• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

இதெல்லாம் சரித்திரம் தம்பி, உதெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் – சங்கரி

Recommended Posts

Share0
sankary.jpg

மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும்,

அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர்.

தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது , எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம்.

சுகதேகியாக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் தமிழகத்தில் வழக்காடி வென்று ஒரு கிழமைக்குள் இயற்கை எய்தினார். அவரின் உடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு வந்து, முதலில் கூட்டணி அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைத்த பின்னரே காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்கள்.

ஆனையிறவு மீள பிடிப்பது பகல் கனவு. 35ஆயிரம் போர் வீரர்களை காப்பாற்றுங்கள் என சர்வதேசத்திடம் மண்டியிடும் காலம் மீண்டும் வரும். அன்றைக்கு பிரபாகரனை சர்வதேசம் சுற்றிவளைக்கும் காலம் வரும் அன்றே யுத்தம் முடிவுக்கு வரும் என அப்போதைய அமைச்சர் ரத்வத்தைக்கு நாடாளுமன்றில் கை நீட்டி கூறியவன் நான். அப்போது என்னருகில் சம்பந்தன் இருந்து என்னை பிரமிப்பாக பார்த்தார். அதன் பின்னர் நடந்தது என்பது வரலாறு.

மக்கள் சேவை என வந்த பின்னர் அப்புக்காத்தர் வேலை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைக்கு கிளிநொச்சியில் காணி உறுதி எழுதியே கோடீஸ்வரன் ஆகியிருப்பேன்.

மகேஸ்வரன், ரவிராஜ், லக்‌ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஸ்டியை முன்வைக்க, மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஸ்டி கோரிக்கையை 49 வீத சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர்.

சம்பந்தன், மாவை, சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள்.

காலையில் கூட்டணி அலுவலகத்தில் இருந்து கூட்டணியில் போட்டியிடுவதாக கூறிய சம்பந்தன் பின்னேரம் புலிகளை சந்தித்து தமிழரசு கட்சியில் போட்டியிட்ட பொய்யன்.

புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது ?

கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள்.

மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். – என்றார்.

https://newuthayan.com/இதெல்லாம்-சரித்திரம்-தம்/

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, பிழம்பு said:

Share0

sankary.jpg

மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும்,

அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர்.

தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது , எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம்.

சுகதேகியாக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் தமிழகத்தில் வழக்காடி வென்று ஒரு கிழமைக்குள் இயற்கை எய்தினார். அவரின் உடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு வந்து, முதலில் கூட்டணி அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைத்த பின்னரே காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்கள்.

ஆனையிறவு மீள பிடிப்பது பகல் கனவு. 35ஆயிரம் போர் வீரர்களை காப்பாற்றுங்கள் என சர்வதேசத்திடம் மண்டியிடும் காலம் மீண்டும் வரும். அன்றைக்கு பிரபாகரனை சர்வதேசம் சுற்றிவளைக்கும் காலம் வரும் அன்றே யுத்தம் முடிவுக்கு வரும் என அப்போதைய அமைச்சர் ரத்வத்தைக்கு நாடாளுமன்றில் கை நீட்டி கூறியவன் நான். அப்போது என்னருகில் சம்பந்தன் இருந்து என்னை பிரமிப்பாக பார்த்தார். அதன் பின்னர் நடந்தது என்பது வரலாறு.

மக்கள் சேவை என வந்த பின்னர் அப்புக்காத்தர் வேலை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைக்கு கிளிநொச்சியில் காணி உறுதி எழுதியே கோடீஸ்வரன் ஆகியிருப்பேன்.

மகேஸ்வரன், ரவிராஜ், லக்‌ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஸ்டியை முன்வைக்க, மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஸ்டி கோரிக்கையை 49 வீத சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர்.

சம்பந்தன், மாவை, சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள்.

காலையில் கூட்டணி அலுவலகத்தில் இருந்து கூட்டணியில் போட்டியிடுவதாக கூறிய சம்பந்தன் பின்னேரம் புலிகளை சந்தித்து தமிழரசு கட்சியில் போட்டியிட்ட பொய்யன்.

புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது ?

கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள்.

மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். என்றார்.

https://newuthayan.com/இதெல்லாம்-சரித்திரம்-தம்/

ஆகா.... நித்திரை கொண்ட சிங்கத்தை, சீண்டி விட்டவர் யார் ❓
இப்ப சங்கரிக்கு,  கொலை வெறி  வந்திட்டுது. :rolleyes: :grin:

ஆமா... இந்திய மொடல் என்றால், என்னாய்யா... ⁉️

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

 

ஆமா... இந்திய மொடல் என்றால், என்னாய்யா... ⁉️

2695406082-d860ca7139-o.jpg

  • Like 1
  • Haha 2

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, நிழலி said:

2695406082-d860ca7139-o.jpg

ஆஹா... ஆனந்த சங்கரியின்,  "இந்திய மொடல்"  நல்லாய் இருக்கே......  😍
இதை...  கோத்தாவும், மகிந்தவும், மட்டுமல்ல.......  😎
தமிழர்களும்..... விரும்புவார்கள் தானே. 🤩

❤️  ஐ  லவ்  யூ.... சங்கரி.  ❤️

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, பிழம்பு said:

அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர்.

அமிர்தநாயகம் என்பவரின், பெயரை... நான் இதுவரை கேள்விப்  பட்டதே  இல்லை.
அமிர்தலிங்கத்தின் பெயரை,  சங்கரி....  😋  "ரங்  சிலிப்" பண்ணி,  😝
நாயகம் என்று விட்டாரா?  😎

ப்ளீஸ்... ரெல் மீ .....  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, நிழலி said:

2695406082-d860ca7139-o.jpg

டாங்ஸ் யூ வெரிமச் நிழலி. டாங்ஸ் யூ வெரிமச்.😀

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

2695406082-d860ca7139-o.jpg

இந்த மொடலில் சகல உரிமையும் கிடைக்குமா சார்? 😎 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

2695406082-d860ca7139-o.jpg

 

