• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

8 பேரை கொலை செய்தமைக்காக மரணதண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு

Recommended Posts

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த  இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

011.jpg

கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர்.

2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.

அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு முன்னாள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து 2019 மே 20ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியிருந்தது.

இந்த நிலையில் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்தே படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தமக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமது உறவுகளுக்கு அரச வேலை தரவேண்டும் என்று கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

“எமது உறவுகளின் உயிரை மீண்டும் பெற்றுத் தர முடியாது. ஆனால் தற்போது  இறந்தவர்களின் குடும்பங்களில்  உள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பினையும் இழப்பீட்டையும் பெற்று தருமாறு கோரி முறைப்பாடொன்றை பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/73623

Share this post


Link to post
Share on other sites

ஒரு போர்க்குற்றவாளியினாலும், அவனது கொலைகாரத் தோழர்களாலும் ஆளப்படும் நாட்டில் கொலையாளிகள் என்று சிங்களத்தாலேயே நிரூபிக்கப்பட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இறுதிப்போரில் தாம் எந்தப் பொதுமகனையும் கொல்லவில்லை என்று மறுக்கப்படுகிறது.

சிங்களப் பேய்களின் ஆட்சியில் தமிழர் படப்போகும் பாடு மிகவும் பரிதாபமானது.

Share this post


Link to post
Share on other sites

இது எல்லாம் ஒரு அதிசயமே இல்லை.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்த கொத்தபாய ராஜபக்சே சிறீலங்காவின் அதிபராக வர வடக்குக்கிழக்கில் மக்கள் வாக்களிக்கலாம் சரத் பொன்சேகாவுக்கு வடக்குக் கிழக்கில் வாக்களிக்கலாம்  விஜயகலா அங்கயன் டக்லஸ் ஆகியோர் அவர்க்ளுடன் ஒட்டி உறவாடலாம் . கொத்தா ஒரு கொலையாளி அவர்களுடன் கூட்டமைப்பின் சம்பந்தன் சுமந்திரன் மாவையர் ஒட்டி உறவாடலாம் இன்னமும் அவர் தமிழர்க்கு தீர்வுதரவார் எனக்கூறலாம் ஒன்பது கொலை செய்தவனை விடுதலை ச்யக்கூடாது என மகாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this