Jump to content

இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.!

Sivaji-2-720x450.jpg

2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம்.

இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது.

அதாவது  விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.

எனினும் குறித்த கட்சிகளில்  ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளது.  அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை  வழங்கியப் பின்னரே  புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். குறித்த  கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணமாகும். மேலும்  2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

http://www.vanakkamlondon.com/sivaji-18-01-2020/

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.!

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.!

2 hours ago, Rajesh said:

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.

கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியமில்லை.

large.102966E3-F55A-4908-8C20-1D170090E1

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka

இந்த அட்டவணை இலங்கை சனத்தொகை வளர்ச்சியை காட்டுகிறது. இலங்கை சனத்தொகை இறுதியாக இரண்டு மடங்காக அதிகரிக்க எடுத்துக் கொண்ட காலம் 49 வருடங்கள் ( 1963 - 2012) . ஆகவே, 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியம் இல்லை. ஆனால், சிவாஜிலிங்கம் சொல்லுவது இதனிலும் அதிகமான தமிழர் தொகை குறையும் வீதம் பற்றிது. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழர் பெருமளவில் சிங்களவராகவும், கனேடியர், பிரெஞ்சுக்காரர் ஜேர்மானியர் போன்ற வேறு இனங்களுக்கும் மாற உள்ளதால், மேலும் தமிழர் சனத்தொகை குறைவடைய போகிறது. 

இலங்கைத் தமிழரின் அழிவுக்கு பெரும் காரணம் ஆதாரமோ, ஆய்வுகளோ இல்லாமல் எழுந்தமானமான கருத்துக்களை ஒருவர் முன்வைக்க, மற்றவர்கள் அந்த கருத்துக்களை நம்பி முடிவெடுத்து செயற்படுவதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கற்பகதரு said:

தெளிவாக கூற  முடியுமா ?

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.

1 hour ago, கற்பகதரு said:

இலங்கைத் தமிழரின் அழிவுக்கு பெரும் காரணம் ஆதாரமோ, ஆய்வுகளோ இல்லாமல் எழுந்தமானமான கருத்துக்களை ஒருவர் முன்வைக்க, மற்றவர்கள் அந்த கருத்துக்களை நம்பி முடிவெடுத்து செயற்படுவதாகும்.

37 minutes ago, Kapithan said:

தெளிவாக கூற  முடியுமா ?

செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அன்றைய அரசியல்வாதிகளும் தமிழீழம் சாத்தியம் என்றும் இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவு தரும் என்றும்  போதிய ஆதாரமோ ஆய்வுகளோ இன்றி தமிழீழ கோட்பாட்டை முன்வைக்க, இவர்களின் தமிழீழ கோட்பாட்டை நம்பி பதின்ம வயதில் ஆயுதம் ஏந்தி முடிவெடுத்து தமிழீழம் அடைய முயற்சித்ததன் விளைவை நாமறிவோம் இல்லையா? ராஜேஷின் "இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல." என்ற கருத்தும் இவ்வாறானதே. அதை நம்பாதீர்கள். நான் மேலே ஆதாரம் தந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அன்றைய அரசியல்வாதிகளும் தமிழீழம் சாத்தியம் என்றும் இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவு தரும் என்றும்  போதிய ஆதாரமோ ஆய்வுகளோ இன்றி தமிழீழ கோட்பாட்டை முன்வைக்க, இவர்களின் தமிழீழ கோட்பாட்டை நம்பி பதின்ம வயதில் ஆயுதம் ஏந்தி முடிவெடுத்து தமிழீழம் அடைய முயற்சித்ததன் விளைவை நாமறிவோம் இல்லையா? ராஜேஷின் "இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல." என்ற கருத்தும் இவ்வாறானதே. அதை நம்பாதீர்கள். நான் மேலே ஆதாரம் தந்துள்ளேன்.

ராஜேஸின் சனத்தொகைப் பெருக்க சாத்தியக்கூறை அவர் பொதுவாக சனத்தொகையை பெருக்க முடியும் என்று கூறியதாகவே நான் கொள்கிறேன். நான் உங்களிடம் கேட்பது விஞ்ஞான ரீதியிலான விரிவான விளக்கம்.

(அண்மையில் ரஸ்ய அதிபர் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு அளித்த பதில்  பின்வரும் சாரப்பட அமைந்தது. 

