• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

Recommended Posts

11 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

Edited by சண்டமாருதன்
 • Like 6

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, vasee said:

கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று? எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ? ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார்,  மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் இப்போது என்னதான் பிரச்சனை ? கைக் கூலி என்று கூறுவதை தவிர்த்து அவர்களது தற்போதை சூழலையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்து எங்கள் வார்த்தைகளை கொஞ்சம் அவதானத்துடன் கதைப்போம் என்பதா ? 

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, சண்டமாருதன் said:

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

நன்றி சண்டமாருதன்.

உங்கள் விளக்கம் எனக்கு மேலும்  தெளிவை ஏற்படுத்தியுள்ளது.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

ஏன் அண்ணா இயக்கம் பலவந்தமாய் ஆட்களை பிடிக்கேல்லையோ?... உங்கட பொலிசி எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு விருப்பமானதை  செய்தால் தியாகிகள் அல்லாட்டில் துரோகிகள் சரியா 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, goshan_che said:

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Kapithan said:

இருவகையினரதும் வரலாறுகள் வேறு வேறாகவே இருக்கிறன என்பதும், இருவகையினர்க்குமிடையேயான வித்தியாசங்கள் பல என்பதும் உண்மையே.

ஆனால் - இப்போ இருவகையினரும் வேறு ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனும் போது - அவர்கள் இடையேயான வரலாற்று வழிபட்ட வித்தியாசம் முக்கியம் இழந்து போவதும் உண்மையே.

எம்மை பிரதிநிதப் படுத்துபவர்களின் ஏக எஜமான்;

1. எமது இனத்தின் மீட்சியா

2. அவர்களின் தற்போதைய போசகர்களா

3. அல்லது அவர்களின் சுயநலமா

என்பதை தரவுகளின் அடிப்படையில் (பொத்தாம் பொதுவாக அன்றி) நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியமே.

Share this post

Link to post
Share on other sites

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, Kapithan said:

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

Share this post

Link to post
Share on other sites

இவர்கள் எவரினது தூண்டுதலாலோ அல்லது தாமாக விரும்பியோ அரசியலில் ஈடுபட்டாலும், தமிழரின் நலன்களே இவர்களது உண்மையான நோக்கமாக இருந்தாலும் இவர்களால் இப்போது தமிழர்கள் இருக்கும் அரசியல் அதள பாதாள நிலையிலிருந்து அவர்களை வெளியே இழுத்துவர முடியுமா? 

இதுவரை தமிழர்கள் செய்துவந்த அனைத்து அரசியல் செயற்பாடுகளும் எந்தவித பலனையும் தராதபோது, இப்போதிருக்கும் அதிதீவிர பெளத்த சிங்கள ஏகாதிபத்திய அரசின் முன்னால் எம்மால் செய்வதற்கு இன்னுமிருக்கும் அரசியல் என்னவென்பது எனது கேள்வி. 

உள்நாட்டில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வெளிநாடுகளாலும், குறிப்பாக பிராந்திய வல்லரசுகளாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களம் செய்யும் கொடுமைகளை வெளியே எம்மால் கொண்டுபோகவும் முடியாது, அப்படிக் கொண்டுபோனாலும் எதுவுமே நடக்கப்போவதுமில்லை. 

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டமைப்பினாலே இதுவரை தமிழர் நலன் தொடர்பில் எதையுமே செய்யமுடியவில்லை என்று ஆகிறபோது, முன்னாள்ப் போராளிகளினால் எதைச் செய்துவிட முடியும் என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. 

இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், உறவுகளுக்கும் ஏதாவது நல்லவிடயங்களை இவர்கள் செய்யமுடிந்தால், அதுவே எம்மால் இன்றுள்ள அரசியலில் செய்யக்கூடிய அதிகூடிய முயற்சியாக இருக்கும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

மீரா....  கூறியதில், தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
"விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை" என்ற கட்சி ஆரம்பிக்கப் பட்டு,  24 மணித்திலாத்திற்கு மேலாகியும்,  இதுவரை... ஐக்கிய தேசியக் கட்சியடமிருந்தோ   புத்த பிக்குகளிடம் இருந்தோ, 
ஜே.வி.பி., ஜாதிக கெல  உறுமய போன்ற கடும் போக்கான சிங்கள கட்சிகளிடம் இருந்தோ....
இதுவரை எந்த கண்டனக் குரல்களும் வரவில்லை.

அப்படியென்றால்.... மகிந்த, கோத்தா போன்றவர்கள் அவர்களிடம் ஏற்கெனவே...
பேசி முடிவு எடுத்த பின்தான்.... இந்தக் கட்சியை, கூ ட் டமைப்புக்கு எதிராக, 
களமிறக்கியுள்ளார்கள்  என்பதை, சாதாரண  மனிதனுக்கும் விளங்கும்.

அதுகும்... மகிந்த, கோத்தா போன்றவர்கள் ஆட்சியிலிருக்கும் போது...
தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதற்காகவும்,
தலைவரின் படத்தை வைத்திருந்தற்காகவும், புலிப் படம் அச்சிடப் பட்ட  
(விடுதலைப் புலிகளின் சின்னம் அல்ல)   ரீ  சேர்ட்டை  அணிந்த, 
சிறுவன் முதல் கொண்டு பலரையும்,புலனாய்வுத்துறை விசாரித்த 
செய்திகளை நாம் பார்த்திருக்கின்றோம்.

அப்படியிருக்க.... இவர்கள் ஆடசியில், விடுதலைப்புலிகள் பெயரில் ஒரு கட்சி  ஆரம்பிப்பதற்கு 
அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க சந்தர்ப்பம் அறவே கிடையாது என்பதே யதார்த்தம்.

அதனைத் தான்... மீரா, முன் எச்சரிக்கையாகவும், 
எதற்காக களம்  இறக்கப்படுகிறார்கள் என்பதையும்  தெரிவித்துள்ளார்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை அங்கீகரிப்பதன் ஊடாக சிங்கள அரசு தனது நலன்களை பாதுகாத்தது மட்டுமல்லாது தமிழர் விரோத செயற்பாடுகளையும் கரூணா என்ற கைக்கூலி மூலம் ஊக்கிவித்தது. அதற்காக விடுதலைப்புலிகள் என்ற சொல்லை மகிந்த சகோதரர்களின் குறிப்பாக ஜனாதிபதி கோத்தாவின் ஆசீர்வாதம் இல்லாமல் எவரும்  பயன்படுத்தமுடியாது.அப்பாவி போராளிகள் இதுபோன்ற சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு கெட்டபெயர் வாங்குவது மிக சாதாரணமாகிவிட்டது. எப்போது கோத்தா ஆட்சிக்கு வருவார் விடுதலை புலிகளின் பெயரில் கட்சி தொடங்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்ததுபோல் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜாக்கிரதை: தனியாகவோ சிறு சிறு குழுக்களாகவோ இலங்கையிலும்வெளி நாடுகளிலும்  தேசியத்துக்காக இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், தொண்டர்கள், தமிழின ஆதரவாளர்கள் அவசரப்பட்டு இதுபோன்ற கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது உசிதமானது அல்ல.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Kapithan said:

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

Share this post

Link to post
Share on other sites

மலரட்டும் மலரட்டும் । வாடிப்போகாமல் இருந்தால் சரிதான்। அது சரி இது எத்தனையாவது மலர் , அதாவது எத்தனையாவது கட்சி ? இன்னும் எதனை கட்சி வரப்போகுதோ। சிவ சிவா।

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

Share this post

Link to post
Share on other sites
51 minutes ago, Kapithan said:

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Sasi_varnam said:

உங்களது கருத்தோடு முரணில்லை  சசி

2009 க்குப்பின்னர் முன்நாள்கள் என்று  ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் செயற்பாடுகளால் வந்த  விரக்தி  இது.

