• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
uthayakumar

சில நேரங்களில் சில மனிதர்கள்- பா.உதயன்

Recommended Posts

 சில நேரங்களில் சில மனிதர்கள்

இருக்கும் போது போற்றுவதும் 
இல்லாதபோது தூற்றுவதுமாய் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

இருக்கும் போது வருவதும் 
இல்லாதபோது மறப்பதுமாய் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

நல்லவர் போல் நடித்து 
நம்மை கீழே போட கதைப்பதுமாய் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

பழைய கோத்திரம் பாடி
பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

அவர்களை தெரியும் எமக்கு 
அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்

வாழும் போது தூற்றி விட்டு 
வாழ்வு போன பின் வந்து 
வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று 
பொய் உரைத்து போற்றுவார்கள் 
சில நேரங்களில் சில மனிதர்கள்

எல்லோருக்கும் உபதேசம் செய்வர் 
பின்பு படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் 
என்பது போல் இருப்பார் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

கட்டி வந்த பொட்டலங்களோடு இருந்துகொண்டு 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

அவருக்கு என்ன தெரியும் 
அரசியல் தெரியாத செல்லாக்காசு என்பர் 
சோக்கிரட்டீஸ் உடன் படித்தவர் போல் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

உதவிகள் மட்டும் கேக்க வருவார் 
அடுத்த நாள் கண்டால் 
யார் இவர் என்பார் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

தற்பெருமை பேசி 
தம்மையே புகழ்வர் 
சில நேரங்களின் சில மனிதர்கள்.

தேடிப் பார்க்கிறேன் மனிதர்களை 
எங்கேயும் கண்ட மாதிரி இல்லை.

பா.உதயன்.
 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சிலநேரங்களில் சில மனிதர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள்......யதார்த்தமான கவிதை உதயன்....!  👍

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, suvy said:

சிலநேரங்களில் சில மனிதர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள்......யதார்த்தமான கவிதை உதயன்....!  👍

கருத்துக்கு நன்றி சுவி.

Share this post


Link to post
Share on other sites

:"தேடிப் பார்க்கிறேன் மனிதர்களை 
எங்கேயும் கண்ட மாதிரி இல்லை" 

 

 மனிதன் மாறி விடடான் . 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/20/2020 at 12:00 AM, நிலாமதி said:

:"தேடிப் பார்க்கிறேன் மனிதர்களை 
எங்கேயும் கண்ட மாதிரி இல்லை" 

 

 மனிதன் மாறி விடடான் . 