ரஸ்ய சனத்தொகை 140 மில்லியன்(?), நேட்டோ NATO நாடுகளின் சனத்தொகையோ 560 மில்லியன்(?) அப்படியிருக்க ரஸ்யா NATO நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலா ? என கூறினார்.)

இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இதன் அடிப்படையில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டையாகத்தான் பார்க்கப்படும். இதனை சமன் செய்வது எவ்வாறு ?

1) இலங்கைத் தமிழரின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல். அது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.

2) இந்தியத் தமிழர்களை / இந்தியர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுதல்.ஆனால் எவ்வாறு ? (இவ்வாறான ஒரு சூழல் ஏற்படுவதற்கு வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட மானிலமாக இணைக்க வேண்டும்.)

????

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

ராஜேஸின் சனத்தொகைப் பெருக்க சாத்தியக்கூறை அவர் பொதுவாக சனத்தொகையை பெருக்க முடியும் என்று கூறியதாகவே நான் கொள்கிறேன். நான் உங்களிடம் கேட்பது விஞ்ஞான ரீதியிலான விரிவான விளக்கம்.

எதற்கான விஞ்ஞான விளக்கத்தை கேட்கிறீர்கள்? எப்படி சனத்தொகையை பெருக்குவது என்பது பற்றிய விஞ்ஞான விளக்கமா?
 
1 hour ago, Kapithan said:

இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இதன் அடிப்படையில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டையாகத்தான் பார்க்கப்படும். இதனை சமன் செய்வது எவ்வாறு ?

“இலங்கையில் தமிழரின் இருப்பு” என்பதும் “தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி”  என்பதும் இலங்கை தமிழரின் சனத்தொகை பற்றிய, ஆனால் வேறு வேறான குணாம்சங்கள். இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவுக்கு தேவையாக இருக்கிறது, ஆனால் இலங்கைத் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி இந்தியாவுக்கு சாதகமா, அல்லது பாதகமா என்பது விவாதத்துக்கு உரியது. இன்றைய நிலையில் இலங்கைத் தமிழர் இலங்கைக்கு தலையிடி கொடுக்கும் அளவுக்கு மட்டுமே பலமாக இருக்க வேண்டும், பிரச்சினையை தீர்த்து, தலையிடியை நிவாரணம் செய்யும் அளவுக்கு இலங்கைத் தமிழர் பலம் பெற கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அவ்வாறாக, இலங்கைத் தமிழரின் பலத்தை மட்டுப்படுத்துவதில், சனத்தொகை வளர்ச்சியை குறைப்பதும் ஒரு அணுகுமுறையாகும்.

1 hour ago, Kapithan said:

1) இலங்கைத் தமிழரின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல். அது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.

2) இந்தியத் தமிழர்களை / இந்தியர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுதல்.ஆனால் எவ்வாறு ? (இவ்வாறான ஒரு சூழல் ஏற்படுவதற்கு வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட மானிலமாக இணைக்க வேண்டும்.)

இலங்கைக்கு இந்திய இராணுவம் வர முதல் ரெலோவை அழித்தபின் விடுதலைப்புலிகள் மக்களை சந்தித்து தந்த விளக்கம், ரெலோ இந்திய இரகசிய இராணுவ பிரிவு என்றும், ரெலோவை விட்டுவைத்திருந்தால் இந்திய இராணுவம் வந்து தமிழீழத்தை தமிழ்நாட்டின் ஒரு பாகமாக்கி விட்டிருப்பர் என்பதாக இருந்தது. 

சீன, அமெரிக்க நகர்வுகளை பொறுத்தே அடுத்த இந்திய நகர்வு அமையும். எனது அபிப்பிராயம் MCC உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா நேரடியாக இலங்கையில் தன்னை தேவையான அளவில் உறுதிப்படுத்திக் கொள்ளும். அமெரிக்க - சீன போட்டில் பங்காற்றும் அளவுக்கு இந்தியா பலமான நாடல்ல. இந்த அமெரிக்க - சீன போட்டியில் இலங்கைத் தமிழர்களால் இரண்டு பகுதிக்கும் பயன் மிகக் குறைவு. ஆகவே, இலங்கைத் தமிழர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போவதை எவரும் தடுக்கப் போவதில்லை. இந்தியா ஓரளவுக்கு அதை விரும்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

எதற்கான விஞ்ஞான விளக்கத்தை கேட்கிறீர்கள்? எப்படி சனத்தொகையை பெருக்குவது என்பது பற்றிய விஞ்ஞான விளக்கமா?
 
