• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

யாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்

Recommended Posts

 

  • Like 3
  • Thanks 3

Share this post


Link to post
Share on other sites

மனமுவந்த வாழ்த்துக்கள் இவர்களுக்கு உரித்தாகட்டும்.

இதனை இணைத்தற்கு நுணாவிலானுக்கு பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இதில் பங்கெடுத்து சேவை செய்யும் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இணைப்புக்கு நன்றி நுணா.

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி நுணா வாழ்த்துக்கள் அவரின் தன்னார்வத்துக்கு .

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்.. 💐

 

Share this post


Link to post
Share on other sites

யாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்

ஏதோ ஒரு பயம் மனதில்நின்று நீங்கிச் செல்வதுபோன்ற உணர்வு. வாழ்த்துக்கள்!!🙌

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • தொழிற் சட்டங்களும் தொழிலாளர்கள் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 பெப்ரவரி 24 இறுதியாக உள்ள தரவுகளின் பிரகாரம், 2013ஆம் ஆண்டில் மொத்த ஊழியப்படையின் வேதனத்தில்,  56 சதவீதமான 2.6 மில்லியன் வேதனமானது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராதத் தொழிலாளிகள் மூலமே பெறப்பட்டுள்ளது. இது, இலங்கையில் எத்தகையச் சட்டத் திட்டங்கள் உள்ளபோதிலும் தொழில்தருனரும் தொழிலாளியும், குறுகிய வருமானப் பெறுகைக்கானச் சட்டங்களுக்குப் புறம்பான தொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை எடுத்து காட்டுகிறது. இதன்காரணமாக, இறுதியில் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களாக தொழிலாளிகள் உள்ளபோதிலும் அவர்களது அறியாமையும் வறுமையும், இைதயே தொடரச் செய்வதுதான், இன்றைய சாபக்கேடாக உள்ளது.   அதுமட்டுமல்லாது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராத ஊழியர்களில், 90 சதவீதமானவர்கள், தனியார் துறையிலேயே தங்கியுள்ளார்கள். அதிலும், இந்தத் தொகை, மிக அண்மையக் காலத்திலேயே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதி பத்து வருடங்களில் நிரந்தரமற்ற ஊழியப்படையினர் சுமார் 350,000 பேர் தெரிவாகியுள்ளபோதும் நிரந்தரத் தொழிலாளர்கள் சுமார் 15,000 பேர்தான் தெரிவாகியுள்ளனர்.  அதுபோல, நிரந்தரத் தொழில்வாய்ப்பைப் பெறாதோர் அல்லது நிறுவனத்தினதோ உரிமையாளரதோ ஒப்பந்தத்தைப் பெறாதோர் இலங்கையின் சமூக நலன் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கூட பாதுகாப்ைபயோ, நன்மையையோ பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் காணப்படுகிறது. இங்கே சமூக நலன் திட்டங்கள் எனப்படுவது, நிரந்தரத் தொழில் உரிமையைப் பெற்றுள்ள ஊழியர் ஒருவர் இலங்கையின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் ஒரு தொகையை, மாதம்தோறும் பங்களிப்பு செய்வதன் மூலம், முதுமையில் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுவதற்கான ஒரு முறையாக உள்ளது. ஆனாலும், நிரந்தரத் தொழில் வாய்ப்பைக் கொண்டிராத ஊழியர்களைக் கொண்டுள்ள சில தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கென பிரத்தியேக ஓய்வூதியத் திட்டங்களை வழங்கியுள்ளன. ஆனாலும் இது ஒப்பீட்டளவில் வெறும் 14 சதவீதமாகும். மிகுதி 86 சதவீதமானோர், எதிர்காலம் தொடர்பில் எத்தகையத் திட்டங்களையும் தன்னகத்தேக் கொண்டிராதவர்களாக உள்ளார்கள்.  