கருத்து பகிர்வுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார்     By Mohamed Shibly -     இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட் ப்ரூனோ பெர்னாண்டோ தனது புதிய கழகத்திற்காக முதல் கோலை பெற்ற நிலையில் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது.  இதன்மூலம் முதல் நான்கு இடங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில்  5 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் மன்செஸ்டர் யுனைடட் 3 புள்ளிகளாலேயே பின்தங்கி உள்ளது.  மறுபுறம், கடந்த டிசம்பரில் மன்செஸ்டர் யுனைடட்டை வீழ்த்தியபோதும் வட்போர்ட் இந்த தோல்வியினால் தகுதி இழப்பு நிலையான 19 ஆவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த நான்கு போட்டிகளில் அந்த அணி எந்த வெற்றியையும் பதிவுசெய்யவில்லை.        எனினும் இந்தப் போட்டியை மன்செஸ்டர் யுனைடட் தடுமாற்றத்துடனேயே ஆரம்பித்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே வட்போர்ட் முன்கள வீரர் ட்ரோய் டீனிக்கு கோல் பெற பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அதனை அவர் தவறவிட்டார்.  இந்நிலையில் 42 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்குள் வட்போர்ட் கோல்காப்பாளர் பென் பொஸ்டர் கீழே வீழ்த்தியதால் கிடைத்த ஸ்பொட் கிக்கை பெர்னாண்டஸ் கோலாக மாற்றினார். பெர்னாண்டஸ் கடந்த ஜனவரியில் ஸ்போர்டிங் லிபோன் அணியில் இருந்து மன்செஸ்டர் யுனைடட்டிற்கு 47 மில்லியன் பௌண்ட்களுக்கு ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.       இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் வட்போர்ட் சார்பில் டீனி பந்தை மன்செஸ்டர் யுனைடட் வலைக்கு செலுத்தியபோதும் அது வீடியோ நடுவர் உதவி நாடப்பட்டது. அப்போது பந்து கிரேக் டோசனில் கைகளில் பட்டது உறுதியானதை அடுத்து கோல் நிராகரிக்கப்பட்டது.   இந்நிலையில் 58 ஆவது நிமிடத்தில் அன்தோனி மார்சல், யுனைடட் சார்பில் இரண்டாவது கோலை புகுத்தினார். தொடர்ந்து போட்டி முடிவதற்கு 15 நிமிடங்கள் இருக்கும்போது மேசன் கிரீன்வூட் மேலும் ஒரு கோலை பெற்று யுனைடட்டின் வெற்றியை இலகுவாக்கினார்.    கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் செல்சியை 2-0 என தோற்கடித்த யுனைடட் அணி இந்தப் பருவத்தில் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெறுவது இது மூன்றாவது தடவையாகும்.  ஆர்சனல் எதிர் எவர்டன் பெர்ரி எமரிக் அபுமயங்கின் இரட்டை கோல் உதவியுடன் எவர்டர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சனல் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.  போட்டியின் முதல் நிமிடத்திலேயே சிறப்பாக வழங்கப்பட்ட ப்ரீ கிக்கை ஆர்சனல் தடுக்கத் தவறியதால் டொமினிக் கெல்வேர்ட் லுவிஸ் தலையால் முட்டி எவர்டன் அணியை முன்னிலை பெறச் செய்தார்.  ஆரம்ப நிமிடங்களிலேயே காயமுற்ற சீட் கொலசினக்கிற்கு பதில் வீரராக அனுப்பப்பட்ட பதின்ம வயது புகாவோ சகா வந்த விரைவிலேயே பரிமாற்றிய பந்தைக் கொண்டு எட்வர்ட் நிகடியா ஆர்சனல் சார்பில் பதில் கோல் திருப்பினார்.   இந்நிலையில் அபுமயங் 33 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் ஆர்சனல் போட்டியில் முன்னிலை பெற்றபோதும் ரிச்சார்ல்சன் பதில் கோல் திருப்ப மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.   முதல் பாதி ஆட்டம் 2-2 என முடிவுற்ற நிலையில் இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்திலேயே நிகொலஸ் பபே உதைத்த பந்தை ஆறு யார்ட் பெட்டிக்கு சற்று வெளியில் நின்று தலையால் முட்டிய அபுமயங் கோலாக மாற்றினார்.   ஆர்சனல் ஒரு வாரத்திற்குள் நியூகாசில் யுனைடட்டிற்கு எதிராக 4-0 என ப்ரீமியர் லீக் வெற்றி மற்றும் ஐரோப்பிய லீக்கில் ஒலிம்பிக்காவுக்கு எதிராக 1-0 என வெற்றி என்று அடுத்தடுத்து மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது.  இதன்படி, ஐந்து போட்டிகளில் ஆர்சனல் பெறும் நான்காவது வெற்றி இதுவென்பதோடு 2020இல் தோல்வியுறாத அணியாக நீடித்து வருகிறது. ப்ரீமியர் லீக்கில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கும் ஆர்சனல் சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறும் முதல் நான்கு இடங்களை பிடிக்க ஏழு புள்ளிகளால் பின்தங்கியுள்ளது.   மறுபுறம் 36 புள்ளிகளுடன் 11 ஆவது இடத்தில் நீடிக்கு எவர்டன் கடந்த 24 ஆண்டுகளில் ஆர்சனல் அணியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் போர்டியுக்ஸ் போர்டியுக்ஸ் அணியை 4-3 என தோற்கடித்த பரிஸ் செயின்ட் ஜெர்மைன் லீக் 1 புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகள் வித்தியாசத்துடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.  மார்குயின்ஹோஸ் இரட்டை கோல் பெற எடிசன் கவானி PSG சார்பில் 200 ஆவது கோலை பெற கிலியன் ம்பப்பே 65 ஆவது நிமிடத்தல் மற்றொரு கோலை பெற்றதன் மூலம் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.  இதன்மூலம் PSG 26 போட்டிகளில் 65 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றபோதும் அந்த அணியின் தலைவர் தியாகோ சில்வா காயம் காரணமாக விளையாட முடியாதிருப்பதோடு நெய்மார் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றது அந்த அணிக்கு பின்னடைவாகும்.    மறுபுறம் போர்டியுக்ஸ் அணி ஹ்வாங் உயி ஜோ, பப்லோ மற்றும் ரூபன் மூலம் கோல்கள் பெற்று கடைசி நிமிடம் வரை எதிரணிக்கு சவால் கொடுத்தது. அந்த அணி தற்போது 35 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தில் உள்ளது.   http://www.thepapare.com/international-football-roundup-for-23rd-of-february-2020-tamil/
