• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

“வரலாற்றை மாற்றியமைப்போம்” – நம்பிக்கையுடன் நிபுன் தனன்ஜய

Recommended Posts

“வரலாற்றை மாற்றியமைப்போம்” – நம்பிக்கையுடன் நிபுன் தனன்ஜய

 
Nipun-3-696x464.jpg
Sanga-mahela.gif

இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கடந்த கால வரலாற்றை மாற்றியமைக்கும் எண்ணத்துடன் 2020ம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ளதாக இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஜய தெரிவித்துள்ளார்.

இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு சென்று விளையாடிய இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தது.

 

தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை இளையோர் அணி அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் U19 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஜய, 

“எமது அணி இறுதியாக 2000ம் ஆண்டு இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. அதன் பின்னர், இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவில்லை. நாம் இங்கு வரலாற்றினை மாற்றுவதற்காக வந்துள்ளோம். 

அணித் தலைவராக எனது அணி தொடர்பில் மகிழ்ச்சியாக உள்ளேன். நாம் அதிகமான பயிற்சிப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே, வரலாற்றை மாற்றுவதற்காக காத்திருக்கிறோம்” 

இலங்கை இளையோர் அணியை பொருத்தவரையில், இதுவரை 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டதில்லை. இம்முறை உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதற்கான ஆயத்தம் தொடர்பில் குறிப்பிடுகையில்,

“இந்திய அணிக்கு எதிரான போட்டி கடினமான சவால். நாம் அதற்கான தயார்படுத்தல்களை செய்துள்ளோம். வீரர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.  காரணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் சம்பியனாகியிருந்தோம். தலைவர் என்ற ரீதியில் அணியின் நம்பிக்கையுடன் முதல் போட்டிக்காக காத்திருக்கிறோம்”

 

அதேநேரம், கடந்த உலகக் கிண்ணத் தொடரில் தான் விளையாடிய அனுபத்தை பகிர்ந்துக்கொண்டுள்ள நிபுன் தனன்ஜய, அது தொடர்பிலும் கருத்து வெளியிட்டார். 

“இளையோர் உலகக் கிண்ணம் என்பது கடினமான சவாலாகும். நான் முதன்முறை விளையாடும் போது, அழுத்தத்தை உணர்ந்தேன். இப்போது அனுபவ வீரர் என்ற ரீதியில், எல்லா விடயங்களையும் சிந்திக்காமல், அடுத்த பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மாத்திரம் மனதில் வைத்துக்கொண்டு விளையாட வேண்டும்” என்றார்.

இலங்கை இளையோர் அணி, 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் 17ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.

