Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்!

ராஜன் குறை

 

15.jpg

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில், பெரியார் பங்கேற்ற 1971ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழக ஊர்வலம் குறித்து சில பிழையான, மிகையான சித்திரிப்புகளைச் செய்தது பெரியாரிய இயக்கங்களின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. துக்ளக் பத்திரிகையைப் பாராட்டி பேசுமிடத்து அவர் பெரியாரின் இறை மறுப்பை நினைவுகூர்ந்து பேசியது, அந்த ஊர்வலம் குறித்து சமூக அமைதியைக் குலைக்கும்படி சித்திரித்த துக்ளக் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதை முன்னிட்டு என்றாலும், துக்ளக் பத்திரிகையின் வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சி காரணம் என்றெல்லாம் கூறியது புனைவு. அவருடைய உட்கிடக்கை பாரதீய ஜனதா ஆதரவு மேடையில் பெரியாரின் இறை மறுப்பு கொள்கையைச் சுட்டி, அதை மிகைப்படுத்தி சித்திரித்துப் பேசுவதுதான் என்று தோன்றுகிறது.

ரஜினிகாந்தின் இந்த விழைவு புதியதல்ல என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஏற்கனவே பாபா திரைப்படத்தில் அவர் முயன்ற அரசியல்தான் இது. அவருடைய திரையுலகப் பயணத்தில் பெரிய அதிர்ச்சியை கொடுத்த படம் பாபா. பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா என்று பெரும் வெற்றிகளாக, முக்கிய பொதுவெளி நிகழ்வுகளாக மாறியிருந்த அவரது படங்களுக்குப் பிறகு திடீரென ஒரு தோல்விப் படமாக அமைந்தது பாபா. ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருப்பது போல தோல்விக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு முக்கிய காரணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பாபாவின் மனமாற்றம்

பாபா படத்தில் இரண்டு பாபாக்கள். ஒரு பாபா இமயமலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக ரஜினியே கூறிய பாபாஜி என்ற பாபாஜி நாகராஜ். இன்னொன்று, அவருடைய அருளால் குழந்தையாக மறுபிறப்பு எடுத்த அவருடைய சீடர்களில் ஒருவரான ரஜினிகாந்த் பாத்திரமான பாபா (இந்தப் பாத்திரத்தை ரஜினி பாபா என்று குறிப்பிடுவோம்). குழந்தையே இல்லாமல் எல்லா தெய்வங்களையும் வேண்டித் திரியும் தம்பதியருக்கு இந்த தெய்வீகக் குழந்தை பிறக்குமென்பது சாதுக்களால் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோரிடம் அந்த குழந்தை என்ன செய்தாலும் குறுக்கிட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தை இன்பங்களைத் துய்க்கும் ஒரு முரட்டு நாத்திகனாக வளர்கிறது. பாபாவின் லீலை என்னவென்றால் அந்த மனிதன் அவனாகத் தன்னுணர்வு பெற்று தன்னுடைய அருட்பிறப்பை உணர்ந்து மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்பதுதான். பல்வேறு அதிசய நிகழ்வுகள் மூலம் பாபாவின் சக்தியை ரஜினி பாபா புரிந்துகொண்ட பிறகு, மனமாற்றம் அடைந்து பாபாவிடம் செல்ல நினைக்கிறான். ஆனால் இதற்கிடையில் சில ரெளடிகள், அரசியல் தலைவர்களுடன் வரும் மோதலால் அரசியல் ஈடுபாடும் வருகிறது. தேர்தலில் ஒரு நல்ல மனிதனை வெற்றி பெற வைத்துவிட்டு இமயமலைக்குச் செல்லும்போது, அந்த மனிதர் கொல்லப்படுவதால் ரஜினி பாபா மக்களை நோக்கி திரும்பி வர படம் முடிகிறது.

