தமிழ் சிறி

சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Recommended Posts

Jallikattu in Madurais Alanganallur:730 players are participating in the game

சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடந்து வருகிறது.

தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாராமபாரியமான மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இதனால் அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போட்டி நடக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் அங்கு உள்ளனர். 5க்கும் ஏற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு இடம்பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இவர்களின் உடல் தகுதி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவரம் காட்டி வருகின்றனர்.

தமிழகம் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார். அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை காண பல மாநிலங்களில் இருந்து மக்கள் தமிழகம் வந்துள்ளனர். பல நாடுகளில் இருந்தும் அவனியாபுரத்தில் மக்கள் குவிந்துள்ளனர். போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். போட்டிகளை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார், எம்எம்ஏக்கள் கலெக்டர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காளைகளை பிடிக்க ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 75 காளையர்கள் களமிறக்கப்படுவர்.

வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்கு வழங்க ஏராளமான பரிசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. காளைகளால் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/jallikattu-in-madurai-s-alanganallur-730-players-are-participating-in-the-game-374153.html

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்

jalli-kattu.jpg

அவனியாபுரத்தில் இடமபெற்ற ஜல்லிக்‍கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 43 பேர் காயமடைந்துள்ளனர்.

அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம் – திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி மாலை 4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்‍கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 43 பேர் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்‍காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர்.

http://athavannews.com/அவனியாபுரம்-ஜல்லிக்கட்-3/

Share this post


Link to post
Share on other sites

ஜல்லிக்கட்டு: பாலமேட்டில் சீறிப்பாயும் 700 காளைகளும், 923 வீரர்களும் (புகைப்பட தொகுப்பு)

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 923 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஜல்லிக்கட்டு

வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை பரிசோதனை செய்யவும் அடிபடும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு

காளைகளுக்கு மது, போதைப்பொருள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றும், காய்ச்சல் உடல் உபாதைகள் இருக்கிறதா என்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்து களத்தில் விளையாடும் மாட்டிற்கும் கார் முதல் சைக்கிள் வரை பரிசுகளை வழங்குகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

படங்கள் மு.நியாஸ் அகமது

https://www.bbc.com/tamil/arts-and-culture-51132032

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

82244114_2769451939815576_2502738431914803200_o.jpg?_nc_cat=111&_nc_ohc=1MSOCbSL-QIAX-YBX-8&_nc_ht=scontent-frx5-1.xx&_nc_tp=1002&oh=74a310473fdc5de5e57c8209e6feb4bd&oe=5E8D424D