http://www.thepapare.com/sri-lanka-u19-skipper-nipun-dananjaya-on-icc-u19-cricket-world-cup-2020-tamil/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இதில் தரவுகள் கள ஆய்வுகள் என்று  என்ன இருக்கிறது கிருபன், நாமேதான் தரவுகள், நாமேதான் சாதிய  களத்தில் நிற்பவர்கள். இந்த சமூக வலிகளுக்கு வக்கீல்களும் நாங்கள்தான், நீதிபதிகளும் நாங்கள்தான், ஆனால் நியாயமான தீர்ப்பு மட்டும் ஒருபோதும் வராது. இங்கே  சாதியம் என்று சொல்லும்போது உயர் சாதியை சேர்ந்தவர்கள்தான் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களை கொடுமை படுத்துகிறார்கள்  மனதை உடைக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மீன் பிடிப்பவரா இல்லை அவர்கள் பிடித்த மீனை வாங்கி விறபவர்களா உயர்ந்தவர்கள்  என்ற சாதி போராட்டம்.. குப்பை அள்ளுபவரா  ஆஸ்பத்திரிகளில் மனித கழிவுகளை அகற்றுபவரா  உயர்ந்த சாதி எனும் போராட்டம்.. துணி துவைப்பவரா மயிர் வெட்டுவரா  உயர்ந்தவர்  எனும் சாதி போராட்டம், மரமேறுபவரா மூட்டை சுமப்பவரா சாதியில் பெரியவர் என்ற போராட்டம்... சாதி போராட்டம் என்பது உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலானதல்ல.. தாழ்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான போரும் கூட.   புலம்பெயர் தேசத்தில் ஏறக்குறைய  பெற்றோர்கள் நினைத்தால்கூட  பிள்ளைகள் யாருடன் பழகவேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. ஏறக்குறைய அவர்கள் விரும்பியவருடன் சாதியை கடந்து அல்ல நாடுகளை கடந்தே டேற்றிங் போகிறார்கள். இதன் தலைமுறை கடந்த தொடர்ச்சியாக  ஈழதமிழர் வழி வந்த வாரிசுகள் ஆபாச படங்களில்கூட நடிப்பார்கள். அதை தவறு என்று யாரும் சொன்னால் சட்டம் குற்றம் சொல்பவர்களை மட்டுமே தண்டிக்கும். அதைதான் வீதங்களில் ஒப்பிட்டு சொன்னேன்.. முத்தாய்ப்பா சொல்லவேண்டுமென்றால் சாதிய கொடுமை என்பது உயர்ந்த சாதி தாழந்த சாதி சம்பந்தப்பட்ட ஒரு விசயம் அல்ல, தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதிக்கும் இடையில் சம்பந்தப்பட்ட விசயம்கூட.
  • 'சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்' என்று பாரதி பாடியபோது அதனையாருமே..... ஒரு தமிழன்கூட எதிர்க்கவில்லை. மாறாக பாரதியாரின் இந்தப் பாடலை திரைப்படத்திலும் இணைத்து உலகெலாம் பரப்பினார்கள். இப்படியான செயற்பாடுகளே, தேரருக்கும் இலங்கை சிங்களநாடு என்று சொல்லும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.  
  • ஆளுமையா? அனுதாபமா? - கௌரி நித்தியானந்தம் “உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க அரசியலில் ஆளுமையுள்ள பெண்கள் கூட உள்ளே நுழைவதற்கு அனுதாபம் தான் முதலில் தேவையாக இருக்கிறது. இல்லாவிடின் மக்களுக்கு அறிமுகமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கூட வடக்கில் பெரும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கூடப் பெண் வேட்பாளர் தெரிவு என்று வரும்போது ஆளுமையுள்ள பெண்ணைத் தேசியப் பட்டியலிலும் அனுதாப வாக்குகளைப் பெறக்கூடியவர் என்று கருதுபவரையே களத்திலும் இறக்கப்படுகிறார். இதுவே அரசியலில் பெண்களின் இன்றைய நிலை. இலங்கையில் கடந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பன்னிரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே குறிப்பிடத்தக்களவு கல்வியறிவைக் கொண்ட தொழில் சார் வல்லுநர்கள் ஆவர். இதில் எவருக்கும் எதிராக ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இருப்பினும் இலங்கை அரசியலில் பெண்களுக்கு உரிய இடத்தையும் அங்கிகாரத்தையும் பெற்றுக்கொள்ள நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இலங்கையில் நான்கில் ஒரு பங்கு சனத்தொகையைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினங்களிலிருந்து கடந்தமுறை தெரிவுசெய்யப்பட்ட 42 