Jump to content

தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

bjp-3-720x450.jpg

தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று?

தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது இன்று(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி பா.ஜ.க தலைவராக வி.சாமிநாதனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு முதல் இவர், அந்த பொறுப்பில் இருக்கிறார்.

அதேபோல போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய திலீப் கோஷ்க்கு மீண்டும் மேற்குவங்க மாநில பா.ஜ.க தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பாஜக தலைவராக சமிர் மொஹந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61 வயதான மொஹந்தி, 2016-ஆம் ஆண்டு முதல், ஒடிசா மாநில பாஜகவின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தவர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பன்ஷிதார் பகத், மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் கலதுங்கி சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான அவருக்கு வயது 65.

தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநரான பின், தமிழக பா.ஜ.க தலைவர் யார் என முடிவெடுக்கப்படாமல் இருந்தது.

தலைவர் பதவி தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் யார் என இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இறுதி பட்டியலில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பெயர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

http://athavannews.com/தமிழக-பா-ஜ-க-தலைவர்-யார்-என/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.