இந்தத் திரைப்படத்தின் கதையைத் தான் ஒரே நாள் மாலையில் உருவாக்கியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதற்குமுன் பாபாவின் படம் இருந்த நூலிலிருந்து சில ஒளிப்புள்ளிகள், கீற்றுகள் அவருக்குள் சென்றதாக, அதனால் அவருள் பல மாறுதல்களை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். படம் வெளிவந்த சமயத்தில் தான் இமயமலையில் பாபாவைப் பார்த்ததாகக் கூறினார். பாபா யேசுநாதர் இமயமலைக்கு வந்தபோது அவரைப் பார்த்தவர், அவருக்கு யோக சித்திகளை வழங்கியவர் என்பதையும் கூறியுள்ளார்.

 

ரஜினிகாந்த் தன் குருவாக பாபாவை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் படத்தில் தன் பெயரையே பாபா என்று வைத்துக்கொண்டார். அதன் மூலம் தன்னை பாபாவின் அம்சம் பொருந்தியவராகக் கூறிக்கொள்கிறார் எனக் கருதலாம். படத்தின் முக்கியமான திருப்புமுனை, இறை நம்பிக்கையில்லாத ரஜினி பாபாவை மாயமாக இமயமலைக்குக் கொண்டு சென்று பாபாஜியை சந்திக்க வைக்கும் காட்சி. இதில் ரஜினி ஐயத்துடனும், விளையாட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார். பாபா அவருக்கு அவரது எல்லைகளை உணர்த்தி, ஒரு பரீட்சையாக மந்திர உபதேசம் செய்து, ஏழு முறை அந்த மந்திரத்தைச் சொன்னால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று கூறிவிடுகிறார். ரஜினி அந்த மந்திரத்தைப் பரிசோதிக்க அதை விரயம் செய்வதும், பின்னர் சக்தியை உணர்வதும், மனம் மாறுவதும் கதை. ஆனால் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது மதுவோ, மாமிசமோ அருந்தியிருக்கக் கூடாது என்பது ஒரு முக்கிய நிபந்தனை. பொதுவாகவே மாமிசமோ, மதுவோ அருந்தக் கூடாது என்று சொல்லும்போது ரஜினி அதெல்லாம் இல்லாமல் தான் இருக்க முடியாது என்று கூறுவார்.

 

அதனால் மந்திரம் சொல்லும்போதாவது அவற்றை உட்கொள்ளக் கூடாது என்று நிபந்தனை மாற்றப்படும்.

தன்னை ஆசாபாசங்கள் உள்ள, நாத்திக மனோபாவம் கொண்ட ஒரு சாதாரண நபராகக் காட்டிக்கொண்டு தான் மெள்ள, மெள்ள நம்பிக்கை கொள்வதை, தெய்வீக மனிதராக மாறுவதைச் சித்திரித்தால், தன் ரசிகர்களும் பாபாவின் ஆற்றல்களையும், பாபாவின் அருளைப் பெற்ற தன் ஆற்றல்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என ரஜினி கருதியிருக்கலாம். படையப்பா படத்தில் கிட்டத்தட்ட தெய்வமாகவே மாறிவிட்ட தன் கதாநாயகப் பிம்பத்தை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டுபோவது என்ற சிந்தனையில் இந்த கதை ரஜினி மனத்தில் தோன்றியிருக்கலாம்.

 

முற்றிலும் எதிர்பாராத விதமாக ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் இந்தப் படத்தை நிராகரித்துவிட்டார்கள். தானே தயாரித்த இந்தப் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார் ரஜினி. இது அவருடைய தொழில் வளர்ச்சிக்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய ஒரு பின்னடைவாக அமைந்தது. ரஜினி படம் என்றால் வசூல் மழை பொழியும் என்ற எண்ணம் நிச்சயம் தகர்ந்தது.

மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் மூலம் மீண்டார். ஆனாலும் வசூல் அளவில் அவருடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது சவாலாகத்தான் இருந்தது. சந்திரமுகியைத் தொடர்ந்து சிவாஜி வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து வெளியான குசேலன் சொதப்பியது. பின்னர் எந்திரன் வெற்றிக்குப்பிறகு லிங்கா, கோச்சடையான் என இரண்டு தோல்விகள். அதன் பிறகு கபாலி, காலா என்று ஓரளவு சுதாரித்தார். இப்போது பழைய படங்களின் ரீமேக் போல பேட்டை, தர்பார் என்று வருடத்திற்கு ஒரு படம் நடித்து அஜித், விஜய் போன்றவர்களுடன் வசூலில் போட்டியிட முயற்சி செய்கிறார். நான் யானையல்ல குதிரை, விழுந்தால் எழுந்து ஓடுவேன் என வசனமெல்லாம் பேசினார். ஆனால் முற்காலம்போல ஓட முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒருவிதத்தில் ரஜினி பிம்பத்தின் முதல் தகர்ப்பு பாபா என்றால் மிகையாகாது. அதற்குக் காரணம் அவர் கட்டமைக்க முயற்சி செய்த நாத்திகம், ஆத்திகம் முரண்.

பெரியாரின் நாத்திகமும், சமூக நீதியும்

பாபா படத்தில் நாத்திகராக இருக்கும்போது பெரியாரைக் குறிப்பிடுவார். திராவிட அரசியலில் முக்கியக் குறியீடாக, பிம்பமாக இருக்கும் பெரியாரை நாத்திகராகச் சித்திரித்து அவர் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடலாம் என்ற விழைவே இதில் தென்படுகிறது. இதில் மிகப்பெரிய பிழை என்னவென்றால் பெரியாரின் இயக்கத்தின் மையம் நாத்திகப் பிரசாரம் அல்ல. அது சமூக நீதி எனப்படும் ஏற்றத் தாழ்வு நீக்கத்தையே மையமாகக் கொண்டது. பார்ப்பனீய இந்துமதம் சாதீய ஏற்றத் தாழ்வைப் பேணுவதால், பார்ப்பனர்களை உயர்பிறப்பாளர்களாகக் கருதுவதால் அதை எதிர்ப்பது அவசியமாகியதே தவிர, கடவுள் மறுப்பையே இறுதி லட்சியமாகக் கொண்டவரில்லை பெரியார். அப்படி இருந்திருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையே சாத்தியமில்லை. சமூக நீதியே முக்கியம், பகுத்தறிவு, நாத்திகம் போன்றவை அதற்கு உறுதுணை மட்டுமே என்பதால்தான் கோயில்கள் இருக்கும்வரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடிகிறது.

இது மக்களுக்கு இயல்பாகப் புரிகின்ற விஷயம். அதனால்தான் அவர்கள் கடவுளை வழிபட்டாலும், பெரியாரையும் பெரிதும் மதிப்பார்கள். பெரியாரும் கடவுள் பற்றாளர்களுடன் சேர்ந்து இயங்க மறுத்ததில்லை. தன்னுடைய இயக்கத்தின் செயல்பாடுகளுக்குக் கடவுள் மறுப்பை முன் நிபந்தனையாக வைத்ததும் இல்லை. குன்றக்குடி அடிகளாருடன் அவருக்கு இருந்த நல்லுறவே இதற்கு முக்கியச் சாட்சி. மக்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளைப் பேணுவதற்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக இருக்கக் கூடாது என்பதால், கடவுள் கொள்கையைக் கேள்வி கேட்கும் ஆற்றலை வலியுறுத்தினாரே தவிர, கடவுள் மறுப்பு மட்டுமே சமூகத்தை மாற்றிவிடும் என்று எண்ணும் அளவு எளிய மனம் படைத்தவரல்ல பெரியார்.

 

இதனால் பெரியாரின் கடவுள் மறுப்பை மையப்படுத்தி, அதை மறுத்து, மக்களின் இயல்பான பாதுகாப்பின்மை சார்ந்த இறையுணர்வை, புனிதங்களுக்கான ஆசையைத் தூண்டிவிட்டால் திராவிட இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என நினைப்பது பயன் தராது. ரஜினி இதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

வேறொன்றையும் அவர் நினைவில்கொள்ள வேண்டும். அவர் என்ன தத்துவம் பேசுகிறார் என்பதற்காக யாரும் அவர் படங்களுக்குச் செல்வதில்லை. அவரது ஸ்டைல் எனப்படும் அங்க சேஷ்டைகளுக்காகத்தான் செல்கிறார்கள்.