இலங்கையின் தொழிற்சட்டங்களுக்கு அமைவாக, உரிமையாளர் எவ்வகையான ஊழியரையும் வேலைக்கமர்த்தும்போது, எழுத்து மூலமான உறுதி வழங்கவேண்டியது அவசியமாகிறது. ஆனாலும், இலங்கையில் உள்ள 83 சதவீதமான தற்காலிக ஊழியர்கள், சாதாரண வேலைக்கமர்த்தப்படும் ஊழியர்கள் அனைவருக்குமே எழுத்துமூலமான எவ்வித உறுதிப்படுத்தலும் வழங்கப்படுவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆவணப்படுத்தல்கள் முழுமையடையாத போது, ஓர் உரிமையாளர்-ஊழியர் உறவை முழுமைபடுத்த முடியாததாக அமைவதுடன், ஊழியர் சார் நலன்களைப் பெற்றுக்கொடுக்கவும், சட்டங்களுக்கு அமைவாக வாய்ப்பில்லாமல் போகிறது.  நிரந்தரத் தொழிலைக் கொண்டுள்ள ஊழியர்களுக்கும் அல்லாத ஊழியர்களுக்குமிடையிலான வருமான பரம்பல் மிகவும் வேறுபாட்டைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது ஒரு நாட்டின் வருமான ஏற்றதாழ்விலும் பிரதிபலிக்கக் கூடியது. குறிப்பாக, நிரந்தர, நிரந்தரமல்லாத ஊழியர்களின் வேதனங்களுக்கு இடையில் மாத்திரம் சுமார் 89 சதவீதமான வருமான வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவும் நிரந்தரத் தொழிலற்றத் தொழிலாளர்களுக்கான இறுக்கமானச் சட்டங்களை உருவாக்கவேண்டியத் தேவைகளை உருவாக்கியுள்ளது.  ஆய்வுகளின் பிரகாரம், ஊழிய நிரம்பலில் (Labour Supplychain) குறைவானக் கல்வித்தைகமை,  திறமையற்றதன்மைக் கொண்ட ஊழியர்கள்,  தாமாகவே தம்மைத் தற்காலிக, சாதாரண வேலைக்கு அமர்த்தும் ஊழியப்படைக்குள் இணைத்துக் கொள்ளுகிறார்கள். இது, ஊழியர் தெரிவிலும் நிரந்தரத் தொழில்வாய்ப்பை நாடிச் செல்லும் ஊழியர்கள் தேர்விலும் எதிர்மறையானத் தாக்கத்தைச் செலுத்துவதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  இலங்கையில் நிலவும் வரையறுக்கப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களுக்கான வெற்றிடங்கள்,  மேற்கூறிய ஊழியர் நிரம்பலிலுள்ளப் பிரச்சினைகள் இரண்டுமே, தற்காலிக ஊழியர்களின் அளவை அதிகரிக்கும் காரணிகளில் முதன்மையாக உள்ளன.  அதுபோல, கடந்த காலங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை விடவும் தற்காலிகத்தன்மைக் கொண்ட ஊழியர்களைத் தேர்வு செய்வது, நிறுவன இலாபத்துக்கு வலுசேர்ப்பதனால், அதை நோக்கியதாகத் தனியார்களது நடவடிக்கைகளும் அமைந்துள்ளது. இதன்போது, நிரந்தரத் தொழில் வாய்ப்பைக் கொண்டுள்ள ஊழியர்களைப் பார்க்கிலும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கான சந்தைக் கேள்வி அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாததாகவுள்ளது. எனவேதான், இத்தகையச் செயற்பாடுகளை வரையறுக்கக்கூடிய வகையில் தொழிலாளர் நியமங்களையும் சட்டங்களையும் உருவாக்கவேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலாக, திறன்மிகு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் ஊழியப்படைக்குப் பொருத்தமான அறிவுறுத்தல்களை வழங்கி, அவர்களைத் தயார் செய்வதும் அவசியமாக உள்ளது. இதன் மூலமாகத்தான், ஊழியர் ஒருவர் நிரந்தரத் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.  அடுத்ததாக, எத்தகைய தொழிலாளராக இருப்பினும் அவர்களது அடிப்படை பாதுகாப்புத் தன்மைகள் உறுதி செய்யப்படுவதுடன், அவர்களுக்கான சமூகநலத் திட்டங்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா என்பைத அவதானிப்பதும் அவசியமாகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் எத்தகையத் தொழிலாளருடனும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது, அவை எழுத்து மூலமானதாக அமைவதை உறுதிபடுத்துதல் அவசியமாகிறது. அப்போதுதான், எதிர்காலத்தில் ஊழியர்நலன் சார்ந்த விடயங்களில் எத்தகைய சட்ட முயற்சிகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். அதேபோல, ஊழியர் ஒவ்வொருவருக்கும் மாத ஊதியத்துடன், அதற்கான ஆவணப்படிவம் (Pay Slip) வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், ஊழியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம், சமூக நலன் ஒதுக்கீடு, கொடுப்பனவுகள் என்பனவற்றை ஆவண ஆதாரத்துடன் கண்டறியக் கூடியதாக இருக்கும்.   