Jump to content

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

Recommended Posts

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது. இவர்கள் தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்டு வருகின்றது.

தேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப் பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக் கூடியதாக உள்ளது.

மாவை சேனாதிராஜா தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பதும், அது எனது சொந்த பிரச்சினை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார். தமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர். இதுவே, அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது.

மாறாக கடந்த கால அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதே தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை. மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ் மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் கம்பெரலிய திட்டத்தின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் நிறைவற்றப்படாத சில திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.

அத்துடன், பதவி ஏற்ற இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடி உள்ளது.

கம்பரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசாங்கத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இதன்மூலம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பரலிய திட்டத்தின் ஊடாக சில திட்டங்களை மேற்கொண்டு பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு அவர்கள் இவ்வாறான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.
 
-யாழ். நிருபர் சுமித்தி-

http://tamil.adaderana.lk/news.php?nid=124537

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மண்டையன் குழுத்தலைவன் தமிழ் மக்கள் மீது அரசியல் செய்யலாம் ஆனால் சுமந்திரன் செய்யக்கூடாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விதண்டாவாதக்கதைகளையெல்லாம் விட்டிட்டு, களத்தில எல்லொரும் ஆக்கபூர்வமா ஆராய்வோம், யார் சம்பந்தனுக்கு பிறகு தலமை தாங்கிறது தமிழருக்கு நல்லதென்று. அதன் பின் புலத்திலுள்ளோரும் ஈழத்திலுள்ளோரும் சேர்ந்து campaign பண்ணிஆதரவு சேர்த்தால் அந்த தலமையை தெரிவு செய்ய வேண்டிய தேவை கூட்டணிக்கி ஏற்படும். சண்டை பிடிக்காமல் civilised people  மாதிரி ஆராய்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்கோவன்.

இந்தக் கேள்விக்கு  யாரிடமேனும் பதிலுண்டோ ???????

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்கோவன்.

1 hour ago, Kapithan said:

இந்தக் கேள்விக்கு  யாரிடமேனும் பதிலுண்டோ ???????

மப்புறுப்பினர் குமாரசாமியை நான் இந்த பதவிக்கு பிரேரிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கற்பகதரு said:

மப்புறுப்பினர் குமாரசாமியை நான் இந்த பதவிக்கு பிரேரிக்கிறேன்.

ஆஆஆ ........🤔

Just now, Kapithan said:

ஆஆஆ ........🤔

மேயிற மாட்ட நக்கிற மாடு கெடுத்த கதயாயல்லோ போகுது........😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

தமிழ் மக்களின் அடுத்த  தலைவராக.... மனோ கணேசனை பிரேரிக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

32 minutes ago, Kapithan said:

ஆஆஆ ........🤔

மேயிற மாட்ட நக்கிற மாடு கெடுத்த கதயாயல்லோ போகுது........😀

மாட்டுப் பொங்கலுக்கு பொருத்தமாகத்தான் எழுதியிருக்கிறியள்.🐂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இப்போது ஒருவரைக்கூட இவர்தான் சரியான ஆள் என்று காட்டமுடியாமலுள்ளது. நாங்கள் ஒருவரைப் பிரேரிக்கின்ற போது pros and cons எல்லாம் போட்டு தான் பிரேரிக்க வேண்டும் 

தமிழ்சிறியைத் தவிர ஒருவருமே ஒருவரையும் பிரேரிக்கவில்லை ( நான் உட்பட). ஏனெனில் எங்களில் உள்ள கெட்ட பண்புகளில் ஒன்று “பிழை பிடிக்க என்றால் முன்னுக்கு நிற்போம் ஆனால் யாரும், எது சரி என்று கேட்டால் ஓட ஒழித்து விடுவோம்”

நான் பிரேரிக்கும் நபர் திரு விக்கினேஸ்வரன்

Pros:

மும்மோழிகளிலும் தேர்சி பெற்ற முன்னால் நீதி அரசர்

இந்தியாவுடன் தொடர்பில்( அரசு கட்சி BJP) இருப்பவர் - 

மேற்கத்தைய நாடுகள் அணுக்க்கூடியவர் ( கல்வி அறிவுள்ளவர்களோடுதான் western world தொடர்பை ஏற்படுத்தும ( e.g. Anton balsingam அவர்களின் மறைவிற்குபின் ஏற்பட்ட வேற்றிடமும் எமது தோல்விக்கு ஒரு காரணம்)

Cons

colombo வாசியாக இருந்தபடியால் அவர் எந்த அளவுக்கு தமிழ் பிரச்சனையின் ஆழம் தெரியுமெனபது ஒரு கேள்விக்குறி

இந்தியாவின் நண்பன் என்றபடியால் அவர்கள் நலம் சார்ந்த அணுகுமுறையைத் தான் தேர்நதெடுப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது  தெரிவு அல்லது எனக்கு தெரிந்தமட்டில் விக்னேஸ்வரன் மற்றும் மனோகணேசன் பொருத்தமானவர்களாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

சம்பந்தன் இருந்த இவ்வளவு காலத்துக்கும் பத்து தலைமைகளை மாற்றி மாற்றி  தமிழ் -- சிங்கள அரசியல் ஓட்டத்தை பரிசோதித்து பார்த்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

மாட்டுப் பொங்கலுக்கு பொருத்தமாகத்தான் எழுதியிருக்கிறியள்.🐂

கற்பகதரு

சிவலிங்கத்துக்கு எனது மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.

Ähnliches Foto

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

கற்பகதரு

சிவலிங்கத்துக்கு எனது மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.

Ähnliches Foto

அழகான மாடு. சிவலிங்கத்தோடு சேர்த்து கற்பகதருவுக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லக்கூடாதா? கற்பகதரு பனம்பழங்களை கொடுத்து எத்தனை மாடுகளை வாழவைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தானா தெரிய வேண்டி இருக்கிறது?

தாராளமாக பனம்பழங்களை சுவைத்து இனிய பொங்கலை கொண்டாட வாழ்த்துகள்.

%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இது பனம் பழக் (கற்பகதருவின்)  காலமில்லையே சுவைப்பதற்கு ?🤔😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ragaa said:

என்னால் இப்போது ஒருவரைக்கூட இவர்தான் சரியான ஆள் என்று காட்டமுடியாமலுள்ளது. நாங்கள் ஒருவரைப் பிரேரிக்கின்ற போது pros and cons எல்லாம் போட்டு தான் பிரேரிக்க வேண்டும் 

தமிழ்சிறியைத் தவிர ஒருவருமே ஒருவரையும் பிரேரிக்கவில்லை ( நான் உட்பட). ஏனெனில் எங்களில் உள்ள கெட்ட பண்புகளில் ஒன்று “பிழை பிடிக்க என்றால் முன்னுக்கு நிற்போம் ஆனால் யாரும், எது சரி என்று கேட்டால் ஓட ஒழித்து விடுவோம்”

நான் பிரேரிக்கும் நபர் திரு விக்கினேஸ்வரன்

Pros:

மும்மோழிகளிலும் தேர்சி பெற்ற முன்னால் நீதி அரசர்

இந்தியாவுடன் தொடர்பில்( அரசு கட்சி BJP) இருப்பவர் - 

மேற்கத்தைய நாடுகள் அணுக்க்கூடியவர் ( கல்வி அறிவுள்ளவர்களோடுதான் western world தொடர்பை ஏற்படுத்தும ( e.g. Anton balsingam அவர்களின் மறைவிற்குபின் ஏற்பட்ட வேற்றிடமும் எமது தோல்விக்கு ஒரு காரணம்)

Cons

colombo வாசியாக இருந்தபடியால் அவர் எந்த அளவுக்கு தமிழ் பிரச்சனையின் ஆழம் தெரியுமெனபது ஒரு கேள்விக்குறி

இந்தியாவின் நண்பன் என்றபடியால் அவர்கள் நலம் சார்ந்த அணுகுமுறையைத் தான் தேர்நதெடுப்பார்

உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட முடியவில்லை. காரணம்....

