Sign in to follow this  
Kavi arunasalam

அலாவுதீனும் அற்புத அனுபவமும்

Recommended Posts

DA21-FCCC-A8-F1-4-D71-B02-C-ABB6485369-B
Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய
விளம்பரங்கள் தொலைக்காட்சியில்  வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக  என்னுள் அந்த விருப்பம் இருந்தும்  ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும்  என்பதாகவும் இருந்திருக்கலாம்இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது

நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில்  பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்கள்ஆனாலும் இவ்வளவு பணத்தை, நேரத்தை செலவழித்து நிகழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது பெறுமதியாக இருக்குமா என்றொரு அச்சம் கடைசிவரை என்னுள் இருந்தது. தனியாகப் போய்ப் பாரப்பதில் ஏதும் இருக்கப் போவதில்லை. மனைவியை அழைத்துப் போகும் போது செலவு இரட்டிப்புஆனாலும் இறுதி முடிவாக மனது சொன்னதுகாசைப் பார்க்காதே, நிகழ்ச்சியைப் போய்ப் பார்என்று.

Stuttgart SI Cntrum  என்ற இடத்தில் நிகழ்ச்சி. முதலில் SI Centrum பற்றிச் சொல்லிவிடுகிறேன். இதை ஒரு கேளிக்கை நிலையம் எனலாம். நடன இசை  நிகழ்ச்சிகளுக்காக Stage Apollo Theater, Stage Palladium Theater  என இரண்டு அரங்குகள்,  11 உணவு விடுதிகள், 7 மதுபான பார்கள், 3 கோப்பி நிலையங்கள், ஆறு சினிமா தியேட்டர்கள்,  3 சூதாட்ட மையங்கள், 22 மாநாட்டு மண்டபங்கள்  அத்தோடு ஒரு ஆரோக்கிய நிலையம் என்று யேர்மனியர்களுக்காக மட்டுமல்லாமல்  சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் மையப் படுத்தி  உருவாக்கப்பட்டது இந்த SI Centrum

நாங்கள் நிகழ்ச்சி பார்க்கப்  போன Aladdin இசை நடன நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் 1807 இருக்கைகள் கொண்ட  Palladium Theater. பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக சோதனைகள் நடத்தியே அரங்குக்குள் அனுமதித்தார்கள்.

அரங்கம் முழுமையானதாக நிறைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் போதே "போட்டோ எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ, தொலை பேசி உரையாடலோ அரங்கத்துக்குள் தயவு செய்து வேண்டாம்" என்று அறிவித்து விட்டார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த நேரத்தில் இருந்து எந்த ஒரு வினாடியும் இடை விடாது நிகழ்ச்சி போய்க் கொண்டே இருந்தது.. மேடையிலே நகரும் கட்டிடங்கள், ஓடும் மேகங்கள், ஒளிபாய்ச்சும் சூரியன், பாழிக்கும் நிலவு, மின்னும் நட்சத்திரங்கள், களை கட்டி நிற்கும் சந்தை, வண்டிகள் போகும் வீதிகள் என ஒரு சினிமா பார்ப்பது போன்ற பிரமையே இருந்தது. நாடகத்தை ரசித்து, பார்வையாளர்கள் கைதட்டி, தங்களது பாராட்டுக்களைத் தெரியப்படுத்தாமல் மட்டும் இருந்திருந்தால் கண் முன்னாலே அவர்கள் வந்து நடித்துக் கொண்டிருந்ததை ஒரு அகன்ற திரையில் ஒரு சினிமா என்றுதான் நினைத்திருப்பேன்.

அலாவுதீன் கதை ஏற்கனவே தெரிந்திருந்ததால், Aladdin நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சோர்வு வந்து விடுமோ என்ற என்னுள் இருந்த அச்சம் வீணாகிப் போனதுமேடையிலே மறைந்து தோன்றும் பூதம், நொடிப் பொழுதில் அரண்மனை மறைந்து சந்தைகள், வீடுகள், அந்தப்புரம், படுக்கையறை  தோன்றும் காட்சிகள், எம்ஜிஆர் பாணி வாள்ச் சண்டைகள் என்று எல்லாவற்றிலும் என்னை நான் மறந்து போனேன்.

நடிகர்கள் பாடி ஆடி நடித்தது இன்னும் நிகழ்ச்சியை மெருகூட்டியது. நடிகர்களில், ஆபிரிக்கவைச் சேர்ந்தவர்கள் மூவர் இருந்தார்கள். அலாவுதீன் இளவரசியுடன் கம்பளத்தில் பறக்கும் காட்சி வருமா, அது இந்த மேடையில் சாத்தியமாகுமா என்ற ஆவலான கேள்வி எனக்குள் இருந்தது. என் எதிர்பார்ப்புக்கு மேலாக அந்தக் காட்சி அமைந்திருந்தது. அலாவுதீனும் இளவரசியும் கம்பளத்தில் பறந்த காட்சி என்னை மட்டுமல்ல மற்றைய பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்திருந்தது என்பது அரங்கம் வெடித்து விடும் அளவுக்கு எழுந்த கரகோசம் சொன்னது.

6-CB253-D8-8-AE5-4472-8-E39-1-D9-D8-A474

எண்ணிக்கைகளில் குறைந்த நடிகர்கள்தான் பங்கு பற்றி இருந்தார்கள். ஆனால் உடைகளை, வேசங்களை நொடிப் பொழுதில் மாற்றி வந்து மேடையை நிறைத்திருந்தார்கள். நடிப்பில் இசையில் ஏதேனும் பிழைகள் இருந்திருக்கலாம். அவை எல்லாம் பார்வையாளரைச் சென்றடையாமல் கையாளும் திறமை அவர்களிடம் இருந்திருக்கும்.