பிரதிநிதிகளுக்குள், இருவர் மாத்திரமே பெண் பிரதிநிதிகள் ஆவர். இது மொத்த சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானதாகும். குறித்த இரு பெண்களும் கூட வடக்கிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். முந்தைய காலங்களில் கிழக்கிலிருந்து பேரியல் அஷ்ரப் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த அஞ்சான் உம்மா ஆகியோர் முஸ்லிம் தரப்பு பெண் பிரதிநிதிகளாக இருந்திருந்தாலுமே மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் எவரும் இதுவரை நாடாளுமன்றத்தில் பிரதிநிதிதுவப் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வாக்காளர்களில் ஐம்பத்தியாறு வீதத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர்களைக் கொண்டிருந்தும் சிறுபான்மையினரின் பிரதான கட்சிகள் எவையும் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யாமைக்குப் பிரதான காரணமாக பெண்களுக்கு யாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இங்கே "பெண்களுக்கு யாரும் வாக்குப் போடமாட்டார்கள்" என்று குறிப்பிடப்படுபவர்கள் இந்த 44 சதவீத ஆண் வாக்காளர்கள் மட்டுமல்ல 56 சதவீத பெண் வாக்காளர்களையும் சேர்த்துத் தான். இருந்தும் முன்னைய காலங்களைப் போலல்லாது தற்போது பல கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்குக் குறித்தளவு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு வருவதக் காணலாம். அப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தெரிவு செய்யப்படும் சொற்பமான பெண்களைக் கூட வெல்லவைக்க முடியாதளவுக்கு வாக்காளர்களின் தெரிவுகள் இருக்கும் பட்சத்தில் இங்கே பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்துவதாலோ கட்சிகளில் பாதியளவு பெண் வேட்பாளர்களை நிறுத்தச் சொல்லிக் கேட்பதாலோ எதுவுமே ஆகிவிடப்போவதில்லை. எந்தவொரு கட்சியுமே உள்ளுக்குள் ஆண், பெண் என வேறுபாடு காட்டினாலுமே தேர்தல் களம் என்று வரும்போது இவையெல்லாவற்றையும் தாண்டி கட்சியின் வெற்றி - தோல்வி என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும். எனவே, அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தினால் தமக்கு அதிக பெண்களின் வாக்குகள் கிடைக்கக்கூடும் என்ற ஒரு நிலை வரும்போது நிச்சயமாக எந்தவொரு கட்சியுமே கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெண்களை அதிகளவில் களமிறக்கத் துணிவார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாம் கட்சிக்குப் போடும் மூன்று வாக்குகளில் குறைந்தது ஒரு வாக்கையேனும் ஒரு பெண்ணுக்குப் போடும் பட்சத்தில் அது, குறித்த பெண்ணின் வெற்றிக்கும் சேர்த்து வழிவகுக்கிறது. பெண்களுக்குத் தைரியம் இருந்தால், மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தனித்து நிற்பது தானே... எதற்காகக் காலாகாலமாக ஆண்களால் கட்டியெளுப்பப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்ட கட்சிகளது நிழலுக்குப் போட்டியிடவேண்டும் என்று கேட்டால், இலங்கையின் விகிதாசாரத் தேர்தல் முறையானது பிரதானமாகக் கட்சி அரசியலுக்கே சாதகமாக இருக்கிறது. இதன் காரணமாக சுயேச்சையாகக் களமிறங்குபவர்களின் வெற்றி எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை விளங்குவதற்கு முன்னர் ஒரு தேர்தல் மாவட்டத்தின் ஆசனப்பங்கீட்டு முறையைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது. உதாரணத்துக்கு யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய 7 ஆசனத்துக்காக அங்கு பதிவு செய்யப்பட்ட ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில் இம்முறை 360,000 வாக்குகளே வழங்கப்படுவதாக எடுகோளாக வைத்துக்கொண்டால், அதனை வைத்து மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே எவ்வாறு ஆசனங்கள் பகிரப்படுகின்றன என்று இங்கே