• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’

Recommended Posts

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’

காரை துர்க்கா   / 2020 ஜனவரி 14

யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது.    

அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது...  

அந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னிட்டு, அடுத்த ஆண்டிலிருந்து (2020) யாழ்ப்பாணத்தில் வாழத் தீர்மானித்து இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் உரையாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.   

ஆனால், அவர்கள் தங்கள் ஊரை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு கொஞ்சமும் விருப்பமில்லாத மனநிலையுடன்தான் காணப்படுகின்றார்கள்.     

வேலனை, புங்குடுதீவு, நயினாதீவு,  காரைநகர், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, ஊர்காவற்றுறை, மண்டைதீவு என்பன யாழ்ப்பாணத்தைச் சுற்றி அமைந்து உள்ள தீவுகள் ஆகும்.   
இவற்றில் வேலனை, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, காரைநகர், மண்டைதீவு ஆகிய தீவுகளுக்கு தரைவழித் தொடர்புகள் உள்ளன.  

தீவகப் பகுதிகளில் நெடுந்தீவு, காரைநகர் என்பன தனிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ‘தீவகம் வடக்கு’ என்ற பெயரில், எழுவைதீவு, அனலைதீவு என்பன ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துடனும் ‘தீவகம் தெற்கு’ என்ற பெயரில், புங்குடுதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் வேலனை பிரதேச செயலகத்துடனும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.  

இவ்வாறாக நெடுந்தீவு, காரைநகர், வேலனை, ஊர்காவற்றுறை என தீவகப்பகுதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் யாழ். மாவட்டத்தில் உள்ளன.  

நெடுந்தீவில் 4,587 பேரும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 10,682 பேரும் வேலனைப் பிரிவில் 16,396 பேரும் ஊர்காவற்றுறை பிரிவில் 10,259 பேரும் என, இந்த நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 41,924 பேர் மொத்தமாக வாழ்ந்து வருகின்றனர்.  

கிராம சேவகப் பிரிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் J/01 எனத் தொடங்குகின்ற பிரிவு, நெடுந்தீவு மேற்கு கிராம சேவகப் பிரிவையே குறிக்கின்றது. மொத்தமாக, J/01 தொடக்கம் J/48 வரை, 48 கிராம சேவகப் பிரிவுகளாகத் தீவகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.  

1990 இல் ஆரம்பித்த இரண்டாம் கட்ட ஈழப்போருடன், 1990களின் இறுதிக்காலம், 1991களின் ஆரம்பக்கால இடப்பெயர்வுகளுடன் தீவகம் வெறிச்சோடியது.  

முதற்கட்டமாக, அப்பகுதி மக்கள் யாழ். நகரை நோக்கி இடம்பெயர்ந்தனர். அதன் பின்னரான காலங்களில், ஏற்பட்ட தொடர் இடப்பெயர்வுகள் (1995) மற்றும் பிற காரணங்களால் வன்னி, கொழும்பு. வெளிநாடுகள் எனப் புலம்பெயர் அவல வாழ்வு தொடர்ந்தது.  

இவ்வாறாக, அன்று இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த பல ‘இலட்சனங்கள்’ பொருந்திய மண்ணில், இன்று வெறும் 40,000 மக்கள் தொகையினரே வாழ்ந்து வருகின்றார்கள். தீவுப்பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த கணிசமானோர், புலம்பெயர்ந்த நாடுகளில், சிறப்பான வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள்.  

ஆனால், தங்கள் மண்ணில் வாழ வேண்டும் என்ற எண்ணங்களுடன், தீவுப்பகுதிகளில் மீளக் குடியேறிய மக்கள், மீளவும் யாழ்ப்பாணம் நோக்கிச் சிறுகச் சிறுக நகருகின்ற நிலைமை தொடருகின்றது.  

இன்று, தீவகத்தில் மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள், வீதி அபிவிருத்திகள், கட்டுமான வசதிகள் ஆகியன, ஓரளவு திருப்திகரமான நிலைமையில் உள்ளன.  

ஆனால், நீர், மருத்துவம், கல்வி போன்ற வசதிகள், இன்னமும் திருப்தியற்ற நிலையிலேயே கிடைக்கப்பெறுகின்றன. வரட்சியான காலங்களில், நீர் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தாலும், தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக, யாழ். நோக்கி இடம்பெயர்கின்ற நிலை காணப்படுகின்றது.  