நிகழ்ச்சி முடிந்த போது எழுந்த கரகோசம் அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

Back stage பார்ப்பதற்கு மறுநாள் 11.30க்குப் போனோம்அதற்கும் கட்டணம் இருந்தது. 20 பேர் கொண்ட குழுக்களாக அழைத்துப் போய் காட்டி விளக்கம் தந்தார்கள்

நடிகர்கள் உடனடியாக ஓடி வந்து இருட்டினிலும் எடுத்து மாற்றக் கூடிய முறையில் உடைகளை தனித்தனியாக ஒழுங்காக  வைத்திருந்தார்கள். அதேபோல்தான் தலையில் போடும் விக்குகள், ஆபகரணங்கள், கையில் வைத்திருக்கும் பொருட்கள்  எல்லாம் ஒழுங்கான முறையில் வைக்கப்பட்டிருந்தன. தலை விக்குகளில் எப்படி மைக்கை பொருத்தி மறைத்து வைப்பது, தலைமயிர் இல்லாத பூத்த்தின் தாடிக்குள் மைக்கை எப்படி பொருத்துவது என்பதை எல்லாம் விளக்கினார்கள். பத்தாயிரம் யூரோ  பெறுமதியான ஆடைகள் இருபது கிலோவரையிலான அலாவுதீனின் உடைகள் எல்லாம் காட்டினார்கள். ஆனால் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதி தரமாட்டோம் என்றார்கள். மேடைத் தளத்திலேயே சிறிய லிப்ற் அமைத்திருந்தார்கள். அதனூடாகத்தான் பூதம் தோன்றி மறைவதை விளங்கப் படுத்தினார்கள். கம்பளத்தில் அலாவுதீனும் இளவரசியும் எப்படிப் பறந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்கள்.

திரும்பி வரும் பொழுது Aladin நிகழ்ச்சியைப்  பார்தத்தற்கு கொடுத்த பணத்துக்கு மேலான திருப்தி இருந்தது. ஆனாலும் எங்களவர்களது நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரத்திற்கு பின்னால் இருக்கிறது என்ற ஒரு ஆதங்கம் இருந்தது.

 • Like 8
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

Aladdin  படம் என்றால் எனக்கும் பிரியம்.

Share this post


Link to post
Share on other sites

இந்தத் திரைப்படத்தை நான் கம்போடியா சென்றபோது விமானத்தில் பார்த்தேன். சலிப்பை ஏற்படுத்தாத படம். அரங்கத்தில் நேரடியாக நடிப்பதைப் பார்ப்பதே ஓர் அலாதியான அனுபவம். நான் The lion King ஐ பார்த்தபோது உணர்ந்து கொண்ட அனுபவம். சில நல்ல அனுபவங்களுக்காக பணத்தை இழப்பது பெரிதல்ல அண்ணா. நாம் அனுபவித்தால்த்தான் அதன் அருமை தெரியும்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

அருமையான விமர்சனம்.......இதுவரை பார்த்ததில்லை, இனிமேல் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பேன்......!  😁

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, தமிழினி said:

அலாவுதீன் இசை நடன நிகழ்ச்சியை மகளின் பாடசாலையில் பாத்தபோதே நன்றாக இருந்தது... அதை இப்படி ஒரு பிரமண்ட படைப்பில் பார்க்கும் போது சொல்லத்தேவையில்லை.

உங்கள் விமச்சனத்தை வாசித்தபின்பு அலாவுதீன் போய்ப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

சசி அண்ணா சொன்னது போல் இங்கு இது  எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றே சொல்வேன்.

நானும் Waitress, Come from away, Legally Blonde, Chicago, Les Mis, Fiddler on the roof  பார்த்துள்ளேன்.... என்னவாக பாடி நடிக்கின்றார்கள்.  வரும் ஏப்பிரலில் Hamilton பார்க்க போகவுள்ளேன். ( இவற்றில் முதல் இரண்டு தான் Down Town Theater ல்  போய்ப்பார்த்தேன் மற்றவை எனது மகள் படிக்கும் இசைப்பள்ளியில் பார்த்தேன்)

Shen Yun ம் முடிந்தால் போய் பார்க்கவேண்டும்.

அலாவுதீனின் விமர்ச்சனத்திற்கு நன்றிகள்.

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

இப்படியான  நிகழ்வு ஒன்றை 12 ம் வகுப்பு மாணவர்கள் நடாத்தி இருந்தார்கள். ஏறத்தாள ஒரு வருடம் பயிற்சி செய்து இருந்தார்கள். நானும் அரை மனமாக தான் சென்றேன்.

கொஸ்ரியூமில் இருந்து பின்ணணி இசை வரை ஒவ்வொரு ஆசியர் பொறுப்பெடுத்து செய்து இருந்தார்கள். பாடசாலை இசைக்குழுவே பின்னணி இசையை செய்து இருந்தார்கள். பல்வேறு நாட்டு பின்ணணிகளை கொண்ட  மாணவர்கள் பங்கு பற்றி பின்னி எடுத்து விட்டார்கள். ஒருவர்  இனிமையாக பாடுவதே அதிசயம். ஒரு குழு பாடி , ஆடி நடிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அத்தனை  திறமை இந்த சிறுவர்களிடமா என பிரமித்து நின்றேன். பார்த்த காட்சியின் பெயர் legally blond.

