Jump to content

நீங்கள், காதில் "ஹெட்போன்" பயன்படுத்துவதற்கு முன் இதை கவனமாகப் படிக்கவும்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர்.

நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும்.

நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர், அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது.

ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்! ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Kingdom Joker - பாணபத்திர ஓணாண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்பவோ காது செவிடாயிருக்கோணும்.

வி...ஞானிகள் அதிகமானதால் வந்த கட்டுரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

எனக்கு எப்பவோ காது செவிடாயிருக்கோணும்.

வி...ஞானிகள் அதிகமானதால் வந்த கட்டுரை

நீங்கள் ஹெட்போனை காதில் கொழுவினனீங்கள் சரி, போனில் கொழுவினனீங்களா......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

எனக்கு எப்பவோ காது செவிடாயிருக்கோணும்.

வி...ஞானிகள் அதிகமானதால் வந்த கட்டுரை

ஹாஹா  மன்னிக்கணும் எந்த நேரமும்  ஏச்சு பேச்சு வாங்கின காதுக்கு சங்கு ஊதினாலும் கேட்காது  இதில் கெட்போண் சின்ன எறும்புதானே அண்ண😄😄

4 minutes ago, suvy said:

நீங்கள் ஹெட்போனை காதில் கொழுவினனீங்கள் சரி, போனில் கொழுவினனீங்களா......!   😂

எங்கையவது சொருயாவது இருந்திருப்பார்😎😎

Link to comment
Share on other sites

கல்யாணம் செய்தபின் பலர் 100 டெசிபெல்லுக்கும் மேலான ஒலியைத் தாங்குகிறார்கள், அவர்கள் அவர்களில் யாரும் காது கேளாத நிலையை அடைந்ததாகச் செய்திகள் வரவில்லையே.?🤔 

7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா  மன்னிக்கணும் எந்த நேரமும்  ஏச்சு பேச்சு வாங்கின காதுக்கு சங்கு ஊதினாலும் கேட்காது.

ஒரே ஒரு முறைப்பாடு வந்துள்ளது. அதுவும் எங்கள் யாழ்கள உறவிடமிருந்து. 😩 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா  மன்னிக்கணும் எந்த நேரமும்  ஏச்சு பேச்சு வாங்கின காதுக்கு சங்கு ஊதினாலும் கேட்காது  இதில் கெட்போண் சின்ன எறும்புதானே அண்ண😄😄

தம்பி ஏதோ ஒரு விசயம் சொல்ல வாறார் எண்டு நினைக்கிறன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஹெட்போன் பாவிப்பதேயில்லை. ஆனால் எனக்கு ஒரு பக்க காதில் உர் என்ற சத்தம் [இரைச்சல்]  கேட்டுக் கொண்டு இருக்குது...கொண்டு போய்க் காட்ட  பயமாயிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

நான் ஹெட்போன் பாவிப்பதேயில்லை. ஆனால் எனக்கு ஒரு பக்க காதில் உர் என்ற சத்தம் [இரைச்சல்]  கேட்டுக் கொண்டு இருக்குது...கொண்டு போய்க் காட்ட  பயமாயிருக்கு 

உது ஒரு வருத்தத்தின்ரை ஆரம்பமாய் இருக்கலாம். இப்பவே வைத்தியரை பாக்கிறது நல்லது.

Link to comment
Share on other sites

15 hours ago, ரதி said:

நான் ஹெட்போன் பாவிப்பதேயில்லை. ஆனால் எனக்கு ஒரு பக்க காதில் உர் என்ற சத்தம் [இரைச்சல்]  கேட்டுக் கொண்டு இருக்குது...கொண்டு போய்க் காட்ட  பயமாயிருக்கு 

 குமாரசாமி கூறியது போல் ரதி உடனடியாக வைத்தியரை அணுகவது நல்லது. என்னுடன் வேலை செய்யும் சுவிஸ் நண்பர் ஒருவரு வைத்திய சிகிச்சை பெற்று சுகமடைந்துள்ளார். இதை Tinitus  என்று அழைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

நான் ஹெட்போன் பாவிப்பதேயில்லை. ஆனால் எனக்கு ஒரு பக்க காதில் உர் என்ற சத்தம் [இரைச்சல்]  கேட்டுக் கொண்டு இருக்குது...கொண்டு போய்க் காட்ட  பயமாயிருக்கு 

ஏன் டொக்டர் கரடி சிங்கமேதும் வளர்கிறாவோ?