வடக்கு மாகாணத்தில் உள்ள 12 வலயக் கல்விப் பணிமனைகளில் ஐந்து வலயக் கல்விப் பணிமனைகள், யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வருகின்றன. அவை, யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம், தீவகம் என வகுக்கப்பட்டு உள்ளன.  

இவற்றில், யாழ். வலயத்தில் நான்கு, தென்மராட்சி வலயத்தில் ஒன்று, வடமராட்சி வலயத்தில் ஒன்று, வலிகாமம் வலயத்தில் ஒன்று என, மொத்தமாக ஏழு தேசியப் பாடசாலைகள், யாழ். மாவட்டத்தில் அமைந்து உள்ளன. ஆனால், தேசியப் பாடசாலை ஒன்று கூட அற்ற வலயமாக, தீவக வலயம் உள்ளது.  

தேசியப் பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல், கல்விசாரா செயற்பாடுகள் திருப்தியாகவும்  வினைத்திறன் மிக்கதாகவும் உள்ளதோ இல்லையோ என்பதற்கு அப்பால், தேசியப் பாடசாலை ஒன்று கூட, எமது வலயத்தில் இல்லையே என்ற மனக்குமுறல், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் உள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  

இதேவேளை, யாழ். வலயத்தில் 12, தென்மராட்சி வலயத்தில் ஒன்பது, வடமராட்சி வலயத்தில் ஆறு, வலிகாமம் வலயத்தில் ஏழு, தீவக வலயத்தில் 13 பாடசாலைகள், மாணவர் பற்றாக்குறை, இதர காரணங்களால் இயங்காத நிலையில் உள்ளன. அத்துடன் தீவக வலயத்திலேயே பல பாடசாலைகள், மிகக் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வருகின்றன.  

அடுத்து, 64 பாடசாலைகளைத் தன்னகத்தே கொண்ட தீவக வலயத்தில், இரு மொழி மூலப் பாடசாலைகள் அதாவது, தமிழ், ஆங்கில மொழிகளில் கல்வியை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஒன்றுமே இல்லை.  

இந்நிலையில், தீவுப் பகுதியில் வாழும் ஒரு மாணவர், ஆங்கில மொழி மூலம் கல்வி கற்க விரும்பின், யாழ்ப்பாணம் வர வேண்டும். தினசரி ஊரிலிருந்து யாழ். வந்து கற்பதோ,  தற்காலிகமாக யாழில் தங்கியிருந்து கற்பதோ அனைவருக்கும் சாத்தியமானதும் அல்ல; அனைவராலும் விரும்பப்படுவதும் அல்ல.   

புலமைப் பரிசில் பரீட்சை (2018) பெறுபேறுகளின் பிரகாரம், தீவக வலயத்தில் 1,063 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி, 55 மாணவர்களே வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களாக உள்ளனர். இது வெறும் 5.17 சதவீதமாகும். இது, தென்மராட்சி வலயத்தில் 86.02 சதவீதமாகவும் வலிகாமம் வலயத்தில் 79.31 சதவீதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறாக, கல்வி சார்ந்த செயற்பாடுகளால் தோற்றம் பெற்றுள்ளதும் வெளிப்படையாகத் தெரியாததுமான புதுவகை இடப்பெயர்வால் தீவகம் தனது மக்களை மெல்ல மெல்ல இழந்து வருகின்றது. ஊரில், முன்வீட்டுக்காரப்பிள்ளை சிறந்த கல்வி பெற எனக் கூறி, யாழ். நகர் செல்கையில், எங்களாலும் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடனேயே பலர் தீவகக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். 

செல்வந்தக் குடும்பங்களால் யாழ். நகரில் புதிதாக வீட்டைக் கொள்வனவு செய்யவோ பெரும்தொகைப் பணத்தை முற்பணமாகவும் வாடகையாகவும் செலுத்தவோ முடியும். ஆனால், ஒரு சராசரிக் குடும்பத்தால், யாழ். நகரில் வாடகைகூடச் செலுத்தி, வசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.  

