Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி….!!

Recommended Posts

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி….!! வாழ்த்துங்கள்.!

 

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!!11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.

இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் இந்தியர்.

visalini_4.jpg

அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.HCL நிறுவனம் The Pride of India – Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.

Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian – Visalini என அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது.நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா.

உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு
வயது 13 தான்.ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது
ஒரு தொலைபேசி அழைப்பு … எமது நாட்டு கௌரவ பிரதமர் உங்களது மகளை சந்திக்க விரும்புகிறார் என்று.

14-06-19-03visalini7.jpg

பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்.என்றார் பிரதமர் மோடி.விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.*

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.

main-qimg-8c4aa629739259f7ffb88159a507c9

உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கணனி ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி,

நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்

http://cinemanews.info/உலகிலேயே-அதிக-அறிவுத்திற/?fbclid=IwAR3RWExdQw4ncC88RP428K-5eN3ioNgPPCTngmhGOJtVy71b91KOrgWOL_w

Share this post


Link to post
Share on other sites

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் விஷாலினி ........!   💐

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்..💐

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உதயசூரியன் சின்னத்தில் கிழக்கில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயம் மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் கள நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதுரியமான விடயமாக அமையும். இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த 4 கட்சிகளும், இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி ஒருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை ஏகோபித்த சின்னமாக புதிய கூட்டணிக்கு தெரிவுசெய்து உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம். அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டுச் சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவதில் பிரச்சினையுள்ளதாக தெரிவித்தனர். அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றிகண்டுள்ளது.கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலே, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது. தமிழர் ஜக்கிய முன்னணி பேயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் சின்னமாக உதய சூரியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது 4 கட்சிகளான பி.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன தற்போது இணைந்துள்ளன.குறித்த ஊடக சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் நா.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் மேற்குறித்த தகவலை தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/உதயசூரியன்-சின்னத்தில்-க/
    • நீங்கள் எப்போதுமே பங்காளிகள் தானே பங்காளி! இதென்ன புதுசாய் புதுப்பிக்கிறியள்? 
    • துல்பன், நீங்கள் மதத்தை பற்றி கூறும் கருத்துக்கள் உயர்ந்தவையாகவும் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இடத்திற்கு அது சரி வருமா என்பதே வினா? இல்லை அந்த மாற்றம் அவர்களுக்குள்  இருந்து வர வேண்டும்.  உதாரணத்திற்கு, ஒருவருக்கு தமிழ் தெரியும் என்பதை விட அதை எங்கே எப்படி யாரிடம் எதை பேச வேண்டும் மற்றும் எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது.    
    • இப்பதான்  முரளிதரனுக்கு திரை விலக தொடங்கியிருக்குது. ஆனால் காலம் கடந்து போச்சுது. தான்  சிங்களத்தின்  அடிமை என்பதை வெகுவிரைவில்  உணருவார். மாரடைப்பு வருகுதோ, தற்கொலை செய்யும் துணிவு இருக்குமா இவருக்கு?  தீனி போட்ட எஜமான் பொட்டில போடப்போறார். இடையிடை புலிபுரளி  விடுவதன் காரணத்தில் இதுவும் ஒன்று. தன் அடிமைகளை வைத்து தான் எப்படி தப்புவது என்றே அவர் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். 
×
×
  • Create New...