இலங்கையில் தமிழரின் இருப்பு” என்பதும் “தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி”  என்பதும் இலங்கை தமிழரின் சனத்தொகை பற்றிய, ஆனால் வேறு வேறான குணாம்சங்கள். இலங்கையில் தமிழரின் இருப்பு இந்தியாவுக்கு தேவையாக இருக்கிறது, ஆனால் இலங்கைத் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சி இந்தியாவுக்கு சாதகமா, அல்லது பாதகமா என்பது விவாதத்துக்கு உரியது. இன்றைய நிலையில் இலங்கைத் தமிழர் இலங்கைக்கு தலையிடி கொடுக்கும் அளவுக்கு மட்டுமே பலமாக இருக்க வேண்டும், பிரச்சினையை தீர்த்து, தலையிடியை நிவாரணம் செய்யும் அளவுக்கு இலங்கைத் தமிழர் பலம் பெற கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அவ்வாறாக, இலங்கைத் தமிழரின் பலத்தை மட்டுப்படுத்துவதில், சனத்தொகை வளர்ச்சியை குறைப்பதும் ஒரு அணுகுமுறையாகும்.

இலங்கைக்கு இந்திய இராணுவம் வர முதல் ரெலோவை அழித்தபின் விடுதலைப்புலிகள் மக்களை சந்தித்து தந்த விளக்கம், ரெலோ இந்திய இரகசிய இராணுவ பிரிவு என்றும், ரெலோவை விட்டுவைத்திருந்தால் இந்திய இராணுவம் வந்து தமிழீழத்தை தமிழ்நாட்டின் ஒரு பாகமாக்கி விட்டிருப்பர் என்பதாக இருந்தது. 

சீன, அமெரிக்க நகர்வுகளை பொறுத்தே அடுத்த இந்திய நகர்வு அமையும். எனது அபிப்பிராயம் MCC உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா நேரடியாக இலங்கையில் தன்னை தேவையான அளவில் உறுதிப்படுத்திக் கொள்ளும். அமெரிக்க - சீன போட்டில் பங்காற்றும் அளவுக்கு இந்தியா பலமான நாடல்ல. இந்த அமெரிக்க - சீன போட்டியில் இலங்கைத் தமிழர்களால் இரண்டு பகுதிக்கும் பயன் மிகக் குறைவு. ஆகவே, இலங்கைத் தமிழர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போவதை எவரும் தடுக்கப் போவதில்லை. இந்தியா ஓரளவுக்கு அதை விரும்பும்.

1) ராஜேஸ் கூறியபடி சனத்தொகையை பெருக்க முடியாது என்பதை.

2) இலங்கையில் தமிழரின் இருப்பு (பலம்) என்பது இன்னும் சில பத்தாண்டுகளில் அறவே இல்லாது அல்லது பேரம் பேசக்கூடிய நிலையில் இல்லாது போம். அதே நேரம் சிங்களத்தின் பலம் பன்மடங்கு பெருகும். சிங்களத்தின் பலம் என்பது சீனாவின்  பலம். ஆகவே தவிர்க்கவியலாது இந்தியா தனது நலனின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் தான் அல்லது தனது நலனை பேணக்கூடிய சக்தியை அதிகாரத்தில் வைத்திருக்கவேண்டி ஏற்படும்.
 
3) அண்மையில் நானறிந்த வகையில் இந்தியா  Crimia வில் ரஸ்யா மேற்கொண்ட நடவடிக்கை போன்றதொரு நடவடிக்கைக்கு (?) தயாராகிவருவதாக தெரிகிறது. 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

1) ராஜேஸ் கூறியபடி சனத்தொகையை பெருக்க முடியாது என்பதை.

7 hours ago, கற்பகதரு said:

கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியமில்லை.

large.102966E3-F55A-4908-8C20-1D170090E1

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka

இந்த அட்டவணை இலங்கை சனத்தொகை வளர்ச்சியை காட்டுகிறது. இலங்கை சனத்தொகை இறுதியாக இரண்டு மடங்காக அதிகரிக்க எடுத்துக் கொண்ட காலம் 49 வருடங்கள் ( 1963 - 2012) . ஆகவே, 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியம் இல்லை. ஆனால், சிவாஜிலிங்கம் சொல்லுவது இதனிலும் அதிகமான தமிழர் தொகை குறையும் வீதம் பற்றிது. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழர் பெருமளவில் சிங்களவராகவும், கனேடியர், பிரெஞ்சுக்காரர் ஜேர்மானியர் போன்ற வேறு இனங்களுக்கும் மாற உள்ளதால், மேலும் தமிழர் சனத்தொகை குறைவடைய போகிறது. 