இத்தனைக்கும் ஊரில், பத்துப் பரப்புக் காணி; அதற்குள் அரண்மனை போன்ற வீடு; காணியைச் சுற்றிவர பயன்தரு மரங்களும் தோட்டங்களும் என,  என்பவற்றை இழந்து, ‘ஐயோ’ என்றால், உடனே ஓடி வரும் அயலவனை மறந்து, இன்னும் பலவற்றைத் துறந்து, பட்டணம் செல்ல வேண்டி உள்ளது.   

ஆனாலும், தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, எதையும் இழக்கத் தயார் என்ற ஓர்மத்துடன் ஊரில் உள்ள காணியை விற்று, வீட்டை விற்று, நகை நட்டுகளை விற்று, வங்கி, தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, இன்று வாழ்நாள் கடனாளிகளாக பலர் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள்.  

‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். ஆனால், இன்று தீவகத்தில் மக்கள் இல்லாத பகுதிகளிலும் கோபுரங்களைக் கொண்ட பல கோவில்கள் உள்ளன. தீவுப்பகுதியைச் சேர்ந்த பலர், அரச உயர் அதிகாரிகளாக உள்ளனர். தீவகப்பகுதியைச் சேர்ந்த பெண்மணியே, கடந்த அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக விளங்கினார். ஆனாலும், கல்வி நடவடிக்கைகளில், ஏனோ தீவகம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.  

“எங்களுக்குக் கல்வி வேண்டும்; அதேநேரம், எங்கள் முகவரியையும் தொலைக்(இழக்)காமல் வாழ வேண்டும்” என்பதுவே தீவக மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கின்றது. ஆகவே, நாம் அனைவரும் இது தொடர்பில் சற்று ஆழமாகச் சிந்தித்து, செயலில் இறங்குவோம்; தனியாக அல்ல, அணியாகவே ஆகும்.  

(கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள், யாழ். கச்சேரியால் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் திரட்டிலிருந்து பெறப்பட்டவை ஆகும்)  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொங்கலுக்குப்-பிறகு-யாழ்ப்பாணம்-வரப்போறம்/91-244003

