Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி; விஜய் தான் முன்னணியில் இருக்கிறார்: சீமான்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சென்னை

ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"ஆட்சியில் இருக்கும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் யாருக்கு வேலை கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு திமுகவிடம் இருந்து என்ன பதில் வரும்? ஈழப்படுகொலைக்கு துணை நின்றவர்களே, ஈழப்படுகொலைக்கு நியாயம் கேட்கின்றனர்.

10 ஆண்டுகளாக ஐநாவில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பேசாத அவர்கள், இப்போது ஏன் பேசுகின்றனர்? அதற்குக் காரணம் எங்கள் அரசியல் வலுப்பெறுகிறது. திராவிடக் கட்சிகளால் எல்லாமும் அழிவதை பார்க்கும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்குகின்றனர்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் வீடுகளை அழிக்கவும், அவர்களை கொல்லவும் நிதி கொடுத்தது யார்? அங்கு அனைவருக்கும் மீண்டும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை. அவர்களின் மறுவாழ்வுக்கு என இந்தியா நிதி ஒதுக்கியிருக்கிறதா?

சர்வதேச சமூகம், தமிழர் என்ற இனமா அல்லது இந்தியா என்ற பெருநாட்டின் நட்பா என்று பார்த்தால், இந்தியாவின் நட்பைத்தான் விரும்புவார்கள். அந்த இந்தியா தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது. தமிழர்களை அழித்த இலங்கையின் நண்பனாக இருக்கிறது.

தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இதனை ஐநாவில் பேசுவதைவிட நாடாளுமன்றத்தில் பேசுவதே முக்கியமானது”.

இவ்வாறு பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

சீமான் விஜயை முன்னிலைப்படுத்துகிறாரா?

நான் முன்னிலைப்படுத்தித்தான் விஜய் முன்னிலைப்பட வேண்டுமா? அவர் முன்னணியில்தானே இருக்கிறார். இன்னும் ரஜினிகாந்த் ஒரு 4 படங்களில் நடிப்பார்? அதன்பிறகு யார் முதன்மை இடத்தில் இருப்பார்? விஜய்தானே இருப்பார். இரண்டு பேருக்கும் தான் போட்டி உள்ளது. ரஜினிக்குப் பிறகு விஜய்தான் முதன்மை இடத்தில் இருப்பார்.

1567145595.jpg

ரஜினி, விஜய்: கோப்புப்படம்

வெற்றி இலக்கு இல்லாமல் நாம் தமிழர் செயல்படுகிறதா?

இலக்கு இல்லை என சொல்லமுடியாது. இலக்கு இல்லாமல் எப்படி பயணிக்க முடியும்? இங்குள்ள அரசியல் கட்சிகள் எப்படி வெற்றியப் பெறுகின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் போராடும் போது, வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல்தான் செல்ல வேண்டும்.

இதனை உடனடியாக செய்ய முடியாது. உயர்ந்த அரசியலில் ஈடுபடுவது சாதாரணம் அல்ல. இன்றைக்கு ஏராளமான சாதிக் கட்சிகள், மத அமைப்புகள் இருக்கின்றன. இந்த உணர்வைத் தாண்டிய அரசியலை முன்னெடுப்பது மிகப்பெரிய போராட்டம்.

திராவிட இயக்கமே தோன்றி, 19 ஆண்டுகள் கழித்துத்தான் தேர்தல் களத்திற்கு வந்தது. நான் ரசிகர்களை தொண்டர்களாக்கி அரசியலுக்கு வரவில்லை. கமல், ரஜினி, விஜயகாந்த் போன்று நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களைத்தான் சந்தித்தேன். ஆகவே நாங்கள் வெற்றி பெற காலம் பிடிக்கும்.

அம்பேத்கர் சிலை உடைப்பு

இது ஒரு கேவலம்; தேசிய அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும். சாதி பாகுபாட்டைக் பாதுகாப்பது போல, 10% பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததால் தான் அதை எதிர்த்தோம்"

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/513522-seeman-says-vijay-leads-a-head-of-rajinikanth-4.html