காலம்   பதில்  சொல்லட்டும்

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

நானும் சொல்ல நினச்சன் நீங்க சொல்லிட்டீங்க  கோசான் 

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வைக்க முனைந்த போது இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை வைத்து கட்சி ஆரம்பிக்க முடியாது என அரசு கூறியது  அதை மாற்றியே அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என வைத்தார்கள் .

 இந்தப்பேரவை தொடங்கினாலும் பிற கட்சியால் ஓரங்கப்பட்டு வைக்கப்படுவார்கள் அல்லது  அமத்தி வைக்கப்படுவார்கள் அது  தற்போதும் சரி முன்னரும் சரி தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை வாங்கி கொடுப்போம் என இன்று வரை பதவி விலகாமல் பதவியில் ஒட்டியிருந்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துவரும் நபர்கள் இவர்களை வளர விடுவார்களா?? என்பது பல கேள்விகளை ஏற்படுத்துகிறது .

இவர்கள் முன்னாள் போராளிகள் என்றால்  போராளிகள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் முன்னாள் போராளிகள் பலர் இப்பவும் சொல்வார்கள் தமிழ் மக்களுக்கு அரசியாலால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது அது சாத்தியமில்லை என்று. கனபேர் ஒதுங்கியுள்ளார்கள் இவர்கள் தற்போது கிளம்பியிருப்பதும் அதுவும் பயன்படுத்த முடியாத பெயரை கொண்டுவந்திருப்பதும் பல கேள்விகளை உண்டாக்கி இருக்க வேணும் ஆனால் அதையெல்லாம் நாம் யோசிக்க மாட்டம் இவர்கள் போராளிகள் என்று சண்டை பிடிப்பம். 

அப்படி பார்த்தால்  இயக்கத்த விட்டவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்பவர்கள் (யாரும் காணவில்லை) ஏன் அப்படி அழைக்கலாம் கைக்கூலியென அப்படி  சொல்ல யாருக்கு உரிமை உண்டு?? கர்ணா அம்மான் சொல்லுவார் தலைவரே சொல்லமாட்டார் தன்னை துரோகி என சொன்னதாக எங்கயோ கேட்ட ஞாபகம் 😄 

Edited by தனிக்காட்டு ராஜா
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, goshan_che said:

இது யாழில் சாதாரண வழமைதான்.

யாழில் (மட்டும்) அல்ல, எம் சமூகம் முழுதுமே இப்படித்தான் சிந்திக்கின்றது. இது அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஒரு ஆண் / பெண் தற்கொலை / கொலை ஆனால் கூட தம் விருப்பு வெறுப்புகளையும் புரையோடிப்போன முன் முடிவுகளையும் வைத்து கொண்டு தான் சிந்திக்கின்றது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் என்றும் கூறலாம் 😂

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

இதனைக் கூறி தாங்கள் புளகாங்கிதமடைவதை நான் கலைக்க  விரும்பவில்லை கனம்  நீதிபதியவர்களே.😜