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கொரோனா வைரசும் ஒரு போதகரும் -நிலாந்தன்.. March 28, 2020   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் ஓராண்டுக்கு முன் நாட்டில் முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் முக்காடு இடுவது குற்றமாக கருதப்பட்டது. முக்காடு மட்டுமில்லை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அணியும் தலைக் கவசங்களும் சோதிக்கப்பட்டன. முற்றாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்கள் தடை செய்யப்பட்டன. அல்லது முகக் கவசங்களில் கருப்புநிற கண்ணாடி இருந்தால் அது தடுக்கப்பட்டது. கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அதுவும் தடுக்கப்பட்டது. இவ்வளவும் சரியாக ஓராண்டுக்கு முன் நடந்தவை. ஆனால் இப்பொழுது அதே படைத்தரப்பு சொல்கிறது பொது இடங்களில் முகமூடி அணிந்து கொண்டு வராவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று.எவ்வளவு தலைகீழ் காட்சி மாற்றம்? கொரோனா வைரஸ் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. சில படித்த தமிழர்களே இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பில் இருப்பது நல்லது என்று கருதுவது தெரிகிறது. இதே இடத்தில் மைத்திரிபால சிறிசேன இருந்தால் அது பெரிய அழிவாக முடிந்திருக்கும் என்று அவர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. ஒரு வைரஸ் வந்து தமிழ் மக்களால் இனப்படுகொலையாளி என்று கூறப்பட்ட ஒருவரை புனிதப்படுத்தி விட்டதா? இலங்கைத்தீவின் சுகாதார சேவைகள் எப்பொழுதும் உயர் தரமானவை என்று கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட சுகாதார சேவை இப்பொழுது படைத்தரப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. படைத்தரப்பு எல்லாருக்கும் உத்தரவிடுகிறது. கொரோனா வைரசை முறியடிப்பதற்கான கட்டமைப்பின் உயர் தலைவராக ராணுவ தளபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரையும் ஒரு போர்க் குற்றவாளி என்று தமிழ் தமிழ் தரப்பு கூறுகிறது. அமெரிக்கா அவருக்கு எதிராக பயணத் தடை விதித்திருக்கிறது. ஆனால் அவரும் அவருக்கு கீழே வேலை செய்பவர்களும் தான் கொரோனா வைரசுக்கு எதிராக போரையும் முன்னெடுத்து வருகிறார்கள். ஏற்கனவே பலமாகக் காணப்படும் ஒரு சிவில் கட்டமைப்பை ஏன் இப்படி ஒரு படை கட்டமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ராஜபக்சக்கள் ஏற்கனவே நாட்டை பல்வேறு முனைகளிலும் இராணுவ மயப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இப்பொழுது கொரோனா வைரஸை முன்வைத்து அந்த இராணுவ மயமாக்கலை மேலும் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.கடந்த வாரம் ஒரு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார். அவரும் ஒரு ஓய்வுபெற்ற வான்படைத் தளபதி தான். இது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதன் பின் எழுந்த ஒரு சர்ச்சையும் சிவில் கட்டமைப்பின் மீது போலீசாரின் தலையீடு என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரான மருத்துவர் கேதீஸ்வரனை பொலீஸ் பிரதானி ஒருவர் அச்சுறுத்தும் விதத்தில் அணுகி இருப்பதாக மருத்துவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக தகவல்களை முதலில் வெளியிட்டவர் கேதீஸ்வரன் தான். குறிப்பிட்ட போதகர் அரியாலை கண்டி வீதியில் ஒரு சர்வதேசப் பாடசாலையைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு வந்திருக்கிறார். தனது ஐந்து நாள் விஜயத்தின் போது அவர் அரியாலையில் ஒரு கூட்டுப் பிரார்தனையை நடத்தியிருக்கிறார். பதினொராம் திகதி மாலை ஆறு மணிக்கு பாடசாலையைக் கட்டும் கட்டட ஒப்பந்தகாரரையும் சந்தித்திருக்கிறார். நாடு திரும்ப முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அரியாலையில் உள்ள ஒரு மருத்தவமனையில் மருந்து எடுத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பிறபொருள் எதிரிக் குறைபாட்டு நோய் உண்டு. அவர் நாடு திரும்பிய பின் அங்கே அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவருக்காக பிரார்த்திக்குமாறு அவருடைய சபையின் யாழ்ப்பாணத்திற்கான துணைப் போதகர் வாட்ஸ் அப் குழுவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேசமயம் அவர் சிகிற்சை பெற்ற யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் போதகருக்கிருந்த நோய்குறிகளை வைத்துச் சந்தேகப்பட்டு மாகாண சுகாதார சேவை அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கிறார்கள். செய்தி சமூக வலைத்தளங்களில் வைரஸை விட வேகமாகப் பரவியிருக்கிறது. மாகாண சுகாதார சேவை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேதீஸ்வரன் மேற்படி போதகருக்கு நோய் தொற்று இருப்பதாக அறிவித்தார். அப்படி ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி கேதீஸ்வரனை அச்சுறுத்தும் விதத்தில் எச்சரித்திருக்கிறார் அந்த உண்மையை ஊடகங்களுக்கு உடனடியாக  வெளிப்படுத்தியதன் மூலம் வடபகுதியில் பீதியை உருவாக்கிவிட்டார் என்று பொலிஸ் தரப்பு அவரை எச்சரித்திருக்கிறது. இதுதொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியபோது அமைச்சர் தேவானந்தா அதை மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருக்கிறார். எனினும் மருத்துவர் சங்கம் இது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக பொலிஸ் தரப்பு கேதீஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநரும் பொலிசாரை குற்றம்சாட்டி இருக்கிறார். போதகருக்கு நோய் தொற்று இருப்பதை மருத்துவர் கேதீஸ்ஸ்வரன் ஊடகங்களுக்கு உடனடியாக வெளிப்படுத்தியதன் மூலம் வடபகுதியில் பீதியை உருவாக்கிவிட்டார் என்று பொலிஸ் தரப்பு கூறியிருப்பது சரியா? ஒரு சுகாதார சேவைகள் அதிகாரி இது விடயத்தில் உண்மையைக் கூறி மக்களை உசார் நிலைக்கு கொண்டு வர வேண்டுமா? அல்லது உண்மைகளை மறைக்க வேண்டுமா? சீனாவில் இருந்து சிங்கப்பூர் வரையிலும் இத்தாலியிலும் கூட வைரஸ் தொற்று தொடர்பாக முழுமையான தகவல்கள் உடனுக்குடன் வெளிப்படுத்தப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. சீனா நோய் நன்கு பரவத்தொடங்கிய பின்னரே அது பற்றிய தகவல்களை உலகத்திற்கு அறிவித்தது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதுபோன்ற உலகப் பொது நோய்களை கையாளும்போது பொதுச் சுகாதார சேவையும் அரசியல் தலைமையும் ஒன்றாக  இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானி லாரி பிரில்லியன்ட் கூறுகிறார் (Larry Brilliant). மனிதகுலம் சின்னம்மை நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிகம் உதவியவர் என்று கொண்டாடப்படும் ஒரு விஞ்ஞானி இவர். 2006 ஆம் ஆண்டிலேயே ஓர் உலகப் பெரும் தொற்று நோய் குறித்து மனித குலத்தை எச்சரித்தவர். கொரோனா வைரஸ் ஒரு உலகப் பொது நோயாக வந்தபின் அண்மையில் இவரை பேட்டி கண்ட பொழுது அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். ‘அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒரு நாள் நீங்கள் நியமிக்கப்பட்டால் ஊடகங்களுக்கு என்ன கூறுவீர்கள்? ‘ என்று கேட்கப்பட்ட பொழுது அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.; ஜனாதிபதி ஒபாமாவின் காலத்தில் எபோலாவை கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு அதிகாரியின் (Ron Klain)  பெயரை குறிப்பிட்டு அவருடைய பெயருக்கு பின் ஜார் என்ற அடைமொழியை இணைத்து அவரை நான் மக்களுக்கு அறிமுகப்படுத்துவேன். அவரை நாங்கள் எபோலா ஜார் என்று அழைத்தோம். இப்பொழுது அவரை கோவிட் ஜார் என்றுஅழைப்போம் என்றும் அவர் கூறினார். இங்கு ஜார் என்ற அடைமொழி ரஷ்யாவின் சர்வாதிகாரியைக் குறிக்கும். அதாவது கோவிட் 19 என்றழைக்கப்படும் வைரஸை எதிர்கொள்வதற்கு பொதுச் சுகாதார சேவை மற்றும் முடிவெடுக்கும் அரசியல் அதிகாரம் இரண்டையும் இணைக்கும் ஒரு சர்வாதிகாரி தேவை என்ற பொருள்படக் கூறுகிறார். இப்போது ராஜபக்ஷக்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். சுகாதார சேவையை படைத்தரப்பின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள். அதோடு இணைந்த எல்லா சேவைகளையும் படை மயப்படுத்தி விட்டார்கள்.  இலங்கையிலுள்ள எல்லா தனிமைப்படுத்தல் நிலையங்களையும் படைத்தரப்பே நிர்வகிக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் தான் அந்த நிலையங்கள் காணப்படுகின்றன. அதோடு நோயைக் கட்டுப்படுத்தும் தொற்று நீக்க நடவடிக்கைகளையும் படைத்தரப்பு மேற்கொள்கிறது. பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதையும் படைத்தரப்பு அறிவுறுத்துகின்றது. அதாவது எல்லாம் படைமயம். கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு படைநடவடிக்கை. இப்படிப்பட்டதொரு சூழலுக்குள் முதலாவது நோயாளியை பற்றிய விபரங்களை ஒரு சிவில் அதிகாரி அவருடைய சிவில் ஒழுக்கத்திற்கூடாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய பொழுது அதை போலீஸ் ஒரு விவகாரமாக பார்த்திருக்கிறது. ஆனால் அதே போலீஸ் தான் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த போதகருக்கு பாதுகாப்பு கொடுத்ததாக ஆளுநரே குற்றம் சாட்டுகிறார். ஒரு போதகர் அல்லது ஒரு கூட்டு வழிபாடு இவ்வாறு நோய்த் தொற்றை அதிகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகிப்பது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடக்கவில்லை. அல்லது தென்கொரியாவில் மட்டும் நடக்கவில்லை. ஐரோப்பாவிலும் நடந்திருக்கிறது. கிழக்குப் பிரான்சில் பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகிய  Mulhouse -முல்ஹவுஸில் அது