பார்க்கலாம். மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் - 360,000 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 20,000 செல்லுபடியான வாக்குகள் - 340,000 குறித்த மாவட்டத்தில் A, B, C, D, E, F, G, H ஆகிய எட்டுக் கட்சிகள் மாத்திரமே போட்டியிடுகின்றன என்று வைத்துக் கொண்டு, அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் கீழே தரப்படுகின்றன. A - 175,000 B -  50,000 C -  32,000 D -  24,000 E -  19,000 F -  16,000 G - 14,000 H -  10,000 இங்கு ஏழு ஆசனங்களில் முதலாவது ஆசனமாகிய 'போனஸ்' ஆசனம், மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் வழங்கப்படும் இத்தகைய 36 போனஸ் ஆசனங்கள், 9 மாகாணங்களுக்கும் சரிசமமாகப் பங்கிடப்பட்டு, ஒவ்வொரு மாகாணங்களும் தலா நான்கு ஆசனங்களைப் பெறுகின்றன. பின்னர் இந்த போனஸ் ஆசனங்கள், ஒவ்வொரு மாகாணங்களுக்குள்ளே காணப்படும் தேர்தல் மாவட்டங்களுக்கிடையே பங்கிடப்படும்போது யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, மட்டக்களப்பு, திருகோணமலை, நுவரேலியா, மாத்தளை போன்ற தேர்தல் மாவட்டங்கள் தலா ஓர் ஆசனத்தையும் வன்னி தேர்தல் மாவட்டம் மூன்று போனஸ் ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்கள் அனைத்தும் தலா இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொள்கின்றன. இங்கே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும், வன்னி தேர்தல் மாவட்டம் என்பது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. எனவே, வட மாகாணத்துக்குரிய நான்கு போனஸ் ஆசனங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கு ஒன்றும் வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு மூன்றுமாகப் பங்கிடப்படுகின்றன. இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி A ஆனது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய ஒரு போனஸ் ஆசனத்தை முதலில் பெற்றுக்கொள்கிறது. அடுத்ததாக, மொத்த வாக்குகளில் 5% என்ற வெட்டுப்புள்ளிக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சியின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதனடிப்படையில் (360,000x 0.05 = 18,000) பதினெண்ணாயிரத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் F,G,H ஆகியன பெற்றுக்கொண்ட மொத்தமான 40,000 வாக்குகள் கணக்கெடுக்கப்படாது. இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் இவை கூட ஒருவகையில் செல்லுபடியற்ற வாக்குகளாகவே கருதப்படுகின்றன. இது உண்மையாக வாக்காளர் அளித்த 20,000 செல்லுபடியற்ற வாக்குகளைவிட எண்ணிக்கையில் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது போனஸ் ஆசனம் தவிர்த்து மீதம் உள்ள 6 ஆசனங்கள், மீதி ஐந்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரிக்கப்படும். தொடர்ந்து போட்டியில் இருக்கும் கட்சிகளான A, B, C, D, E ஆகியன பெற்ற மொத்த வாக்குகள் (175,000+ 50,000+ 36,000+ 20,000+ 19,000 = 300,000) மூன்று இலட்சம் ஆகும். எனவே, ஓர் ஆசனத்தைப் பெறத் தேவையான வாக்குகள் (300,000/6 = 50,000) ஐம்பதினாயிரம் ஆகும். இதன்படி ஆசனப் பங்கீட்டின் முதல் சுற்றில் 50,000 வாக்குகளுக்கு ஓர் ஆசனம் வீதம் வழங்கப்பட்டு, மீதியுள்ள வாக்குகள் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டுக்குச் செல்லும். இதன் அடிப்படையில் முதல் சுற்றில் கட்சி A ஆனது 3 ஆசனங்களைப் பெற்று (175,000- 150,000= 25,000) மீதியாக இருபத்தியையாயிரம் வாக்குகளைப் பெறும் அதேவேளை, கட்சி B ஆனது  1 ஆசனத்தையும் (50,000-50,000= 0) மீதியாக எந்த வாக்குகளையும் கொண்டிராது. ஏனைய C, D, E கட்சிகளுக்கு 50,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் எதுவும் கிடைக்காது. இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாகக் கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும். இதுவரை