• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

புலஸ்தினியின் மரபணு பொருந்தவில்லை!

Recommended Posts

புலஸ்தினியின் மரபணு பொருந்தவில்லை!

 

 

[Tuesday 2020-01-21 18:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து,  சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுக்கள், அவரின் குடும்ப உறவுகளின் மரபணுவுடன் பொருந்தவில்லை என்று விசேட குற்றவியல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுக்கள், அவரின் குடும்ப உறவுகளின் மரபணுவுடன் பொருந்தவில்லை என்று விசேட குற்றவியல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

   
 

கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணையின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 6 சந்தேக நபர்களுக்கான விசாரணையின்போது மன்றில் தோன்றிய விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

விசேடமாக, இந்த தாக்குதலின்போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணு பரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்று அவர் மன்றில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராந்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார்

மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

https://www.seithy.com/breifNews.php?newsID=239526&category=TamilNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

அப்படி என்றால் புலஸ்தினி எனும் இந்த தமிழ் பெண் உயிருடன் இருக்க வேண்டும்। இவள் மரணித்த ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியின் மனைவி। அரசு இது குறித்து விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்। 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் போக ரெடியா மாம்பழம் தின்ன ஆசையா  
    • மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மன்னாரில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையாக மஹிந்த தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120 – 130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள். இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பின் 19வது திருத்ததை இல்லாமல் செய்வதுடன், அவர்களின் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் 13ம் திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள். ஆனாலும், இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்காது. இப்படியான சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்குக் கேட்கின்றார்கள்.” – என்றார். https://newuthayan.com/பிரதமராகும்-வாய்ப்பு-ம/
    • இவர்கள் தமிழின விரோத இந்தியாவின் கைக்கூலிகளாகாவே அறிக்கைகளை விடுகிறார்கள்!
    • வேற்றுச்சேனை கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது. அங்கு வாழும் குடும்பங்கள் அனைத்தும் இந்து மதத்தினர். இங்கு இருக்கும் சக்திவாய்ந்த. அக்கோயிலுக்கு ஒரு நிலையான கட்டடம் இல்லை. இரண்டு உயரமான வேல்கள் உயரமான சீமெந்தினால் கட்டப்பட்ட மேடையில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்மையில் திடுதிப்பென்று வாகனங்களில் பௌத்த தேரர்கள் வந்தார்கள. இக்கோயிலும் அதைச் சூழவுள்ள காணியும் பௌத்த பீடத்திற்கு சொந்தமானவை எனக் கூறினார்கள். இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் விபரித்துக் கூறினர். இந்தக் கோயில் ஒரு புராதன கோயில். எங்களது ஊர் வளர்ச்சியைக் காணாத ஒரு ஊர். ஒரு ஆரம்பப் பாடசாலை கூட இல்லை. இந்த கோயில்களும் அதன் தெய்வங்களுமே எமக்குத் துணை. ஆண்டாண்டு காலமாக நாங்கள் வழிபாடு நடத்துகிறோம். வேளாண்மை அறுவடை முடிந்த பின் ஒரு பொங்கல் வைத்து வைரவரை வழிபடுவோம்.அது ஒரு விழா. அதற்கென குறிப்பிட்ட நாள் இருக்கிறது. அது ஆனி மாதத்தில் வரும் பூரணையாகும். வழக்கம் போல அன்றும் பூசை நடந்தது. திடுதிப்பென்று வாகனங்களில் பௌத்த தேரர்கள் வந்தார்கள. இக்கோயிலும் அதைச் சூழவுள்ள காணியும் பௌத்த பீடத்திற்கு சொந்தமானவை எனக் கூறினார்கள். நாங்கள் எங்களது கோயிலின் வரலாற்றைக் கூறினோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அபேட்சகர் சாணக்கியனும் அங்கு வந்து விட்டார் அவர் நிலைமைகளை விபரித்தார். எமது கிராமத்தவர்கள் ஒன்றுதிரண்டு எங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததும் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். இதையடுத்து இக்கோயிலின் முன்னோடிகள் வெல்லாவெளி பொலிஸாரால் களவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் இனிமேல் இவ்விடயங்களில் தலையிடக் கூடாதென சிலருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது. இது பற்றி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி வண.சுமனரத்ன தேரரைச் சநதித்து உண்மை நிலையை அறிய வினவிய போது அவர், “வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் நடந்தேறிய விடயத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றார். “பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் இருந்தால் அதனை எப்படி அணுக வேண்டும் என்ற செயற்பாடுகள் பௌத்த துறவிகளுக்குத் தெரியாததல்ல. இப்படியான போலி நடவடிக்கைகளை யாருமே அனுமதிக்க முடியாது. நான் இவ்விடயத்தைக் கேள்விப்பட்டு பக்கத்தில் இருக்கும் சின்னவத்தை விகாராதிபதியோடு தொலைபேசியில் தொடர்பு கோண்டேன். சம்பவம் பற்றி விசாரித்தேன். அவரும் எனது நிலையிலேயே ஒன்றும் அறியாதவராக இருந்தார். ஆகையால் என்ன நடைபெறுகிறதென்று பார்ப்பதற்காக ஸ்தலத்திற்குச் சென்றேன். புதையல் தோண்டுபவர்களின் போலி நாடகமாக அது இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு அப்போதே தோன்றி விட்டது. ஆயினும் பொலிஸார் தலையிட்டிருந்ததால் அவற்றுள் நான் தலையிட விரும்பவில்லை. இதனை வேத்துச்சேனை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இது எனது கோரிக்கை”. இவ்வாறு கூறினார் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி வண.சுமனரத்ன தேரர். இதுபற்றி அப்பகுதி பிரதேச சபையின் தவைர் ரஜனி கருத்துத் தெரிவிக்கையில் “இக்கோயில் அமைந்துள்ள இடம் ஒரு பூர்வீகமானது. வேத்துச்சேனையை சேர்ந்த மு.அமுதன் என்பவருக்கு இக்காணி சொந்தமானது. இதற்கான உறுதி அவரிடம் உள்ளது. நடந்த சம்பவம் ஆச்சரியமானது. எனக்கு இவ்விடயத்தில் தலையிடக் கூடாதென நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்” என்றார். அங்கு நடந்துள்ள சம்பவம் ஒரு போலி நாடகம் என்றுதான் மக்கள் தெரிவிக்கிறார்கள்.- https://www.ibctamil.com/srilanka/80/146818