கவி அவர்களே உங்கள் காட்சி வருணனை அருமை. நேரே காட்சியை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. நன்றிகள்

 

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
56 minutes ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

Edited by தமிழினி
 • Like 7

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, தமிழினி said:

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, Sasi_varnam said:

மிக்க மகிழ்ச்சி தமிழினி,
எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .

நன்றி சசி அண்ணா. சிறு வயதில் இருந்தே இசை மேல் அவவிற்கு ஆர்வம் இருந்ததால் அவவின் தெரிவு Art School ஆக இருந்தது.  அவவின் விருப்பப்படி அங்கு தான் தற்போது High School படிக்கின்றா. எதிர்காலத்தில் அவவின் விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் எதை படிக்க விரும்பினாலும் அவவின் விருப்பம் தான் எம் விருப்பமாகவிருக்கும்.

Edited by தமிழினி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன். :rolleyes:

அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி.... 
அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை. 

அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும்,
நானும், ஒய்வு (பென்ஷன்)  :grin: எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க,
கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. :)

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன். :rolleyes:

அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி.... 
அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை. 

அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும்,
நானும், ஒய்வு (பென்ஷன்)  :grin: எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க,
கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. :)

Image associée

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

நீங்கள் பென்சன் எடுத்திட்டு போய் நாடகம் பார்க்கும்போது அலாவுதீனும் இளவரசியும்  கம்பளத்தை எறிஞ்சு போட்டு கிளைடரில் பாறப்பார்கள்.......!    😁

சுவியர்...  "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்ற கதை...
ஒருவரின்..  சிறு வயதில், மனதில்  "கல் வெட்டாக"  பதிந்த கதை.

அந்தக் கதை...  பாஞ்ச் அண்ணைக்கும்,  ராஜவன்னியனுக்கும், விசுகு, ஈழப்பிரியன், 
புங்கையூரான்... போன்ற எல்லோருக்கும் பொருந்தும்.
வாழ்க்கை என்பது, ஒரு... வட்டம்  தானே.. சுவி அண்ணா. :)

ஆனால்....  "அலாவுதீனும் அற்புத விளக்கும்"  என்ற கதையை....
"பாட்டி... வடை, சுட்ட கதை" ... என்ற மாதிரி,
அடுத்த  தலைமுறையும், விரும்பி ரசிக்கும், 
காலத்தால்.... அழியாத கதைகளில், இதுவும் ஒன்று.  ❤️

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
On 1/23/2020 at 9:43 PM, Sasi_varnam said:

(Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். 
லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் 
இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . 🙏 

ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார்.
இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார்.

இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்"  Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது.

வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.

இதைத்தான் (மியூசிக்கல்) எங்கள் ஊரில் நாட்டிய நாடகம் என்பார்கள் ?

றஹ்மானும் அன்ரு லாயிட் வெபரும் இணைந்து படைத்த நாட்டியநாடகம் பம்பே டிரீம்ஸ்.

செஹன் யூன் அருமையான படைப்பு. இதை பலுங் கொங்கின் அங்கம் என்று சீனாவில் தடை செய்துள்ளார்கள். பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் மறைமுகமாக சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்-எதிர் செய்திகளை நாமே இனம் காணலாம். வெளியே ஓபனாககவே பலுங்கொங் பிரசுரங்கள் இருக்கும்.

இன்னொரு அரிய படைப்பு War Horse. இதை பார்த்து அழாமால் இருக்க யாராலும் முடியாது.

7 hours ago, தமிழினி said:

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா.

Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

 

எதிர்காலத்தில் மேற்கத்திய இசை உலகில் முடிசூடும் தமிழ் பெண் என்ற செய்தி வரத்தான் போகிறது. இவவின் அம்மாவை எனக்கு சமூக வலைத்தளத்தில் பழக்கம் என நானும் ஓரிரு பார்டிகளில் விலாசம் காட்டத்தான் போறன். 😂

வாழ்துகள் ☘️

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Sasi_varnam said:

தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன?
எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்?
என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

யோசிக்காமல்- திறமையை இனம் கண்டால் - களத்தில் இறங்குங்கள் சசி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழினி... யாழ். களத்திலுள்ள  புத்திசாலியான பெண்.
அவரின்...... குட்டி,  இன்னும், கூட.. பாய வேண்டும், என வாழ்த்துகின்றேன். :)

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அன்புஉறவுகள் தமிழினி, சசிவர்ணம் ஆகியோரின் பிள்ளைகள் சகல வளமும் பெற்றுவாழ  வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் .....!   🌹

