• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

ரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த !

Recommended Posts

mahinda.jpg

ரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனக்கு மேலதிக வசதிகளை செய்துதரும்படி கோரியது உண்மையே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், முன்னாள் பிரதமருக்கு வழங்கப்படும் வசதிகளை விட மேலதிகமாக சிறப்பு பாதுகாப்பு, வீடு மற்றும் பிற வசதிகளை ரணில் விக்ரமசிங்க கோரியதாக கூறினார்.

கடந்த காலத்தில் பிரதமராக இருந்தபோது வகித்த சலுகைகளைளை விட குறிப்பாக, சகல வசதிகளையும் கொண்ட கட்டடத் தொகுதி, உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பல வசதிகளை கோரியதாக வெளியான தகவல்கள் குறித்து ஆதவன் செய்தி சேவை நேற்று செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.

இருப்பினும், அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இதேவேளை கட்சிக்குள் இருக்கும் நெருக்கடி காரணமாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு தேவைப்படலாம் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

http://athavannews.com/prime-minister-admits-ranil-sought-additional-facilities/

Share this post


Link to post
Share on other sites

அவர் உங்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கினார்।   எனவே அந்த கடமை உங்களுக்கும் உள்ளது। உங்களை காப்பாற்றியதுபோல  நீங்களும்  அவரை காப்பாற்ற வேண்டும்।

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Vankalayan said:

அவர் உங்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கினார்।   எனவே அந்த கடமை உங்களுக்கும் உள்ளது। உங்களை காப்பாற்றியதுபோல  நீங்களும்  அவரை காப்பாற்ற வேண்டும்।

அதென்ன தோழர் .. 😢

maxresdefault.jpg

ஆட்சியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பிரசாதம் கொடுத்து கொண்டால் மக்களுக்கு யார் கொடுப்பது..? 😊

Share this post


Link to post
Share on other sites

மக்கள் மாக்களாக இருக்கும்வரைக்கும் எவரும் எதுவுமே செய்ய முடியாது।

Share this post


Link to post
Share on other sites

அலறி மாளிகையை கொடுக்கலாமே.

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, Gowin said:

அலறி மாளிகையை கொடுக்கலாமே.

 

Edited by Vankalayan
no message inserted

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு  யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld  நகரில் Ummelner  வீதியில் இருந்த  அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி,  அதன்மேல் தனது  ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே  இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன்  அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை. https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen    
    • சர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர். 
    • கும்ஸ், ரென்சன் வேண்டாம். உங்களுக்கு வயது 30க்குள்ளே என்பதால் பயப்படத் தேவையில்லை. எதற்கும் இந்த அட்டவணையைப் பார்த்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.
    • ஓம் இது ஒரு பெரிய பிரச்சனை இலங்கையில்.எங்களை மாதிரி இளசுகளை எல்லாம் முதியோர் பட்டியலில் சேத்துப்போட்டாங்கள் பாவிகள்.
    • இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதுவரை எம்மால் இக் கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருகின்றோம் அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்கமுடியாது காணாமல் போனவர்களது பிரச்சனை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை ,நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடையங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம் நாளை மறுதினம் கூட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது அதில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இக் கூட்டத்தொடரிலையே இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது இலங்கை ஐநா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப் போகிறது இலங்கை அரசு காலம் காலமாக திர்மானக்ளில் கைச்சாத்திடுவதும் கிழிப்பதும் கிழிப்பதுமாகவே உள்ளது இக் கூட்டத்தொடர் ரை தொடர்ந்து நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சில்வா விற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள் ,கட்சிகள் , குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளனர் . இவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள் ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். http://www.vanakkamlondon.com/இலங்கை-அரசின்-உண்மை-முகத/