• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு!

Recommended Posts

%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-720x450.jpg

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை  (திங்கட்கிழமை) முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 60,000 முதல் 70, 000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனத்திற்குப் பின்னர், பக்தர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகளும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரேயொரு லட்டும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக லட்டு வாங்க விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள பணம் செலுத்தும் நிலையத்தில்  50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/திருப்பதி-ஏழுமலையான்-கோ-2/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கொரோனா பீதி : யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி  வளாகம் முடக்கம் யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர்  வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த மாணவியின் சகோதரன் ஒருவர்  கந்தக்காடு கொரோனா வைத்தியசாலைக்கு பணி நிமிர்த்தம் சென்று வந்ததன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை  கண்டயறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று  குறித்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அறிவியல்நகர் வளாகம் முடக்கப்பட்டுள்ளது.  எவரும் வெளியேறாது தடுக்கப்பட்டுள்ளனர். மாணவியிடம் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் இன்று திங்கட்கிழமை  மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ சிப்பாய் ஆவார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது   https://www.virakesari.lk/article/85802
    • கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் -  சரத் பொன்சேகா அதிரடி கருத்து (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு அதி நவீன படகுகள் வழங்கப்பட்டதாக  பசில் ராஜபக் ஷ என்னிடம் கூறினார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று வத்தளை பலகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் பயணம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதிவேக வீதியில் தவறான பக்கம் பயணிக்கும் வாகனத்தை போன்று அவர் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு அதில் குதுகலமாக இருக்கலாம் ஆனால் நாட்டிற்கும் மக்களுக்கும் இந்த பயணம் ஏற்புடையதல்ல. அவர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் ராஜபக் ஷக்களுக்கு சகல சலுகைகளும் வழங்கப்படுகின்றது. ராஜபக் ஷவினரின் நோக்கம் ஒன்றதான். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சகல இடங்களிலும் அவர்களின் ஆதிக்கத்தை பெற்றுக்கொள்வது. ஆனால் இது  ஜனநாயக அரசியலில் நல்லதொரு செயற்பாடாக நாம் கருதவில்லை. கருணா அம்மான் கூறிய விடயங்கள் நாட்டிற்கு பாதிப்பில்லையாம், கிரிக்கெட் ஊழல் நாட்டிற்கு அவப்பெயர் இல்லையாம் ஆனால் எதிர்க்கட்சியினர் செய்யும் ஜனநாயக அரசியலை நாட்டிற்கு எதிரான சூழ்ச்சி என ராஜபக் ஷவினர் கூறி பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இவர்களின் தேசத்துரோக செயற்பாடுகள் என்னவென்பதை நான் அங்கு அறிவேன். பசில் ராஜபக் ஷவும் நானும் ஒரு வகுப்பு நண்பர்கள், கடந்த யுத்த கால சூழலில் நாமும் அவரும் பல விடயங்களை பேசுவோம். நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பசில் ராஜபக் ஷவுடன் பேசுவதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறுத்த பிரபாகரனிடம் பேசிவிட்டோம், அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என என்னிடம் பசில் கூறினார்.  பசில் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி, தேர்தலில் தமிழர்கள் வாக்கை நிறுத்துவதற்கு பிரபாகரம் இணங்கியதற்கு பிரபாகருக்கும் கடல் புலிகளுக்கும் அதி நவீன படகுகளை பெற்றுக்கொடுக்க தாம் இணக்கம் தெரிவித்ததாக பசில் என்னிடம் கூறினார். அதுமட்டுமல்ல இந்த பேச்சுவார்த்தைகளில் அமரர் தொண்டமானும் இருந்ததாக என்னிடம் கூறினார். நாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து எமது தமிழர்களை மீட்க வேண்டும் என்பதற்காக  போராடிகொண்டிருந்த வேளையில் ராஜபம் ஷக்கள் புலிகளுடன் ஒப்பந்தங்களை செய்தி கொண்டிருந்தனர். பிரபாகரனை துரோகி எனக் கூற அச்சத்துடன் இருந்தனர், பிரபாகரனை மதிப்புக்குரிய பிரபாகரன் என்றே இவர்கள் கூறினார்கள். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2005 ஆம் ஆண்டு ஆற்றிய உரையை எடுத்துப்பாருங்கள். அதில் அவர் அவ்வாறே கூறினார். இன்று யுத்தம் முடிந்துவிட்டதுடன், பிரபாகரன் இறந்த பின்னர் வீரர்கள் போன்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த அழிவிற்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் ஒரு விதத்தில் ஆட்சியாளகள் காரணம் என்பதே உண்மையாகும். பல பொதுமக்கள் இறந்தமைக்கும், அழிவுகளை சந்திக்கவும் ஆட்சியாளர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.  இந்த தேர்தலில் மீண்டும் ராஜபக் ஷக்கள் வெற்றின்பெற்றால் மீண்டும் வெள்ளைவேன் கடத்தல்,கப்பம் பெறல், கொலைகள், கொள்ளைகள் உருவாகும். எவரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலைமை உருவாகும். ஆகவே இன்னொரு நாசகார ஆட்சிக்கு மக்கள் இடமளித்துவிட வேண்டாம் என அவர் கூறினார்.    https://www.virakesari.lk/article/85803