• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

தமிழ் தலைமைகளுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை..! இந்திய ஊடுருவலை ஊக்குவிக்கவேண்டாம். தீர்வு எங்களிடமே உள்ளது.! 

mahinda-Jaffnazonejpg.jpg

வட கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியா தீர்க்கும் என தமிழ் தலைமைகள் கூறுவதை பற்றி கேள்வி பட்டுள்ளேன். அந்த முயற்சியை நிறுத்துங்கள்.

தீர்வு எங்களிடமே இருக்கின்றது. தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை பிரதமர் இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.‘தமிழ் மக்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தரும் என்ற சிந்தனையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்யும் செயலை தமிழர் பிரதிநிதிகள் மாற்றிக்கொண்டு எம்மூடாகத் தீர்வைப் பெற முயலவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார். 

https://jaffnazone.com/news/15352

Share this post


Link to post
Share on other sites

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்' - மஹிந்த ராஜபக்ஷ

pmoffice sri lankaபடத்தின் காப்புரிமைPMOFFICE SRI LANKA

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறான விடயம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதம செய்தி ஆசிரியர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும்," என அவர் கூறினார்.

இலங்கை தமிழர்களுக்காக தீர்வுத்திட்டம், தம்மிடமிருந்தே கிடைக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தம்முடன் இணைந்து செயற்படும் பட்சத்தில், அதற்காக திட்டம் விரைவில் கிடைக்கும் என அவர் கூறினார்.

தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களுடன் என்றும் ஒன்றாகவே செயல்படும் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான திட்ட வரைவு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைMAHINDA RAJAPAKSHA'S MEDIA

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் தாண்டிய (13 பிளஸ்) அதிகாரத்தை வழங்குவதாக கூறிய அவரது தற்போதைய நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

தான் அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்திய மீனவர் பிரச்சனை

இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

அதன் முதற்கட்டமாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவார் என அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் தான், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை Image captionகாங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் தமிழக மீனவர்களின் படகுகள். (கோப்புப்படம்)

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை காரணமாக வடக்கு பகுதியிலுள்ள தமிழர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தமிழர்களின் பொருளாதாரமே அதிகளவில் இல்லாது ஒழிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரசியல் கைதிகளின் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை தான் கோரியுள்ளதாகவும், அந்த விவரங்கள் கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

இந்த கைதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளதாக கூறிய அவர், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்வது கடினம் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாமை

தமது அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமை காரணமாகவே முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

தமது அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மாத்திரமே முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்ததாகவும், அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவரும் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்கள் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-51103301

Share this post


Link to post
Share on other sites

திரு விக்கினேஸ்வரன் ரஜனியைச் சந்தித்த செய்தி தெரிஞ்சு மகிந்த அப்படியே ஆடி ஒடுங்கி பயந்துட்டாராக்கும்

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ஏராளன் said:

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்' - மஹிந்த ராஜபக்ஷ

இந்தியன் சூடு சொரணையற்ற பிச்சைக்காரன், இந்திய அரசு சூடு சொரணையற்ற பிச்சைக்காரர் என்பதை போர்க்குற்றவாளிகள் நடத்தும் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் கருத்து வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சூடு சொரணையற்ற பிச்சைக்கார அரசின் முகவர்களாக செயற்படும் சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல் என்ன செய்யப்போகிறார்கள்?

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, போல் said:

இந்தியன் சூடு சொரணையற்ற பிச்சைக்காரன், இந்திய அரசு சூடு சொரணையற்ற பிச்சைக்காரர் என்பதை போர்க்குற்றவாளிகள் நடத்தும் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் கருத்து வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சூடு சொரணையற்ற பிச்சைக்கார அரசின் முகவர்களாக செயற்படும் சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல் என்ன செய்யப்போகிறார்கள்?

எங்கள் கோபத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு கொஞ்சம் நிதானமாக யோசிப்போமே .

நாங்கள் என்ன செய்யலாம் ? 