பாபாவில் ஆன்மிகம் பேசி வீழ்ந்த பிம்பத்தை, சந்திரமுகியில் வேட்டையனாக “லகலகலகலக” என்று வில்லத்தனமாக ஒலியெழுப்பிதான் மீட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. எந்திரனில் “மே” என்று ஆடு போல கத்தியபோது அரங்கம் அதிர்ந்தது. இதை வைத்துக்கொண்டு அரை நூற்றுண்டுக்காலம் தமிழ் சமூகத்தை மானமுள்ள சமூகமாக மாற்ற ஓய்வின்றி உழைத்த ஒரு மாமனிதனை கேள்விக்கு உட்படுத்திவிடலாம் என நினைப்பது அறியாமையின்றி வேறொன்றும் இல்லை.

பாபா படத்தில் ஒரு பாட்டு கவிஞர் வாலி எழுதியிருப்பார். ‘ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்’ என்று. அந்த அதிசயங்களில் ஒன்றாக நாத்திகம் மறைந்து ஆத்திகம் பூப்பதும் வரும். அந்த வரிகளைக் கவனிக்க வேண்டும்.

கடவுளை மறுத்து

இவன் நாள் தோறும்

கூறினானே நாத்திகம்

பகுத்தறிவாளனின்

நெஞ்சினிலே பூத்த

தென்ன ஆத்திகம்

திருமகன் வருகிற

திருநீரை நெற்றி மீது

தினம் பூசி

அதிசயம் அதிசயம்

பெரியார் தான்

ஆனதென்ன ராஜாஜி

பெரியார், ராஜாஜி ஆகும் அதிசயம் பாபாவின் ஜாதகத்தில் இருக்கலாம். தமிழக வரலாற்றில் அதற்கு இடம் கிடையாது. இங்கு பெரியார்கள் மட்டுமே பெருகுவார்கள். ஏனெனில் பெரியார் என்பது நாத்திகமல்ல; சமூக நீதி.
 

