Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன.
உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது.
.
Image may contain: one or more people and close-up
*
இலையுதிர்கால நினைவுகள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
*
இன்பக் கனவுபோல்
தோன்றி மறைந்தது கோடை.
காற்றுக் குதிரைகளில்
குளிர்
சாட்டை சொடுக்கி வரும்.
வெய்யிற் சுகம் தேடி
வடதுருவப் பறவைகளும்
என் தாய்நாட்டின் திசை நோக்கி
தங்களது சிறகசைக்கும்.
வான் நோக்கிக் கை உயர்த்தித் தொழுகின்ற
கறுப்பர்களைப்போல்
இலை உதிர்த்து நிற்க்கும்
ஓக் மரங்களின் கீழே
தனிதலையும் மக்பாய் இழிவாக எனை நோக்கும்.
 
”மக்பாய்! மக்பாய்!
எல்லாப் பறவைகளும்
என்னுடைய தாய்நாட்டின் திசைகளிலே
சூரியனைத் தேடிப் புலம் பெயரும்
குளிர் நாளில்
நீ மட்டும் இந்த துருவத்தில் தரித்ததென்ன?”
 
மக்பையோ உனக்கிவைகள் புரியாது
என்பதுபோல் தலை அசைக்கும்.
“எனக்கிவைகள் புரியாதா?”
“உனகெப்படிப் புரியும்?
துருவத்துப் பறவைகளே தேடுமுந்தன் தாய்நாட்டை
குண்டி மண்ணைத் தட்டுதல்போல்
தட்டிவிட்டு வந்தவன் நீ”
மக்பை சொல் தீக்கோலாய்
மனதில் குறிபோடும்.
“நில் மக்பை” என்றேன்.
”நாமறிவோம்
இலங்கைத் தமிழர் உங்கள் நாகரீகம்
பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை
என்றேனும் ரசித்ததுண்டா நீங்கள்?
என்றபடி மக்பை எட்டப் பறந்து செல்லும்.
 
வானில் ஒரு பரதேசிபோல்
குளிர்ந்துபோன சூரியனின் பரிதாபம்.
மண்ணில்
மஞ்சளாய் தலை நரைத்த மரங்களின்கீழ்
பொன்னாய் இறகசைக்கும்
வணத்துப் பூச்சியாய் பகட்டி
பேர்ச் இலை பழுத்தல் ஒன்று
புல்லில் தரை இறங்கும்
ஒரு புது அகதி வந்துபோல்.
 
உலகெங்கும் உதிர்க்கும்
வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற
மனிதச் சருகுகளாய் புரள்கின்றோம்.
என்ன நம் தாய்நாடு
ஓயாமல் இலை உதிர்க்கும்
உயிர்ப்பிழந்த முது மரமா?
 
யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?
 
பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழியவிட்டு
தொலை தேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத் தோட்டம்.
 
கடந்த வசந்தத்தில்
கின்னரங்கள் மீட்டி
எழில்க் கன்னியர்கள் பாடுகின்ற
களியாட்டரங்குகளில்
கிண்ணங்கள் கொஞ்ச, மங்களம்கூறி
மனமுடைந்தேன் பரதேசி.
 
இது இயற்கையே விரக்தியுறும்
இலையுதிர் காலம்.
இனி நீர்க்கூடக் கல்லாகும்
நீண்ட குளிர்காலம்.
 
இன்னும் எத்தனை நாள்
இந்துக் கடல் மடியில்
வாடையும் தென்றலும் மீட்ட இசைக்கின்ற
மரகத வீணையென.
வடகிழக்காய் நீண்ட என் தாய்நாட்டை
நெஞ்சில் சுமந்துநான் ஏங்குவது?
நாட்டேக்கம் என் உயிரை
நஞ்சாய் சமிக்கிறதே.
 
நெஞம் கலங்காதே என்றபடி
நெருங்கி வந்த மக்பை
”அதோ தெரியுது பார்” என்று
விமான நிலையத்தின் வழிகாட்டும்.
1989.
 
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 3:14 PM, poet said:
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?

அலைந்து உலையும்  வாழ்வை அழகாய் பாடும் பொயட்.அழகான கவிதை பல தடவை முன்பும் வாசித்திருக்கிறேன்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று அண்ணா

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • துரையப்பா முதல் எத்தனை துரோகிகள் எம்மினத்தில் - இந்த துரோகிகள் இல்லாவிட்டால் ஒற்றுமையாக விடிவை கண்டிருக்கலாம்
  • உங்களது முதலாவது பதிவையும் பார்த்தேன். குறிப்பாக, "வெள்ளை" என்ற சொல்லுக்கும் கிழக்கு ஐரோப்பிய மொழியில் உள்ள வெள்ளை என்ற சொல்லை அவர்கள் சொல்லும் விதமும் அச்சொட்டாக ஒரே விதம். ஒரே அர்த்தம். ஒலியிலும் நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு எடுத்து போட்டு இருக்கலாம். இவ்விதமான ஆய்வுக்கு ஒரு துறையே (Paleolinguistics) இருக்கிறது. பெருமளவு ஆய்வாளர்கள் இப்படியான ஆய்வுகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் அவை பற்றிய சர்ச்சைகளும் உள்ளன. https://en.wikipedia.org/wiki/Paleolinguistics
  • வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்கமாட்டோம்: ஜெனீவாவில் இலங்கை   இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்கக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அரசு ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் சபைக்குத் தெரிவித்துள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்கத்தவறிய வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர விரும்புவதற்குப் பதிலாக இலங்கையின் நலனுக்காக,மக்கள் வழங்கிய கட்டளைகளின் ஆதரவுடன் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வில், உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீள நிகழாமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஐ.நாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின்போதே இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். 2030 ஆம் ஆண்டு நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ் தன்னார்வக் கடமைகளுக்கு இணங்க நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஐ.நா. விசேட அறிக்கையாளரின் சிறப்பு அறிக்கையில் இலங்கை குறித்த பல கவலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் உண்மை, நீதி, இழப்பீடு, மீளநிகழாமை போன்ற விடயங்களில் சாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை, அறிக்கையாளர் தனது அறிக்கையில் உண்மையாகவும் சாதகமாகவும் குறிப்பிடவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள், உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.   http://www.ilakku.org/வெளியிலிருந்து-முன்வைக்/
  • இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை       இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு  கூறியுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,283ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   http://athavannews.com/இலங்கையில்-அதிகரித்து-செ/
  • நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார். அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார். மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார். இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.     Tags : #Sri Lanka #Puttalam #Gotabhaya Rajapaksa https://www.ibctamil.com/srilanka/80/150879?ref=home-imp-flag
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.