Edited by suvy
சிறுத்திருத்தம்.
 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுவது ஏன்? இந்த ஆண்டு கருப்பொருள் என்ன? Getty Images உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. எந்த ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது? 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச் சூழல் தினம்: இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.  பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, "பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட. சமீப காலமாக, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை புரட்டிப்போட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம். இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் அதுசார்ந்த தலைப்புகளில் பிபிசி தமிழ் இதுவரை பதிப்பித்த சில முக்கிய கட்டுரைகளை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம். பருவநிலை மாற்றம் என்றால் என்ன?  புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். Getty Images மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன. விரிவாகப் படிக்க:பருவநிலை மாற்றம் என்றால் என்ன? - ஓர் எளிய விளக்கம்  https://www.bbc.com/tamil/global-46422510 பல்லுயிர்ப் பெருக்கம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது? இயற்கையை மனிதன் எப்படி அழிக்கிறான் தெரியுமா? சுற்றுச்சூழல் பாதிப்புக்கு யார் காரணம்? பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சியில் ''நெருக்கடியான தருணம் வந்துவிட்டது'' என்று சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை விடுத்திருந்தார். ''ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோம்,'' என்று பிரபல இயற்கை ஆர்வலரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான அட்டன்பரோ கூறியுள்ளார். எதிர்காலத்தில் மிக அபாயகரமான அளவுக்கு வெப்பநிலை உயர்வதைத் தவிர்ப்பதற்கு என்ன மாதிரியான, சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி 2018ல் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது. விரிவாகப் படிக்க: பருவநிலை மாற்றம்: காரணமாகும் பணக்கார நாடுகள்; பாதிக்கப்படும் ஏழை நாடுகள் https://www.bbc.com/tamil/global-51139013 Getty Images இயற்கையை காக்காவிடில் மனித குலத்தின் எதிர்காலம் என்னாகும்?  பருவநிலை மாற்றத்தின் காரணமாக நமது கடல், பனிக்கட்டிகள் அழிந்து வருகின்றன என ஐ.நா எச்சரித்துள்ளது. ஐ.நா. ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும், பனிக்கட்டிகள் உருகிவருகின்றன என்றும், மனித செயல்பாடுகளால் சில உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன என்றும் தெரிவித்துள்ளது. விரிவாகப் படிக்க: உயரும் கடல் மட்டம், கேள்விக்குறியாகும் மனிதக்குலத்தின் எதிர்காலம்: ஐ.நா. எச்சரிக்கை https://www.bbc.com/tamil/science-49835254 பூமியைக் காக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? Getty Images பொது போக்குவரத்து "இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!" இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது. விரிவாகப் படிக்க:  புவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா?  https://www.bbc.com/tamil/science-45866166 பருவநிலை மாற்றம்: சில முக்கியத் தகவல்கள் இந்நிலையில், பருவநிலை மாற்றம் எப்படி புவிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது, அதைத் தடுக்க எடுக்கப்படும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஏழு உண்மைகளை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து அளிக்கிறோம். விரிவாகப் படிக்க:  பருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள் https://www.bbc.com/tamil/global-46422510 கொரோனா வைரஸ் காரணமாக பூமியின் மாசு குறைந்தது எப்படி? இயற்கை பேரிடர்களால் பாதிக்கக்கூடிய நாடுகள் எவை? இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. விரிவாகப் படிக்க:  இயற்கை பேரிடர்களால் பாதிக்கக்கூடிய முதல் 15 நாடுகள் எவை? https://www.bbc.com/tamil/global-46429060   https://www.bbc.com/tamil/science-52920324  
  • தொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்? : மனோ விளக்கம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஏன் செல்லவில்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார். மனோகணேசனின் பதிவு வருமாறு, நண்பர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது நான் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரியுடன் உரையாடலில் இருந்தேன். செய்தி கேட்டதும் உடனேயே தலங்கம மருத்துவமனைக்கு ஓடினேன். ஏன் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துமனைக்கு கொண்டு செல்லவில்லை என நினைத்துக்கொண்டேன். நான் போனபோது நான் மட்டும்தான் முதல் எதிர்கட்சிகாரனாக இருந்தேன். அப்புறம் ஒரே ஆளும்கட்சி கூட்டம். பிரதமர் வரும்வரை இருந்து விட்டு வந்து விட்டேன். அடுத்த நாள் நமது கட்சிகாரர்களுடன் அவரது இல்லத்துக்கும் சென்றேன். அதற்கடுத்த நாள் பாராளுமன்றமும் சென்றேன். தம்பி திகாவை தவிர தமுகூ எம்பீக்கள் யாரும் கொழும்பில் இருக்கவில்லை. “இல்லத்துக்கு போறேன். வருகிறீர்களா?” என அவரை கேட்டேன். அவரும் வந்து சோகத்தை தெரிவிக்கவே விரும்பினார். ஆனால், “இல்லை அண்ணே, முன்பு ஒருமுறை பெரியவர் தொண்டமான் மரண வீட்டுக்கு, திரு. எம். எஸ். செல்லசாமி அவர்கள் சென்ற போது கூச்சல் எழுப்பி தகராறு செய்துள்ளார்கள். ஆகவே இப்போ நான் அங்கு வந்து அப்படி ஏதும் நிகழ்ந்து மலையகத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது. இறுதி சடங்குகள் அமைதியாக நடக்கட்டுமே” என்று தயங்கினார். அவர் சொல்வதில் ஒரு நியாயம் இருந்ததால்,நான் தொடர்ந்து வலியுறுத்த வில்லை. அடுத்த நாள் பாராளுமன்றத்துக்கு என்னுடன் திகாவும், ஏனைய தமுகூ எம்பீக்களும் வந்தார்கள். நோர்வூட் இறுதி நிகழ்வுக்கும் நான் போக இருந்தேன். ஆனால், எம் கட்சியின் மிக சிரேஷ்ட உறுப்பினர் நெடுஞ்செழியன் திடீரென சனியன்று மறைந்து விட்டார். ஞாயிறு அவரது இறுதி சடங்கு. ஆகவே நான் நோர்வூட் போகவில்லை. தமுகூ சார்பாக பிரதி தலைவர் இராதாகிருஷ்ணனை போகும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நுவரெலியாவில் தயாராக இருந்தார். அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நண்பர் சுமந்திரன், தான் கூட்டமைப்பு சார்பாக போக உள்ளதாகவும், நான் போகின்றேனா என என்னிடம் தொலைபேசியில் கேட்டார். அவரை இராதாகிருஷ்ணனுடன் தொடர்பு படுத்தினேன். அப்போது சனிக்கிழமை பின்னிரவு. அப்போதும் நான் சும்மா இருக்கவில்லை. நுவரெலியா மாவட்ட செயலாளர் புஷ்பகுமாரவை தொலைபேசியில் அழைத்து பேசினேன். “புஷ்பகுமார, நாளை ஏற்பாடுகள் எப்படி?” “சார், நீங்கள் வருகிறீர்களா?” “இல்லை, நான் வரவில்லை. எங்கள் கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் வருகிறார். அதேபோல் முன்னாள் எம்பி சுமந்திரனும் வருகிறார். இருவருக்கும் அஞ்சலி உரையாற்ற நேரம் ஒதுக்குங்கள். இராதாகிருஷ்ணன் உங்கள் நுவரெலியா மாவட்ட முன்னாள் எம்பி. உங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு முன்னாள் தலைவர். அதேபோல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சார்பாக முன்னாள் எம்பி சுமந்திரனும் பேசுவது நியாயம்.” “சார், இந்நிகழ்வு முழுமையான அரச அனுசரணை நிகழ்வாக நடக்கவில்லை. செலவில் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி அரசாங்கம் கூறியுள்ளது. அஞ்சலி உரையாற்றுபவர்களின் பெயர் பட்டியலை அமைச்சர் தொண்டமானின் குடும்பம்தான் தயாரிக்கிறது.” “அப்படியா, சரி இவர்களுக்கு சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கும்படி குடும்பத்தவர்களிடம் சொல்லுங்கள். நான் சொன்னதாகவே சொல்லுங்கள்.” “சரி சார்,சொல்கிறேன்.” அவர் சொன்னாரா என நான் மீண்டும் அழைத்து கேட்கவில்லை. எப்படியும், இராதாகிருஷ்ணன் எம் சார்பில் சென்றார். சுமனும் இறுதி நிகழ்வுக்கு போனார். சுமனுக்கு அடுத்த நாள் காலை நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கில் அவரது வாத உரை இருந்தது. இந்நிலையிலும் வடகிழக்கு உடன்பிறப்புகளின் சோகத்தை தெரிவிக்க அவர் போனார். இறுதி நிகழ்வில் இந்த மலையக, ஈழ தமிழர்களுக்கு உரையாற்ற சில நிமிடங்களும் ஒதுக்கப்படவில்லை. ஆளும் அணி சார்பில் மகிந்தானந்தவும், எதிரணி சார்பில் ரவுப் ஹக்கீமும் பேசினார்கள். அப்புறம் பார்த்தால்,“தோட்ட தொழிலாளி சம்பளம்” புகழ் நவீன் திசாநாயக்கவும் பேசினார். அவர் எந்த அணியின் சார்பில் பேசினார் எனக்கு தெரியவில்லை. மாலை நடந்தவைகளை இராதா எனக்கு தொலைபேசியில் விபரித்த போது, எனக்கு திகாம்பரம் சொன்னது ஞாபகம் வந்தது. உண்மையில் அவர் நேரடியாக இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளாமை சரிதான். அங்கே வந்து இருந்தால், தேவையற்ற சிக்கல் ஏற்பட்டு