நடந்திருக்கிறது. இந்த நிலத் துண்டுக்காக ஜெர்மனியும் பிரான்சும் பல ஆண்டுகளாக போர் புரிந்திருக்கின்றன. இப்பொழுது அந்த பகுதியில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதால் ஜெர்மனியும் சுவிட்சலாந்தும் நோயாளிகளுக்கு தமது ஆஸ்பத்திரிகளைத் திறந்து விட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதியில் நடந்த ஓர் ஆவிக்குரிய சபையின்  (‘Porte Ouverte’) வழிபாட்டில் பங்குபற்றிய மக்கள் மத்தியிலிருந்துதான் கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகியது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 3000 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையின் மூன்று சிஸ்டர்கள் கொரோனாவால் இறந்து விட்டார்கள்.தலைமைப் போதகரும் பல சபை உறுப்பினர்களும் தோய்த் தொற்றுக்க ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் ஜெர்மனியிலும் பிரான்சிலும் சுவிற்சலாந்திலும் அதை ஒரு மதப் பிரிவினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமாக யாரும் மாற்றவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு மாற்றியிருக்கிறார்கள். அதிலும் முகநூலில் வேறுவேறு தமிழ் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் காணப்படும் நபர்கள் அவ்வாறான வெறுப்புப் பிரச்சாரங்களில்  ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தேர்தலில் யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் சுமந்திரனோடு ஏற்பட்ட மோதலின் விளைவாக அவருடைய கட்சிக்காரர்களே சுமந்திரனை ஏற்கனவே அல்லேலுயா கூட்டம் என்று விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். இப்பொழுது கொரோனா வைரஸ் விவகாரத்தோடு அல்லேலூயா கூட்டம் என்று கூறி எல்லா ஆவிக்குரிய சபைகளையும் குற்றவாளிகளாக காட்டத் தொடங்கி விட்டார்கள். இத்தனைக்கும் இவர்கள் எல்லாருமே தமது பகுதிகளில் கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிரங்கமாக பொதுவிடங்களில் தோன்றுபவர்கள். இவர்கள் இவ்வாறு ஒரு மதப்பிரிவினருக்கு எதிராக வன்மம் கலந்த எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒரு திரளாக்க முயற்சிக்கிறார்களா ? அல்லது தமிழ் மக்களை சிதறடிக்க போகிறார்களா? ஒரு போதகர் நோய்க்காவியாக யாழ்ப்பாணத்துக்கு வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் எல்லா ஆவிக்குரிய சபைகளையும் சந்தேகத்தோடு பார்ப்பது என்பது  ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் அப்பாவி முஸ்லிம்கள் எல்லாரையும் சஹிரானோடு சேர்த்து பார்த்ததற்கு சமமானது. அந்தப் போதகர் சாவுக்கு ஏதுவான ஒரு நோய் தனக்குத் தொற்றி இருக்கிறது என்று தெரிந்து கொண்டே யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பாரா? அப்படி யாழ்ப்பாணத்துக்கு வந்து நோயைப் பரப்பி தன்னையும் தனது சபையையும் அழித்துக் கொள்ள வேண்டிய தேவை என்ன? கிடைக்கும் தகவல்களின்படி அவர் குணமாகி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே ஒரு போதகரிடமிருந்து நோய் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஒரு மத விவகாரமாக அணுகாமல் நிதானமாக அணுக வேண்டும். இது விடயத்தில் ஏன் எந்த ஒரு தமிழ் கட்சியும் கருத்து தெரிவிக்கவில்லை என்று நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு முன்னாள் தமிழ் ஊடகவியலாளர் கேட்டிருந்தார். அண்மைக் காலங்களில் சாதி , மத  பிரதேசப் பிரிவினைகளை பெரிதாக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருமோர் அரசியற்  சூழலில் தமிழ்க்  கட்சித் தலைவர்கள் துணிந்து கருத்துக் கூறி மதப் பல்வகைமையை உறுதிப்படுத்துவார்களா? நன்றி- உதயன் – சஞ்சீவி     http://globaltamilnews.net/2020/139451/
    • Sri Lanka: Justice Undone for Massacre Victims Presidential Pardon Shows Rajapaksa’s Indifference to Army Atrocities March 27, 2020 10:20PM EDT Expand Sri Lankan President Gotabaya Rajapaksa, center, sings the national anthem during an event to mark the anniversary of country's independence from British colonial rule in Colombo, Sri Lanka, Tuesday, Feb. 4, 2020. © 2020 AP Photo/Eranga Jayawardena (New York) – Sri Lankan President Gotabaya Rajapaksa’s pardon of a soldier convicted of massacring eight civilians, including children, shows the administration’s disregard for justice for the worst abuses, Human Rights Watch said today. The conviction of former Sgt. Sunil Ratnayake had been one of the very few cases of security force personnel being criminally punished for civil war-era atrocities, despite the huge number of credible and