இவற்றுக்கு மேலாக, தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நடத்தும் செயலாண்மை நிறுவனங்களைக் (Agency Comapanies) கட்டுபடுத்தக்கூடிய சட்டவிதிகளும் நியமங்களும் அவசியமாகிறது. இவை, தேவைக்கு ஏற்ப ஊழியர்களை தனியார் நிறுவனங்களுக்குக் கட்டுபாடுகள் எதுவுமற்ற வகையில் வழங்குகின்ற தன்மை கூட, இந்தத் தற்காலிக தொழிலாளர் படையை ஒரு வகையில் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, மனித ஆற்றல் முகவர் நிலையங்களை (man power Agencies) தொழிலாளர் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். காரணம், மிக அதிகளவில் தற்காலிக ஊழியர்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக்கப்படுவது இத்தகைய முகவர் நிலையங்களாளாகும். எனவே, இவர்களை நெறிப்படுத்துவதும் கண்காணிப்பதும் அவசியமாகிறது.  நிலையற்றத் தொழிலைக் கொண்டுள்ள ஊழியர்களின் எதிர்கால நலனைப் பாதுகாப்பதில் மேலே கூறியதுபோல, தனியான நியமங்களை அறிமுகம் செய்வதும் கண்காணிப்பை அதிகப்படுத்துவதும் நிச்சயம் முன்னேற்றகரமான பெறுபெற்றைத் தரும் எனும்போதிலும் அதற்கு மேலாக, சந்தையில் புதிதாக உள்நுழையும் ஊழியர்களுக்கும் கல்வித்தகமை ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ள ஊழியர்களுக்கும் தற்காலிக ஊழிய நிலையின் நிலைமை தொடர்பில் அறிவுறுத்துவதன் மூலமே இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டையும் முழுமையடையச் செய்ய முடியும். இதைச் செய்யக்கூடிய நிலையில் அரசாங்கமும் அதுசார்ந்த அதிகாரிகளும் உள்ளார்கள் என்கிறபோதிலும் அைத நடைமுறைபடுத்துவதில் பின்நிற்பது, நாளைய இலங்கையின் அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு ஒருவகை முட்டுக்கட்டையாகவே அமையக்கூடும்.    http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/தொழிற்-சட்டங்களும்-தொழிலாளர்கள்-நிலையும்/145-245950
    • ஏதாவது வருத்தம் துன்பங்கள் அழிவுகள் வந்தால் தான் சிங்கள அரசுக்கு வருமானம் வரும்.....ஐ மீன் சர்வதேசத்திட்டை உதவி எண்ட பெயரிலை வறுகலாம்.😎
    • இன்பம் வந்து சேருமா.......!   😁
    • அடுத்த தேர்தலில் தமிழர்கள் என்.கே. அஷோக்பரன்   / 2020 பெப்ரவரி 24 இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம்.  ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.  அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதே, ராஜபக்‌ஷக்களின் நிச்சயமான திட்டம் என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது.  ராஜபக்‌ஷக்கள் மீண்டும் ஆட்சிப்படியேறிய, ஏறத்தாழ நான்கேகால் மாதங்களில், ஆக்கபூர்வமாக எதுவும் நடந்திராத நிலையில், இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை இணை-அனுசரணை வழங்கியிருந்த இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகியிருக்கிறது.  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான, யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் நிமித்தமாக அவரும், அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்வதற்கு, அமெரிக்க அரசு விதித்த தடையின் எதிரொலியாகவே, குறித்த தீர்மானத்திலிருந்து விலகுவதாக, ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கை அறிவித்திருந்தது.  ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கையின், இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள், சர்வதேச அளவில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குறிப்பாக, மேற்கு நாடுகளுடனான அவர்களது பரஸ்பர அதிருப்தி, நம்பிக்கையீனம் தொடர்ந்து கொண்டிருப்பதை, நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.  ஆனால், உள்ளூர் வாக்குவங்கியைப் பொறுத்தவரையில், தம்மை நோக்கி வீசப்படும் எல்லாப் பந்துகளையும் அவர்கள் இதுவரை, எல்லைக் கோட்டுக்கப்பால் உந்தியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.  மிக முக்கிய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், சவேந்திர சில்வா மீதான பிரயாணத் தடையை அமெரிக்கா அறிவித்தது, ராஜபக்‌ஷக்களுக்கு உள்ளூர் வாக்குவங்கி மட்டத்தில் மிகச் சாதகமானதே.  இது, ராஜபக்‌ஷக்களின் தேர்தல் நலனுக்காக, அமெரிக்கா வேலை செய்கிறதா என்ற ஐயத்தையும், ஏனைய எதிர்க்கட்சியினரிடையே, ஏற்படுத்தாமல் இல்லை.  எதிர்வரும் தேர்தலில், யுத்த வெற்றி வீரர்களாக மட்டுமல்ல, வல்லரசான அமெரிக்காவையே எதிர்க்கும் மாவீரர்களாக, ராஜபக்‌ஷக்கள் முன்னிறுத்தப்பட்டாலும், நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.  கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதுபோலவே, இம்முறை ராஜபக்‌ஷக்கள், தமது வாக்குவங்கி எது என்பதில் மிகத் தௌிவாக இருக்கிறார்கள்.  ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்தாலே போதும்; தாம் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக மாறியிருக்கிறது.  சிறுபான்மையினரை மகிழ்வூட்டும் (minority pleasing) நடவடிக்கைகளைக் கூட அவர்கள் செய்யத் தயாராக இல்லை. கிடைக்கும் திருப்பங்களிலெல்லாம், தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தம் முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.  தமிழில் தேசிய கீதம் பாடாததிலிருந்து, வடக்கில்கூட பெயர்ப்பலகையில் முதலில் சிங்களம் இடம்பெறுமாறு மாற்றியமைத்ததிலிருந்து, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திலிருந்து விலகியது என, தமது சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்திசெய்வதில், அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்.   மறுபுறத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.  தலைமைத்துவச் சண்டை என்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.  இன்று, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்ற நிலையில், எதிர்வரும் தேர்தலை ஐ.தே.க, தனது ஆதரவுக் கட்சிகளுடன் கூட்டணியாகச் சந்திக்க இருக்கிறது.  இந்தத் தேர்தலுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் பெயர், சின்னம், செயலாளர்கள் என்று எதுவுமே திட்டவட்டமாக இல்லாத குழப்பகர நிலை உருவாகியிருக்கிறது.    மறுபுறத்தில், இதுவரைகால ரணிலின் அணுகுமுறையிலிருந்து, மாறியதோர் அணுகுமுறையாக, சஜித்தின் அணுகுமுறை அமையும் என்பதற்கான சமிக்ஞைகள் மிகத் தௌிவாகத் தெரிகின்றன.  சவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் பிரயாணத்தடையைக் கண்டித்து, சஜித் பிரேமதாஸ விடுத்திருந்த அறிக்கையானது, கடந்த தேர்தலில் அவரை ஆதரித்திருந்த தமிழர்களையும் தாராளவாதிகளையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருந்தமையை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.  இதுபற்றி, ஐ.தே.கவின் ஏனைய பிரதான தலைவர்கள், மௌனமாக இருந்த நிலையில், சஜித் மட்டும் கண்டித்தமை, ஏற்கெனவே பலமிழந்துள்ள ஐ.தே.கவின் வாக்குவங்கி, இன்னும் பலமிழந்துவிடுமோ என்ற அச்சத்தை, சிலரிடையே ஏற்படுத்தி இருக்கிறது.  