வரலாற்றில் 49 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது சனத்தொகையை இரண்டு மடங்காக்க. அதை 10 வருடத்தில் செய்வதானால், ஏதாவது அதி அற்புத மாற்றம் நிகழ வேண்டும். அப்படி எதுவும் நிகழவில்லை.

Link to comment
Share on other sites

On 1/20/2020 at 8:12 AM, கற்பகதரு said:

வரலாற்றில் 49 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது சனத்தொகையை இரண்டு மடங்காக்க. அதை 10 வருடத்தில் செய்வதானால், ஏதாவது அதி அற்புத மாற்றம் நிகழ வேண்டும். அப்படி எதுவும் நிகழவில்லை.

On 1/20/2020 at 12:30 AM, கற்பகதரு said:

உப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது.     

உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ?

ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ?

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ?

அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ?

ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.

Link to comment
Share on other sites

சிங்களவனது நோக்கமே பாரதியார் பாடியது போல இலங்கையை சிங்கள தீவாக்குவதுதான்। அதாவது இதில் ஏறக்குறைய ஐம்பது வீதம் செய்துவிடடார்கள்।

அதாவது கொழும்பு , நீர்கொழும்பு , சிலாபம், புத்தளம் பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் இப்போது சிங்களம்தான் பேசுகிறார்கள்। வயது சென்றவர்கள் தமிழ் பேசினாலும் இப்போதைய சந்ததி அநேகமாக சிங்கள மொழியில்தான் கல்வி கேட்கிறார்கள்।

இன்னும் வவுனியா , திருகோணமலை, மடடக்ளப்பு , அமபரை , மன்னர் , முல்லைத்தீவு போன்ற இடங்களில் நிறையவே குடியேற்றங்கள் செய்துவிடடார்கள்। இன்று வவுனியா நெடுங்கேர்னி பிரதேச சபையை கைப்பற்றும் அளவுக்கு சிங்களவர்கள் வடக்கு நோக்கி முன்னேறிவிடடார்கள்।

என்னதான் பேசினாலும் அவர்களது ரகசிய திடடம் சிங்கள மக்களை பரவலாக எல்லா இடமும் குடியேற்றி சிங்கள நாடக மாற்றுவதே।

சிவாஜிலிங்கம் சொன்னதுபோல தமிழர்கள் இருப்பார்கள் ஆனால் சிங்கள மொழி பேசுவார்கள்।

Link to comment
Share on other sites

19 hours ago, Gowin said:

உப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது.     

உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ?

ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ?

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ?

அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ?

ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.

நீங்கள் பெத்து விட்டது இதுவரை எத்தனை? எல்லாம் வெறும் விண்ணாளும் வண்டாவாள கதை மட்டும் தானா?

Link to comment
Share on other sites

9 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் பெத்து விட்டது இதுவரை எத்தனை? எல்லாம் வெறும் விண்ணாளும் வண்டாவாள கதை மட்டும் தானா?

சரியாக சொன்னீர்கள்। 

Link to comment
Share on other sites

14 hours ago, கற்பகதரு said:

நீங்கள் பெத்து விட்டது இதுவரை எத்தனை? எல்லாம் வெறும் விண்ணாளும் வண்டாவாள கதை மட்டும் தானா?

ஓ! உங்கட ஆதார வண்டவாளம் உடைஞ்சு போச்சோ?

லிங்கத்தை வரிந்து கட்டினாலும் வண்டவாளங்களுக்கு குறைவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2020 at 7:42 AM, Gowin said:

உப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது.     

உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ?

ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ?

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ?

அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ?

ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.

குழந்தைப் பேறு என்பது சீசனுக்கு வரும் ஓடர் போல சடுதியாக  கூட்டிக் குறைக்க முடியுமா ? 

பொருளாதார வளம், உடல் ஆரோக்கியம் (Health), காலம் அளவுடன் தொடர்புபட்ட விடயங்கள் அல்லவா ?

சடுதியாக அதிகரிக்க முடியும் என நம்புகிறீர்களா ? ஆம் என்றால் விளங்கப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

kapithaan அவர்களே சரியாக கூறினீர்கள்। விளக்கம் தந்தால் நல்லது। சம்பந்தனுக்கு இதுக்கும் என்ன தொடர்பென்று விளங்கவில்லை। 

Link to comment
Share on other sites

8 hours ago, Rajesh said:

ஓ! உங்கட ஆதார வண்டவாளம் உடைஞ்சு போச்சோ?

