• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

இன்று முதல் அதிக சத்தத்துடனான பாடல்கள், காணொளிகளுக்கு தடை

Recommended Posts

தனியார் பஸ்களில் பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலி, ஔிபரப்புவது இன்று (15) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் அது குறித்து 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து பஸ் வண்டிகளிலும் ஒலிபரப்புவதற்கு ஏற்ற வகையில் 1000 பாடல்கள் அடங்கிய தொகுப்புகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (15) முதல் குறித்த பாடல்கள் மாத்திரமே பஸ்களில் ஒலிபரப்பப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

https://newuthayan.com/இன்று-முதல்-அதிக-சத்தத்த/

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, பிழம்பு said:

அனைத்து பஸ் வண்டிகளிலும் ஒலிபரப்புவதற்கு ஏற்ற வகையில் 1000 பாடல்கள் அடங்கிய தொகுப்புகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

hqdefault.jpg

அனைத்தும் மகிந்த ,பவுத்த துதி பாடல்களா..?

Share this post


Link to post
Share on other sites

மூலைக்கு  மூலை.... விகாரையை கட்டி வைத்து, காலங் காத்தாலை...
பிரித்  ஓதுற, சவுண்டை.... குறைத்தாலும், எங்கடை காதுக்கு  நல்லது. :)

Share this post


Link to post
Share on other sites

இது ரொம்ப ரொம்ப ஓவர். நாம 1000 பாடல்களையும் திரும்ப திரும்ப கேட்கணுமா? பாடல் தொகுப்பை அப்டேட் செய்யமுடியாதா? கோத்தா வந்தாலும் வந்தார் எதற்கும் தடை, தடை, தடை அது நீண்டுகொண்டே போகுது. சவுண்டை குறைக்கவேனும் எண்டால் அது ஒகே  தான் ஆனா பாட்டையும் அவரே செலெக்ட் பண்ணினா அது என்ன நியாயம்.

Share this post


Link to post
Share on other sites

நான் பேருந்தினுள் வேறு வழியின்றி வாய் மூடிக்கொண்டு இருந்தேன். அத்தனை சத்தம். சிங்களப் பாட்டு வேறு. காங்கேசன் துறைக்குப் போய்விட்டு வரும்போது மினி வானில் காதுக்குள் பாட்டுச் சத்தம். தம்பி கொஞ்சம் சத்தத்தைக் குறையுங்கோ என்றதற்கு என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்கள். முறைப்பாட்டுக்கு அஞ்சியாவது  இனிமேல் சத்தத்தைக்குறைப்பார்கள்.

சில கோவில்களிலும் காலைநான்கு மணிக்கே ஏழு ஊருக்குக் கேட்கும் சத்தம். அதிலும் 15 நாட்கள் தொடர்ந்து. 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் பேருந்தினுள் வேறு வழியின்றி வாய் மூடிக்கொண்டு இருந்தேன். அத்தனை சத்தம். சிங்களப் பாட்டு வேறு. காங்கேசன் துறைக்குப் போய்விட்டு வரும்போது மினி வானில் காதுக்குள் பாட்டுச் சத்தம். தம்பி கொஞ்சம் சத்தத்தைக் குறையுங்கோ என்றதற்கு என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்கள். முறைப்பாட்டுக்கு அஞ்சியாவது  இனிமேல் சத்தத்தைக்குறைப்பார்கள்.

சில கோவில்களிலும் காலைநான்கு மணிக்கே ஏழு ஊருக்குக் கேட்கும் சத்தம். அதிலும் 15 நாட்கள் தொடர்ந்து. 

ஒரு காலத்தில் கோவிலில் போடும் ஸ்பீக்கர் சத்தம் நேரத்தை அறிந்து கொள்ளவும் ,  அதிகாலையில் எழும்புவதற்கும் பயன்பட்டது சில கோவில்களில்  அதிகாலை 10 நிமிடங்களில் நிறுத்தி விடுகிறார்கள் சில கோவில்களில் பாட்டை போட்டு விட்டு போட்டவர் தூங்குறார் மற்றவர்களை எழுப்பி விட்டு பழி தீர்க்கிறார் என நினைக்கிறன்😃😃

 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு காலத்தில் கோவிலில் போடும் ஸ்பீக்கர் சத்தம் நேரத்தை அறிந்து கொள்ளவும் ,  அதிகாலையில் எழும்புவதற்கும் பயன்பட்டது சில கோவில்களில்  அதிகாலை 10 நிமிடங்களில் நிறுத்தி விடுகிறார்கள் சில கோவில்களில் பாட்டை போட்டு விட்டு போட்டவர் தூங்குறார் மற்றவர்களை எழுப்பி விட்டு பழி தீர்க்கிறார் என நினைக்கிறன்😃😃

 

அதுவும் ஸ்பீக்கரை ஒரே பக்கமாய் விட்டபடி.மாற்றி மாற்றி விடடாலும் ஓரளவுக்குப் பறவாயில்லை 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this