கட்சி A க்கு ஒரு போனஸும் மூன்று ஆசனங்களுமாக நான்கு ஆசனங்களும் கட்சி B க்கு ஓர் ஆசனமுமாக மொத்தமாக 5 ஆசனங்கள் வழங்கப்பட்டுவிட்டன. எனவே தற்போது மொத்த ஏழு ஆசனங்களில் (7-5= 2) இரண்டு ஆசனங்களே மீதம் உள்ளன. இவையிரண்டும் இரண்டாம் சுற்றில் பகிரப்படும். இரண்டாம் சுற்று (மீதி வாக்குகள்) A - 25,000 B - 0 C - 32,000 D - 24,000 E - 19,000 இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் இரண்டு கட்சிகளுக்கும் தலா ஓர் ஆசனம் வீதம் வழங்கப்படும். C - 32,000 ஓர் ஆசனம் A-  25,000 ஓர் ஆசனம் இறுதி முடிவு கட்சி A - 1+3+1= 5ஆசனங்கள் கட்சி B -    1+0= 1 ஆசனங்கள் கட்சி C-      0+1 = 1  ஆசனம் கட்சி D-      0+0= 0 ஆசனம் கட்சி E-      0+0 = 0 ஆசனம் இங்கே பல கட்சிகள் போட்டி போடும் சந்தர்ப்பங்களில் வாக்குகள் பிரிவடைந்து செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. இதில் பலர் ஐந்து சதவீத வாக்குகளைக் கூடப் பெற முடியாத சூழ்நிலை காணப்படுமாயின் அவை செல்லாத வாக்குகளாகவே ஆகிவிடக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே தான் பெரும்பாலான வாக்காளர்கள் தமது வாக்குகளை வெற்றிபெறக்கூடியது என்று கருதப்படும் கட்சிகளுக்கே அளித்து வருவதைக் காணலாம். இது சிறுபான்மையினரின் பலத்தை ஒருங்கிணைப்பதாகக் கருதினாலுமே பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது. தேர்தலில் ஆசன வாய்ப்பைப் பெறுவதற்காக வெற்றிபெறக்கூடிய நிலையிலிருக்கும் குறித்த பிரதான கட்சியிலிருக்கும் அடிமட்ட உறுப்பினர்கள் ஏற்கெனவே ஆசனங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்குப் போடும் கும்பிடுகளையும் ஜால்ராக்களையும் உள்ளே சென்று பார்த்தால், தன்முனைப்புள்ள எந்தப் பெண்ணுமே அரசியலுக்கு வரத் துணிய மாட்டார்கள். அப்படியும் அடித்துப்பிடித்து வரத்துணியும் பெண்களைக் கூட இன்னொரு பெண் வாக்காளரே தமது வாக்கை அளிக்காமல் துரத்திவிடும்போது அந்தப் பெண்கள் எங்கே தான் போவார்கள்? இங்கே தான், 'ஆண்களின் நிழலில் எதற்காகப் பங்கு கேட்கவேண்டும்?, பெண்கள் தமக்கொரு கட்சியை ஏன் உருவாக்கக்கூடாது?' என்றொரு கருத்து என் முன்னால் சென்ற வருடம் வைக்கப்பட்டபோது, இதுவரையில் ஒருவரின் ஆளுமையின் மீது மட்டுமே நம்பிக்கைவைத்து, பாலினப் பாகுபாட்டைப் பற்றியெல்லாம் அதிகம் பேசியிராத எனக்கு இக்கருத்து அர்த்தமற்றதாகத் தெரிந்தது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பெண்களின் தெரிவுகளை அந்தப் பாதையை நோக்கியே மீண்டும் மீண்டும் கைகாட்டத் துணிவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவே தெரிகிறது. இதனைத் தடுக்க வேண்டுமெனில் கட்சி எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் பெண்களுக்குக் கொடுங்கள். அவர்கள் உங்களுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறார்கள். எமக்குள் இனம், மதம், சாதி என்று பிரிந்து நின்றது போதும். இப்போது பாலினப் பாகுபாட்டைக் காட்டி மேலும் சிறு கூறுகளாகப் பிரித்து வைக்காமல், பெண்களுக்குரிய இடத்தை அவர்களுக்கு முறையாக வழங்குங்கள். மதிப்புடன் வாழவிடுங்கள். அதற்கு அனுதாபமோ ஆளுமையோ, இல்லை அதற்கும் மேலாக சாகோதரியாக, தாயாக, நண்பியாக, நலன்விரும்பியாக அன்புடனோ உங்கள் வாக்கில் ஒன்றை மறக்காமல் கட்டாயமாக அவளுக்குப் போடுங்கள். அது போதும்.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆளுமையா-அனுதாபமா/91-253026
  • புனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன் July 12, 2020 நிலாந்தன்   அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ; சமாதானம் ; யுத்த நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”. இது ஒரு யுத்த களத்தை பற்றிய சித்திரிப்பு. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகளில் தேசம் ; தேசியம் ; தாயகம் ; சுயநிர்ணயம்; ; உரிமை ; விடுதலை போன்ற வார்த்தைகளும் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டனவா ? என்று கேட்கத் தோன்றுகிறது. யாழ்ப்பாணம் கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் ஒன்றை ஒன்று வெட்டும் சந்தியில் சுவர்களில் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது…… “தமிழர் தேசம் தலை நிமிர வீணைக்கு வழங்கும் ஆணை விடியலைத் தரும் நாளை” இங்கு அவர் தேசம் என்று கருதுவது எதனை? அவர் கருதும் தேசத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசத்தில்” வரும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர் கருதும் தேசத்துக்கும் கூட்டமைப்பு முன்வைக்கும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர்தான் கூறவேண்டும்.   கடந்த வாரம் கிளிநொச்சியில் அங்கஜன் இராமநாதன் விநியோகித்த ஒரு துண்டுப் பிரசுரத்தை பார்த்தேன்; அதில் அவர் “எனது அரசியல் நிலைப்பாடு” என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறார்…… “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நான் நன்கு புரிந்து கொண்டவன். என்னால் முடிந்த அளவுக்கு எமது மக்களின் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார முரண்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நான் காட்டிக் கொடுக்கவும் இல்லை அதற்கு எதிராகச் செயற்படவும் இல்லை”….. அங்கஜன் யார்? எந்தக் கட்சியின் சார்பாக அவர் தேர்தலில் நிற்கிறார்? அவருடைய கட்சிக்கும் இனப்பிரச்சினைக்கு எந்த சம்பந்தமும் இல்லையா? இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்தது அவருடைய கட்சி இல்லையா? கிழக்கில் ஓரிடத்தில் கருணா கோட்டும் சூட்டுமாக நிற்கும் ஒரு படத்தின் கீழ் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்று எழுதப்பட்டு ஒரு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது அவர் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்த பொழுது தளபதியாக இருந்த ஜெயந்தன் படையணியின் இலட்சிய வாசகம் ஆகும். இங்கு கருணா கூறவருவது யாருடைய வெற்றியை? இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழும்; தென்னிலங்கை மைய கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கட்சிகள் தமிழ் தேசியவாதிகளின் கோஷங்களை முன்வைக்கின்றன. என்று சொன்னால் அதன்மூலம் அவர்கள் வாக்காளர்களை கவர நினைக்கிறார்களா? ஒரு கோஷத்தை முன் வைக்கும் அரசியல்வாதியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை வாக்காளர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களா? அவ்வாறு கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையும் செயலும் அமைந்து விட்டனவா? அதாவது தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும் தமிழித் தேசியவாதிகளல்லாத அரசியல்வாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும்; இடையிலான வேறுபாடு சிறுத்துப் போய் விட்டதா? ஒரு தேர்தல் கோஷம் எனப்படுவது வெறும் சொல்லு அல்ல. அது ஒரு மந்திரம்; அது ஒரு செயல்; அது ஒரு வாழ்க்கை முறை. அது இரத்தத்தினாலும் தசையினாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு கட்சி அல்லது அமைப்பின் தொடர்ச்சியான செயற்பாட்டால் தியாகத்தால் உயிர் ஊட்டப்பட்ட ஒன்று. கட்சித் தியாகிகளின் பல வருடகால உழைப்பின் திரண்ட சொல். அவ்வாறு தன் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு அற்ற ஒரு அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய ஓர் அரசியல்வாதிதான் தன் வாழ்க்கையின் பிழிவாகக் காணப்படும் அல்லது அவருடைய வாழ்க்கையின் சாராம்சமாக காணப்படும் ஒரு கோஷத்தை முன் வைக்கும் பொழுது அதற்கு ஒரு உயிர் இருக்கும்; ;அதற்கு ஒரு