லிங்கத்தை வரிந்து கட்டினாலும் வண்டவாளங்களுக்கு குறைவில்லை!

லிங்கம் இல்லாத வண்டாவாளமா? இதென்ன புதுக்கதை 😁

Link to comment
Share on other sites

11 hours ago, Kapithan said:

குழந்தைப் பேறு என்பது சீசனுக்கு வரும் ஓடர் போல சடுதியாக  கூட்டிக் குறைக்க முடியுமா ? 

யாரோ போடுற ஓடர்களுக்கு வேலை செய்து பழகின தோஷத்தில ஓடர் நினைவுக்கு வந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

யாரோ போடுற ஓடர்களுக்கு வேலை செய்து பழகின தோஷத்தில ஓடர் நினைவுக்கு வந்திருக்கு.

பிறரை இழிவுபடுத்த விரும்புவதனனூடாக நீங்கள் என்ன வகையான அனுபவத்தைப்  பெறுகிறீர்கள் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மூண்டு நாலு பிள்ளைகளை யாழ்பாணத்தில் பெத்து போட்டால் யார் கவனிப்பது ?

முஸ்லிம்களாக மதம் மாறி முஸ்லிம் சன தொகை பெருகி முஸ்லிம் நாடு உருவாகும்🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பத்தாண்டில் சீனன் இலங்கை முழுவதும் குடியேறிவிடுவான்.  எதற்கும் அந்த மொழியை முன்னெச்சரிக்கையாய்  படித்து வைப்பது நன்மை பயக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இன்னும் பத்தாண்டில் சீனன் இலங்கை முழுவதும் குடியேறிவிடுவான்.  எதற்கும் அந்த மொழியை முன்னெச்சரிக்கையாய்  படித்து வைப்பது நன்மை பயக்கும். 

ஏற்கனவே அண்ணளவாக  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இலங்கையின் தென்பகுதியில் நிலை (!) கொண்டுள்ளனர் என நான் அறிகிறேன். காரணம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி கட்டுமானப் பணிகள் நிமித்தம் வந்திருக்கிறார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் தான் முடியும். சீனன் கால் வைத்த இடத்தை சொந்தமாக்காமல் விடமாட்டான். பல்லி, பாம்பு,  பூச்சிகளுக்கும் அழிவுதான்.

Link to comment
Share on other sites

4 minutes ago, satan said:

அபிவிருத்தி கட்டுமானப் பணிகள் நிமித்தம் வந்திருக்கிறார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் தான் முடியும். சீனன் கால் வைத்த இடத்தை சொந்தமாக்காமல் விடமாட்டான். பல்லி, பாம்பு,  பூச்சிகளுக்கும் அழிவுதான்.

கொழும்பில் இப்போது கட்டாக்காலி  நாய்கள்  மிகக்குறைவு । இந்த சீனாக்காரன்  எல்லாவற்றையும்   முடித்து  விடடான்। அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது। நிறைய சீன பொருட்களை  கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் । இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள்। தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள்। இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது। கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பில் முக மூடி (Face Mask ) அணியும்படி கேட்டிருக்கிறார்கள்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டியிட்டை எடுத்த வடையை நரியிட்ட பறிகொடுத்த காகம் மாதிரி, சிங்களவனும் ஒரு நாள்  ஏமாறலாம். தமிழரின் உரிமைகளை கொடுத்து சேர்ந்து வாழ விரும்பாமல், பேராசைப்பட்டு வெளிநாடுகளுக்கு பிரிச்சு குடுத்திட்டு, அப்புறம்  குடையேக்கை தெரியும் தங்கள் முட்டாள் தனமான தந்திரம். சிங்களவரின் வாக்கு  நாட்டை, கேட்டு கேள்வி இல்லாமல்  அந்நிய தேசத்துக்கு இப்போ குத்தகை. பின்னாளில் விற்பனைக்கே வழிவகுக்கும். தமிழரை அடிமைப்படுத்துற குஷியில் இப்போ ஒன்றும் புரியாது. புரியேக்கை எல்லாம் கைமாறிப் போய்விடும்.  சிங்களவன் எவ்வளவு முட்டாள் என்பதை புரிந்துள்ள ஒவ்வொரு நாடும் இனப்பிரச்சனைக்கு தீனி போட்டு நன்றாக எல்லாப் பக்கமும் வளைத்து மூச்சு விடமுடியாத படி இறுக்கப் படுகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.