்பு வன்னியன்.அதுதான் உங்களுக்கு எனக்கு எல்லோருக்கும் பாதுகாப்பு. அதைத்தான் ஐயாவும்  கடைபிடிக்கிறார்.......!   😂

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, poet said:

Image may contain: 3 people, people smiling, indoor

திரு திருவென திருட்டு முழி தெரிகிறது

முழி நோக்கும் ஆளோ 

நீ என் பொன் பொருளுடன் போனாலும்

நான் தப்பிவிட்டேன் என்று

பூரிப்பில் ஆழ்ந்ததுபோல் உள்ளது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, poet said:

திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன்.

இப்போ எல்லாம் திரு திரு என்று விழிக்கமாட்டீர்கள். என்ன நான் சொல்லுறது சரிதானே

Share this post

Link to post
Share on other sites

Image may contain: 3 people, people smiling, indoor

வாழ்த்துக்கள்.💐
மாப்பிளை பொம்பிளை கை கட்டிக்கொண்டு நிக்கிறதை....

பாக்க நீயா நானா போட்டிக்கு போற மாதிரி கிடக்கு 😂

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

அப்பவே அற்புதமாய் கவிதை எழுதியுள்ளீர்கள் ஐயா ......உங்களிடம் திருட்டு முழியும், அவரிடம் நேர்கொண்ட தீர்க்கமான பார்வையும் தெரிகின்றது.....மகிழ்ச்சி. நீடுழி வாழவேண்டும்.....!  💐

காலாகாலத்தில் ஒன்று இரண்டு இருந்தாலும் கடைசி காலத்தில ஒன்றுடன் இருப்பதுதான் பாதுகாப்பு வன்னியன்.அதுதான் உங்களுக்கு எனக்கு எல்லோருக்கும் பாதுகாப்பு. அதைத்தான் ஐயாவும்  கடைபிடிக்கிறார்.......!   😂

நன்றி குமாரசாமி, நீங்கள் ”காலா லாலத்தில் ஒன்று இரண்டு இருதாலும்” என்று எப்படி இலகுவாக எழுதுகிறீங்க? அப்படி இருப்பது தப்பு என்று என் அம்மா சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறாங்களே. பின்னர் எப்படி சாமி. “ தப்பு பண்ணலாமா குமாரசாமி?” 

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, poet said:

மாய உறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு

கவிஞரின் கவிதை கற்பனையில்லாத உண்மையின் தரிசனம்!

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ராசவன்னியன் said:

7deea12a7d62a0c0d941d8f21c37bb78.gif

என்ன பொயட், காலம் கடந்து ஒன்னே ஒன்னுன்னு

ரொம்பவும் வருத்தப்படுறாப்புல தெரியுதே..! :)

இருக்காதா பின்னே. கற்புள்ளவனை தேடினா நான் மட்டும் ஒன்னே ஒன்னு  என தனியா நிற்கிறேனே.

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, poet said:

நன்றி குமாரசாமி, நீங்கள் ”காலா லாலத்தில் ஒன்று இரண்டு இருதாலும்” என்று எப்படி இலகுவாக எழுதுகிறீங்க? அப்படி இருப்பது தப்பு என்று என் அம்மா சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறாங்களே. பின்னர் எப்படி சாமி. “ தப்பு பண்ணலாமா குமாரசாமி?” 

ஐயா அது சுவி எழுதியது.....பாவம் குமாரசாமியார்.......!

உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.

இந்த வரிகளை வாசித்ததும் சும்மா கலாய்க்க எழுதியதுதான்......!   😁

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

......உங்களிடம் திருட்டு முழியும், அவரிடம் நேர்கொண்ட தீர்க்கமான பார்வையும் தெரிகின்றது....

ஆமாம் suvy முதல் முதல் திருடிய காரணத்தால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.

4 hours ago, Paanch said:

திரு திருவென திருட்டு முழி தெரிகிறது

ஒரு திருத்தம் Paanch 

”திரு திருமதியென திருட்டு முழி தெரிகிறது” என்று இருக்க வேண்டும். 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kavi arunasalam said:

இப்போ எல்லாம் திரு திரு என்று விழிக்கமாட்டீர்கள். என்ன நான் சொல்லுறது சரிதானே

Kavi arunasalam  என்னை விழையாட்டுக்கும் தனிமைப் படுத்தி விடாதீங்க. “திரு திரு” அல்ல திரு திருமதி என்று எழுதுங்க. நெஞ்சு நோகுது. கற்புள்ளவர்களுக்குத்தான் என் வேதனை தெரியும் Kavi arunasalam 

6 hours ago, ராசவன்னியன் said:

7deea12a7d62a0c0d941d8f21c37bb78.gif

என்ன பொயட், காலம் கடந்து ஒன்னே ஒன்னுன்னு

ரொம்பவும் வருத்தப்படுறாப்புல தெரியுதே..! :)

நீயுமா ராசவன்னியன்?    இப்படிக் கேலிக்குக்கூட இன்னொருத்தியை அதுவும் என்னோடு இணைத்துப் பேசலாமா?  ......     