https://minnambalam.com/k/2020/01/20/15

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு வேற வேலை இல்லை

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 26ம் திகதி உண்ணாவிரதம், 28 ம்திகதி ஹர்த்தால்- தமிழ்கட்சிகள்தீர்மானம்   தியாகதீபம் திலீபனின் நினைவு தினமான 26 ம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்தேஇந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்துஅவசரமாக ஒன்றுகூடிய பத்துதமிழ்கட்சிகள் இது குறித்துதீர்மானித்துள்ளன. 6ம் திகதி திலீபனின் நினைவேந்தல்நிகழ்வை ஆலயங்களில் விசேடபூஜைகள்மூலமும் வீடுகளில்இருந்தவாறும் நினைகூறுமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை எட்டுமணிமுதல் மாலை ஐந்துமணிவரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. எதிர்வரும் 28 ம்திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. http://www.ilakku.org/26ம்-திகதி-உண்ணாவிரதம்-28-ம்த/
  • மாதவிவனேஸ்வரர் அருகினில்    
  • திலீபன் நேசித்த தமிழரின் தேசத்தை உருவாக்க அணிதிரள்வோம்   தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாம் நாள் நினைவுகளுடன் திலீபனையும், தோழர்களையும் அவர்கள் நினைவுடன் எம்முன் உள்ள பணிகளையும் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள், பத்தாம் நாள் திலீபனை நாங்கள் தான் பார்க்க முடிந்தது. அவரால் எங்களைப் பார்க்க முடியாத நிலை, நினைக்க முடியாத நிலை. மேடையில் நிற்கவும் வேண்டும். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நின்றவர்களுக்கு தலை சுற்றுகிறதா? தலை இடிக்கிறதா? அல்லது தலையில் யாரும் பாரம் வைத்து விட்டார்களா? மனம் அழுகிறது. கண்ணீரை காணவில்லை, உறுதியும், இனமான உணர்வும் மட்டுமே எஞ்சியிருக்க, உடல் உணர்வுகளும், செயற்பாடுகளும் மந்தமாகி எம்மில் இருந்து திலீபன் தூரமாகிப் போகிறான் என்பதும், இந்த தாங்க முடியாத துயரத்தையும், எம் எதிரே தோன்றவுள்ள நெருக்கடிமிக்க போராட்ட நாட்களையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை. பத்தாம் நாள் அங்கு நின்ற இலட்சக்கணக்கான மக்கள் எல்லோரும் இந்திய அரசை நம்பி ஏமாந்து விட்டோம் என்ற உணர்வுடன் குழறி அழுதார்கள். திரு. டிக்சித் ஒன்பதாம் நாள் நேர்மையான முடிவு எடுத்திருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் கூட நடந்திருக்காது. 33 ஆண்டுகளிற்கு முன் இந்தியாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை உண்மையான சதுரங்க ஆட்ட வீரன் திலீபன் விளங்கித் தான் இந்த முடிவை எடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 1986 இல் லெப். கேணல் பைப் என்று அழைக்கப்படும் போராளி ( தற்போது வீரமரணம் அடைந்து விட்டார்) காயப்பட்டு சிறுப்பிட்டியில் உள்ள அவரின் சொந்த வீட்டில் இருக்கும் போது, இரவு திலீபன் வானில் அவரை பார்க்க சென்றிருந்தார். போகும் போது புன்னாலைக்கட்டுவன் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த என்னையும் அழைத்துச் செல்வார். அப்போது எனக்கு வான் ஓட பழக்கி விடுவார். முதன்முதல் எனக்கு மோட்டார் சைக்கிள் பழக்கியவர் மேஜர் அல்பேட். வான் ஓடப் பழக்கியவர் திலீபன். முதல் நாள் பைப் வீட்டிற்கு திரும்பும் ஒழுங்கை மதிலை உரசிக் கொண்டு வானை திருப்பி விட்டேன். ஆனால் திலீபனோ நான் பயப்பட்ட மாதிரி நடந்து கொள்ளாது, எனக்கு ஊக்கம் தருவது போல் கதைத்து வான் ஓடக் கற்றுத் தந்தார். பைப் வீட்டை போய் அவருடன் சதுரங்கம் விளையாடுவார். பைப்பின் அக்கா அம்மா உணவு பரிமாறுவார்கள். மாணவப் பருவத்தில் விளையாடத் தொடங்கிய சதுரங்க வீரன், சதுரங்க விளையாட்டை இறுதி வரை விளையாடி மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறான். 