இங்கே பெரும்பாலானோருக்கு, முன்மொழிவதற்கு தகுதியானவர்கள் யாரையும் தற்போதைய சூழலில்  தெரியாது என்பதே பிரதான காரணமாக இருக்கு என நான் நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

இங்கே பெரும்பாலானோருக்கு, முன்மொழிவதற்கு தகுதியானவர்கள் யாரையும் தற்போதைய சூழலில்  தெரியாது என்பதே பிரதான காரணமாக இருக்கு என நான் நம்புகிறேன். 

எனது தெரிவுகள்:

1. சுமேந்திரன். மும்மொழியிலும் சட்டரீதியாக பேசும் ஆற்றலுள்ளவர். புவிசார் அரசியலில், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஐரோப்பிய நகர்வுகளுக்கு அவர்களின் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரம். கோத்தபாய சாட்சியம் அளிக்க வழக்குமன்றம் வருகிறார் என்றறிந்து, சண்டே லீடர் பத்திரிகையின் சிங்கள வழக்கறிஞர் அனைவரும் பயத்தில் இராஜினாமா செய்ய, பத்திரிகை அவசரமாக உதவி கேட்க ஒரே நாளில் வழக்குமன்றம் சென்று கோத்தபாயவை குறுக்குவிசாரணை செய்த துணிச்சல்காரர். இந்தியாவின் தாளத்துக்கு ஆடும் தேவை இல்லாதவர். தேசியவாதி  அல்ல, வாழு - வாழ விடு என்ற கொள்கை கொண்டவர்.

2. சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல். மக்கள் மீது பற்றும், நல்ல சட்ட அறிவும், ஆங்கில புலமையும், நிறைவான மக்கள் ஆதரவும், இளமையின் துடிப்பும் நிறைந்தவர். தேசியவாதி.

3. அனந்தி சசிதரன். துணிச்சல் உள்ளவர். மக்கள் ஆதரவு உள்ளவர். இளமையின் துடிப்பும் போரின் கொடுமையும் கண்டவர். தேசியவாதி.

4. சிவாஜிலிங்கம். கோமாளி போன்று செயற்பட்டிருந்தாலும், அவற்றுக்கு ஊடாக மற்றவர்களால் முடியாது என்று நினைத்தவற்றை செய்து காட்டிவர். மாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்தது முதல், சோசலிச கொழும்புத்தமிழரான விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்து தேசியவாதியாக்கியது வரை இவரின் சாதனைகள் பல. ஓரளவுக்கு சட்டம் தெரிந்தவர். தளராத போராளி.

5. விக்னேஸ்வரன் - சோசலிசவாதி. சம்பந்தி வாசுதேவாவுடனும், தான் முதலமைச்சராக சத்தியபிரமாணம் செய்ய தேர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்சவுடனும் சேர்ந்து வாழு - வாழ விடு என்ற வகையிலான தீர்வை கொண்டுவர கூடிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

ஆனால் ஒருவரும் பக்குவப்பட்ட / நிதானமான  ஆட்களாக தங்களை இனம்காட்டவில்லையே. 

சுமந்திரன் - கல்வி, வெளியுலகு தெரிந்த அளவுக்கு தமிழ் மக்களை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

குருபரனும் அனந்தியும்  - வெளியுலக அனுபவமும் நிதானமும் போதிய அளவு உள்ளவர்களாக தெரியவில்லை.

சிவாஜி - நிதானம் இன்மை, 

விக்கியர் - அவரின் வயது மற்றும் தலமைத்துவமின்மை.

தமிழர்களின் தற்போதைய   மிக நெருக்கடியான அவசர   சூழலை வைத்துத்தான் மேற்படி கருத்தைக் கூறியுள்ளேன். 