குசா அண்ணை, துல்பென் சொன்னதே சரி. சீக்கிரம் டாக்டரை அணுகவும்.

இஞ்ச எல்லாம் பிரீதானே பின்ன என்ன பயம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2020 at 7:53 PM, குமாரசாமி said:

தம்பி ஏதோ ஒரு விசயம் சொல்ல வாறார் எண்டு நினைக்கிறன் 😎

இல்ல உங்களுக்கு அனுபவம் இருக்குமென நினச்சன் 

19 hours ago, ரதி said:

நான் ஹெட்போன் பாவிப்பதேயில்லை. ஆனால் எனக்கு ஒரு பக்க காதில் உர் என்ற சத்தம் [இரைச்சல்]  கேட்டுக் கொண்டு இருக்குது...கொண்டு போய்க் காட்ட  பயமாயிருக்கு 

எனக்கும் இந்த சங்கு சத்தம் கேட்டிச்சு அம்மம்மா ஒரு வெள்ளப்பூட உரிச்சு காதில சொருகி விட்டா இப்ப சங்கு சத்தம் கேட்பதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎20‎/‎2020 at 8:52 PM, குமாரசாமி said:

உது ஒரு வருத்தத்தின்ரை ஆரம்பமாய் இருக்கலாம். இப்பவே வைத்தியரை பாக்கிறது நல்லது.

ஏன் அண்ணா பயமுறுத்துகிறீர்கள் 😢
 
9 hours ago, tulpen said:

 குமாரசாமி கூறியது போல் ரதி உடனடியாக வைத்தியரை அணுகவது நல்லது. என்னுடன் வேலை செய்யும் சுவிஸ் நண்பர் ஒருவரு வைத்திய சிகிச்சை பெற்று சுகமடைந்துள்ளார். இதை Tinitus  என்று அழைப்பார்கள்.

நான் இவ்வளவு சிரியஸாய் நினைக்கேல்ல நீங்கள் எல்லோரும் சொல்லும் மட்டும் ..நீங்கள் சொன்ன பிறகு தான் தேடிப் பார்த்தேன் கான்சர் வரவும் சாத்தியம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள் 

5 hours ago, goshan_che said:

ஏன் டொக்டர் கரடி சிங்கமேதும் வளர்கிறாவோ?

குசா அண்ணை, துல்பென் சொன்னதே சரி. சீக்கிரம் டாக்டரை அணுகவும்.

இஞ்ச எல்லாம் பிரீதானே பின்ன என்ன பயம் ?

டொக்டரிடம் போய் மினக்கெட பஞ்சியும் ,பயமும் 

எல்லோருக்கும் நன்றிகள்

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இல்ல உங்களுக்கு அனுபவம் இருக்குமென நினச்சன் 

எனக்கும் இந்த சங்கு சத்தம் கேட்டிச்சு அம்மம்மா ஒரு வெள்ளப்பூட உரிச்சு காதில சொருகி விட்டா இப்ப சங்கு சத்தம் கேட்பதில்லை 

எங்கே செருகினவ? காதுக்கு உள்ளேயா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

ஏன் அண்ணா பயமுறுத்துகிறீர்கள் 😢

எங்கே செருகினவ? காதுக்கு உள்ளேயா  

பயமுறுத்தேல்லை. இந்தக்காலத்திலை ஆருக்குத்தான் வருத்தமில்லை. வருத்தமில்லை எண்டு சொல்லுற ஆக்களுக்கும் எங்கேயோ ஒரு மூலையிலை சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்யுது. என்ன வருத்தமெண்டாலும் ஆரம்பத்திலையே வைத்தியரிட்டை காட்டுறது நல்லது எண்டதுக்காக சொன்னன்.
காதிலை அடைப்பு காதுக்குத்தெண்டால் ஊரிலை உள்ளி ஒரு பல்லை நெருப்பிலை சாடையாய் சூடுகாட்டிப்போட்டு காதுக்குள்ளை செருகிவிடுவினம். கூடுதலாய் மாறீடும்.
ரெஞ்சன் கூடினாலும் உந்தப்பிரச்சனை வருமாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.