இருக்கலாம். இறந்தவர் ஒரு அரசியல்வாதி என்பதால், இறப்புக்கும் முன்னிருந்த கொள்கை முரண்பாடுகளை, இறப்பின் போது, அந்த கணத்தில் ஒத்தி வைக்க வேண்டும் என்பது நான் கற்ற அரசியல் நாகரீகம். அதேவேளை முரண்களை மறந்து விட முடியாது. ஏனெனில் அது மக்கள் சார்ந்தது. இது நான் கற்ற அரசியல். ஆறுமுகனிடம் என்னை கவர்ந்தது, அவரிடம் இருந்த “நகைச்சுவை உணர்வு”. எத்தனை பேருக்கு இது தெரியுமோ,என்னவோ! நானும், நண்பர் ரவுப் ஹக்கீமும் நன்கு அறிவோம். மற்றவர்களுக்கு அவர் தலைவர், தம்பி, அமைச்சர். எங்களுக்கு அவர் “தொண்டா”. அவ்வளவுதான். சில நாட்களுக்கு முன் கூட ஆறுமுகனின் நகைச்சுவை உணர்வைபற்றி நானும், ஹக்கீமும் சிலாகித்து பேசிக்கொண்டோம். எது எப்படி இருந்தாலும்கூட, நாம் இன்னமும் நாகரீகம் அடைய வேண்டும். அரசியல் நாகரீகம்! -(3)   http://www.samakalam.com/செய்திகள்/தொண்டாவுக்கு-அஞ்சலி-செலு/
  • வ‌ண‌க்க‌ம் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா இந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கான‌து ,  அண்ண‌ன் சீமான் ப‌ற்றிய‌ முழு ஆதார‌மும் கிடைத்த‌து , 2009ம் ஆண்டு அவ‌ர் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் ,  இந்த‌ காணொளியி அண்ண‌ன் சீமான் 70நாட்க‌ள் சிறையில் இருந்து வெளிய‌ வ‌ந்த‌ போது பேசிய‌ காணொளி ,  இதில் பேசிய‌த‌ற்காக‌ மீண்டும் அண்ணன் சீமான் க‌ருணாநிதியால் மீண்டும் சிறைப் ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌ எப்ப‌டி சூசை அண்ண‌ணுட‌ன் அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும்  ,  நான் என‌து கைபேசியில் இருந்து தான் யாழில் எழுதுகிறேன் , ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌ செய்தி த‌லைப்பை இணைக்க‌ முடிய‌ வில்லை , என‌து த‌மிழ‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் எல்லா ஆதார‌த்தையும் என‌து கைபேசிக்கு அனுப்பி இருந்தார்க‌ள் , க‌ணணி கைவ‌ச‌ம் இல்லை க‌ண‌ணி இருந்தா த‌லைப்பை இணைக்க‌ ஈசி  , நான் க‌ணணி‌ பாவிக்காம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம்  நீங்க‌ள் மேல‌ எழுதி இருந்தீங்க‌ள்   சூசை அண்ண‌ன் தொலை பேசி எடுக்க‌ அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ ம‌றுத்து விட்டார் என்று , இது முற்றிலும் பொய் ,  இறுதி க‌ட்ட‌ யுத்தத்‌தை புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து நான் உட் ப‌ட‌ எல்லாரும் க‌ண்ணீர் விட்ட‌ ப‌டி பார்த்து கொண்டு இருந்து எம்மால் இய‌ன்ற‌தை செய்தோம் போரை நிப்பாட்ட‌ , உல‌க‌த்தின் காதும் க‌ண்ணும் அப்ப‌ செவிடு குறுடு   , அவ‌ர்க‌ள் 2013ம் ஆண்டு ச‌ணல்4 ல‌ண்ட‌ன் ஊட‌க‌ம் வெளியிட்ட‌ காணொளிக்கு பிற‌க்கு தான் விழித்து கொண்டார்க‌ள் , ஆர‌ம்ப‌த்தில் நாக‌ரிக‌மான‌ முறையில் விவாத‌த்துக்கு த‌யார் என்று ம‌ருத‌ங்கேணி அண்ணாவுக்கு எழுதி இருந்தீங்க‌ள் , அத‌ற்கு ம‌ருத‌ங்கேணி அண்ணாவும் நாக‌ரிக‌மான‌ முறையில் ப‌தில் அளித்து இருந்தார் ,  கீழ‌ உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளும் அள‌வுக்கு திராவிட‌ர்க‌ள் போல் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி தேவை இல்லாம‌ எழுதி இருந்தீங்க‌ள் , அதற்கும் விள‌க்க‌ம் த‌ந்தேன் இதா உங்க‌ளின் நாக‌ரிகமானா ‌எழுத்து ம‌ற்றும் விவாத‌ம் அதில் நீங்க‌ள்  கீழ‌ எழுதின‌ ப‌திவுக்கும் மேல‌ எழுதின‌ ப‌திவுக்கும் தொட‌ர்வே இல்லை ,  இனி உங்க‌ளுட‌ன் விவாதிக்க‌ ஒன்றும் இல்லை , உங்க‌ட‌ க‌ட்டு க‌தையை அவுட்டு விடுங்கோ , அண்ண‌ன் சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ப‌தில் அளிக்க‌ மாட்டார்க‌ள் ,  அண்ண‌ன் சீமானை தூற்றுப‌வ‌ர்க‌ள் உங்க‌ளின் ப‌திவுக்கு ப‌ச்சை குத்தி க‌ண்டிப்பாய் உங்க‌ளை ஊக்கிவிப்பின‌ம் 😉        
  • வெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து செல்ல முன்னர் சோதனை செய்யப்படுவார்கள். சோதனை முடிவுகளை அடிப்படையாக வைத்தே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளது என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொதுமக்களிற்கு புதிதாக நோய் பரவுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கான சிறந்த தந்திரோபாயத்தை உருவாக்கியுள்ள நாடு இலங்கை என்பதால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் திரும்ப விரும்புகின்றனர். வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து இலங்கை உறுதியாகவுள்ளது