Edited by poet

Share this post

Link to post
Share on other sites

அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத அன்புத் தம்பி suvy க்கு, நலம் நலமறிய ஆவல். 

உங்களுக்கு எழுதிய பதிலில் விலாசத்தை குமாரசாமி என தவறாக எழுதி போஸ்ட் செய்துவிட்டேன். கடிதத்தை அவர் திறந்திருந்தால் சண்டை போடவேண்டாம். அவர் அவசரப்பட்டு திறந்திருந்தால் கோபிக்க வேண்டாம். . கடித்ததை குமாரசாமியிடம் பெற்றுக்கொள்ளவும்.

Edited by poet

Share this post

Link to post
Share on other sites

என்னைப் போல கற்புள்ள ஒருவரை தரிசித்தது மிக்க மகிழ்ச்சி. எப்படி கற்புள்ளவனாக வாழ்தல் என்பதையே நான் ஜெயபாலன் அண்ணாவிடம் தான் கற்றுக் கொண்டேன் என்றால் அது மிகையாகாது.

Share this post

Link to post
Share on other sites

மிகவும் நன்றி தம்பி நிழலி. தம்பி, “எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே உன்னை இடறவைத்து தள்ளப்பார்க்கும் குழியிலே. அத்தனையும் தாண்டிக் காலை முன்வையடா. அஞ்சாமல் கற்பினிலே கண்வையடா”  என்ற திருக்குறள்படி வாழவும். தம்பி. ஒரே ஒரு முறை வாழும் இந்த வாழ்வில் உயிரிலும் மேலான  கற்பையும் இழந்துவிட்டால் நமக்கு என்ன மிஞ்சும்? தம்பி கற்ப்பு விடயத்தில்  இறுதிவரை அண்ணனைப்போல புத்தியாய் நடக்கவும்.

Edited by poet
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

என்னைப் போல கற்புள்ள ஒருவரை தரிசித்தது மிக்க மகிழ்ச்சி. எப்படி கற்புள்ளவனாக வாழ்தல் என்பதையே நான் ஜெயபாலன் அண்ணாவிடம் தான் கற்றுக் கொண்டேன் என்றால் அது மிகையாகாது.

 எலே!  இத சிரிக்காம சொல்லுறதுக்கும் ஒரு தைரியம் வேணும் எலே...

  • Haha 3

Share this post

Link to post
Share on other sites
On 1/14/2020 at 11:35 AM, குமாரசாமி said:

 எலே!  இத சிரிக்காம சொல்லுறதுக்கும் ஒரு தைரியம் வேணும் எலே...

ஹாஹா..... நானும் அதையே நினைத்தேன் 

Share this post

Link to post
Share on other sites
On 1/14/2020 at 3:33 PM, நிழலி said:

என்னைப் போல கற்புள்ள ஒருவரை தரிசித்தது மிக்க மகிழ்ச்சி. எப்படி கற்புள்ளவனாக வாழ்தல் என்பதையே நான் ஜெயபாலன் அண்ணாவிடம் தான் கற்றுக் கொண்டேன் என்றால் அது மிகையாகாது.

அடப்பாவி

😂 என்னை  தனியே  கைவிடலாமா ராசா??

Just now, விசுகு said:

அடப்பாவி

இப்படி 😂 என்னை  தனியே  கைவிடலாமா ராசா??

Share this post

Link to post
Share on other sites

மன்னிக்கவும் விசுக்கு. தவறுக்கு வருந்துகிறேன். கற்புள்ளவர் பட்டியலில்  நான் நிழலி மட்டுமல்ல நண்பர் விசுகு வும் இருக்கிறார். நண்பர் விசுகு வோடு சேர்த்து உலகில் மொத்தமாக  இரண்டரை கற்புள்ளவர்கள்  இருக்கிறோம்.

Edited by poet
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

அப்பவே திருட்டு முழி தானா அண்ணா ??/

On 1/14/2020 at 4:35 PM, குமாரசாமி said:

 எலே!  இத சிரிக்காம சொல்லுறதுக்கும் ஒரு தைரியம் வேணும் எலே...

பச்சை இல்லீங்கோ குமாரசாமி 😊

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.