2 hours ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

மீராரா மிகவும் திருகுதாளம் செய்பவர் என்று கூறினால்  ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது சரிதானே ?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இதை பற்றி ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறோம்? அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. பூனை முதல் சிங்கம் வரை தன் டி என் ஏ யை முடிந்தளவு அகலமாக விதைக்கவே எல்லா ஆண் உயிரிகளும் முனைகிறன. சொல்லப்போனால் - ஒரு ஆண் விலங்கின் பிறப்பின் அர்த்தமே அதன் விந்தணுவை எங்கே எல்லாம் பரப்ப முடியுமோ அங்கே எல்லாம் பரப்பி வம்சத்தை விருத்தி செய்வதுதான். இது தன்னியல்பாக அமைந்த கூர்ப்பின் முனைப்பு.  இதை அடக்கி, வன்முறையை பாவிக்காமல் இருக்க வைப்பது எம் மனித இனத்தின் மன, விழுமிய விருத்தியால் ஏற்பட்டது. இது மட்டுமே எமக்கும் சிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம். பிகு 1: அப்பாவி ஆண்கள் என்று யாரும் இல்லை. ஒன்றில் நடிக்கிறாகள் அல்லது வேறு ஈடுபாடு கொண்டிருக்கிறாகள். பிகு2: இந்த போய் பெஸ்டியாக போய், தருணம் பார்த்து கரணம் அடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. இது நரிகள் வேட்டையாடும் முறை. சிங்கம் வேட்டையாடும் முறை வேறு 😂  
  • படத்தின் காப்புரிமை A Pavendhan காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது. யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழகத்தில் சேலம், பழனி வரை நீண்டுள்ளது கிழக்கு தொடர்ச்சி மலை. இங்குள்ள வனப்பகுதிகளில் காணப்படும் புதிய பூச்சிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்திவருகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் இயற்கை கழகம் இணைந்து பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தமிழக பகுதியில், டின்சில் பட்டாம்பூச்சி இருப்பது முதல்முறையாக புகைப்பட ஆதாரத்தோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மிகவும் அரிதானதாக கருதப்படும் டின்சில் பட்டாம்பூச்சி ஏற்காடு மலையில் சுமார் 1400 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டது என்கிறார்கள். பிபிசி தமிழிடம் பேசிய சேலம் இயற்கை கழகத்தின் தலைவர் வ.கோகுல், மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட 17 குழுக்கள் சேலம் வனப்பகுதியை ஆய்வு செய்தபோது டின்சில் பட்டாம்பூச்சி இருப்பதை கண்டறிந்ததாகக் கூறுகிறார். ''பொதுவாக டின்சில் பட்டாம்பூச்சி, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்தான் தென்படும். சேலம் வனப்பகுதியில் இந்த பட்டாம்பூச்சி இருப்பதால், இங்குள்ள வனப்பகுதி வளமுடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. நீலன்கள்(Blue family) குடும்பத்தைச் சேர்ந்த இந்த டின்சில் பட்டாம்பூச்சியின் மேல்புறம் நீலவண்ணமும், அடிப்பகுதி சாம்பல் நிறத்திலும் காணப்படும்,''என்றார். டின்சில் உள்ளிட்ட 136 பட்டாம்பூச்சிகள் சேலம் வனப்பகுதியில் இருப்பதாகவும், 214 பறவை இனங்கள் இருப்பதாகவும் கூறுகிறார் கோகுல். ''மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்து படங்கள் பதிவு செய்தோம். உள்ளூர்களில் உள்ள பூச்சிகள், பறவைகள் பற்றிய புத்தகங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்துவருகிறோம். இதுபோன்ற ஆய்வில் வெளியாகும் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டதால், ஞாயிற்றுக் கிழமைகளில் பறவைகளை உண்டிவில் கொண்டு அடிப்பதை நிறுத்திவிட்டு, பல குழந்தைகள் இந்த உயிரிகளை அடையாளம் கண்டுசொல்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் வெற்றியாகப் பார்க்கிறோம்,''என்கிறார் சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரியான பெரியசாமி பிபிசி தமிழிடம் பேசும்போது, சேலம் வனப்பகுதியில் விதவிதமான உயிரிகள் உள்ளன என்பதற்கு ஆதாரமாக டின்சில் உள்ளிட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளன என்றார். ''வனத்தில் உயிர் பன்முகத்தன்மை (Biodiversity) தேவை. பலவிதமான விலங்குகள், பூச்சிகள் இருந்ததால்தான் அந்த வனப்பகுதி வளமுடன் இருப்பதாக கருதப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சந்தன மரங்களுக்காக கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, மரங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வனவிலங்குகளுக்கு