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பெண்ணையும், குழந்தையையும் பார்த்தவுடன்... 
தனது, ஆக்ரோசத்தை அடக்கி... தாவிச் சென்ற காளை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வரும். வரும். 👍 அன்னாள் என் வாழ்வின் இனிய பொன்னாள். 😀 எங்களுக்கு தனி நாடு கிடைக்குதோ இல்லையோ, இந்தியா என்கின்ற நாடு உலகின் வரைபடத்திலிருந்து மறைய வேண்டும் 😡
  • டமிலனா கொக்கா ?  அவர்களின் வீட்டிற்கு கைக் குத்தரிசி கொண்டுவருபவர் ஒரு வயதான அம்மா. அவரின் காதோ கடுக்கன்/ தோட்டின் (?) (பழைய கால டிசைன்)பாரத்தில்   தோள்வரைநீண்டு தொங்கியபடியிருக்கும். பிளவுஸ் இல்லாத குறுக்குக் கட்டிய சேலை. முகத்தில் மூப்பும் கடின உழைப்பின் மினுமினுப்பும் ரேகைகளாக சுருங்கி ஒட்டியபடியிருக்கும்.    தலையில் அரிசி பையை (உரப் பை / சாக்கு / கடகம் ?) வைத்து பல மைல்கள் வெய்யிலில் நடந்து அவ்வூருக்கு கொண்டு வருவார். அவருடன் பலரும் கூடவே வந்து ஊர் எல்லையை அடைந்தவுடன் பிரிந்து தங்களுடைய பிரத்தியேக வீடுகளுக்குச் செல்வர். இந்த அம்மா அரிசியை இந்த வீட்டிற்குத்தான் முதலில் கொண்டு  வருவார். ஏனென்றால் இந்த வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம். பத்து வளர்ந்த பிள்ளைகளும் பெற்றோரும் உள்ளடங்கலாக பன்னிரெண்டு உருப்படிகளைக்  கொண்ட கடின உழைப்பளிகள் குடும்பம்.  இந்த வயதான அம்மா, வீட்டின் படியிலமர்ந்து அரிசியை அளந்து கொடுத்தவுடன் அருந்துவதற்கு தண்ணீர் கேட்பார். வீட்டுக்கார அம்மாவும் மகிழ்வுடன் பித்தளைச் செம்பில் தண்ணீரைக் கொண்டுவந்து சரித்து ஊத்துவார். அந்த வயதான அம்மாவும் இரு கைகளையும் ஏந்தி அருந்துவார். இது ஒரு காலம். 🙂 பின்பு .... இந்தியன் ஆமி வந்தது. குறிப்பிட்ட காலத்தில் சண்டையும் தொடங்கியது. 😢   இந்த வீட்டுக்கார அம்மாவின் குடும்பமும் கையில் கிடைத்தை எடுத்துக்கொண்டு ஊரோடு  ஓடத் தொடங்கியது. நீண்ட ஓட்டம்.   அவர்கள் ஓடிக் களைத்து,   எதிர்ப்பட்ட பெரிய மதிலினோரமாக  கேற்ருக்கு  அருகில் நின்ற மரத்தின் கீழ் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அவ் வீட்டில் குடியிருந்தோர்  அவர்களை உள்ளே அழைத்து கதிரைகளில் இருத்தி தேனீரும் வழங்கி அவர்களை உபசரித்தனர். திரும்பவும் இந்த வீட்டுக்கார அம்மாவின் குடும்பம் அவர்களுக்கு நன்றி கூறி புறப்பட ஆயத்தமானார்கள். அந்த நேரம் பார்த்து  வீடடினுள்ளேயிருந்து சிறிய இருமலுடன் ஒரு வயதான அம்மா இவர்களுக்கு முன்னே வந்தார். இவர்கள் முகத்தில் ஈயாட......... இந்த விடயத்தில் இந்தியன் ஆமிக்கு நன்றி. 🙂 (இது ஓர் உண்மைச் சம்பவம்) திரியின் தலைப்பிற்கும் இந்தக் கதைக்கும்  தொடர்பில்லையென்றாலும் கிருபனுக்கு ஒருக்கா  முண்டு கொடுப்போமெண்டு நினைச்சன்.....😀
  • கொரோனா வைரஸ் எவரையும் தாக்கலாம் ஆனால் சில சமூகத்தினர் ஏனையவர்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் இனசிறுபான்மை குழுக்களின் மீது அளவுக்கதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது. தீவிரகிசிச்சை பிரிவின் தேசிய கணக்காய்வு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 35 வீதமானவர்கள் சிறுபான்மை மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வேல்ஸ் வடஅயர்லாந்து மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகளில் உள்ள 2000 நோயாளிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 13.8வீதமானவர்களஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் , 13.6 வீதமானவர்கள் கருப்பினத்தவர்கள்,என அந்த புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன என பிபிசி குறிப்பிட்டுள்ளது. 2011 சனத்தொகை கணக்கெடுப்பின் படி இங்கிலாந்து வேல்சில் உள்ள 14 வீதமானவர்கள் சிறுபான்மை சமூகத்தவர்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமான சிறுபான்மையினத்தவர்களும் கருப்பினத்தவர்களும் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதை புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன என பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினத்தவர்களின் சமூக பொருளாதார பின்னணி, மக்களை சந்திக்கும் தொழில்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளமை,பல்வேறு விதமான கலாச்சார நம்பிக்கைகள்,நடவடிக்கைகள் ஆகியனவே இதற்கான காரணங்களாகயிருக்கலாம் என பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களிற்கு நீரிழிவு நோய் மற்றும் இதயநோய்கள் இருப்பதும் காரணமாகயிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை இனத்தவர்களின் வீடுகளில் பெரும் எண்ணிக்கையானவர்கள் உள்ளமை தனிமைப்படுதலை சாத்தியமற்றதாக்குகின்றதுஎன பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/79641
  • அமெரிக்காவின் உடனடி தேவைக்கு  எந்த சிக்கல்களும் இல்லாமல் வாங்கி பயன்படுத்தி கொள்ள போகிறார்கள். உடனடி தேவைக்கு வேறு  தெரிவில்லை. ஏற்கனவே சில நாடுகள் பயன்படுத்தி உள்ளதால்  அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது. பிறேசிலும் ஏற்கனவே இம்மருந்தை வாங்கி உள்ளது.
  • மாவட்டங்களுக்கிடையில் பயணிப்பவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் ஊரடங்கு நேரத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கும் நபர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தவதற்காக, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு கட்;டாயமாக அனுப்பப்படுவர் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்தை நாளையிலிருந்து செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மாவட்டங்களுக்கிடையில்-பயணிப்பவர்கள்-14-நாள்கள்-தனிமைப்படுத்தப்படுவர்/175-248287