• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Recommended Posts

Jallikattu in Madurais Alanganallur:730 players are participating in the game

சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடந்து வருகிறது.

தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாராமபாரியமான மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இதனால் அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போட்டி நடக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் அங்கு உள்ளனர். 5க்கும் ஏற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு இடம்பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இவர்களின் உடல் தகுதி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவரம் காட்டி வருகின்றனர்.

தமிழகம் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார். அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை காண பல மாநிலங்களில் இருந்து மக்கள் தமிழகம் வந்துள்ளனர். பல நாடுகளில் இருந்தும் அவனியாபுரத்தில் மக்கள் குவிந்துள்ளனர். போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். போட்டிகளை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார், எம்எம்ஏக்கள் கலெக்டர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காளைகளை பிடிக்க ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 75 காளையர்கள் களமிறக்கப்படுவர்.

வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்கு வழங்க ஏராளமான பரிசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. காளைகளால் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/jallikattu-in-madurai-s-alanganallur-730-players-are-participating-in-the-game-374153.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்

jalli-kattu.jpg

அவனியாபுரத்தில் இடமபெற்ற ஜல்லிக்‍கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 43 பேர் காயமடைந்துள்ளனர்.

அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம் – திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி மாலை 4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்‍கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 43 பேர் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்‍காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர்.

http://athavannews.com/அவனியாபுரம்-ஜல்லிக்கட்-3/

Share this post


Link to post
Share on other sites

ஜல்லிக்கட்டு: பாலமேட்டில் சீறிப்பாயும் 700 காளைகளும், 923 வீரர்களும் (புகைப்பட தொகுப்பு)

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 923 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஜல்லிக்கட்டு

வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை பரிசோதனை செய்யவும் அடிபடும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு

காளைகளுக்கு மது, போதைப்பொருள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றும், காய்ச்சல் உடல் உபாதைகள் இருக்கிறதா என்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்து களத்தில் விளையாடும் மாட்டிற்கும் கார் முதல் சைக்கிள் வரை பரிசுகளை வழங்குகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

படங்கள் மு.நியாஸ் அகமது

https://www.bbc.com/tamil/arts-and-culture-51132032

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

82244114_2769451939815576_2502738431914803200_o.jpg?_nc_cat=111&_nc_ohc=1MSOCbSL-QIAX-YBX-8&_nc_ht=scontent-frx5-1.xx&_nc_tp=1002&oh=74a310473fdc5de5e57c8209e6feb4bd&oe=5E8D424D

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பெண்ணையும், குழந்தையையும் பார்த்தவுடன்... 
தனது, ஆக்ரோசத்தை அடக்கி... தாவிச் சென்ற காளை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • மகிந்தர் சனாதிபதியாக இருந்தபோது பிணம்புணரும் படைகளையும் கொண்டவர். அவர் படைகளுக்கு முன் உரிந்திருந்தால் என்ன? உரியாமல் இருந்தால் என்ன?. அதுகள் தங்கள் காரியங்களைக் கனகட்சிதமாகச் செய்யும், இதற்கு மை போட்டா பார்க்கவேண்டும்.....?? 🤔 தற்போது மகிந்தரின் தம்பி சனாதிபதி. மகிந்தர் தனது அனுபவங்களை மீண்டும் மீண்டும் சொன்னால்தானே தம்பியும் தன்பின் வருவோருக்குச் சொல்லி, அந்த முன்னுரிமையைத் தொடரவைக்க முடியும். 😲
    • 2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா)  என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தகவலுக்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சாராவின் சிறிய தந்தை மற்றும் அம்பாறை உப கராஜின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் ஆகியோரையை கைது செய்து குற்றத் தடுப்பு பிரிவு விசாரணையை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராகி இருந்ததாக கூறப்படும் சஹ்ரானின் பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்ட குழு கல்முனை – சாய்ந்தமருது பகுதியில்  கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டது. இந்த குழுவில் நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவலய குண்டுதாரியின் மனைவியான சாராவும் இருந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் இறந்தமைக்கான  எந்த தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே சாய்ந்தமருது வீட்டில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரேயே சாரா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக  நம்பப்படும் நிலையிலேயே கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை தற்போது ஆரம்பித்துள்ளது. குறித்த விசாரணையின் ஆரம்பகட்டமாகவே  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், சாராவின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த காலப்பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ளார்.மேலும் இவர்  சாய்ந்தமருது பகுதிக்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி,சாரா தப்பிச் செல்ல உதவினாரா என்பதை அறியவே அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2ஆம்-கட்ட-தாக்குதலுக்கு-த/