எப்படிச் செய்யலாம் ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி By Mohamed Shibly -     இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,  மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும்.  லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை நெருங்கும் வாய்ப்பை தவறவிட்டது. அந்த அணி நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் 6 புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. சொந்த ரசிகர்களுக்கு முன் சிறந்த ஆரம்பத்தை பெற்றபோதும் ஆரொன் வான் பிசிக்கா பரிமாற்றிய இரண்டு கோல் வாய்ப்புகளை அன்தோனி மார்ஷல் மற்றும் ஜுவான் மார்டா வலைக்குள் செலுத்த தவறினர்.  இந்த வீணடிப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பர்ன்லி 39 ஆவது நிமிடத்தில் வைத்து ஆஷ்லி வெஸ்ட்வுட்டின் ப்ரீ கிக்கை கிறிஸ் வூட் கோலாக மாற்றனார்.   தொடர்ந்து இரண்டாவது பாதியின் 56 ஆவது நிமிடத்தில் மேல் மூலையில் இருந்து ஜே ரொட்குஸ் அபார கோல் ஒன்றை பெற்று பர்ன்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.   1962 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடட்டை  5-2 என தோற்கடித்த பின் ஓல்ட் டிரபர்ட்டில் பர்ன்லி அவ்வணிக்கு எதிராக பெறும் முதல் வெற்றியும் இதுவாகும். டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் நோர்விச் சிட்டிி ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் நோர்விச் சிட்டி அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வெற்றி வழிக்கு திரும்பியுள்ளது.  கடைசி நான்கு லீக் போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய டொட்டன்ஹாம், கடைசி மூன்று போட்டிகளில் ஒரு கோலைக் கூடப் பெறாத நிலையில் கடைசி நிமிடங்களில் சொன் ஹியுங் மின் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஹரி கேன் காயமுற்று ஆடாத நிலையில் கோல் ஒன்றை பெற போராடி வரும் ஹொட்ஸ்பர் அணி சார்பில் டெலி அலி முதல் பாதியில் கோல் ஒன்றை பெற்றார். 2020 ஆம் ஆண்டில் அந்த அணி பெற்ற முதல் லீக் கோலாக இது இருந்தது.    எனினும், இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி ஒன்றை கோலாக மாற்றிய டீமு புக்கி நோர்விச் அணிக்கு பதில் கோல் திருப்பினார்.  இந்நிலையில் 79 ஆவது நிமிடத்தில் நெருக்கமான தூரத்தில் இருந்து அலி பரிமாற்றிய பந்தை கொண்டு சொன், ஹொட்ஸ்புரின் வெற்றி கோலை பெற்றார்.  இந்த வெற்றியுடன் ஹொட்ஸ்புர் 24 போட்டிகளில் 34 புள்ளிகளை பெற்று 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.  http://www.thepapare.com/international-football-roundup-for-22nd-of-january-2020-tamil/
    • ஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad -   ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்னையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார்.   உலக தரநிலைப்படுத்தும் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேர்வுப் போட்டிகள் நேற்று (22) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.  இறுதியாக நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் மற்றும் ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர்களில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் 15 பேர் கொண்ட இந்தக் குழாத்தில் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.    இதில், அண்மைக்காலமாக இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக விளையாடிவரும் வடக்கின் நட்சத்திர வீராங்கனையும், இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களைப் போட்டு சாதனை படைத்தவருமான தர்ஜினி சிவலிங்கம் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.  இந்த நிலையில், வடக்கின் இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலவருக்கு இந்தத் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  எனினும், தயார்நிலை வீராங்கனைகள் பட்டியலில் அவரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனையான திசாலா அல்கம, நீண்ட இடைவெளியின் பிறகு இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் வரவேற்பு அணியான ஹொங்கொங், இலங்கை, தாய்லாந்து மற்றும் கென்யா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன.  இலங்கை வலைப்பந்தாட்ட குழாம் 
    • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தாருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து அவர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும அவர் சாடியுள்ளார். சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீனத்தை புரிந்துக் கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முன்வருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன் அண்மையில் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்புக்கு பதில் அளிக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=124891