ஆனந்த சங்கரி.... குட்டிக்கு, ஒரு... சிற்றுவேஷன் சாங்கு.   👓

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வடக்கு முஸ்லிம்கள் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற வேண்டும்- ரிஷாட் புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகம் இழந்து தவிக்கும்  நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை, மீளப்பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளையும் முயற்சிகளையும் மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு முஸ்லிம்கள், இந்தப் பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தம்மாலான முழுப்பங்களிப்பையும் நல்க வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார். புத்தளத்தில் 90 ஏக்கர், 25 ஏக்கர் மற்றும் ஸ்லாமத்புரம் ஆகியவற்றில் வாழும் வடக்கு முஸ்லிம்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை  சந்தித்துக் கலந்துரையாடியபோதே, ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 30 வருடங்களாக புத்தளத்தில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் வெற்றிடமாகக் கிடக்கின்றது. எனினும், புத்தளத்தில் மக்கள் தொடர்ந்தும் தேசியப்பட்டியலின் ஊடாக தமது நாடாளுமன்றத் தாகத்தை தீர்த்துக்கொண்டிருக்க முடியாது. சொந்த வாக்குகளினால் ஒற்றுமையின் மூலம் தமது பிரதிநிதித்துவத்தை அடைய வேண்டும். எனவேதான், நாமும் அந்த ஆக்கபூர்வமான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வன்னி மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளினாலும் உழைப்பினாலும் தொடங்கப்பட்ட எமது அரசியல் பயணம், நாடு முழுக்க வியாபித்தமைக்கு நீங்கள் தொடர்ந்து வழங்கும் ஆதரவும் பிரார்த்தனைகளுமே பிரதான காரணம். நமது கட்சியின் வளர்ச்சியில் நீங்கள் பிரதான பங்காளிகளாக இருப்பதோடு மாத்திரமின்றி, அதற்கு அடித்தளம் போட்டவர்களும் நீங்களே! நாம் முன்வைத்த காலை என்றுமே பின்வைக்காமல் செயற்படுவதனாலேயே வெற்றிகள் கிடைக்கின்றன. எதிரிகளினதும் காழ்ப்புணர்வாளர்களினதும் எண்ணங்கள் தவிடு பொடியாகிக்கொண்டிருப்பதற்கு, நீங்கள் எமக்குத் தந்த பலமும் ஒரு காரணமாகும். எதிர்வரும் காலங்களிலும் பொய்யர்களையும் பித்தலாட்டக்காரர்களையும் நீங்கள் இனங்கண்டு ஒதுக்குவதன் மூலமே, நமது சமுதாயம் தலைநிமிர்ந்து வாழமுடியும்” என கூறினார். http://athavannews.com/வடக்கு-முஸ்லிம்கள்-இழந்த/
    • வடக்கில் முதலீடு என்று வரும்போது, செயலைவிடப் பேச்சுத்தான் அதிகமாகவிருக்கிறது. ஆனால் சுகந்தன் சண்முகநாதனின் செயல் வித்தியாசமானது. ஒரு பாடசாலைப் பதின்ம வயதினனாக, 25 வருடங்களுக்குமுன் சிறீலங்காவின் போர்ச்சூழலிலிருந்து தப்பியோடிய சுகந்தன் 2014ம் ஆண்டு தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் கனடாவிலிருந்து தன் மண்ணுக்குக்கு மீண்டு வந்த செயல் மிகவும் வித்தியாசமானது. பல தொழில்களை ஆரம்பித்தும், பலவற்றை மீட்டெடுத்தும் சாதனைகள் புரிந்துவருகிறார் சுகந்தன். நட்பற்ற சூழலில் கடினமான பாடங்களைக் கற்றுத் தேர்ந்து உள்ளார்ந்த வளங்களின் துணையுடன் தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்ட ஒரு தொழில் நிபுணரின் கதை இது ஆரம்பம் சுகந்தன் சண்முகனாதன் 1973 இல், ஒரு வசதியான யாழ்ப்பாணக் குடும்பத்தில் பிறந்தவர் சுகந்தன். 