என்றார். அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும். வருபவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் சோதனையிடப்படுவர், நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுபவர்கள் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் மக்களை அழைத்துவரவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் எங்கள் பிரஜைகள் வெளிநாடுகளில் பாதுகாப்பற்ற சூழலால் இங்கு வரவிரும்புகின்றனர். அவர்கள் தங்கள் தொழில்களையும் இழந்துள்ளனர். எனவே நாங்கள் அவர்களிற்கு அதற்கான உதவிகளை வழங்கவேண்டும். ஆனால் அரசாங்கம் அவர்களால் உள்ளூர் மக்களிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இதனை முன்னெடுக்கும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். -(3)   http://www.samakalam.com/செய்திகள்/வெளிநாடுகளில்-இருந்து-வ-3/
  • சங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ் - நிலாந்தன் கோவிட் -19காலத்தில் வீட்டுத் தோட்டத்த்தின் மீது ஈர்ப்பு  ஏற்பட்டதைப் போல கூட்டுறவு வாழ்க்கை குறித்தும் இயற்கைக்கு மீளத்   திரும்புவது குறித்தும்  உரையாடத்  தொடங்கியுள்ளோம். குறிப்பாக சமூகத்தின் அன்றாடங் காய்சிகளுக்கும் நலிவுற்ற பிரிவினருக்கும் பாரபட்சமற்ற விநியோகத்தை மேற்கொள்வதற்கு கூட்டுறவுச்  சங்கங்களை புதுப்பிக்க வேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.. உண்மைதான். யுத்த காலங்களில் சங்கக் கடை மைய வாழ்க்கை ஒன்று இருந்தது. அந்நாட்களில் கூப்பன் கார்ட்டும் அடையாள அட்டையும் தொலைக்க முடியாத ஆவணங்களாக காணப்பட்டன. குடும்ப அட்டை என்பது நிவாரண அட்டையாகவும் நீட்சி  பெற்றிருந்தது. குடும்ப  அட்டைகளிலும் பல வகைகள் இருந்தன.. எல்லாவிதமான நெருக்கடிகளின் மத்தியிலும் அன்றைக்கிருந்த கூப்பன்கடை  மைய வாழ்வில் ஒப்பீட்டளவில் நிவாரணம்  ஏற்றத்தாழ்வின்றி சமமாக வழங்கப்பட்டது. ஆனால் படிப்படியாக சமூகம் சங்க கடைகளை விட்டுவிலகி பல்பொருள் அங்காடிகளை நோக்கி நகர்ந்து விட்டது. எனக்கு தெரிந்து திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் ஒரு கோப் சிட்டி இருந்தது. ஆனால் அந்த கடைக்கு பொருள் வாங்க வருபவர்களின் தொகை அதிகமாக இருப்பதில்லை. 2009க்கு பின் சில ஆண்டுகள் அந்த கடை இயங்கியது. இப்பொழுதும் அந்த கடை அங்கே உண்டு. அந்தக் கடைக்கு சற்று விலகி எதிர்த்;திசையில் ஒரு தனியார் பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நுகர்வோர் பெருமளவுக்கு அந்த பல்பொருள் அங்காடியை நோக்கியே போகிறார்கள்.  கோப் சிட்டி   கட்டடம்  வேறு தேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபோலவே  திருநெல்வேலி சந்தியில் முகப்பில் ஒரு நியாயவிலைக்  கடை உண்டு அங்கேயும் பெருந்தொகையான மக்களை காண முடியாது. அதுமட்டுமல்ல உரும்பிராய் சந்தியில் ஒரு நியாய விலைக் கடை உண்டு. அங்கேயும்  நுகர்வோரை அதிகம் காண முடியாது. நியாய விலைக் கடைகளை நோக்கி ஏன் மக்கள் வருவதில்லை என்று கேட்டேன். அங்கே விற்கப்படும் பொருட்கள் தரம் இல்லை என்று ஓர் அபிப்பிராயம் உண்டு அதனால்தான் என்று பதில் சொல்லப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் தமது விற்பனை நிலையங்களில் தரமற்ற பொருட்களை விற்று வருகின்றனவா? நிச்சயமாக இல்லை. அதே திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் கூட்டுறவுச் சங்கத்தால்  நிர்வகிக்கப்படும் சாப்பாட்டுக் கடை ஒன்று  உண்டு. ஏனைய எல்லாக் கடைகளை விடவும் அங்கே சாப்பாடு மலிவு. திருநெல்வேலி சந்தையில் வேலை செய்யும் அன்றாடக் கூலி உழைப்பாளிகள் பலர் அங்கேயேதான் சாப்பிடுவார்கள். அது மலிவான சாப்பாடு மட்டுமல்ல தரமானது. கூட்டுறவு சங்கத்தின்  நியாய விலைக் கடைகளோடு  ஒப்பிடுகையில் மேற்படி சாப்பாட்டுக் கடையில் ஜனத்திரள் அதிகம். அந்த சாப்பாட்டுக் கடையில் மட்டுமல்ல மாகாணசபையால் நடாத்தப்படும் அம்மாச்சி சாப்பாட்டு கடையிலும் வாடிக்கையாளர் அதிகம் தான். காரணம் அதன் தரம். தரமானது என்று நிரூபிக்கப்பட்டால் ஜனங்கள் அதை நோக்கி வருவார்கள் என்பதற்கு அம்மாச்சி கடைகளும் வன்னியிலுள்ள அதுபோன்ற எனைய கடைகளும் மிகச்சிறந்த முன்னுதாரணங்கள். இன்னும் ஒரு உதாரணத்தைக் கூறலாம். பலாலி வீதியில் ஆஸ்பத்திரி சந்தியில் இருந்து ஆஸ்பத்திரியை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்ததும் இடப்பக்கமாக சதோசா கடை ஒன்று உண்டு.