புரட்சிகர தமிழ்தேசியன்

இலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.!

Recommended Posts

இலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..! ஜனாதிபதி இணக்கம்.

200-SETHTHAKOVIL.jpg

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சீதை கோவிலின் புனரமைப்புக்காக இந்தியாவின் மத்திய பிரதேச அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்குவதற்குள்ளது. இந்திய மத்திய பிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவில் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு மத்திய பிரதேச அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 5 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டதாக சர்மா இதன்போது தெரிவித்துள்ளார்.

ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு அவர் இதன்போது கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/15435

டிஸ்கி:

memees.php?w=260&img=dmFkaXZlbHUvdmFkaXZ

அண்ணையிடம் ரவுண்டா 50 கோடி கேட்பதை விடுத்து..👍

Share this post

Link to post
Share on other sites

புதிதாக அவர்களின் கதையைக் கட்டமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காத அவர்கள், குஜராத்தில் அகழ்வாய்வுக்கு சில ஆயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள். இல்லாததை வைத்து எடுக்க வேண்டுமல்லவா ? கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள்? மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

ஈழப்போர்.... முடிந்த பின்பு,  50 ஆயிரம் வீடுகளை, கட்டித் தருவதாக கூறிய இந்திய அரசு,
இதுவரை... எத்தனை வீடுகளை, கட்டியது?

இன்று வரை கூட.... இந்திய அரசின் ஒத்துழைப்புடன்,
ஸ்ரீலங்கா அரசு நடத்திய... இராணுவ, விமான, கடல்படை  அட்டூழியத்தால்,
நன்றாக வாழ்ந்த, குடும்பங்கள்... சீரழிந்து  போய் இருக்கிறார்கள். 
அதற்கு.... இன்றும், விடிவு இல்லை.

ஒரு வார்த்தையை.... ஒருவன் கூறினால்...
அதன் படி, நடப்பதே... தர்மம் என்று, நீதியும்  கூறுகின்றது.

அதை விடுத்து, கூட்டு சேர்ந்து...  தமிழினத்தை, ஒட்டாங்கி  ஆக்கி விட்டு...
வாயால்... வடை சுடுவது,   இந்திய அரசாங்கத்துக்கு அழகு அல்ல.

அந்த நேரம், இந்தியா....  பொத்திக் கொண்டு, இருந்திருந்தால்...
இன்று... தமிழீழம்  என்ற நாடு, பிறந்திருக்கும். 

Edited by தமிழ் சிறி
  • Like 2

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

ஒரு வரி பிறழாமல் முற்றிலும் உண்மை. ஒவ்வொரு இந்தியனும், குறிப்பாக ஒவ்வொரு இந்தியத் தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம்.

Share this post

Link to post
Share on other sites

இந்தியனுக்கு காரணம் இல்லாமல் தமிழகத்தின்மேல்  பயம். தமிழ் ஈழம் வந்தால் தமிழகமும் இந்தியாவில் இருந்து பிரிந்து விடும், அவர்கள் முதுகில் சவாரி விடமுடியாது என நினைக்கிறான். ஈழத் தமிழரை அடக்க உதவுவது, தமிழகத்து தமிழரை மிதிப்பதுபோல் உணருகிறான். ஒருநாள் அது உடைபட அவனே வலிந்து இழுக்கிறான்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, சுப.சோமசுந்தரம் said:

சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம்.

அப்படி ஏதாவது தூவல் நடக்குமானால் இப்படியாவது தமிழர் அடையாளங்கள் இலங்கையில் காப்பாற்றப்படுகிறதே என்று சிறு நிம்மதியடையலாம்.

நீங்கள் இன்றைய இந்திய அரசியலுடன் ஒப்பிட்டு  ஈழதமிழர் நிலையை பார்க்கிறீர்கள், இலங்கை நிலமை அப்படியல்ல.

எத்தனை தலைமுறை கடந்த பின்னும் இந்தியாவில் தமிழனுக்கென்றொரு மாநிலமும் கலாச்சாரமும் அடையாளமும்,மத்திய அரசையே தீர்மானிக்கும் சக்தியும் இருக்கும்.

இலங்கையில் இன்னும் சில தசாப்தங்களில் ஈழ தமிழருக்கென்று தனி ஒரு மாகாணமோ அவர்களுக்கென்றொரு தனித்துவமோ இருக்கபோவதில்லை.

2009ன் பின்னர்,

இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு பேரம்பேச இலங்கை   தமிழருக்கென்று இருந்த ஒரே துருப்புசீட்டு,  சிங்கள ஆட்சியாளரை தீர்மானிக்கும் எமது வாக்கு பலம், அதுகூட கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் செல்லாகாசு ஆகிவிட்டது.

தனி சிங்கள வாக்கு பெரும்பான்மையினால் இலங்கையின் ஆட்சி தலைவரை தேர்ந்தெடுத்த சிங்கள தேசத்துக்கு இனி எந்த வகையிலும் நாம் அவர்களுக்கு தேவை படபோவதில்லை.

தாங்கள் கூறியதுபோல் இலங்கையில் பெளத்ததிற்கும், இஸ்லாத்திற்கும் எதிராக இந்துதுவம் என்பது எப்போதுமே எழுந்து நிற்காது, ஏனெனில் அவர்கள் இருவரும் சேர்ந்து   எங்கள் இனத்தையே  கறையான் அரித்ததுபோல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறக்குறைய தின்று முடிக்கும் நிலைக்கு மிக அருகில் நிற்கிறார்கள்.