1983 இல் தந்தையார் இயற்கை மரணமடையத் தாயாரின் பொறுப்பில் ஒரு தம்பியுடனும் இரு தங்கைகளுடனும் வசதிகள் குறைவேதுமின்றி வாழ்ந்தவர். போர் எல்லாவற்றையும் குழப்பியடித்தது. போர் ஏற்கெனவே தூக்கி எறிந்த மாமாவின் உதவியுடன் 1989 இல், தனது 16 வயதில், கனடா சென்றார். கனடாவில் இருபத்தைந்து வருடங்கள் தாயின் சேலைக்குள் வளர்ந்த சுகந்தனின் வாழ்க்கை ரொறோண்டோவில் ஓய்வற்ற வேலை என்ற நிலைக்கு மாற்றம் பெற்றது. பாடசாலை, பகுதிநேர கோப்பை கழுவுதல், கிரிக்கெட் என்று நேரத்தை வசப்படுத்தித் தன் வாழ்வைச் சிரமத்தின் மத்தியிலும் வாழ்வாங்கு வாந்தார். அதிகாலை 5:00 முதல் அதிகாலை 2:00 மணிவரை அவரது நாள் பயனுடனே சுழன்றது. பயணத்தின் போது பள்ளி வேலைகளைச் செய்தேனும் நல்ல புள்ளிகளோடு படிப்பை முடித்தார். உயர்கல்விக்குப் பணம் போதாது. இரவுக் கல்லூரியும், பகலில், வார இறுதி நாட்களில் வேலையுமென எப்படியோ கல்வியோடு வாழ்க்கையும் உயர்ந்தது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு வாரம் முழுவதும் நான்கு வேலைகளாற் பிரித்தெடுக்கப்பட்டன. தளபாடத் தொழிற்சாலை வேலை முழு நேரமாகியது. அதுவே சுகந்தனது வாழ்வுக்கும் ஏணியானது இரவுக் கல்லூரியில் எலெக்ட்றோணிக் எஞ்சினியரிங்க் கற்றாலும் ஒழுங்காக வகுப்புக்களுக்குப் போவதில்லை. நண்பர்களின் குறிப்புகளை வாசித்து அவர்களை விட மேலதிகமான புள்ளிகளைப் பெற்றார். இருப்பினும் அவர்களைப் போல் வருடம் 30,000 கனடிய டொலர்களை அவர் சம்பாதிக்க விரும்பவில்லை. அவர் கல்வி கற்கும்போதே வருடம் 80,000 கனடியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். அது சுகந்தனின் கடினமும், விசுவாசமும் கொண்ட உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி. “கல்வி முக்கியமானது தான். ஆனல் அதை விரிவுரை மண்டபங்களில் உட்கார்ந்துதான் கற்க வேண்டுமென்பதில்லை” என்கிறார் சுகந்தன். சுகந்தனது தளபாடத் தொழிற்சாலை நிர்வாகம் அவரது திறமையை விரைவிலேயே இனம் கண்டு அவருக்குப் பதவியுயர்வும் கொடுத்தது. பகுதி நேர வேலைகள் அவசியமில்லாமற் போனது. வாடிக்கையாளர்களைச் சந்திக்கச் செல்லும் போது சுகந்தனுடன் அவரது வெள்ளை இன மேலதிகாரியும் போகவேண்டியிருந்தது. மண் நிறத் தோலுடையவருடன் வணிகம் செய்ய வாடிக்கையாளர்கள் விருப்பப்படாமல் போகலாம் என்பதற்காகவிருக்கலாம். வெகு விரைவிலேயே நிறுவனமும், வாடிக்கையாளரும் சுகந்தனது திறமையைக் கண்டறிந்து கொண்டனர். நிறுவனம் அவருக்கு அவரது மேலதிகாரிக்கு மேலான பதவியை வழங்கியது. முழுக் கனடாவுக்கும் தரக் கட்டுபாட்டு அதிகாரியாகவும் (Quality Control) தொடர்ந்து உலக முழுவதுக்குமான அதிகாரத்தையும் நிறுவனம் அவருக்கு வழங்கியது. சிறிது காலத்தில் நிறுவனத்தின் முக்கிய ‘சிக்கல் தீர்க்கும்’ நிபுணராக (company trouble-shooter) ஆகப் பதவியுயர்த்தப்பட்டதுமல்லாமல் 100,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலையில் அவருக்கு மூன்று அலுவலகங்களைக் கொடுத்ததன் மூலம் சுதந்திரமாகப் பணிசெய்யும் வசதியையும் நிறுவனம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. சிக்கல் தீர்ப்பது என்பது சுகந்தனுக்குக் கைவந்த கலை. அது தொடர்பான ஒரு கதையை அவர் விரும்பிச் சொல்கிறார். ஒரு தடவை நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுகந்தனைத் தேடி வந்தார். நிறுவனத்தின் 50% மான மரப் போர்வைத் (wood