கொரோனாவுக்குமுன்பு  அந்தக் கடைக்கு  ஆட்கள் பெருந்தொகையாகச்  செல்வதில்லை. அங்கே  அதிகமாகச்   சொல்பவர்கள் யாரென்று பார்த்தால் யாழ் பல்கலைக்கழகத்திலும்  ஏனைய கல்வி நிறுவனங்களிலும் கல்வி கற்கும் சிங்கள மாணவ – மாணவிகளே. எனினும் கோவிட்-19 க்குப்பின் இப்பொழுது அந்த கடையில் அதிக தொகை நுகர்வோரைக் காணமுடிகிறது. அரசாங்கம் விலை குறைத்த டின் மீன் பருப்பு போன்றன அங்கேதான் முதலில் கிடைத்ததும் ஒரு காரணமா? இந்த உதாரணங்களில் இருந்து ஒன்றைக்  கற்றுக்கொள்ளலாம்.  சங்கக்  கடையில் தரமான பொருள் விற்கப்பட்டால் மக்கள் தேடி வருவார்கள். நியாய விலைக்  கடையில் விற்கப்படும் பொருட்கள் மலிவாகக் கொள்வனவு செய்யப்பட்ட தரமற்ற பொருட்கள் என்ற அபிப்ராயத்தை மாற்ற வேண்டும். எப்படி மாற்றுவது ? பல்பொருள் அங்காடிகளோடு மோதிக்கொண்டு அதைச் செய்யவேண்டும். யார் செய்வது? இந்த இடத்தில்தான் கூட்டுறவு என்றால் என்ன என்பதை அதன் ஆழமான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். கூட்டுறவு எனப்படுவது உள்ளூர் உற்பத்தியாளர்கள்  சந்தை  சுரண்டலுக்கு எதிராக  பொருட்களை நியாய விலையில் கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கட்டமைப்பு. தரமானதையும் மலிவானத்தையும் பெற வேண்டுமென்றால் சமூகத்தின் கூட்டுறவை வளர்க்க வேண்டும் என்பதே கூட்டுறவு தத்துவம்.  எவ்வளவுக்கெவ்வளவு சமூகம் ஐக்கியப்பட்டு இயங்குமோ அவ்வளவுக்கு அவ்வளவு கூட்டுறவு இயக்கமும் செழிப்படையும். கூட்டுறவு இயக்கம் பலமாக இயக்கினால்  அங்கே தரமான பொருள் மலிவாக கிடைக்கும். யாழ்ப்பாணத்தில்  இவ்வாறு மகத்தான வெற்றிகளைப்  பெற்ற கூட்டுறவுச் சங்கங்களைக் காட்டலாம். கடற்றொழிலாளர் மத்தியிலும்  சீவல் தொழிலாளர் மத்தியிலும் ஏனைய  தொழிலாளர்கள் மத்தியிலும் வெற்றிகரமாக கூட்டுறவுச் சங்கங்கள் கட்டியெழுப்பப்பட்டன. பனை தென்னை வள உற்பத்திக் கூட்டடுறவுச் சங்கம், நீர்வேலி காமாட்சியம்மன் உருக்கு உற்பத்திக் கூட்டடுறவுச்சங்கம், நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டடுறவுச் சங்கம் போன்ற உதாரணங்களை காட்டலாம். அங்கெல்லாம் சமூகத்தை ஒரு திரளாக கூட்டிக்  கட்டுவதே கூட்டுறவு என்றழைக்கப்பட்டது. இது அதன் இறுதி விளைவைப்  பொறுத்தவரை தேசியத் தன்மை மிக்கது. ஒரு நேர்மையான தேசிய வாதிதான் கூட்டுறவாளராக இருக்கலாம். அல்லது நேர்மையான எல்லாக்  கூட்டுறவாளர்களும் பெரும்பாலும் தேசியவாதிகளே.  அதனால்தான் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கூட்டுறவாளர்கள் பலர்  பின்னாளில் இயக்கங்களில் சேர்ந்தார்கள்.  அதாவது ஒரு துணிச்சலான நேர்மையான மெய்யான கூட்டுறவாளர் மெய்யான தேசியவாதியமாவார்.  ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு சமூகத்தைப்  திரளாகக் கூட்டி கட்டுவது. இது காரணமாகவே தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய சில மகத்தான கூட்டுறவாளர்கள் பின்னாளில் கொல்லப்பட்டார்கள். இப்படியாக ஆயுதப் போராட்டமும் கூட்டுறவு இயக்கத்தின் எழுச்சி வீழ்ச்சிகளுக்கும் காரணமாக அமைந்தது. ஒரு கட்டம் வரையிலும் ஆயுதப் போராட்டம் கூட்டுறவு அமைப்பின் எழுச்சிக்கு உதவி புரிந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் கூட்டுறவு சங்கத்தின் தனித்துவமான இயல்பான சுதந்திரமான இயக்கத்துக்கு ஆயுதப் போராட்டமும்  சவாலாக அமைந்தது. அதோடு ஆயுதப்போராட்டத்தோடு சேர்த்து அடையாளங் காணப்பட்ட சில வெற்றிகரமான கூட்டுறவாளர்கள்  பின்னாளில் கொல்லப்பட்டார்கள். இடப்பெயர்வுகளின் போதும் கூட்டுறவுச் சங்கங்கள் மகத்தான பணி புரிந்தன. அப்பொழுதெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள் ஆயுதப் போராட்டத்தின் உதவி அமைப்புகள் போல செயற்பட்டன. தமிழ்க் கூட்டுறவு இயக்கம் போர்க் காலத்தில் தனது உச்சமான பங்களிப்பைச் செய்தது என்று மூத்த சிவில் அதிகாரியான  செல்வின் தெரிவித்தார்.முடிவில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போது கூட்டுநவுக் கட்டமைப்பும் ஓரளவுக்குச் சிதைந்து விட்டது.  இது தனியாக ஆராயப்பட வேண்டிய ஒரு ஆய்வுப் பரப்பு. கூட்டுறவுச்  சங்கங்களின் மீது ஆயுதப் போராட்டம் செலுத்திய தாக்கம். ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியோடும் பல் பொருள் அக்காடி மைய வாழ்க்கையின் எழுச்சியோடும் கூட்டுறவு வீழ்ச்சியுற்றது. இப்பொழுது பல்பொருள் அங்காடி மைய வாழ்வில் கூட்டுறவு அமைப்பு பொலிவை இழந்து விட்டது. அதை மறுபடியும் கட்டியெழுப்புவது என்றால்  அதற்குத்  துணிச்சலான அர்ப்பணிப்பு மிக்க கூட்டுறவாளர்கள்  வேண்டும். அதாவது நேர்மையான தேசியவாதிகள் வேண்டும்.   http://www.samakalam.com/செய்திகள்/சங்கக்-கடையைத்-திரும்பிப/