• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

சர்வதேசம் அரசியல் தீர்வை கொண்டு வராது

Recommended Posts

காலில் விழுந்து அழுத போதும் அதைக் கண்டு கொள்ளாத சர்வதேசம் அரசியல் தீர்வை கொண்டு வராது

doucklas.jpg

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்கு உள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகள் வந்து எமக்கான தீர்வுகளை பெற்றுத் தர முடியாது என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அழிவு யுத்தம் நடைபெற்ற போது எமது மக்கள் தம்மை விட்டு சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று காலில் விழுந்து அழுதபோதும் அதைக் கண்டுகொள்ளாமல் எமது மக்களை அழிவுகளுக்குள் கைவிட்டுச் சென்ற சர்வதேசம், எமது மக்களுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு ஒருபோதும் வரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தில் தீர்வு இருப்பதாக போலித் தமிழ் தேசியம் பேசும் சுயநலவாதிகள் தற்போது பழைய மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்பதுபோல் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாமே நடைமுறைச் சாத்தியமான வழியில் முயற்சிக்க வேண்டும்.

இன ஐக்கியம், தேசிய நல்லிணக்த்தின் ஊடாகவே தேசிய அரசியல் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண வேண்டும். அவ்வாறில்லாமல் சர்வதேச சமூகத்திடம் தீர்வு இருப்பதாகவும் கூறி தொடர்ந்தும் தமிழ் மக்களை தவறான பாதையில் இழுத்துச் சென்று, மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடுவதற்கும் இருக்கின்ற பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்குமே சுயநல அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2020/136268/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

தமிழரின் விடுதலை போராட்டத்தை  அழிப்பதற்கு பயன்படுத்திய அதே கோடரிக்காம்புகளை வைத்து சர்வதேச அழுத்தங்களை இல்லாமல் செய்வதற்கு சிங்களமும்,    சிங்களம் திட்டமிட்ட அத்தனை அழிவுகளையும்   தலைமேல் ஏற்று சேவகம் செய்ய,  தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குச் சேர்க்க  ஊளையிடுது நாதாரிக்கூட்டம். அபிவிருத்தி என்ற கோசத்தோடு தமிழரை  தட்டி எழுப்புது. தன்மானமுள்ள எந்தத் தமிழனும் இந்தக் கூட்டத்துக்கு வாக்குபோடக் கூடாது. அபிவிருத்தி என்கிற போர்வையில் சிங்கள குடியேற்றமே நடக்கும். அபிவிருத்தி என்ற நப்பாசையில் இதுகளுக்கு வாக்கு போட்டு  சர்வதேச கதவுகளை நிரந்தரமாய் மூடி விட்ட பின் அபிவிருத்தியுமில்லை, நிரந்தர  அடிமைகளாக வாழ,  அவன் சத்தமில்லாமல் நினைத்ததை சாதித்து விட்டு, சமாதானத்திற்கான நோபல் பரிசும் வேண்டிக்கொண்டு போவான்  அவ்வளவே. 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, satan said:

தமிழரின் விடுதலை போராட்டத்தை  அழிப்பதற்கு பயன்படுத்திய அதே கோடரிக்காம்பு

47889-ADC-EB58-464-F-A714-D03-C83-D7-BBF

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இன்றிரவு கேள்விக்கொத்தைப் போடுகின்றேன். 76 கேள்விகள் உள்ளன!!!
    • குண்டுவைக்க முயன்ற ஐ.எஸ் ஆதரவாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்   by : S.K.Guna ஐஸ்ஐஸ் ஆதரவாளர் சஃபியா ஷேய்க், செயின்ற் போல்ஸ் தேவாலயம் (St Paul’s Cathedral) மீது தன்னைத் தானே வெடிக்கவைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாக ஒப்புக் கொண்டார். மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், குண்டினை வெடிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உளவு பார்த்தார். சதி நடவடிக்கையில் ஈடுபட்டபோது 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார். ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்ததாக, குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கான தண்டனை மே மாதம் வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஷேய்க் கைதுசெய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு ரகசிய அதிகாரிகளுடன் தொடர்பை வளர்த்துக்கொண்டார். அந்த அதிகாரிகள் இருவரும் தீவிரவாத ஆதரவுள்ள கணவன், மனைவியாக தம்மை அடையாளப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் ஷேய்க் தகவல்களை அனுப்பினார். நான் ஏராளமானவர்களைக் கொல்ல விரும்புகிறேன். அதற்காக தேவாலயத்தினைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன். கிறிஸ்ற்மஸ் அல்லது ஈஸ்ரர் போன்ற நாளில் ஏராளமானவரைக் கொல்லலாம் என்று அதிகாரிக்குத் தகவல் அனுப்பினார். நான் எப்போதும் அச்சுறுத்தல்களை அனுப்புகிறேன்.ஆனால் அந்த அச்சுறுத்தல்களை உண்மையானதாக மாற்ற விரும்புகிறேன். சஃபியா ஷேய்க் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தின் படத்தை அதிகாரிக்கு அனுப்பியதுடன் நான் நிச்சயமாக இந்த இடத்தைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன். நான் குண்டினை வெடிக்கவைக்க விரும்புகிறேன். இறக்கும் வரை சுட விரும்புகிறேன். அந்த இடத்தையும் காஃபிர்களையும் (ஐ.எஸ்ஸின் எதிரிகள்) அழிக்க விரும்புகிறேன். ஹோட்டலிலும், பின்னர் தேவாலயத்திலும் குண்டினை வெடிக்கவைப்பேன். நான் இறக்கும்வரை கொல்லுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தைப் பார்வையிட்டதுடன் அது தொடர்பான வீடியோக்களையும் அனுப்பினார். வெடிகுண்டுகளைத் தயார்செய்வதற்காக பெண் ரகசிய அதிகாரியிடம் ஷேய்க் இரண்டு பைகளைக் கொடுத்ததாக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அயலவர்களால் ஈர்க்கப்பட்ட சஃபியா ஷேய்க், 2007 இல் இஸ்லாத்திற்கு மாறினார். ஆனால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு பிரதான இஸ்லாத்தை நிராகரித்தார். 2016 ஆம் ஆண்டில் இருந்து ஐ.எஸ் மற்றும் ஏனைய ஜிஹாதிக் குழுக்களின் தீவிரவாத வன்முறைச் சித்தாந்தத்தைப் பின்பற்றத் தொடங்கினார். வழிபாட்டாளர்களும் இமாம்களும் தனது தீவிரவாதக் கருத்துக்களைப் பற்றி கவனத்தில்கொள்வார்கள் என்ற அச்சத்தில், சஃபியா ஷேய்க் மசூதிகளில் கலந்துகொள்வதை நிறுத்தினார். ஏற்கனவே அவர் குறித்து, அரசாங்கத்தின் பயங்கரவாதத் தடுப்புத் திட்டத்திற்கும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டம் தீட்டியது மற்றும் பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்புவது ஆகிய குற்றங்களை சஃபியா ஷேய்க் ஒப்புக் கொண்டார். மே 12 ஆம் திகதி தண்டனை வழங்குவதற்கு முன்னதாக தண்டனை அறிக்கைகளை தயார் செய்யுமாறு நீதிபதி ஜஸ்ரிஸ் ஸ்வீனி (Justice Sweeney) உத்தரவிட்டார். நன்றி bbc.co.uk
    • இதை பற்றி ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறோம்? அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. பூனை முதல் சிங்கம் வரை தன் டி என் ஏ யை முடிந்தளவு அகலமாக விதைக்கவே எல்லா ஆண் உயிரிகளும் முனைகிறன. சொல்லப்போனால் - ஒரு ஆண் விலங்கின் பிறப்பின் அர்த்தமே அதன் விந்தணுவை எங்கே எல்லாம் பரப்ப முடியுமோ அங்கே எல்லாம் பரப்பி வம்சத்தை விருத்தி செய்வதுதான். இது தன்னியல்பாக அமைந்த கூர்ப்பின் முனைப்பு.  இதை அடக்கி, வன்முறையை பாவிக்காமல் இருக்க வைப்பது எம் மனித இனத்தின் மன, விழுமிய விருத்தியால் ஏற்பட்டது. இது மட்டுமே எமக்கும் சிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம். பிகு 1: அப்பாவி ஆண்கள் என்று யாரும் இல்லை. ஒன்றில் நடிக்கிறாகள் அல்லது வேறு ஈடுபாடு கொண்டிருக்கிறாகள். பிகு2: இந்த போய் பெஸ்டியாக போய், தருணம் பார்த்து கரணம் அடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. இது நரிகள் வேட்டையாடும் முறை. சிங்கம் வேட்டையாடும் முறை வேறு 😂  