    • யாழ்கள 22 வது அகவை சிறப்புப் பகுதியில் 30.03.2020 இக்குப் பின் ஆக்கங்களை பதிவோர்  ஒரு மாதகாலத்துள் ஆக்கங்களைப் பதியவேண்டும் என்று ஒரு காலவரையறை வைத்தால் என்ன ???
    • பகல் கனவு பலிக்காது வாய்மையே வெல்லும்       இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது. எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு காணட்டும். முன்வைத்த காலை பின்வைக்காது நாம் எமது பயணத்தை தொடர்கின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். நானுஓயா சமர்செட் ஈஸ்டல் தோட்டத்தில் இன்று (24) 50 தனி வீடுகளை அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 2002 இல் நுவரெலியாவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு ஒருவர் முயற்சித்தார். அதன்போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 2003 இல் எனக்கும், ஏனைய சிலருக்கும் எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நபரால் வழக்கு தொடுக்கப்பட்டது. எனினும், 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியானது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். எனவே, வாய்மையே வெல்லும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஐயா காலத்தில் பொதுச்செயலாளராக இருந்தவர் அவரின் முதுகில் குத்திவிட்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் ஏனைய ஐவர் சென்றனர். அண்மையில் கூட சிலர் கட்சி தாவினார்கள். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அசைக்க முடியாமல் போனது. காங்கிரஸையோ அதன் சொத்துகளையோ அசைக்க முடியாது என்பது பலமுறை உறுதியாகியுள்ளது. அப்படி நடக்கும் என கனவு காண்பவர்கள் தாராளமாக காணட்டும். நாம் எமது வேலைகளை செய்வோம். கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை எடுத்துக்கொண்டால் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலேயே அன்னத்துக்கு அதிகம் வாக்குகள் விழுந்தன. எனினும், ஐந்தாண்டுகள் நாம் அவர்களுடன் இருந்ததால் சிறுபான்மையினத்தவர்கள் இருவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. நாம் எதிரணியில் இருந்தபோதும் மலையக மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினார்கள். எனவே, முன்வைத்த காலை பின்வைக்காது சமூகத்துக்கான எமது சேவைகள் தொடரும். மலையகத்துக்கு தனிப்பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடத்தை கண்காணிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் 29 ஆம் திகதி அட்டனுக்கு வரவுள்ளார். அதேவேளை, நான் ஒருமையில் கதைப்பதாக ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நான் எனது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் சாதாரணமாக வா, போ என்றே உரையாற்றுவேன். மக்களாகிய நீங்களும் என் சொந்தங்கள். அதன்காரணமாகவே உரிமையுடன் ஒருமையில் விளிக்கின்றேன் என்றார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=126041
    • மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள்       S.P. Thas     அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார். பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்காதவர் ட்ரம்ப். அவர் டீ, கோபி உள்ளிட்ட பானங்களையும் காலையில் அருந்த மாட்டாராம். சில நேரங்கள் மெக் டொனால்டின் மப்பின்களை உண்பது வழக்கம். பின்னர் முட்டைகளையும் உண்வாராம். வெண் பன்றி இறைச்சியில் செய்யப்பட்ட அமெரிக்க உணவில் குறைந்த அளவு கொழுப்பே இருக்கும். இந்த உணவு புற்றுநோயை எதிர்த்து போராடும் என கூறப்படுகிறது. இவரால் 14 முதல் 16 மணி நேரம் வரை உண்ணாமல் இருக்க முடியும். மதிய உணவில் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவார். இதை பிரவுன் பிரட்டில் வைத்து சாப்பிடுவார். அதோடு அவருக்கு துரித உணவு கடைகளான மெக் டொனால்ட், பர்கர் கிங், கேஎஃப்சியில் கிடைக்கும் உணவுகளும் மிகவும் பிடிக்கும். இரவு நேரத்தில் இரு பெரிய மாக்ஸ், மீன் சான்ட்விச், சிறிய சாக்லேட் ஷேக் ஆகியவற்றை உண்வார். அதன் மொத்த கலோரி 2,430 ஆகும். தனது வெள்ளை மாளிகையில் மெக் டொனால்டை உருவாக்கியுள்ளார். டிரம்ப் பீட்சா பிரியர். அவருக்கு சிக்கன் உணவு பிடிக்காது. குளிர்பானங்களை பொருத்தமட்டில் டயட் கோக்கை தினமும் 12 கேன்கள் குடிப்பாராம். மொறு மொறு ஸ்னாக்ஸ்தள் மிகவும் பிடிக்கும். உருளைகிழங்கு சிப்ஸை விரும்புவார். மது அருந்தும் பழக்கமில்லாதவர் டிரம்ப். வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியதே இல்லை. அதேபோல் புகைப்பிடித்தல், போதை வஸ்துகளையும் பயன்படுத்தாதவர். ஒரு முறை அவரது சகோதரருக்கு குடியால் பிரச்சினை ஏற்பட்ட போது குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியது கூறப்படுகிறது. https://www.ibctamil.com/world/80/137708