இருந்தபோதிலும், பெரும்பான்மை, சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்தி செய்தால் மட்டுமே, ஒரு பிரதான கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். ஆகவே, சஜித்தின் அணுகுமுறையானது மிகச் சரியானது என்ற கருத்துகளையும் சிலர் முன்வைப்பதையும்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  ஆகவே, சஜித் பிரேமதாஸவும் பெரும்பான்மையினரை மகிழ்வூட்டும், அதாவது சிங்கள-பௌத்த வாக்குவங்கியை மகிழ்வூட்டும் அணுகுமுறையையே கையாள்கிறார் என்பது, அவர் திரைவிலகி, தலைமைத்துவ முன்னரங்குக்கு வரவர, இன்னமும் தௌிவாகிக் கொண்டேயிருக்கும்.  தமிழ் மக்களும் பொதுத் தேர்தலும்   இந்தச் சூழலில்தான், தமிழ் மக்களும் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள்.  ஆனால், இம்முறை தமிழ் மக்களின் ‘ஏக’ பிரதிநிதிகள் யார் என்ற போட்டி, பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்த இடத்தில்தான், தமிழ் மக்கள் நின்று நிதானமாக யோசித்து, முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனலாம்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படும், தமிழரசுக் கட்சியுடனான, டெலோ, புெளாட்டின் தேர்தல் கூட்டானது, இன்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்தி நிற்கிறது.  தமிழரசுக் கட்சிக்கு இதுவரை காலமும் இருந்த பெருந்துணை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். தமிழரசுக் கட்சித் தலைமைகளுக்கு ரணிலுடன் இருந்த நெருக்கமும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த, இயைந்து இயங்கிச் செல்லத்தக்க உறவும், சிற்சில காரியங்களை, அவர்களால் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஆனால், ரணிலிடமிருந்து அவர்கள் தமிழ் மக்களுக்காகப் பெற்றுக்கொண்ட விடயத்தைவிட, ரணிலுக்காக அவர்கள் செய்த விடயங்கள் நிறைய இருக்கின்றன.  2018ஆம் ஆண்டு, 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தமிழரசுக் கட்சி, ரணிலுக்கும் இந்த நாட்டுக்கும் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது.  ஆனால், அதற்கான நன்றிக்கடனின் பலாபலன், தமிழ் மக்களுக்குக் கிடைத்ததா என்றால், “இல்லை” என்பதே உண்மையாகும்.  அன்று, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, டட்லி சேனநாயக்கவின் ஆட்சியைக் காப்பாற்றியது போலவே, இன்று இராஜவரோதயம் சம்பந்தன், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றினார்.   ஆனால், அதனால் தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ் மக்களுக்கோ அன்றும் எந்த நன்மையும் நடக்கவில்லை; இன்றும் நடக்கவில்லை. இதைக் குறிப்பிடுவது, அவர்களது முயற்சிகளைக் கொச்கைப்படுத்த அல்ல; மாறாக, வரலாறு மீண்டுகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவே ஆகும். ஒரே அணுகுமுறையை, மீண்டும் மீண்டும் கையாண்டுகொண்டு, வேறுபட்ட முடிவை எதிர்பார்ப்பது, எங்ஙனம் என்ற கேள்வியும், இங்கு எழாமல் இல்லை.  அன்று, செல்வநாயகம் எதிர்க்கட்சியில் இருந்து, டட்லிக்கு ஆதரவு வழங்கிய பின், அடுத்த தேர்தலில் சிறிமாவோவும் அவரது தோழர்களும் ஆட்சிக்கு வந்து, அரசமைப்பை மாற்றி, தனிச்சிங்களச் சட்டத்தின் தாற்பரியத்தைப் புதிய அரசமைப்புக்குள்  ஏற்றினார்கள்.  தனிச்சிங்களத்துக்கு,  அரசமைப்பு அந்தஸ்தை வழங்கி, பௌத்தத்துக்கு அரசமைப்பு ரீதியாக முன்னுரிமை வழங்கி, பல்கலைக்கழக அனுமதிகளில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து முற்றிலும் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகள், நசுக்காக அரங்கேற்றப்பட்டன.  இது தொடர்பில், எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில்தான், அன்றைய தமிழ்த் தலைமைகள் இருந்தார்கள். அன்று, டட்லிக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடமேறிய ஜே.