1983 இலிருந்து என்னுடன் பழகிய திலீபன், எனக்கு தெரிந்து விடுதலைக்காய் சிந்திக்காமல் இருந்திருப்பாரானால், அது அவர் வயித்தில் ஒப்பிரேசன் செய்யும் போது மயக்கிய வேளை மட்டுமாகத் தானிருக்கும். அடுத்து உண்ணாவிரதம் இருக்கும் போது பத்தாம் நாள் முதலான கடைசி மூன்று நாட்களும் என்று தான் என்னால் கூறமுடியும். அப்படிப்பட்ட ஒரு நண்பனை இழந்து 33 வருடங்கள் ஆனாலும் அவனுடன் பழகிய நாட்கள், நடந்த சம்பவங்கள் எல்லாம் மறக்கப்படாமல் பதிவு செய்யப்படவேண்டிய, பாதுகாக்க வேண்டிய, எம்மிடம் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப் பட வேண்டியதும். அதற்காக நாம் எல்லோரும் உழைப்பதும் தான் திலீபன் மற்றும் மாவீரர்கள் எல்லோருக்கும் செய்யும் காணிக்கையாகவிருக்கும். இந்த வேளையில், திலீபன் மற்றும், கிட்டண்ணாவுடன் சேர்ந்து உழைத்த நண்பர்களும் நினைவுக்கு வந்து போகின்றார்கள் இதில் பலபேர் மாவீர்களாக இருக்கின்றார்கள் சில பேர் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களையும், அவர்கள் நாட்டின் விடுதலைக்காய் உழைத்த நாட்களையும் மறக்க முடியாது. யாராலும் மறைக்கவும் முடியாது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், இன்று வாழும் பல நண்பர்களுக்கும் தெரியும். காலத்தின் தேவை கருதி இந்த வரலாற்று பதிவில் பதிவிடுகிறேன். 1993 இற்கு பின்னர் நிதர்சனம் நிறுவனத்திற்கு பொறுப்பாக புதிய போராளிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய சிந்தனையோடு நிர்வாகம் நடத்தத் தொடங்கினார்கள். அதில் ஒரு விடயமாக நிதர்சனம் தொலைக்காட்சியின் வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதி அண்ணையிடம் (தலைவரிடம்) காட்டினார்கள். எழுதியவர் பரதன் அண்ணாவின் பெயரை குறிப்பிடாது தவறுதலாக விட்டுவிட்டார். தலைவர் எழுதியவரை அழைத்து, தம்பி வரலாறுகளை உள்ளபடி எழுத வேண்டும். அதில் எழுதும் போது தவறுகள் விடக்கூடாது. பரதன் பெயர் வராமல் நிதர்சனம் வரலாறு இருக்க முடியாது என்று அறிவுறுத்திவிட்டு, எதிரியானலும் சரி, துரோகியானாலும் சரி, விலகியவர்களானாலும் சரி, அவரவர் அமைப்பில் இருந்து செய்த வேலைகளை வரலாறு என்று எழுதும் போது குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். எங்கள் இயக்க வரலாறு என்பது அவரவர் தங்கள் வரலாற்றை எழுதும் போது தான் முழுமை பெறும் என்றும், அண்ணை புதுவை இரத்தினதுரை அவர்களுடன் கதைக்கும் போது ஒரு தடவை கூறியதாக புதுவை அண்ணா கூறினார். இந்த வேளையில் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். தலைவர்கள் நல்லவர்கள். ஆனால் தகவல்களை சில பேர் கற்பனையிலும், தவறுதலாகவும் தெரிவிப்பதால், தலைவர்கள் தவறான முடிவுகளை எடுத்ததும் உண்டு. அவர்களும் மனிதர்கள் தானே. உலகத்தில் யாரும் தவறே செய்யவில்லை என கூறினால், அது மிகைப்படுத்தலாகி விடும். விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லை என்றாகிய பின்பும், புலி எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தும், புலி ஆதரவு கருத்துக்களை முன்வைத்தும் தமிழ் தேசிய அரசியல் செய்வோர், தழினத்தின் தேசிய அரசியலின் இலக்கினில் ஏதாவது ஒன்றை தமிழ் மக்களிற்கு பெற்றுக் கொடுத்தார்களா? 