Sign in to follow this  
கிருபன்

ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்

Recommended Posts

ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்

ரஸ்யாவின் புதிய பிரதமராக அரசியல் பின்னணியற்ற  மிகைல் மிசுஸ்டின் என்பவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவு செய்துள்ள அதேவேளை ரஸ்யாவின் ஆளும் கட்சி புட்டினின் தெரிவிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளது.

ரஸ்யாவின் வரிச்சேவை பிரிவின் தலைவராக பணியாற்றி வரிச்சேகரிப்பில்  பாரிய முன்னேற்றத்தினை வெளிப்படுத்தியவர் மிகைல் மிசுஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புட்டினின் நியமனம் குறித்து ஆராயவுள்ளதாக ரஸ்ய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

கிரெம்ளினிற்கு ஆதரவான நாடாளுமன்றத்தின் கீழ் சபை இந்த நியமனத்திற்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

ரஸ்யா அரசாங்கம் நேற்று தீடீர் என இராஜினாமா செய்ததன் பின்னரே புட்டின் புதிய பிரதமரைஅறிவித்துள்ளார்.

mikail_mishustin.jpg

ரஸ்ய அரசாங்கம் முழுமையாக பதவி விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ் நேற்று அறிவித்திருந்தார்.

ரஸ்யாவின் அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகாரங்களை வழங்கும் யோசனையை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்வைத்துள்ள நிலையிலேயே அரசாங்கம் பதவி விலகுகின்றமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதியின் இந்த யோசனைகள் அவர் அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடிப்பதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 முதல் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்துவரும் புட்டினின் பதவிக்காலம் 2024 இல் முடிவிற்கு வருகின்றது.

தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை முன்னெடுக்கப்போகின்றார் என்பதை புட்டின் இன்னமும் அறிவிக்கவில்லை.

russia_pm.jpg

ரஸ்யாவின் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியாது என்பதால் புட்டின்  தொடர்ந்தும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே ரஸ்யாவின் அரசமைப்பை மாற்றி நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கும் யோசனையை புட்டின் வெளியிட்டுள்ளார்.

ரஸ்யாவின் அரசியல் உயர்குழாத்தினருக்கான வருடாந்த உரையிலேயே புட்டின் தனது இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இவை மிகவும் தீவிரமான மாற்றங்கள் என தெரிவித்துள்ள புட்டின்  நாடாளுமன்றமும் சிவில் சமூகமும் இந்த மாற்றங்களிற்கு தயார் என நான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஏதாவது ஒரு அதிகாரம் மிக்க பதவியில் இருந்தபடி ஆட்சி செய்வதற்கு புட்டின் திட்டமிட்டு வருகின்றார் என விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்களை அதிகரித்த பின்னர் 2024ற்கு பின்னர் பிரதமராகி அதிகாரத்தை தொடர்வதற்கு புட்டின் முயல்கின்றார்எனவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன

 

https://www.virakesari.lk/article/73319

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கே.பியைப் போன்று அர்ஜுன மகேந்திரனையும் அழைத்துவருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறினாலும் அது சாத்தியமாகாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர், கே.பி என்கின்ற குமரன் பத்மநாதனை அழைத்துவந்த முறை எமக்கு நன்றாகத் தெரியும். இது சூழ்ச்சி மூலமாக இடம்பெற்றது. மலேசியாவிலிருந்து கைது செய்து அழைத்துவந்ததுபோல அர்ஜுன மகேந்திரனை அழைத்துவர முடியாது. இப்போது கே.பிக்கு என்ன ஆனது? நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டரா? தண்டிக்கப்பட்டாரா? அவருக்கு சிறந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றுமுழுதாக அரசியல் ரீதியிலான டீல் ஆகும். எமது நாட்டுப் பிரஜை ஒருவர் எந்த அளவில் குற்றம் செய்திருந்தாலும் இந்தியா போன்ற வெளிநாடுகள் அவரைக் கேட்டால் வெறுமனே கொடுத்துவிடுவார்களா? இல்லை. விடுதலைப் புலிகளின் பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசாங்கம் என்ன செய்தது என்று தெரியாது. அவருடைய சொத்துக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன. இன்றும் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் சட்டரீதியாக மலேசியாவிலிருந்து அழைத்துவரப்படவில்லை என்றார். https://www.ibctamil.com/srilanka/80/144616?ref=home-imp-parsely
    • கொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை In இலங்கை     June 4, 2020 9:32 am GMT     0 Comments     1143     by : Jeyachandran Vithushan கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன் பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர். இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole) ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்ட்டுள்ளது. கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். http://athavannews.com/கொழும்பில்-இன்று-முதல்-ட/
    • இந்திய-சீன ராணுவம் இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை Posted on June 4, 2020 by தென்னவள்  10 0 இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் யூனியன் பிரதேசத்தில், நடைமுறை எல்லைக்கோடு அருகே பன்காங் ஏரி பகுதியிலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்தியா சாலைகள் அமைத்து வருகிறது. இந்த சாலைகள் கட்டப்பட்டால், எல்லைக்கு இந்தியா எளிதாக படையினரையும், ஆயுத தளவாடங்களையும் அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த சாலைகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பன்காங் ஏரி அருகே, அனுமதிக்கப்பட்ட இடம்வரை இந்திய ராணுவம் ரோந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த மாதம் 5-ந்தேதி, அந்த இடத்துக்கு 5 கி.மீ.க்கு முன்பே அவர்களை சீன ராணுவம் தடுக்க முயன்றது. அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் சிலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு ராணுவத்தினரும் படைகளை குவித்ததால், அங்கு சுமார் ஒரு மாதமாக பதற்றம் நிலவுகிறது. இதற்கு தீர்வு காண கடந்த 2-ந் தேதி, மேஜர் ஜெனரல் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, வருகிற 6-ந் தேதி உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லடாக்கில் சுசுல் மோல்டோ என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. கமாண்டர் அந்தஸ்து கொண்ட இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள். எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவுவதால், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று ராணுவ உயர் அதிகாரி செங்குப்தா தெரிவித்தார். மேலும், ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 3½ கி.மீ. நீள விமான தளம் போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது.https://www.kuriyeedu.com/?p=259763