• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Recommended Posts

ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

 
 

காணாமல் போனதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவு ஒன்றை அரசாங்கம் விடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதி மன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரோஹண விஜயவீரவின் மனைவி சித்ராங்கனீ விஜயவீரவினால் இந்த மேல் முறையீட்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்றைய தினம் (16) நீதியரசர் குழாமினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதி அரசர்களான சிசிர டி.ஆக்குருப், எஸ்.துரைராயா, காமினி அமரசேகர ஆகியோர் நீதிபதி குழாமில் இடம் பெற்றிருந்தனர்.

மனுதாரரான சித்ராங்கனீ விஜயவீரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காணாமல் போயுள்ள தனது கணவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஆரம்பத்தில் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததாக குறிப்பிட்டார்.

29 வருடங்களுக்கு பின்னர் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி நீதி மன்றத்தில் குறிப்பிட்டார்.

மேல் முறையீட்டு நீதி மன்ற உத்தரவை வலுவிழக்க செய்யுமாறும் கோரியும் இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி சித்ராங்கனீ விஜயவீர உயர் நீதி மன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். இவ்வாறான ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட கால எல்லை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் 29 வருடங்கள் சென்ற பின்னர் இவ்வாறான மனு ஒன்றை சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவித்து நிராகரிப்பதற்கு மேல் முறையீட்டு நீதி மன்றம் வழங்கிய உத்தரவு சட்டத்துக்கு முரண்பட்டதாகும் என்றும் சட்டத்தரணி தெரிவித்தார். தமது மனுதாரருக்கு இருந்த அச்சம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறான மனு ஒன்றை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதற்கு முடியாமல் போனதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை விரிவாக ஆராய்ந்த பின்னர் 3 நீதியரசர்களை கொண்ட நீதிபதிக் குழாம் இந்த மனுவை விசாரிப்பதற்கு போதுமான சட்ட அடிப்படை இல்லை என்பதினால் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜெனரல் சிறில் ரணதுங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன, ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க, ஜெனரல் சிசில் வைத்தியரட்ண ஆகியோரும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கொரோனா வைரஸ் பரவும் வேகம்  வலுவடைந்து வருகிறது - சீனா எச்சரிக்கை! கொரோனா வைரஸ் பரவும் வேகம் வலுவடைந்து வருவதாகவும், இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவில் 56 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சீனாவின் தேசிய சுகாதார ஆணையக அமைச்சர் 'Ma Xiaowei' மேற்கண்டவாறு கூறினார். கொரோனா வைரஸ் குறித்த அதிகாரிகளின் அறிவு குறைவாகவே உள்ளது, மேலும் வைரஸால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெளிவாக தெரியவில்லை. இதுவரை சீனாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத் மற்றும் பயணத் தடைகள் மற்றும் விசேட நிகழ்வுகளை இரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார். சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவளை சீனவின் சந்தைகள், உணவகங்கள் மற்றும் இணைய தளங்களூடாக வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு நாடு தழுவிய ரீதியில் தடை விதிப்பதாக இன்றைய தினம் சீனா அறிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/74179
  • இந்திய குடியரசு தினமான இன்று அசாமில் குண்டு வெடிப்பு !   இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இதில், அசாமில் திப்ரூகார் நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் திப்ரூகார் நகரில் பஜார் பகுதியில் பிரதான வீதிகக்கு அருகே இன்று காலை கடை ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.  குண்டு வெடிப்பு குறித்த பாதிப்புகள் எதுவும் வெளியிடப்பட வில்லை, எனினும் இது குறித்து மேலதீக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  இதே போன்று, நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற  பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில்  2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். புல்வாமா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/74145
  • அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும் - வீ.தனபாலசிங்கம்       நீண்டகாலம் ஆட்சியில்  இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான  அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு " அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் " என்று நாகரிகமாக  நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.    அண்மைய தசாப்தங்களில் மிகவும் நீண்டகாலமாக நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருந்துவரும் தலைவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டின். தற்போது தனது நான்காவது பதவிக்காலத்தில் ஆட்சிசெய்யும் 67 வயதான அவர் தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகும் அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கு புதிய பாதையைத் திறந்துவிடக்கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அறிவித்திருந்தார். அதில் ஒரு விசித்திரம் தற்போது தான் வகித்துவரும் ஜனாதிபதவியின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தி, பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய யோசனைகளை அவர் முன்வைத்திருப்பதேயாகும்.தனக்குப் பிறகு ஜனாதிபதியாக பதவிக்கு வருபவர் வசம்  பெருமளவு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்பதில்  மாத்திரமல்ல, தற்போதைய தனது பதவிக்காலம்  முடிவடைந்த பிறகு அதிகாரமிக்கதொரு  பிரதமராக வருவதிலும்  புட்டின் அக்கறைகொண்டிருக்கிறார் போலும்.         அவரின் அறிவிப்பு ரஷ்ய ஆட்சி நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்களில்  கூறப்படுகின்ற போதிலும், 2000 ஆம் ஆண்டில் முதன் முதலாக பதவிக்கு வந்ததிலிருந்து அவரின் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக  அவதானித்து வந்திருக்கக்கூடிய எவருக்கும் அவர் எளிதில் அதிகாரத்தில் இருந்து இறங்கக்கூடியவர் அல்ல என்பதையும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் எத்தகைய திருகுதாளத்தையும் செய்வதற்கு தயங்காதவர் என்பதையும் நிச்சயமாக விளங்கிக்கொள்வதில் சிரமம் இருந்திருக்காது.     ரஷ்ய அரசியலமைப்பு ஜனாதிபதியொருவர் தொடர்ச்சியாக இரு பதவிக்காலங்களுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தில் இருப்பதை தடைசெய்கிறது. இதனால் தனது தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் காலாவதியாகும்போது புட்டின் இன்னொரு பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக வருவதற்கு மக்களின் ஆணையைக் கேட்கமுடியாது. ஆனால், அவர் ஜனாதிபதியாக தனது முதல் இரு தொடர்ச்சியான பதவிக்காலங்களையும் நிறைவுசெய்தபோது 2008 ஆம் ஆண்டில் தனது நிருவாகத்தில் பிரதமராக இருந்த விசுவாசி டிமிட்ரி மெட்வெடேவுடன் பதவிகளைப் புட்டின்  பரிமாறிக்கொண்டதைப் போன்று மீண்டும் செய்துகொள்ளமுடியும் ;  அதாவது மெட்வெடேவை நான்கு வருடங்களுக்கு ஜனாதிபதியாக்கிவிட்டு  அவரின் கீழ் தான்  பிரதமராகிக்கொண்டார். முதலில் நான்கு வருடங்களாக இருந்த ரஷ்ய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் ஊடாக 6 வருடங்களாக நீடித்த பின்னரே 2013 முதல் மூன்றாவது பதவிக்காலத்துக்கு புட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு மீண்டும் வந்தார்.மெட்வெடேவ் மீண்டும் பிரதமரானார்.இவர் ஜனாதிபதியாக பதவிவகித்த நான்கு வருடங்களிலும் கூட உண்மையான அதிகாரம் மறைமுகமாக புட்டினிடமே இருந்தது.    உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேசிய  சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். ஆனால், தனது அரசியல் அதிகார வாழ்வை நீடிப்பதற்கான திட்டங்களுக்கு பொதுமக்களின் இணக்கம் என்ற வெளிப்பூச்சை செய்வதே புட்டினி்ன் இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. அவர் அறிவித்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தினதும்  பிரதமரினதும் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான யோசனைகளைக் கொண்டிருப்பதற்கு அப்பால், அவரது தலைமையில் தற்போது இருக்கும் அரசாங்க சபையை (State Council ) பலப்படுத்துவதற்கான ஏற்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. புட்டினின் பாராளுமன்ற உரையை அடுத்து பதவி விலகிய மெட்வெடேவ் அந்த சபையின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது புட்டினின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான கசாகிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக 29 வருடங்கள் ஜனாதிபதி நூர்சுல்தான் நசார்பாயேவ் பதவியில் இருந்து இறங்குவதற்கு முன்னதாக கடந்த வருடம்  அதிகாரமிக்க பாதுகாப்பு சபையின்( Security Counci) ஆயுட்காலத் தலைவராக தன்னை நிமித்துக்கொண்டார். அவரைப் பின்பற்றி புட்டினும் ரஷ்ய அரசாங்க சபையின் தலைவராக வந்து 2024 க்கு பிறகு ஜனாதிபதியாக ஓய்வுபெற்ற பிறகு ஆட்சியதிகாரத்தின் நெம்புகளை தன்கையில் வைத்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.        