செயல் வேகம் இருக்கும் ; அதற்கு ஒரு புனிதம் இருக்கும்; அதற்குள் ஒரு நெருப்பு இருக்கும். மார்க்சியவாதிகள் கூறுவதுபோல அந்தக் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும். ஆனால் தமிழ்த் தேசிய அரங்கில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயல்களுக்கும் சொற்களுக்கும் இடையே பாரதூரமான இடைவெளி உண்டு குறிப்பாக கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படும் கூட்டமைப்பு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற தோஷங்களின் புனிதத்தை இல்லாமல் செய்து விட்டது. அதுமட்டுமல்ல விடுதலை சுதந்திரம் போராட்டம் போன்ற சொற்களின் புனிதத்தையும் அவர்கள் அழித்து விட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் எந்த ஒரு போராட்டத்தையும் அவர்கள் முன் நின்று நடத்தவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய போது அந்த போராட்ட கொட்டிலுக்குள் அவர்கள் போய் குந்தி இருந்தார்கள் என்பதே சரி. அவர்கள் சுதந்திரம் என்று கருதும் ஒன்றுக்காக அல்லது விடுதலை என்று கூவித் திரியும் ஒன்றுக்காக அவர்கள் எதை தியாகம் செய்திருக்கிறார்கள்? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தார்கள் ? இக்கேள்விகளுக்கு துணிந்து பதில் சொல்லத்தக்க கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்டு ? இதுதான் பிரச்சினை கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் பிரதிநிதிகளாக காணப்பட்ட கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருந்த பாரதூரமான வேறுபாடு இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளும் தேசம் உரிமை என்றெல்லாம் கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறதா? யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சட்டச் செயற்பாட்டாளரான ஒரு புலமையாளர் சொன்னார்… “இம்முறை கூட்டமைப்பின் சுவரொட்டிகளையும் கோஷங்களையும் கவனித்தீர்களா? அவர்களில் அனேகமானவர்கள் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற சொற்களை தவிர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னாரின் சாள்ஸ் நிர்மலநாதன் போன்ற சிலரைத் தவிர பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட வேறு கோஷங்களை விரும்பி பயன்படுத்துவதாக தெரிகிறது” என்று. இருக்கலாம்; அவர்கள் அவ்வாறு பாவிப்பார்களாக இருந்தால் அது அந்த கோஷங்களுக்கும் நல்லது ; தமிழ் மக்களுக்கும் நல்லது. அதில் ஒரு நேர்மை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்து காட்டாத ஓர் அரசியலுக்கு உரிய கோஷங்களை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவது நல்லது. விக்னேஸ்வரனின் கூட்டு தனது முதன்மைக் கோஷத்தை “தன்னாட்சி ; தற்சார்பு ;தன்னிறைவு” என்று மாற்றிக்கொண்டு விட்டது. ஏன் மாற்றியது? தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளும் ஒரு விடயத்தை உறுதிப்படுத்த வேண்டும்.; தாங்கள் முன்வைக்கும் கோஷங்களுக்கும் தமது செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதனை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். செயலுக்கு போகாத கோஷங்கள் வெற்றுச் சொற்களே. கிலுகிலுப்பைகளே. அவை மக்களை செயலுக்குத் தூண்டுவதில்லை. சனங்கள் கோஷங்களைக் கேட்டா வாக்களிக்கிறார்கள்? எனவே தாங்கள் செய்யாத ஓர் அரசியலை கோஷமாக முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் அந்தச் சொற்களின் புனிதத்தை அழிக்கின்றன. மாறாக தாங்கள் முன் வைக்கும் இலட்சிய வாசங்களின்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சொற்களுக்குச் சக்தி பிறக்கும். அவ்வாறு தாம் முன்வைக்கும் கோஷங்களுக்குத் தமது வாழ்க்கை முறையால் உயிரூட்டும் அரசியல் வாதிகள் யாருண்டு? மக்களே அவர்களுக்கு வாக்களியுங்கள்.   http://thinakkural.lk/article/53872