extremely serious allegations. Ratnayake, who was pardoned on March 26, 2020, was found guilty in 2015 of killing eight civilians, including a 5-year-old, at Mirusuvil, in northern Sri Lanka, in 2000. The bodies of the victims showed signs of torture. The conviction had been upheld by Sri Lanka’s court of appeal. “The Gotabaya Rajapaksa government couldn’t make it any plainer to victims and their families that it opposes any form of justice for even the worst atrocities,” said Meenakshi Ganguly, South Asia director. “Concerned governments need to take the government’s own message on board and respond appropriately to uphold basic human rights protections and prohibitions on war crimes.” Both government forces and the successionist Liberation Tigers of Tamil Eelam (LTTE) were implicated in numerous abuses during the conflict, which ended with the LTTE’s defeat in 2009. Gotabaya Rajapaksa was defence secretary during the final stages of the civil war, when the United Nations has found that tens of thousands of civilians were killed, hospitals were shelled, and prisoners were summarily executed. He came to office as president in 2019, promising to release “war heroes” who had been imprisoned on “false” charges. “The Presidential pardon is an affront to victims and yet another example of the failure of Sri Lanka to fulfil its international human rights obligations to provide meaningful accountability for war crimes, crimes against humanity, and other gross violations of human rights,” noted a statement from UN High Commissioner for Human Rights. “Pardoning one of the sole convicted perpetrators of atrocities committed during the Sri Lankan conflict further undermines the limited progress the country has made towards ending impunity for mass human rights abuse.” Since taking office, President Rajapaksa appointed army chief Shavendra Silva, who faces credible allegations of war crimes, as his chief of defence staff. In February, Silva was banned from entering the United Statesdue to the allegations against him. Rajapaksa has also appointed retired general Kamal Gunaratne, who is implicated in alleged war crimes committed by the army’s 53 Division, which he commanded, as defence secretary. Gunaratne is currently leading the government’s task force to combat the COVID-19 pandemic. In February, the Sri Lankan government withdrew from its commitments under a UN Human Rights Council resolution that included provisions for justice for abuses committed by both sides during the civil war. That resolution, which was passed by consensus in 2015 and reaffirmed as recently as 2019, represented the commitment of UN member states and their strategy for upholding international human rights and humanitarian law for civil war-era violations. “The Rajapaksa government has appointed alleged perpetrators of war crimes to high office while pardoning one of the few soldiers convicted for a terrible offense,” Ganguly said. “It should be clear that to deliver justice for victims and to deter future atrocities, an international justice mechanism is needed in Sri Lanka.”
    • யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அகற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் சோதனையிடப்பட்ட போது குறித்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையலறையில் பாவனைக்கு உதவாத முறையிலிருந்து பழைய ரொட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களும் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று (சனிக்கிழமை) அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த கடையின் பின்கதவு திறந்திருந்த நிலையில் உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டியில் பாவனைக்குதவாத உணவுகள் கண்டெடுக்கப்பட்டன. உணவக உரிமையாளர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/wp-content/uploads/2020/03/Jaffna-Hotel-Searching-1-1536x864.jpg http://athavannews.com/யாழில்-உணவகமொன்றில்-பாவன/
    • ம‌ன‌சுக்கு பிடிச்ச‌ உற‌வுக‌ளுட‌ன் தானே அன்பு ச‌ண்டை போட‌ முடியும் சுவி அண்ணா 😁/