veneer) தளபாடங்கள் நிறம் மாறுவதால் வாடிக்கையளர்களால் திருப்பியனுப்பப் படுகின்றன எனக் குறைபட்டுக்கொண்டார். சுகந்தன் அதைப் பார்த்துவிட்டு “இது இயற்கையான நிகழ்வு. போர்வையாகப் பாவிக்கப்பட்டது உண்மையான மரம், செயற்கையான பிளாஸ்டிக் அல்ல என்பதையே இது உணர்த்துகிறது எனக்கூறி இதையே வாடிக்கையாளரிடமும் சொல்லுங்கள்” எனக்கூறினார். இதன் பிறகு வாடிக்கையாளரும் மகிழ்ச்சியடைய தளபாடங்கள் திருப்பி அனுப்பப்படுவதும் நின்றுவிட்டது. சுகந்தன் இன்நிறுவனத்தில் 20 வருடங்கள் பணி புரிந்தார். இக்காலத்தில் கனடாவிலும், அமெரிக்காவிலும் சொத்துக்களில் முதலீடு செய்தார். தாயையும் ஒரு தம்பியையும் கனடாவுக்கு அழைக்க மற்றத் தம்பி அகதியாக ஐரோப்பாவுக்கு ஓடத் தங்கை மட்டும் திருமணம் முடித்து யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட அவரது கடமைகள் ஓரளவு திருப்தியுற்றன. யாழ்ப்பாணம் திரும்புதல் 25 வருடங்களுக்குப் பிறகு, 2014 இல் சுகந்தன் யாழ்ப்பாணம் திரும்பினார். மனைவிக்கு விருப்பமில்லை எனினும் அவரது கனவு வேறாக இருந்தது. சரி வராவிட்டால் திரும்பி வரலாம் என்ற வாக்குறுதியோடு யாழ்ப்பாணம் சென்றார் சுகந்தன். ஏன் யாழ்ப்பாணம் திரும்பினாய் என்று கேட்டதற்கு “எனது பிள்ளைகள் தமது வேர்களை அறிய வேண்டும்” என்றார். மகன் தற்போது கனடாவில் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். மகள் யாழ்ப்பாணத்தில் படிக்கிறார். யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவர் சுகந்தன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேச, எழுதக்கூடியவர், நேரடியாகப் பேசுபவர், கவனமாகக் கேட்பவர், விழிகளை நேரே சந்தித்து அளவளாபுபவர், மொத்தத்தில் சகலரையும் இலகுவில் ஈர்க்கக்கூடியவர். ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராவதற்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்ட ஒருவர் சுதந்திரமான வியாபாரியாக விரும்புவது இயற்கையே. சுகந்தனது முதலாவது தொழில் முயற்சி தன் தங்கையின் கணவருடன் சேர்ந்து ‘றிச் லைஃப்’ (Rich Life) என்ற நிறுவனத்தின் வடமாகாண விநியோகிஸ்தராகியது. ‘றிச் லைஃப்’, முன்னணி பாலுணவுப் பொருட்களின் தயாரிப்பாளராவர். நான் சுகந்தனைச் சந்திக்குமுன்பே இப் பொருட்களை வாங்குபவன். வட மாணத்தின் சகல கடைகளிலும் கிடைக்கும் இப் பொருட்கள் கிடைக்கின்றன. இதன் பிறகு சுகந்தனின் கவனம் வரணி பனஞ் சாராயக் கூட்டுறவுச் சங்கத்தின் பக்கம் திரும்பியது. போர்க்காலத்தில் இலாபகரமாக நடத்தபட்ட கூட்டுறவுச் சங்கங்கள் பல தற்போது மூடப்படும் நிலையில் இயங்குவது பற்றிச் சுகந்தன் அறிந்திருந்தார். தங்களது வேலையாட்களுக்குத் தொழில்களை வழங்கியது மட்டுமல்லாது, ஆயிரக் கணக்கான கள்ளிறக்கும் தொழிலாளர்களையும் இச் சங்கங்கள் வாழவைத்துக் கொண்டிருந்தன. குழந்தைப் பள்ளிகள் முதல் பல நல்ல காரியங்களுக்கு நிதி உதவியும் புரிந்து வந்தன. போரின் முடிவு இவற்றில் சிலவற்றையும் முடித்துக்கொண்டது, சில ஊசலாடிக்கொண்டிருந்தன. 2009 இற்குப் பிறகு தென்னிலங்கை நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் வட மாகாணச் சந்தைக்காகப் போட்டியிட்டன. போர்க்காலத்தில், பலவகைப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் அதிக முன்னேற்றங்களைச் செய்யமுடியாமல் போனது. பண்டங்களின் தரங்களை உயர்த்தவோ, அவற்றின் லேபல்களையோ அல்லது பெட்டிகளையோ கவர்ச்சியான தரத்துக்கு வைத்திருக்கவோ முடியவில்லை. வரணி கூட்டுறவுச் சங்கத் தயாரிப்புகள் வரணி வடிப்புத் தொழிற்சாலை (distillery) வீதியில் வீசப்பட்ட போத்தல்களைத் திரும்பவும் பாவித்தது. சுடலைகளில் கவலை தீர்க்கக் குடிப்பவர்கள் வீசும் வெற்றுப் போத்தல்கள் பாவனைக்கு வந்தன. லேபல்கள் கைகளால் ஒழுங்கீனமாக ஒட்டப்பட்டன. சில கிழிந்தவாறிருந்தன. கள்ளின் தரம் போத்தலுக்குப் போத்தல் வித்தியாசமாகவிருந்தது. உற்பத்திக்கான மூலப் பொருட்கள் தென்னிலங்கையிலிருந்து ஒழுங்காகப் பெறப்படாமையால் தயாரிப்பு தடைபடுவது வழக்கமாகவிருந்தது. மொத்தத்தில் சீரற்ற முகாமைத்துவம் காரணமாகப் பண்டத்தின் விற்பனையில் தளர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் தென்னிலங்கைக் கள்ளுற்பத்தியில் பாவிக்கப்படும் மூலப்பொருட்களின் வேறுபாடு காரணமாக அவற்றின் விலைகளுடன் வட மாகாணக் கள்ளின் விலை இலாபகரமானதாக இருக்கவில்லை. கூட்டுறவுச் சங்கமாக இருந்ததால் வரணி கள்ளுற்பத்தித் தொழிலை வாங்கச் சுகந்தனால் முடியவில்லை. ஆனால் அப்பண்டத்தின் ஏக விநியோகிஸ்தன் என்ற வகையில் அதன் தரத்தை ஏற்றுமதித் தரத்துக்கு உயர்த்த சுகந்தனால் முடிந்தது. பிரித்தானியா, கனடா, இத்தாலி போன்ற பல நாடுகளிலுள்ள வடிப்புத் தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள தொழில்முறைகளைக் கற்றுக்கொண்டார். போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றை வடமாகாணத்தில் நிறுவ முயற்சித்தாராயினும் அதன் முதலீடு அதிகமாக இருந்ததனால் அம் முயற்சியை விட்டுவிட்டார். இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றைச் செய்து, தென்னிலங்கையில் அரச முதலீட்டுச் சபையின் உதவியுடன் அவர்கள் ஆரம்பித்த போத்தல் தயாரிக்கும் நிறுவனமொன்றின் வடமாகாண விநியோகஸ்தராகவும் ஆகிக்கொண்டார். இதன் மூலம் வரணி தொழிற்சாலைக்கு தடங்கலில்லாத போத்தல் விநியோகமும் கிடைத்தது. முதலீட்டுச் சபையின் ஆதரவுடன் தென் கொரிய நிறுவனமொன்றினால் தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்றிலிருந்து பெட்டிகள், லேபல்கள், மூடிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார். அத்தோடு வடமாகாணத்தின் இதர நிறுவனங்களுக்கான விநியோகங்களையும் சேர்த்து ஒன்றாகத் தனது தேவைகளைச் (order) சமர்ப்பிப்பதன் மூலம் அவருடைய வாங்கு திறன் பன்மடங்கு அதிகரித்தது. சுகந்தன் தென் கொரிய நிறுவனத்தின் மிக முக்கிய வாடிக்கையாளராக முடிந்தது. மூலப் பொருட்கள் உரிய நேரத்தில் தொழிற்சாலையை வந்தடைந்தன. இவற்றைச் செய்ததன் மூலம் சுகந்தன் கள்ளுற்பத்திக்குரிய போத்தல், லேபல், பெட்டி அத்தனையையும் தன் ஒருங்கிணைந்த நிறுவனங்களுக்குள்ளேயே வைத்திருக்க முடிந்தது. சுகந்தனின் வியாபார அபிவிருத்தியில் இன்னுமொரு அதிர்ஷ்டமும் வந்து ஒட்டிக்கொண்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு மருத்துவர்களின் மாநாட்டுக்கு பதநீர் வழங்குவதற்கான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. பதநீர், பனையிலிருந்து எடுக்கப்படும் போதையூட்டாத ஒரு பானம். தாய்ப் பாலுக்குச் சமமான போஷாக்கு நிறைந்த ஒரு பானம். வரணி கூட்டுறவுச் சங்கத்தில் இது உற்பத்தி செய்யப்படுவதில்லையாயினும் சுகந்தன் பதனீர் தயாரிக்கும் இன்னுமொரு கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டுபிடித்தார். பதநீர் வருடத்தில் 3-4 