சசிதரன், குருபரன் இருவருக்கும் தங்களை இனம் காட்டுவதற்கு கால அவகாசமும் போதிய சந்தர்ப்பமும்  வழங்கப்படல்   வேண்டும். 

(நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சம்பந்தரின் தோற்றமே அவரின் முதிர்ச்சியை காட்டும். அவ்வாறான ஒரு Personality தற்போது எம்மவரில் யார் உண்டு ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

கிட்டத்தட்ட உங்களது  தெரிவு  தான்  எனதும்

ஆனால்  நானோ  நீங்களோ ஆசைப்பட்டென்ன??

இவர் ஐவரையும்  கூட ஒரே கூரையின்  கீழ் எம்மால்  கொண்டு  வரமுடியாதே?????

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

1 hour ago, விசுகு said:

கிட்டத்தட்ட உங்களது  தெரிவு  தான்  எனதும்

ஆனால்  நானோ  நீங்களோ ஆசைப்பட்டென்ன??

இவர் ஐவரையும்  கூட ஒரே கூரையின்  கீழ் எம்மால்  கொண்டு  வரமுடியாதே?????

இவர்கள் எவரும் சம்பந்தரை போல இல்லை என்பது உண்மையே. சம்பந்தரும், ஆனந்தசங்கரியும், அமிர்தலிங்கமும், செல்வநாயகமும் ஒருவரை போல மற்றவர்கள் இருக்கவில்லை. இவர்கள் எவரும் வெற்றி பெறவும் இல்லை.

மனிதர்களும், அவர்தம் அணுகுமுறைகளும், தலைமைத்துவமும் வித்தியாசமானவை. இன்று தேவையானது, புதிய அணுகுமுறை.

இவர்களில் ஒருவர் அதை தரக்கூடூம். எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சாத்தியமில்லாதது. தலைவர்கள் தனித்துவமானவர்கள். மற்றவர்கள் ஒருவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறுதுறைகளில் பங்களிப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

பலம்  பெறமுடியாதே?

Link to comment
Share on other sites

இன்றிருக்கும் நிலையில் எவரும் இல்லை. மேற்சொன்ன அனைவரும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களே ஒழிய, ஒட்டுமொத்த தாயக தமிழர்களுக்கும் தலைமை தாங்க கூடியவர்கள் அல்ல. இதில் முக்கியமாக விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கட்சிகளின் தலைமைப் பதவிக்கு கூட லாயக்கற்றவர்கள்.

தாயக மக்களின் தலைமைத்துவத்தை தேடும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் தமிழ் தலைமை என்று சொல்லிக் கொண்டு திரியும் குறுகிய லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளும் ஒரு சிறிய அளவில் கூட செல்வாக்கோ தலையீடோ செய்தால் அது மீண்டும் நாசமாக போய்விடும் அபாயம் தான் அதிகம் இருக்கு.

புலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்களாகவது செல்லும். தாயக மக்கள் இணங்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல், தமிழ் தேசியம், தாயகம் என்ற கோட்டில் இயங்கினால் ஒரு சில தசாப்தங்களின் பின்னர் ஒரு நல்ல தலைமை உருவாகலாம்.

அதுவரைக்குமான இடைவெளியில் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறினால் தக்கண பிழைத்து எழுந்து நிற்கும்.

Link to comment
Share on other sites

Quote

இவர்கள் எவரும் சம்பந்தரை போல இல்லை என்பது உண்மையே.

பாலகுமார் அவர்கள் சொன்னது போல தலைவர் என்பவர் நல்லவராக மட்டுமில்லாது வல்லவராகவும் இருக்க வேண்டும். சம்பந்தருக்கு அந்த தகமை உள்ளதா என்பது (வல்லவர்) கேள்விக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இன்றிருக்கும் நிலையில் எவரும் இல்லை. மேற்சொன்ன அனைவரும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களே ஒழிய, ஒட்டுமொத்த தாயக தமிழர்களுக்கும் தலைமை தாங்க கூடியவர்கள் அல்ல. இதில் முக்கியமாக விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கட்சிகளின் தலைமைப் பதவிக்கு கூட லாயக்கற்றவர்கள்.