முன்னைய தடவை புட்டின் தனக்கு வசதியாக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தபோது இருந்த சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் சற்று வேறுபட்டவை. அவரின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுவருவதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்ற நிலையில் இத்தடவை அரசியலமைப்பு சீர்திருத்தங்களை பெரியளவில் எதிர்ப்பின்றி அவரால் நிறைவேற்ற இயலுமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.ரஷ்யப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் மாஸ்கோவில் வீதி ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. 2021 பாராளுமன்றத் தேர்தலில் ரஷ்ய மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். புட்டின் திட்டமிடுவதைப் போன்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு சார்பான அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்டவேண்டியிருக்கும்.       இதே போன்ற நிலைதான் இலங்கையிலும் காணப்படுகிறது.ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் விரும்புகின்றதைப் போன்று அரசியலமைப்பில் மாற்றத்தைச் செய்யவேண்டுமென்றால், எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றவேண்டியிருக்கும். தங்களுக்கு அத்தகையதொரு பெருவெற்றியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே நாட்டின் அதியுயர் பதவிகளில் இருக்கும் இரு சகோதரர்களும் இன்று நாட்டு மக்களிடம் விடுக்கும் பிரதான வேண்டுகோள். இன்றைய இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களும் இதையே வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.      ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, தற்போதைய அரசியலமைப்பு மீதான வெறுப்பு பிரதானமாக அந்த அரசியலமைப்புக்கு முன்னைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி கோதாபய 19 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட 1978 அரசியலமைப்பு அதன் இயல்பான விளங்காத்தன்மை மற்றும் குழப்பங்கள் காரணமாக பல பாரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் நாட்டின் பாதுகாப்பு, சுயாதிபத்தியம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்காக இந்த அரசியலமைப்புக்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டியது அவசியமாகும் என்றும் கூறியிருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக்குறைத்து அதேயளவுக்கு பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரித்த 19 வது திருத்தத்தை முற்றுமுழுவதுமாக கைவிடுவதே பெரும்பாலும் ராஜபக்சாக்களின் நோக்கமாக இருக்கிறது. முறையான ஆட்சி நிருவாகத்தை நடத்துவதற்கு அந்த திருத்தம் பெரும் தடையாக இருக்கிறது என்பதே அவர்களது நிலைப்பாடு. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குரிய நிபந்தனைகள் பற்றி 19 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் தங்களை இலக்காகக்கொண்டு புகுத்தப்பட்டவை என்று ராஜபக்சாக்கள் ஆரம்பத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள்.    இன்றைய இலங்கை அரசியலில் மிகவும் விசித்திரமான ஒரு விடயத்தையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.அதாவது 19 வது திருத்தத்தை கொண்டுவந்ததை தனது தலைமயிலான அரசாங்கத்தின் சாதனைகளில் பிரதானமானது என்றும் உலகிலேயே தனது  அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்வந்த ஒரே ஆட்சியாளர் தானே என்று ஒரு கட்டத்தில் பெருமைக்கு உரிமை கோரிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே 19 வது திருத்தத்தை எதிர்ப்பவர்களில் முக்கியமான ஒருவராக மாறியிருக்கிறார். அந்த திருத்தத்தை இல்லாமல் செய்வதற்காக பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு பாராளுமன்றத் தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டிருப்பதாக அவர்  பிரகடனத்தையும் வேறு செய்திருக்கிறார்.     இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அந்த ஆட்சிமுறையை இல்லாதொழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களின் முக்கியமான வாக்குறுதியாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்பது விளங்கிவந்திருக்கிறது.ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர்கள் எல்லோருமே அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதே வரலாறு.ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காவிட்டாலும் ஜனாதிபதிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களை ஓரளவுக்கேனும் குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நம்பகமான ஒரு நடவடிக்கை 19 வது திருத்தமேயாகும் என்பதில் சந்தேகமில்லை. இன்று அதற்கு ஆபத்து வந்திருக்கிறது.      