மாதங்களுக்கே உற்பத்தியாகும். ஆனாலும் பதப்படுத்தும் பதார்த்தங்கள் (preservatives) எதையுமே பாவிக்காமல் பதநீரை ஒரு வருடத்துக்குப் பழுதாகாமல் போத்தலில் அடைத்துவைக்கக் கற்றுக்கொண்டார் சுகந்தன். சென்ற வருடம் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட பதநீர்த் தயாரிப்புகளை யாழ்ப்பாணத்தின் பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு விநியோகித்து அமோக வெற்றியையும் பெற்றிருக்கிறார். தற்போது ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற கண்டங்களின் சந்தைகளைக் குறிவைத்து விநியோகிஸ்தர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். கள்ளு வடக்கின் பனைப் பொருளாதாரம் பனம் தொழில் வடக்கிற்கு இன்றியமையாதது. ஒரு பருவ காலத்தில் கள்ளுத் தொழிலாளி நாளொன்றுக்கு 5000 ரூபாய்களைச் சம்பாதிப்பார். பருவ காலம் 10 மாதங்களுக்கு நீடிக்கும். போதையற்ற பதனீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காரைநகரில் பதநீரை ஒழுங்காகக் குடித்துவந்த மூதாட்டி ஒருவர் 104 வயதுவரைக்கும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகப் பேசிக்கொள்வார்கள். அவருடைய மரணச் சடங்கில் 600 பேரப் பிள்ளைகளும், பூட்டப் பிள்ளைகளும் கலந்துகொண்டார்களாம். முறையாகச் செயற்பட்டால் பனம் தொழில் போதுமானவர்களுக்கு வேலை வாய்ப்பையும், அரசாங்கத்துக்கு வரியையும் தருவதன் மூலம் வடமாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய ஒன்று. வடக்கின் நோக்கு சுகந்தன் இதர தொழில் முயற்சிகளிலும் கண் வைத்திருக்கிறார். கண்ணாடிகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் மறுசுழற்சி (recycling) செய்யும் முயற்சி அது. வேறு தொழில் முயற்சிகளையும் காலப்போக்கில் எடுத்துக்கொள்வாரென நம்புவோம். புலம்பெயர்ந்தவர்கள் மீண்டு வந்து தொழில்துறைகளை ஆரம்பிப்பது வழக்கமான ஒன்றல்ல. சுகந்தன் ஒரு தனி உதாரணம். அவர் ஒரு தர்மஸ்தாபனமோ அல்லது மூளைவள ஆலோசகரோ அல்ல. அவர் தான் கற்ற வட அமெரிக்கத் திறமைகளையும் அனுபவங்களையும் கொண்டு வட இலங்கையின் நலிவுற்றுப் போகும் தொழில்களை மேம்படுத்தியும், புதிய தொழில்களை ஆரம்பித்தும் முன்னுதாரணபுருஷராகத் திகழ்கிறார். அவரது உள்ளார்ந்த பார்வையும், வடக்கிற்கு அப்பாலும் ஏற்படுத்தும் தொடர்புகளின் மூலம் புதிய பண்டங்களை உருவாக்கி சர்வதேச சந்தைகளில் விற்க முயற்சிக்கிறார். வடக்கு தூங்குகிறது, சட்டங்களற்றது, அதிகம் பின்தங்கியது, அதிகம் மெத்தனப் போக்குடையது, அதிகம் சோம்பேறிகளைக் கொண்டது, அங்கு முதலிடுவதில் பிரயோசனம் கிட்டாது என்றெல்லாம் கூறுபவர்களைத் தவறு எனச் சொல்வதற்கு சுகந்தன் ஒரு உதாரணம். நல்ல திட்டத்துடனும், நல்ல முகாமைத்துவத்துடனும் வடக்கில் பாரிய பொருளாதார வெற்றிகளை அடையலாம். வடக்கிற்கான நோக்கு (vision) என்னவாயிருக்குமெனச் சுகந்தனிடம் கேட்டபோது கேட்டபோது, “ஒரு தலைமுறை அவகாசம் கொடுங்கள் யாழ்ப்பாணம் புளோரிடா போல வந்துவிடும். இளையவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும், வல்லுனர்கள் புதிய தொழில்களை ஆரம்பிக்கும், முதியவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும் நிலமாக மாறும்” என்றார். ஒரு தலைமுறை? சுகந்தனைப் போல ஐம்பது பேர்கள் இருந்தால் வெகு முன்பதாகவே அது சாதிக்கப்பட்டுவிடும். https://marumoli.com/கனடாவிலிருந்து-கள்ளுத்-த/