ஆரின் அணுகுமுறை, டட்லியிலிருந்து வேறுபட்டதாகவும் பெருந்திரள்வாதப் போக்குடையதாகவும், மேற்குலகு சார்புடையதாகவும், திறந்த பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும், அபிவிருத்தி தொடர்பான பகட்டாரவாரப் பேச்சைக் கொண்டதாகவும் பெரும்பான்மை வாக்கு வங்கியைக் கவர்ந்திழுப்பதாகவும் அமைந்திருந்தது.  ஏறத்தாழ, இதுபோன்ற ஒரு நிலையைத்தான் இன்றும் நாம் எதிர்கொள்கிறோம்.    ஆனால், அன்று ஒருவருக்கொருவர் ஆழந்த வைரிகளாக இருந்த தமிழ்த் தலைமைகள், அந்தக் கையறு நிலையை எதிர்கொள்ள, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒன்று பட்டன என்பது, நாம் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியதொன்று.  மீண்டும், ஜீ.ஜீ. பொன்னம்பலமும் சா.ஜே.வே. செல்வநாயகமும் ஒன்றிணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியாக (பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி) ஒரு தளத்தில், தமிழ்த் தேசியக் கொள்கையை மய்யமாக நிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியலை ஒன்றிணைத்தமையானது தன்னலமற்ற, தமது மக்கள் நலன்சார்ந்த பெரும் நடவடிக்கை ஆகும்.  ஆனால், இன்று தமிழ்த் தலைமைகளும் அவர்களது கட்சிகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன?  இருக்கின்ற ஒற்றுமையைச் சிதைத்து, புதிய உதிரிக் கட்சிகளையும் கூட்டணிகளையும் தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் உருவாக்கிக் கொண்டும், மறுபுறத்தில், விட்டுக்கொடுப்புகள் மூலம் ஒற்றுமையை உருவாக்காமல், கொள்கையிலிருந்து விலகித் தமது தனிப்பட்ட நலன்களுக்காகத் தமிழ் மக்களைத் திக்குத்தெரியாத அரசியல் சூனியத்துக்குள் தள்ளும் கைங்கரியத்தையே தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் செய்துகொண்டிருக்கிறார்கள்.  ‘கூட்டணி’ என்பது கட்சிகள் ஒன்றிணைவதைக் குறிப்பதாக இருந்தது. இன்று, தனிநபர்கள் ஒன்றிணைவது ‘கூட்டணி’ என்பதாக மாறியுள்ளது.  தனிநபர் கம்பனிகள் போல, ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கிக் கொண்டு, கூட்டணி அமைக்கிறார்கள். ஏன், எதற்கு, தமிழ் மக்களுக்கு இதனால் என்ன நன்மை, தமிழ்த் தேசியத்துக்கு என்ன நன்மை என்று சிந்திப்பார்கள் இல்லை.  இவற்றைச் சுட்டிக்காட்டுவதால், ஒற்றுமை என்பதை அடைந்து கொள்வதற்காக, கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதாய் பொருள்கொண்டு விடக்கூடாது. ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை நேசிப்பவர்கள், அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரே அணியில் திரள முடியாது இருப்பதற்கு, நிச்சயமாகத் தனிப்பட்டதும் சுயநல காரணங்களுமே தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?  இவர்கள் எவருமே, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை எதிர்க்கவில்லை; ஆதரிக்கிறார்கள் என்றால், எந்த அடிப்படைகளில் தாங்கள் பிரிந்து நிற்கிறோம் என்பதை, தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்ல வேண்டுமல்லவா?  அது, இவர்களின் சுயநலம், பதவி ஆசை என்பவற்றைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?   (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-தேர்தலில்-தமிழர்கள்/91-245936
    • குர்திஷ் இனத்தவர் என்றபடியால் தானோ துருக்கி இனத்தவர்கள் கண்டன அறிக்கைகளோ அல்லது வருத்தங்களையோ தெரிவிக்கவில்லை. அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் எனது கணிப்பில் துருக்கியர்கள் சிங்கள/கிந்தியர்களை விட மோசமானவர்கள். சித்தரல்லா....