    • படத்தின் காப்புரிமை A Pavendhan காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது. யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழகத்தில் சேலம், பழனி வரை நீண்டுள்ளது கிழக்கு தொடர்ச்சி மலை. இங்குள்ள வனப்பகுதிகளில் காணப்படும் புதிய பூச்சிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்திவருகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் இயற்கை கழகம் இணைந்து பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தமிழக பகுதியில், டின்சில் பட்டாம்பூச்சி இருப்பது முதல்முறையாக புகைப்பட ஆதாரத்தோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மிகவும் அரிதானதாக கருதப்படும் டின்சில் பட்டாம்பூச்சி ஏற்காடு மலையில் சுமார் 1400 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டது என்கிறார்கள். பிபிசி தமிழிடம் பேசிய சேலம் இயற்கை கழகத்தின் தலைவர் வ.கோகுல், மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட 17 குழுக்கள் சேலம் வனப்பகுதியை ஆய்வு செய்தபோது டின்சில் பட்டாம்பூச்சி இருப்பதை கண்டறிந்ததாகக் கூறுகிறார். ''பொதுவாக டின்சில் பட்டாம்பூச்சி, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்தான் தென்படும். சேலம் வனப்பகுதியில் இந்த பட்டாம்பூச்சி இருப்பதால், இங்குள்ள வனப்பகுதி வளமுடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. நீலன்கள்(Blue family) குடும்பத்தைச் சேர்ந்த இந்த டின்சில் பட்டாம்பூச்சியின் மேல்புறம் நீலவண்ணமும், அடிப்பகுதி சாம்பல் நிறத்திலும் காணப்படும்,''என்றார். டின்சில் உள்ளிட்ட 136 பட்டாம்பூச்சிகள் சேலம் வனப்பகுதியில் இருப்பதாகவும், 214 பறவை இனங்கள் இருப்பதாகவும் கூறுகிறார் கோகுல். ''மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்து படங்கள் பதிவு செய்தோம். உள்ளூர்களில் உள்ள பூச்சிகள், பறவைகள் பற்றிய புத்தகங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்துவருகிறோம். இதுபோன்ற ஆய்வில் வெளியாகும் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டதால், ஞாயிற்றுக் கிழமைகளில் பறவைகளை உண்டிவில் கொண்டு அடிப்பதை நிறுத்திவிட்டு, பல குழந்தைகள் இந்த உயிரிகளை அடையாளம் கண்டுசொல்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் வெற்றியாகப் பார்க்கிறோம்,''என்கிறார் சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரியான பெரியசாமி பிபிசி தமிழிடம் பேசும்போது, சேலம் வனப்பகுதியில் விதவிதமான உயிரிகள் உள்ளன என்பதற்கு ஆதாரமாக டின்சில் உள்ளிட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளன என்றார். ''வனத்தில் உயிர் பன்முகத்தன்மை (Biodiversity) தேவை. பலவிதமான விலங்குகள், பூச்சிகள் இருந்ததால்தான் அந்த வனப்பகுதி வளமுடன் இருப்பதாக கருதப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சந்தன மரங்களுக்காக கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, மரங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வனவிலங்குகளுக்கு மாற்றப்பட்டது. புலி, யானை என பெரிய விலங்குகள் அதிகம் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அதிக கவனம் கிடைத்தது. தற்போது கிழக்கு தொடர்ச்சி மலையில் உயிர் பன்முகத்தன்மை இருப்பதால், இங்குள்ள வனப்பகுதிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு ஆய்வுகள் மிகவும் பயன்தரும்,''என்கிறார். காமன் டின்சில் சேலத்தில் காணப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என கேட்டபோது, ''இதுநாள் வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்ட ஓர் உயிரி முதல்முறையாக தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் தென்படுகிறது என்பதால், இங்குள்ள வனப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பதை உணர்த்தும் அடையாளமாக இந்த பட்டாம்பூச்சியை கருதலாம். சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்(protected areas) இல்லை. ஆனாலும் இதுபேன்ற புதிய உயிரிகள், பலவிதமான உயிரிகள் இருப்பதை தொடர்ந்து ஆதாரங்களுடன் பதிவு செய்தால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை சேலம் வனப்பகுதிகளுக்கும் கிடைக்கும். பாதுகாப்பிற்காக புதிய திட்டங்களை கொண்டுவர இந்த ஆய்வு உதவும்,'' என்றார் பெரியசாமி. https://www.bbc.com/tamil/science-51551671  
    • (எம்.எப்.எம்.பஸீர்) 21/4 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை பின்னணியிலிருந்து வழி நடத்தியதாக நம்பப்படும் நான்கு மாலை தீவு பிரஜைகளைக் கைது செய்ய சி.ஐ.டி.யின் தனிப்படையொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ள சி.ஐ.டி., சர்வதேச பொலிஸாருடன் இணைந்து அவர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனைய இருவர் குறித்த தகவல்களையும் சர்வதேச பொலிஸாரின் தகவல் கட்டமைப்பு ஊடாக பகிர்ந்து தேடி வருகின்றனர். இந்த நான்கு மாலை தீவு பிரஜைகளும் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில், அல்லது அதனை அண்மித்த நடகளில் இந்த தாக்குதல்களை முன்னெடுத்த சஹ்ரானின் பயங்கரவாத கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளமை தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76170