இது இவ்வாறிருக்க, உள்நாட்டுப் போரில் அரசாங்கப்படைகளின் வெற்றிக்குப் பிறகு இலங்கையை ஆட்சிசெய்வது ஏதோ தங்களது " பிரத்தியேக உரிமை " என்பது போல நினைக்கும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை குறித்து  19 வது திருத்தத்தில் உள்ள  ஏற்பாடு நீண்டகால ஆட்சி பற்றிய அவர்களது கனவுக்கு ஒரு முட்டுக்கட்டையாக   இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் மூனறில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமானால், அந்த இரு பதவிக்கால வரையறையை அவர்கள் மாற்றியமைத்து தங்களது முன்னைய ஆட்சியில் கொண்டுவந்த 18 வது திருத்தத்தில் இருந்ததைப் போன்று மட்டுப்பாடற்ற பதவிக்கால ஏற்பாட்டை புகுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது.ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூட தனது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகளில் ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அதைச் செய்யவிரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாகவே கூறியும் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.    42 வருடகாலமாக நடைமுறையில் இருந்துவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் பாதகங்கள் பற்றி இதுகாலவரையிலான விமர்சனங்களுக்குப் பிறகு முன்னரைவிடவும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்பு " சீர்திருத்தத்தில் " ஆட்சியாளர்கள் நாட்டம் காட்டுகின்ற நிலை தோன்றியிருப்பது இலங்கை அரசியலின் ஒரு முரண்நகையாகும். கோதாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றி அல்ல, " மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற " புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவது பற்றியே வாக்குறுதி அளித்திருந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் கூடுதலாக நீடிக்கும் " ஜெயவர்தன  அரசியலமைப்புக்கு " பதிலாக " ராஜபக்ச அரசியலமைப்பு " ஒன்றை அவர்கள் கொண்டுவந்து இலங்கையின் அரசியலில் ஒரு முத்திரையைக் குத்துவதற்கு ராஜபக்சாக்கள் அக்கறை காட்டவும் கூடும்.   https://www.virakesari.lk/article/74163
  • வடக்கு கிழக்கில் அபிவிருத்தி, மேம்பாட்டுக்காக புத்திஜீவிகள் அமைப்பு: யாழ் ஆயர் இல்லத்தில் அங்குரார்ப்பண கூட்டம் வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச்செல்லும் நோக்கத்துடன் ‘தமிழ் மக்கள் அபிவிருத்தி, மேம்பாட்டுக்கான மன்றம்’ ஒன்றை அமைத்து செயற்படுவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களின் இல்லத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெறும் அதேவேளை, யுத்தத்தினால் மிக மோசமாக பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சமாந்திரமாக முன்னெடுத்து செல்வதற்கு சிவில் சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததன் பின்னணியிலேயே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள போதிலும் வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் வகையில் இன்னமும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, இளையோர் வலுவூட்டல், வறுமை ஒழிப்பு, விவசாயம், மீன்பிடி, திறன் விருத்தி, பொருளாதார வலுவூட்டல், கல்வி, சுற்றாடல், நல் ஆட்சி, சுகாதாரம், விஞ்ஞானமும் புதுமை படைத்தலும், தகவல் தொழில்நுட்பம், சட்ட உரிமைகள், தமிழர் மரபு, பல்துறை ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் துறைசார் வல்லுநர்களை அடையாளம் கண்டு வளங்களை சரியான முறையில் ஒன்றுதிரட்டி சரியான திசையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்காக துடிப்பும் செயற்திறனும் மிக்க சிவில் சமூக குழு ஒன்றின் தேவை இதற்கு அவசியமாக இருக்கின்றது. இந்த அவசியத்தை கவனத்தில் எடுத்தே எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை ஆராயும்பொருட்டு இன்றைய கூட்டம் நடைபெற்றிருந்தது. அறிவு, ஆய்வு மற்றும் செயற்திட்டங்களின் வினைத்திறன்மிக்க முகாமைத்துவத்தின் ஊடாகவும் மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி தமிழர்களின் செழிப்பு மற்றும் வலுவூட்டலுக்காக மன்றம் ஒன்றை ஸ்தாபித்து  குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் செயற்படுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ் ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் மற்றும் நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய  சுவாமிகள் ஆகியோரின் தலைமையில் வடக்கு கிழக்கை சேர்ந்த 50 க்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் புலமையாளர்கள் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளனர்.   http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-கிழக்கில்-அபிவிரு/
  • வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை Jan 26, 20200   கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பொது இடங்கள் மற்றும் ஹோட்டல் உணவகங்களுக்குள் நுழையும்போது ஹோட்டல் ஊழியர்கள் வருபவர்களிடம் அவர்களது வாயை நன்றாக கழுவசொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார்   http://www.samakalam.com/செய்திகள்/வைரஸ்-அச்சுறுத்தலை-அடுத்/