• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

பத்தினியம்மன் ஆலயத்தில் “100 பானை” பொங்கல்

Recommended Posts

Share0
1579090141717_p6-960x540.jpg

2020ம் ஆண்டின் உழவர் திருநாளாம் தைத்திருநாளாகிய இன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தின் பாலையடிதோனா ஜீவபுர கிராம பத்தினியம்மன் ஆலய முன்றலில் 100 பொங்கல் பானைகள் வைத்து பிரதேச பெண்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.

லண்டன் அனைத்துலக மனிதநேய அமைப்பினால் எமது மக்களின் விருந்தோம்பல் பன்பினை மேம்படுத்தும் நோக்குடன் வறுமை அகன்று சமத்துவம் மேலோங்கி இன்னல்கள் அற்று மலரும் தைத்திருநாளில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நலன் கருதியும் உலகத் தமிழர்களின் தை பொங்கல் பண்டிகையை உலகறியச் செய்யவும் இவ் பொங்கல் வைபவ விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் விழாவில் சிறியோர்,பெரியோர் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதனை காணக் கூடியதாக இருந்தது.

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி பிழம்பு.....பத்தினியம்மன் என்பது கண்ணகி அம்மன் கோவிலாக இருக்கும் என நினைக்கின்றேன்.....!  🤔