பசிக்கும் போது இருக்கிற சாப்பாட்டை தானே சாப்பிடலாம்.

1 hour ago, நிழலி said:

இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்களாகவது செல்லும். தாயக மக்கள் இணங்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல், தமிழ் தேசியம், தாயகம் என்ற கோட்டில் இயங்கினால் ஒரு சில தசாப்தங்களின் பின்னர் ஒரு நல்ல தலைமை உருவாகலாம்.

இந்தக் கருத்தின்படி பார்த்தால் கஜேந்திரன் பொன்னம்பலமே அன்று தொடக்கம் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்.

அடுத்தது கூட்டணியில் இருந்த காலங்களில் வெளிநாட்டவருடன் பேசும் போது இவரின் தலைமையில்த் தான் பேசியிருக்கிறார்கள்.

எனது தெரிவு:-

1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

2)விக்னேஸ்வரன்.

Link to comment
Share on other sites

16 minutes ago, ஈழப்பிரியன் said:

பசிக்கும் போது இருக்கிற சாப்பாட்டை தானே சாப்பிடலாம்.

அதற்காக மலத்தையோ விசத்தையோ சாப்பிட முடியாதே? உசிருக்கு ஆபத்து இல்லையென்றால் பட்டினியாக கிடக்க வேண்டிய தேவையும் உண்டு.
 
16 minutes ago, ஈழப்பிரியன் said:

பசிக்கும் போது இருக்கிற சாப்பாட்டை தானே சாப்பிடலாம்.

எனது தெரிவு:-

1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

2)விக்னேஸ்வரன்.

விக்கி ஆகக் குறைந்தது ஒரு மாகாணசபையைக் கூட நடாத்த முடியாதவர். எதிர்ப்புகளை காரணம் காட்டி சமாளிப்புகளை செய்கின்றவர்.  அறிக்கை அரசியல் ஒரு போதும் ஆக்கபூர்வமான அரசியலாக கருதப்பட முடியாது.  ஆன்மீகம் ஒன்றுதான் இவருக்கு ஓரளவுக்கு சரிவரும் (அங்கும் கூட போலிச் சாமியார் பிரேமானந்தா போன்றவர்களை வழிபடுகின்றவர்)

கஜேந்திரகுமாரும் வெற்று அறிக்கை அரசியல் செய்கின்றவர் தான். ரணிலின் ஆட்சிக்காலத்தில் தமித் தேசியக் கூட்டமைப்பை குற்றம் சொல்வது தான் இவரது அரசியலாக இருந்தது. கோத்தாவின் ஆட்சியில் அதற்கும் இடமில்லை. கோத்தாவை துணிந்து எதிர்த்து தமிழ் தேசிய அரசியலை கொண்டு செல்லும் அளவுக்கு இவருக்கு திறமை இல்லை என்பது என் அபிப்பிராயம். பூகோள அரசியல், இந்தியா சீனா போன்ற கதைகளால் மாத்திரம் மக்களை அணுக முடியாது என்பதற்கு இவர் கடந்த சனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க சொல்லியதில் இருந்தும் அதை மக்கள் புறக்கணித்ததில் இருந்தும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கு.

Link to comment
Share on other sites

ஏனப்பா ஒரு தலைவரைத்தேடி உங்கள் எனேயியையும் வீணாக்கி அலைகிறீர்கள்..... ஈழத்தமிழருக்கு ஒரு தலைவன் வந்தாச்சு. 

6 hours ago, nunavilan said:

தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ்  அமைதியாக இருக்க மாட்டார்!

தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ் அமைதியாக இருக்க மாட்டார்!

எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ, அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.Bildergebnis für leader+smily

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.