Jump to content

ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ


Recommended Posts

ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ

 

 

” மத்திய கிழக்கில் அமெரிக்காவின் படைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் அந்த யூக்கிரேனிய விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றிருப்பார்கள்”

– கனடியப் பிரதமர் ட்றூடோ
Justin-Trudeau.jpg
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ

சுட்டு வீழ்த்தப்பட்ட யூக்கிரேனிய விமானத்தில் பயணம்செய்து உயிரிழந்த அனைவருக்குமான ஞாபகார்த்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசும்போது கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனவரி 8 இல் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது, 57 கனடியர்கள் உட்பட 176 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

ஏவுகணைகள் ஏவப்படும் காணொளி

“யூக்கிரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பக்க விளைவாக (collateral damage) என நீங்கள் நினைக்கிறீர்களா? என ஊடகவியலாளர் கேட்டதற்கு ” அப் பிரதேசத்தில் சமீபத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்படாமல் இருந்திருப்பின் அத்தனை கனடியர்களும் இன்று அவர்கலது குடும்பங்களுடன் இருந்திருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என அவர் பதிலளித்திருந்தார்.

“நடைபெற்றது மிகத் துயரமான சம்பவம், மன்னிக்கப்பட முடியாத தவறு” என ஈரான் குற்றத்தை ஒத்துக்கொண்டதுடன் மன்னிப்பும் கோரியிருந்தது. ஈரானிய தளபதி சொலைமானியின் கொலையைத் தொடர்ந்து ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்குப் பழிவாங்கும் முயற்சியாக 52 ஈரானிய கலாச்சார நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் எச்சரித்திருந்ததைத் தொடர்ந்து ஈரான் தனது விமான எதிர்ப்பு நிலைகளை உசார் நிலையில் வைத்திருந்தது.

சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன் யூக்கிரெயின் விமானம் ஈரானிய இராணுவத் தளத்துக்கு மிக அண்மையாகப் பறந்ததெனவும் அவ்வேளையில் தகவல் தொடர்பு சாதனங்கள் வேண்டுமென்றே குழப்பநிலையில் (jamming) வைக்கப்பட்டிருந்ததனால் விமானியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் இதனால் அவ் விமானம் அமெரிக்க ஏவுகணையெனத் தவறாகக் கருதப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும் ஈரான் கூறுகிறது.

இன்றய செய்திகளின்படி விமானத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளனவெனவும் அவற்றைப் படம் பிடித்தவருட்பட மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் ஈரான் கூறுகிறது.

அதே வேளை, ஈரானியத் தளபதி சொலைமானியைக் கொல்வதென அமெரிக்கா எடுத்த முடிவு பற்றி, நட்பு நாடு என்ற ரீதியில் கனடாவுக்கு அறிவிக்கப்படவில்லை என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ தெரிவித்திருக்கிறார்.

https://marumoli.com/ஈரான்-விமானத்தைச்-சுட்டு/?fbclid=IwAR2U_YSINNVoML8X6grw2FC1zxKNSErB5dq7hYJ-PfPooFkUGOypcatjFsY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.