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அதுபற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய எழுதலாம். எழுதப் பஞ்சி. உங்களுக்கு அதுபற்றித் தெரிந்திருப்பதனால் இதில் நீங்கள் அங்கு நடைபெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி விரிவாக எழுதுங்கோ.
    • கவிதையே அழகுதான்.....இதில் அத்தை மகளைப்பற்றி எழுதினால் சொல்லவா வேணும்.......!  😁
    • கணினி துறையில் அளவிடற்கரிய கண்டுபிடிப்புகளை படைத்தவரும் .. ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவருமான "கட், கொப்பி, பெஸ்ட்" தந்தை லாரி ரெஸ்லர், 74வது வயதில் காலமானார். டிஸ்கி பல பேரை வாழ வைத்த , வாழ வைக்கும் இதய தெய்வம் .. அன்னார் ஆத்மா சாந்தி அடைகுக..😢 கலி காலம் உள்ளவரை .. ctrl+a , ctrl+c, ctrl+v விசைப்பலகை எழுத்துக்கள் தங்களின் புகழை பரப்பி நிற்கும் 👍
    • சர்வதேச திருக்குறள் மாநாடு நாளை யாழ்.பல்கலைகழகத்தில் ஆரம்பம்..! 200ற்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், பேராளர்கள் வருகை. சர்வதேச திருக்குறள் மாநாடு-2020 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக நாளை ஆரம்பமாகவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாடு 3 நாட்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது.இந்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை தஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் உடையார்கோவில் குணா யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடாத்தியிருந்தார். இதன் போது அவர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தியிருக்கின்றோம். மாலைதீவு, அந்தமான் தீவுகள், கொல்கத்தா மலெசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மாநாடுகள் கருத்தரங்குகளை நடாத்தி வந்த நாங்கள் கடந்தாண்டு உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மலேசியாவில் இருக்கின்ற மலேசியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச திருக்குறள் மாநாட்டை முதல் தடவையாக நாடாத்தியிருந்தோம். உலகளாவிய ரீதியில் ஐநூறு பேராளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாடாக அந்த திருக்குறள் மாநாடு அமைந்தது. அதனைத் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாண மண்ணிலே வாழக்கூடிய உணர்வுமிக்க தமிழ் அறிஞர்களும் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் இரண்டாவது சர்வதேச திருக்குறள் மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். இந்த திருக்குறள் மாநாட்டை தமிழ்த் தாய் அறக்கட்டளை முன்னெடுத்து நடாத்தினாலும் கூட உலகத் தமிழாராச்சி நிறுவனம் இந்தியாவின் மதுரை காமராஐர் பல்கலைக்கழகம், இதய நிறைவு தியான அமைப்பு, ஸ்ரீராமச்சந்திர மிஸன், இலங்கை இந்திய தமிழ்த் தாய் அறக்கட்டளையும் இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒதுழைப்புடன் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பேராளர்களும் அறிஞர்களும் வருகை தந்திருக்கின்றனர். குறிப்பாக மலேசியாவில் இருந்த 27 பேராளர்களும், தமிழகத்திலிருந்து 150 இற்கும் மேற்பட்ட பேராளர்களும், அதேபோல பிரான்ஸ், குவைத்,அவுஸ்திரேலியா பேராளர்கள் வருகை தர இருக்கின்றார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அறிஞர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளும் சிறப்பு மலரும் வெளியிட இருப்பதோடு மாநாட்டினுடைய முத்தாய்வாக கருங்கல்லினால் செய்யப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலையை மாநாட்டிற்கு வருகின்றவர்களை வரவேற்கும் முகமாக மாநாட்டின் முகப்பில் நிறுவ இருக்கின்றோம். அதன் பின்னர் 1வது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் ஆரம்ப நாளன்று உரும்பிராய் பொது வீதியில் நிறுவுவதற்காக அன்பளிப்பாக வழங்க இருக்கின்றோம். இதனை யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நிறுவி வைக்க இருக்கின்றார். அதே போல 2வது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் நிறைவில் அம்பாறை மாவட்டம் காரை தீவு பிரதேசத்தில் நிறுவ இருக்கின்றோம். இதனை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் நிறுவி வைக்க இருக்கின்றார்.இதேவேளை திருக்குறள் ஆய்வரங்கம் மாநாட்டை பல்வேறு இடங்களில் நடாத்தினாலும் கூட யாழ்ப்பணாத்தில் இந்த மாநாட்டை நடாத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழர்கள் தமிழ் மொழியை கையாளுகின்ற விதம் தாய்த் தமிழ் என்று சொல்லுகின்ற தமிழகத்தில் கிடையாது. இங்கு கலப்பு இல்லாமல் தமிழை தமிழாகவே பேசுகின்றார்கள். தமிழர்களுடைய பழமையான மொழியினுடைய உணர்வை அப்படியே அழகாகச் சொல்லுகிறார்கள். உண்மையான தமிழ் வாழக் கூடிய இடமாக யாழ்ப்பாணத்தை நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் உண்மையான தமிழ் மொழியைப் பேசுகின்ற உணர்வுபூர்வமான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாக இருக்கிறது. அந்த அடிப்படையிலையே இந்த மாநாட்டை யாழ்ப்பாண மண்ணில் நடாத்த வேண்டுமென்ற சிந்தனையில் இங்கு நடாத்துகின்றோம். மேலும் மலேசியாவில் நடைபெற்ற முதலாவது மாநட்டில் இந்தியாவில் மலேசியவில் இருந்து வந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இலங்கையில் குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்தும் பெருமளவிலானவர்கள் வருகை தந்து கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே யாழ்ப்பாணத்தில் நடாத்துவது சிறப்பாக இருக்குமென்ற அடிப்படைக் காரணத்தினால் தான் இரண்டாவது மாநாட்டை யாழில் நடாத்துகின்றோம் என்றார். https://jaffnazone.com/news/15980
    • 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்..! கிளிநொச்சியில் சம்பவம்.. கிளிநொச்சி- அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் ஆலயத்தை இடித்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது அக்கராயனில் கடந்த நான்கு ஆண் டுகளுக்கு மேலாக குறித்த ஆலயம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வந்தன. ஆலயத்தின் உரிமையாளர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற கட்டட ஒப்பந்தக்காரரிடம் 55 இலட்சம் ரூபா நிதியை வழங்கி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் உரிமையாளர் கனடாவிலிருந்து அக்கராயனுக்கு வந்து ஆலயத்தின் கட் டுமானங்களைப் பார்வையிட்ட போது வழங்கப்பட்ட பணத்திற்கேற்ப ஆலயக் கட்டடம் அமைக்கப்படவில்லையெனவும் ஆலயத்தின் கட்டுமானத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டதன் காரணமாகவும் எதிர்காலத்தில் ஆலயம் முழுமை பெற்றாலும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வகையில் உள்ளதால் ஆலயத்தினை இடித்துள்ளார். இது குறித்து ஆலயத்தின் உரிமையாளரான நாகேந்திரம் தனபாலசிங்கம் தெரிவிக்கையில் ; கனடாவில் தான் ஐந்தாண்டுகளாக உழைத்து அனுப்பிய பணத்திற்கு உரிய முறையில் ஆலயம் அமைக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ஆலயம் உடைந்து விழக்கூடிய நிலைமை காணப்பட்டதன் காரணமாகவே ஆல யத்தை இடித்ததாகவும், தன்னிடம் பணம் பெற்றவர் ஏமாற்றி விட்டதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.இதேவேளை ஆலயம் அமைப்பதற்கு பணத்தினைப் பெற்றவர் துணுக்காயின் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெரு மாள்குளம், கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும் ஆலயம் அமைப் பதில் மோசடி மேற்கொண்டுள்ளதாக பலராலும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. https://jaffnazone.com/news/15979 டிஸ்கி கோவில் கட்டுவது அவரின்ட தனிப்பட்ட விடயம் என்டாலும் ஏழை பாழைகளுக்கு கொடுத்து இருந்தால் சனம் வாழ்த்தி இருக்கும்..😢