70 ஆண்டுகளாகியும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் நடாத்திய போதும் எங்கள் உரிமைகளை நிலைநாட்ட முடியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இந்த போராட்டங்கள் இவ்வளவு காலமும், பெற்ற வெற்றிகள், எம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை விருத்தி, உலகின் சுயநல போக்கு பற்றிய புரிதல், இழந்த உயிர்கள், சொத்துக்கள், புலம்பெயர்ந்த வாழ்வின் இன்பங்கள், துயரங்கள், வளர்ச்சிகள் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக அமைந்தன. இந்நிலையில் தமிழர் மீதான இன அழிப்பை நிறுத்த உலகம் ஏற்கும் மனித குலத்துக்கான, ஓர் தேசிய இனத்துக்கான நீதியை வலியுறுத்தி பெற நாம் என்ன செய்தோம்? செய்து கொண்டிருக்கின்றோம்? என்று நாம் செல்லும் பாதையை மீளாய்வு செய்து எம் பாதையையும் செப்பனிட்டு புதிய திறன் கொண்ட அணியாக பயணிக்க வேண்டியுள்ளது. திலீபன் விரும்பிய தமிழரின் சமதர்ம சோஷலிச தேசத்தை உருவாக்க அணிதிரள்வோம்.   http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-10/
  • தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், அண்டம் எனத் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் Universe என்பர். Universe ஆகிய இம் மேலை இந்தோ ஐரோப்பியச் சொல்லின் வரலாற்றினை விளக்குவதே இச்சொற்பொழிவாகும். மேலும் ‘ஒன்று-வட்டம்’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் திரிபே universe சொல். இக்கருத்தை முனைவர் கு.அரசேந்திரன் மூலமொழி ஆய்வில் விளக்குகிறார். ஒன்று-ஒன்னு என்ற தமிழ் பத்துப் பதினைந்தாயிரம் ஆண்டின் முன்  மேற்கில் oi-no என ஓர் தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக(Proto Indo European form)  மாறியது. இந்த oi-no பிறகு இலத்தீனில் unus என்று திரிந்து அதே ஒன்றினைக் குறித்தது. வட்டம் என்ற வளைவைக் குறிக்கும் தமிழ்ச்சொல் wer என தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக மாறி அதே வளைவுப் பொருளில் இலத்தீனில் versus எனத் திரிந்தது. versus ஆகிய இவ் வளைவு verse எனத் திரிந்து ஆங்கிலம் ஆகியது. ஒன்று ஆகிய unus சொல்லும்  verse ஆகிய வளைவுச் சொல்லும் சேர்ந்தே இறுதியில் universe என்ற  சொல்வடிவம்  ஆகியது. turn in to one என்பதே universe சொல்லின் மூலப் பொருளாகும்.”ஒன்று -unus” ஆகி” வட்டம்-vert-verse எனவாகி இரண்டும் சேர்ந்து universe ஆனதை ஓர் மெய்யியல் உரையாக 26.09.2020 அன்று நடைபெறும் தொல்லாய்வில் விளக்குகின்றார்.   நிகழ்வு நடைபெறும் நேரம்: அவுஸ்திரேலியா நேரம்: இரவு  22:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை  17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST) அமெரிக்கா நேரம்: காலை 08:00 (EST) இந்த சொற்பொழிவு நேரலையாக நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழி தொடர்புகளுக்கு: நேரலை: facebook.com/NostraticTamil சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம். FaceBook: facebook.com/NostraticTamil Twitter: twitter.com/NostraticTamil Website: nostratictamil.com YouTube: youtube.com/channel/UC-4MgLJ4K3anle5KJoy-noA   http://www.ilakku.org/தமிழின்-பார்வையில்-மூலமொ/
  • பெருமாளுக்கு பதில் சொல்லும் தூரப் பார்வை எனக்குக் கிடையாது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை எதையெல்லாம் செய்தால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியாமல் காக்க முடியும் என்று தேடித் தேடி பட்டியல் போட்டு செய்தார்கள். இதெல்லாம் கோத்தாவின் நேரடிப் பிளான் என்று சொல்ல வரவில்லை. ஆனால் , ட்ரம்ப் , போரிஸ், பொல்சனாரோ மாதிரி ஒன்று இலங்கையில் இருந்திருந்தால் 2004 சுனாமி மறக்கப் படும் அளவுக்கு கொரனா தாண்டவமாடி முடித்திருக்கும் என்பது உண்மை! இந்தியாவில் கொரனா உச்சம் தொடாத ஜூன் மாதத்தில் , கனேடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது "இந்தியாவில் ஆஸ்பத்திரி வசதிகள் இல்லை, எனவே பரவாமல் தடுப்பது மட்டுமே ஒரே தெரிவு" என்று சொல்லியிருந்தேன். சொன்னது போலவே நடக்கிறது இப்போது! 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.