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • திருச்சி: காவிசாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு! மின்னம்பலம்   திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவதும், காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் கோவை, திருக்கோவிலூர், கடந்த 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தேளூரில் அமைந்திருக்கும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சினாலும் அது தொடர்கிறது. திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியும், செருப்புகளை வீசியும் அவமரியாதை செய்துள்ளனர். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களையும் கீழே சாய்த்து தள்ளியிருக்கிறார்கள். இன்று அதிகாலை அவ்வழியாகச் சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர், பெரியார் சிலையில் ஊற்றப்பட்ட காவிச் சாயத்தை தண்ணீர் ஊற்றி அழித்தனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.   துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்” என உறுதியளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், “ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். திருச்சி - இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய ஸ்டாலின், “பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல. தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்” என்றும் சாடினார். திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, “திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ?நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?” என்று கேள்வி எழுப்பினார். பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜகவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது தவறு. அவசியமற்றது.நம் சித்தாந்தத்திற்கு எதிரானவர்களை கருத்தினால் மட்டுமே வெல்ல முயற்சிக்க வேண்டும். ஈ.வெ.ரா, நம் கொள்கைகளுக்கு எதிரானவர் தான். அநாகரீகமான இது போன்ற செயல்களை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவி புனிதமானது. அதை வைத்து அநாகரீகம் செய்வது முற்றிலும் தவறு.இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது உடன் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.     https://minnambalam.com/politics/2020/09/27/33/periyar-statue-insult-saffron-paint-trichy
  • மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை. ஆளையால் தெரியாமல் யாழ் களத்தில் கருது பரிமாற்றம் செய்யும்போது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கூடத்தான். எனவே உங்கள் விளக்கம் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயாத்தை தந்ததுதான் உண்மை. எனக்கு களத்தில் ஒரு சிலரைவிட மற்றவர்கள் எல்லாரும் என்ன வயது, ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்தான் இருக்கிறது. நீங்கள் என்னைவிட மிகவும் வயது குறைந்தவர் என்று தெரிகிறது. மூத்த சகோதரி நிச்சயம் எனது வயதாக இருக்கமாட்டா என்பதால் தங்கள்  complement யை  ஏற்றுக்கொள்கிறேன். எங்கட காலத்தில மிஷன் கொஞ்சம் Bootcamp மாதிரித்தான் . அதனால்தான் அடிக்கடி தப்பி ஓடி மூன்று  பிள்ளயார் கோயில் , கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவ காண இருந்த பஸ் ஸ்டாண்டுகள் எல்லாத்திலயும் தான் எமது பொழுதுபோக்கு. 70' களில் நள்ளிரவு வேளைகளில் கூட நண்பிகள் கூட்டம் மிஷன், கோயில், வெசாக் விளக்கு என்று காலி வீதியில் தனியா நடந்து போகக்கூடியதாக இருந்தது. பின்னுக்கே கூட்டமாக வரும்  bodyguards ஆள் தனி பாதுகாப்பு வேற. சுமந்திரன், வரகுணன் எல்லோரும்தான்.வருடத்தில் இப்படி ஓரிரு நாட்கள் தான் இப்படி போக வீட்டில் இருந்து அனுமதி கிடைக்கும். அதுவும் மிஷன் என்று சொல்லிவிட்டு கோவிலில் போய் பிராக்கு பாக்கிறது. எல்லா பெடியன்களுக்கும் பட்டப்பெயர் வைத்துதான் கதைப்பது. அப்போதெல்லாம் நேரடியாக பேசுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டம், நாங்கள் ஒரு கூட்டம். சாடை மாடையில்  தான் கதை. பெடியள் மட்டும் சத்தம் போட்டு கதைப்பார்கள். சவோய், சப்ஹயர், ஈரோஸ் தியட்டர்களுக்கு டியூஷன் என்று சொல்லிவிட்டு போவது என்று அந்த காலங்கள் இனி திரும்பி வரவே மாட்டுது.
  • பிரச்சினை என்னவென்றால் யாரும் எமக்கு நேர்மையுடன் உதவ வருவர் என்ற எதிர்பார்ப்பே அர்த்தமற்றது! உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை! அவர்களுக்கு தேவையான எங்களுக்கு இழப்பில்லாத ஒன்றைக் கொடுத்து, எங்களுக்கு அவசியமான ஒன்றைப் பெற்றுக் கொள்வோம் என்ற flexibility இருந்திருக்க வேண்டும்!  இங்கே பலர் நோர்வேயை திட்டி தீர்க்கும் அதே நேரம், ஜப்பானில் நடந்த உதவி மாநாட்டை ஏன் நாம் புறக்கணித்து பேச்சுக்களை முடித்து வைத்தோம் என்று கேள்வி கேட்பதேயில்லை! ஏன்? அது தான் ஈழவரின் பலவீனம் என நினைக்கிறேன். எங்கள் குறைபாட்டை ஆராயவே மாட்டோம், மற்றவர் குறைபாட்டைப் பற்றி மூக்குச் சிந்திக் காலத்தை வீணாக்குவோம்!
  • எனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும்  நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன. ☹️ ஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.  👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.