Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வழிமாறிய மின்னஞ்சல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5-D072-EC6-0806-4465-9-CDE-53-DAD215-A81
கடிதத்தை எழுதி
முடித்த பின்னர் விலாசத்தை மாற்றி எழுதி வேறொருவருக்கு அனுப்பி மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.  

கடிதங்களை அஞ்சல் செய்வது குறைந்த விட்ட காலம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் தான் இப்பொழுது முதன்மை பெற்றிருக்கின்றன. என்னதான் இன்டர்நெட் காலமாக இருந்தாலும்  தவறான முகவரி எழுதி பின்னர் விழி பிதுங்கும் நிலைமை மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

யேர்மனியில், பேர்லின் நகரத்தில் இருந்த ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தின் வேலை வாய்ப்பை அறிந்த எகிப்தியர் ஒருவர் தனது விண்ணப்பத்தை மின்னஞ்சல் ஊடாக அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவரது விண்ணப்பம் அந்த நிறுவனத்தின்  பெண் தலைமை அதிகாரியின் பரிசீலனைக்குப் போனது. அதிகாரி, விண்ணப்பதாரியின் தகமையை ஆராயாமல் அவரது நாடு, மதம் ஆகியவற்றை மட்டும் பார்த்து விட்டு உடனடியாக  “தயவு செய்து அரேபியர் வேண்டாம்என்று பதில் எழுதி வேலைக்கு ஆட்களை எடுக்கும் அலுவலகப் பகுதிக்கு  அனுப்பிவிட்டு தனது அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார். ஆனால்  சிறிய தவறு ஒன்று அங்கே நடந்திருந்ததை அந்தப் பெண் அதிகாரி அறிந்திருக்கவில்லைஅவர் பதிலை விண்ணப்பதாரரின் மின்னஞ்சலுக்ககே மாற்றி அனுப்பி விட்டிருந்தார்.

மின்னஞ்சலைப் பார்த்த எகிப்தியருக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் தவறு ஒன்று நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அவர் தனக்குக் கிடைத்த மின்னஞ்சலை அப்படியே  Screenshot எடுத்துஒரு கேவலமான நிராகரிப்புஎன்று தலைப்பிட்டு முகநூலில் பதிந்து விட்டார்.

ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது அவரது  நாடு, இனம், மதம், வயது, பால், உருவம் போன்றவற்றை வைத்துக் கணிப்பிடுவது, யேர்மனியச் சட்டத்தில் ´குற்றம்` என்று இருக்கிறது. ஆகவே அந்த எகிப்திய விண்ணப்பதாரர் கட்டிடக்கலை நிறுவனத்தின் பெண் அதிகாரி மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

யேர்மனியில் வேலைகளில் மட்டுமல்ல வீடுகளை வாடகைக்கு எடுப்பதிலும் முஸ்லீம்கள், கறுப்பு இனத்தவர்கள் அதிக பிரச்சனைகளை 2018க்குப் பின்னர் எதிர் நோக்குகிறார்கள்என்று பேர்லினில் இருக்கும்  சமூக ஆராய்ச்சி நிலையம்  ஒன்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.