• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை

Recommended Posts

ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை

ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை

 
 

 

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது.

அணியின் தலைவர் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3 வது டெஸ்டில் 44 ஓட்டங்கள் தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20 ஐ விடவும் குறைவு. 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கிண்ணம் வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டு பிளிசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
 

Share this post


Link to post
Share on other sites

1 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட்ட‌ இழ‌ந்த‌வை , தென் ஆபிரிக்கா அணி தற்போது உள்ள‌ நிலையில் மிக‌வும் சுத‌ப்பி விளையாடின‌ம் , நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இப்போது தென் ஆபிரிக்கா அணியில் இல்லை , 

ம‌ழை பெய்தும் ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டிய‌ விளையாட்டை கூட‌ சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தோல்வி அடைஞ்ச‌வை , 

சொறில‌ங்கா அணியின் நிலை தான் தென் ஆபிரிக்காவுக்கும் வ‌ரும் , 

19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் அணியிட‌ம் தென் ஆபிரிக்கா அணி ப‌டு தோல்வி / கால‌ போக்கில் ஆசியாவில் இர‌ண்டாவ‌து ப‌ல‌மான‌ அணியாய் அப்பானிஸ்தான் அணி இருக்கும் 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இந்தியாவிலிருந்து பூக்கள், பழங்கள், சிற்றுண்டிகள் கொண்டு வர யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தடையாம்.! தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகை பூ மற்றும் சுவிற் வகைகள் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனா். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக் கருவி இன்மை காரணமாக பலவகையான பொருட்கள் எடுத்துச் செல்லும் அனுமதிகள் மறுக்கப்படுகின்றது. பரிசோதனையின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி தனது உடமைகளை கை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவலம் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகள் உறவுகளிற்காக எந்த வகையான பழங்கள் , பூ வகைகளும் எடுத்து வர முடியவில்லை. கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் பயணிகள் இதே வகையான பொருட்களை கொண்டு வரும் போது யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக அவற்றை கொண்டுவர தடை விதிக்கப்படுகின்றது. அண்மையில் திருமண நிகழ்வுக்காக 25 ஆயிரம் ரூபாவிற்கு பூ வகைகளும் , மேலும் 50 ஆயிரம் ரூபாவிற்கு  உணவுகள் , பழங்கள் போன்றவற்றை இருவா் கொண்டு வந்த நிலையில் கொழும்பின் ஊடாக யாழ்.வந்தவாின் பொருட்கள் வந்து சேர்ந்தபோதும் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வகை பொருட்களை எடுத்து வருவது தற்போது விவசாய அமைச்சு தடை செய்துள்ளது. இருப்பினும் கொழும்பில் இயந்திரம் மூலம் பரிசோதனை இடம்பெறும்போது தவறக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். https://jaffnazone.com/news/16095
    • சில அவதானிப்புகள்…. 1) படி படி என்று சொன்ன நேரம் , பிடி பிடி என்று சொல்லியிருக்க வேண்டும் - 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் அங்கலாய்ப்புகள்.. 2) அவுஸ்திரேலியாவில்  படித்து  சராசரி உத்தியோகங்களிலாவது இருக்கும் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் சீதனம் என்பது அருகி விட்டது போல் தெரிகிறது. 3) பிள்ளைகள் , துணையை தெரிவு செய்வதில் இருந்து கல்யாண வீடு ஏற்பாடுகள் வரை ,தங்களின் முடிவுகள் தான் இறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் , செலவுகள் உட்பட. 4) பேசிச் செய்யும் திருமணங்களை தற்போதைய இளவல்கள் விரும்புகிறார்கள் இல்லை.  பேசிச் செய்வது , தங்களில் எதோ குறைபாடு இருக்கின்றது  என்ற தோற்றப்பாட்டைத் தருகின்றது என்பது அவர்களின் கருத்து ...  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
    • உங்களால் வீட்டிலே சந்தோசமாக இருக்க முடிகிறதா தமிழ் சிறி?