Jump to content

புதிய மா இனம் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
a5-1-1.jpg

புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  கிளிநொச்சி  பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.சி.ஜே. அரசகேசரி தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு,  அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை குறிப்பிட்டு, அவற்றை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005/2006ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ் ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவர ரீதியில் ஆராயப்பட்டு சிறப்பான கன்றுகள் தெரிந்தெடுக்கப்பட்டன.

கறுத்தக்கொழும்பான் மா இனத்தில், பழத்தில் உள்ள நார்பற்று, தோலின் நிறம், பழத்தின் இனிப்புச்சுவை, வாசம் போன்றன கருத்திலெடுக்கப்பட்டு மூன்று தாய்த்தாவரங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அவ்வாறே விழாட் இனத்தில் இரண்டு இனங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அத்தோடு இவ் ஆய்வின் போது எதேச்சையாக புதியதொரு குணாம்சங்களுடன் ஒரேவகையான இரண்டு தாய்தாவரங்கள் கண்டறியப்பட்டன. அவற்றை ஆராய்ந்தபோது இப்பழங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தன. இப்பழமும் மரமும் மேலும் ஆய்விற்குட்படுத்தியதன் விளைவாக ஏனைய பழ மரங்களின் குணாம்சங்களைவிட பலவகையில் வேறுபட்டதாக காணப்பட்டது.

பழங்களின் வடிவம், பருமன், சதைப்பற்று, நார்பற்று, சுவை மற்றும் தனித்துவமான நறுமணம் என்பன துல்லியமான வேறுபாடுகளைகாட்டி நின்றன. இவ் ஆராய்ச்சியின் விளைவாக இத்தாய்த்தாவரத்திலிருந்து ஒட்டுக்கிளைகள் கொண்டுவரப்பட்டு கன்றுகள் உருவாக்கப்பட்டது. விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும், மாவட்ட விவசாயப்பண்ணையிலும் கன்றுகள் நாட்டப்பட்டன. அக்கன்றுகள் வளர்ந்து தற்போது காய்த்துக் குலுங்குகின்றன. இம்மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி வளர்ந்திருப்பதனால் படரும் செடியைப்போல் காட்சியளிக்கின்றது. இதனால் உருவாக்கப்பட்ட இவ் இனக்கன்றுகளை நாட்டிய விவசாயிகள் இவ் இனத்தை ‘கொடிமா’ என பெயரிட்டுள்ளனர்.

மேலும் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாக இவ்வினம் வருடம் பூராக காய்க்கும் தன்மை கொண்டதாகவும் போதுமானளவு குறிப்பிடக்கூடியளவு பழச் சாற்றைக்கொண்டதுடன் விசேட நறுமணமுள்ள சதைப்பற்றுடன் சாதாரண பருமனை கொண்டபழமாக அறியப்பட்டது. ஒவ்வொரு பழமும் சராசரியாக 280தொடக்கம் 450கிராம் நிறை வரை இருந்துள்ளது. பழுக்கும் போது பழம்பூராகவும் மஞ்சள் நிறமாவதுடன் பார்வைக்கு மிகவும் அழகானதாகவும் தென்படும். நன்றாகபழுத்த மாம்பழங்களை 3-5நாட்கள் வரை பழுதடையாமலும் பாதுகாக்கலாம். மேலும் இம்மாங்கன்றுகள் வீட்டுத்தோட்ட வளர்ப்பிலும் வறள்நில பிரதேசங்களிலும் நல்ல பயனைத்தரும் என நிருபணமாகியுள்ளது.

விவசாயத்திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில்  அண்மையில் நடைபெற்ற இன வெளியீட்டுகுழுவின் வருடாந்த கூட்டத்தில்  திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு  சரிபார்த்த பின்னர் இப்புதிய மா இனம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ் ஆராய்ச்சியில் வெற்றிகண்ட கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) அவர்கள் இப்புதிய மா இனத்தை திருநெல்வேலி மஞ்சள் என அழைக்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

https://newuthayan.com/புதிய-மா-இனம்-கண்டுபிடிப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 6:50 PM, பிழம்பு said:
a5-1-1.jpg
புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  கிளிநொச்சி  பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.சி.ஜே. அரசகேசரி தெரிவித்துள்ளார்.

இதுக்கும் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தம் இருக்கா? 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இதுக்கும் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தம் இருக்கா? 😋

சும்மா போங்கய்யா..... 
ஆனந்த சங்கரி... சுட்டுப்  போன,  ரியூப் லைட்டு. 

கலாநிதி.சி.ஜே. அரசகேசரி அவர்கள்...  
விவசாயம் சம்பந்தமாக படித்து, டாக்டர்  பட்டம்  வாங்கிய அறிவாளி.

பிற்குறிப்பு: இதனைப் பற்றிய செய்தியை, யாழ்.கள உறவாகிய ஆதவன். 2014´ம் ஆண்டிலேயே பதிந்துள்ளார்.
இப்போ... எத்தனையாம் ஆண்டு என்று, கணக்கு பார்க்கும் போது..... யாழ்.கள  உறவுகளை நினைத்து, பெருமைப் படுகின்றேன்.  

ஆதவனை... நாம், இழந்ததும்...  பெரும்  இழப்பு. 😥

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.