மாற்றப்பட்டது. புலி, யானை என பெரிய விலங்குகள் அதிகம் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அதிக கவனம் கிடைத்தது. தற்போது கிழக்கு தொடர்ச்சி மலையில் உயிர் பன்முகத்தன்மை இருப்பதால், இங்குள்ள வனப்பகுதிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு ஆய்வுகள் மிகவும் பயன்தரும்,''என்கிறார். காமன் டின்சில் சேலத்தில் காணப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என கேட்டபோது, ''இதுநாள் வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்ட ஓர் உயிரி முதல்முறையாக தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் தென்படுகிறது என்பதால், இங்குள்ள வனப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பதை உணர்த்தும் அடையாளமாக இந்த பட்டாம்பூச்சியை கருதலாம். சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்(protected areas) இல்லை. ஆனாலும் இதுபேன்ற புதிய உயிரிகள், பலவிதமான உயிரிகள் இருப்பதை தொடர்ந்து ஆதாரங்களுடன் பதிவு செய்தால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை சேலம் வனப்பகுதிகளுக்கும் கிடைக்கும். பாதுகாப்பிற்காக புதிய திட்டங்களை கொண்டுவர இந்த ஆய்வு உதவும்,'' என்றார் பெரியசாமி. https://www.bbc.com/tamil/science-51551671  
  • (எம்.எப்.எம்.பஸீர்) 21/4 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை பின்னணியிலிருந்து வழி நடத்தியதாக நம்பப்படும் நான்கு மாலை தீவு பிரஜைகளைக் கைது செய்ய சி.ஐ.டி.யின் தனிப்படையொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ள சி.ஐ.டி., சர்வதேச பொலிஸாருடன் இணைந்து அவர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனைய இருவர் குறித்த தகவல்களையும் சர்வதேச பொலிஸாரின் தகவல் கட்டமைப்பு ஊடாக பகிர்ந்து தேடி வருகின்றனர். இந்த நான்கு மாலை தீவு பிரஜைகளும் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில், அல்லது அதனை அண்மித்த நடகளில் இந்த தாக்குதல்களை முன்னெடுத்த சஹ்ரானின் பயங்கரவாத கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளமை தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76170
  • (செ.தேன்மொழி) ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய , இதன்காரணமாக சர்வதேசத்திடமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.         ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து அதில் கிடைக்கும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முயற்சித்ததோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் வெளியிடப்பட்ட வரவு - செலவு திட்டத்தில் அரச செலவுகளுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் தமக்கு மேலும் 367 ரூபா பில்லியன் நிதியை பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டே கணக்கறிக்கையை தயார் செய்தது. அரசாங்கத்தினால் புதிய செயற்திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில் இந்த நிதிக்கான அவசியம் என்ன? அரசாங்கம் இதிலுள்ள சிக்கல்களை கருத்திற் கொண்டுதான் அதனை சபையில் சமர்ப்பிக்காமல் இருந்துள்ளது.அவ்வாறு சமர்ப்பித்திருந்தாலும் அது பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்துதான் அரசாங்கம் இந்த இடைக்கால கணக்கறிக்கையை தயார் செய்திருக்குமா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தில் மக்களின் நலன் கருதி பல சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் , தற்போதைய அரசாங்கம் அதனை செய்யாது இருக்கின்றது. தேர்தல் பிரசாரங்களின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கூட அரசாங்கம் நிறைவேற்றாது இருக்கின்றது. பெறுமதிசேர் வரியை குறைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அதிக வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்தே வரியை அறவிட்டது.ஆனால் தற்போதைய அரசாங்கம் வற்வரியை குறைத்து அவர்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுத்துள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்த முயற்சியையாவது எடுத்துள்ளாரா? ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கின்றது. சர்வதேசத்திடம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெனீவாவின் பிரேணைக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடும். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/76169