இன அடையாளமே இல்லாமல் போகுதே, மத அடையளத்தை எங்கிருந்து கொண்டு வருவது?

16 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?

என்னமோ இலங்கை தமிழர்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டமாதிரியும் , மதம் மட்டுமே இனிமேல் அவர்கள் வாழ்வை கெடுக்கபோகிறது என்பதுபோலும் சிந்திக்கிறீர்கள்,

உலகின் சக உயிரினங்கள்போலவே தமிழனையும் ஒரு மனிதனாக கருதாத சிங்கள தேசத்தில் வாழும் தமிழர்களுக்கு ஆர்.எஸ்/எஸ் சும்,பார்ப்பனியமும்பற்றி அக்கறை செலுத்த ஏதுமில்லை.

அப்படி ஏதாவது நடந்தால்,சரியோ தவறோ  இப்படியாவது சிங்களவனுக்கெதிராக  இலங்கையில் ஒரு அடையாளம் வருதே என்றுதான் சிறு நிம்மதி அடைவார்கள்.

நான் மேலே சொன்னதுதான்,

மொழியாலும்,கலாச்சாரத்தாலும்,,ஒருவருக்கு ஒன்றென்றால் கவலையும் கோபமும் கொள்ளும் ரத்த உணர்வாலும் நாம் எப்போதுமே பின்னி பிணைந்திருந்தாலும் 

இலங்கை தமிழர் அரசியலும்,இந்திய தமிழர்கள் அரசியலும் முழுக்க முழுக்க வேறானாது,

இரண்டும் ஒரேமாதிரியானது என்று நீங்கள் கருத நினைத்தால் அது மட்டுமே அதீத கற்பனையானது.

வேண்டுமென்றால் இரண்டு தேச தமிழ் அரசியல்வாதிகளின் குணங்களும் ஒன்றென்று சொல்லி கொள்ளலாம், அது மட்டுமே 100% உண்மையானது.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, valavan said:

இலங்கை தமிழர் அரசியலும்,இந்திய தமிழர்கள் அரசியலும் முழுக்க முழுக்க வேறானாது,

உண்மை. இங்கே எங்கள் அடையாளங்களை அழிக்க முனைவது வெறும் மிருகமே ! அங்கே அடையாள அழிப்பையும் தாண்டி இருப்பையே கேள்விக்குறியாக்கும் சாத்தான்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை. இவ்வேறுபாட்டை வெகு நிதானமாக எடுத்துரைத்தமைக்கு நன்றியும் பாராட்டும்.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, சுப.சோமசுந்தரம் said:

புதிதாக அவர்களின் கதையைக் கட்டமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காத அவர்கள், குஜராத்தில் அகழ்வாய்வுக்கு சில ஆயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள். இல்லாததை வைத்து எடுக்க வேண்டுமல்லவா ? கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள்? மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?

உங்கள் கணிப்பு மிகவும் சரியானது. பார்ப்பனீயம் இங்கு ஏற்கனவே தனது முகவர்களை அனுப்பி வேலைத்திட்டங்களை ஆரம்பித்திவிட்டதாகவே தோன்றுகிறது. மதத்தின் அடிப்படையில் தமிழர்களை ஒன்றிணைக்கும் வேலையை தொடங்கிவிட்டது.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஈழப்போர்.... முடிந்த பின்பு,  50 ஆயிரம் வீடுகளை, கட்டித் தருவதாக கூறிய இந்திய அரசு,
இதுவரை... எத்தனை வீடுகளை, கட்டியது?

30,000 த்த தாண்டியிருக்காது.

ஹிந்தியன் தங்கடை எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுது என்று பெருமைப்படுறவன் ஆச்சே!

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, satan said:

இந்தியனுக்கு காரணம் இல்லாமல் தமிழகத்தின்மேல்  பயம். தமிழ் ஈழம் வந்தால் தமிழகமும் இந்தியாவில் இருந்து பிரிந்து விடும், அவர்கள் முதுகில் சவாரி விடமுடியாது என நினைக்கிறான். ஈழத் தமிழரை அடக்க உதவுவது, தமிழகத்து தமிழரை மிதிப்பதுபோல் உணருகிறான். ஒருநாள் அது உடைபட அவனே வலிந்து இழுக்கிறான்.

மேற்குநாடுகளின் ஆக்கிரமிப்பு ஏற்படுவதற்கு முன்னர், சில நூறுவருடங்களுக்கு முன்னர், தனித்தனி நாடுகளாக இருந்த அதே நிலைமைக்கு இந்தியா சிதறும் வரை தெற்காசிய பிரதேசத்தில் அமைதி நிலவாது. 

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, போல் said:

மேற்குநாடுகளின் ஆக்கிரமிப்பு ஏற்படுவதற்கு முன்னர், சில நூறுவருடங்களுக்கு முன்னர், தனித்தனி நாடுகளாக இருந்த அதே நிலைமைக்கு இந்தியா சிதறும் வரை தெற்காசிய பிரதேசத்தில் அமைதி நிலவாது. 

அந்த வேலையை சீனா பார்த்துக் கொள்ளுவான். என்ன... அது நடக்கும்போது இலங்கையில்  தமிழ் இனம் இருக்காது. அதுதான் கவலை.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.