ராசவன்னியன்

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்..

Recommended Posts

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்..

 

அடுத்த மாதம் திருமணம் நிகழ இருந்த நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் காணாமல் போயுள்ள சம்பவம் சபசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் இளம் ஜோடி ஒன்று நிச்சயத்தார்த்தம் முடிந்து, பிப்ரவரி மாதம் திருமணம் முடிக்க இருந்த நிலையில், அவர்களின் வாழ்வில் இடி ஒன்று விழுந்தாற்போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 10ஆம் தேதி, மணமகனின் தந்தை காணாமல் போயுள்ளார். அதேவேளையில், மணமகளின் தாயாரும் காணாமல் போயுள்ளார். இருவரையும் தேடிப்பார்த்த உறவினர்கள் எங்கும் காணாததால் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த தகவலின் படி, இருவரும் இளம் வயதில் காதலித்ததாகவும், அப்போது ஓடிச் சென்று திருமணம் செய்ய முயற்சித்ததாகவும் தெரிகிறது. ஆனால், வைர வியாபாரி ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதால், பின்னாளில் இருவீட்டாரும் நண்பர்களாக பழகியுள்ளனர். தற்போது அந்த பெண்ணின் மகளுக்கும், அந்த நபரின் மகனுக்கும் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், பழைய காதலில் இருந்த இருவரும் ஓடிவிட்டதாக அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

 

தமிழ் நியூஸ் 18

  • Haha 3

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, ராசவன்னியன் said:

கடந்த ஜனவரி 10ஆம் தேதி, மணமகனின் தந்தை காணாமல் போயுள்ளார். அதேவேளையில், மணமகளின் தாயாரும் காணாமல் போயுள்ளார். இருவரையும் தேடிப்பார்த்த உறவினர்கள் எங்கும் காணாததால் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த தகவலின் படி, இருவரும் இளம் வயதில் காதலித்ததாகவும், அப்போது ஓடிச் சென்று திருமணம் செய்ய முயற்சித்ததாகவும் தெரிகிறது. ஆனால், வைர வியாபாரி ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதால், பின்னாளில் இருவீட்டாரும் நண்பர்களாக பழகியுள்ளனர். தற்போது அந்த பெண்ணின் மகளுக்கும், அந்த நபரின் மகனுக்கும் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், பழைய காதலில் இருந்த இருவரும் ஓடிவிட்டதாக அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

Image may contain: 1 person

என்னடி... இது, புது கூத்தாய்... இருக்கு❓ :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, text

 

Image may contain: 3 people, people smiling, text

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • கட்டார் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கும் கொரோனா Rajeevan Arasaratnam May 31, 2020கட்டார் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கும் கொரோனா2020-05-31T11:55:17+00:00 மாலைதீவு கட்டாரிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் மத்தியில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது . நேற்று 62 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் இவர்களில் 25 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் 37 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர்களில் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்ட மூவரும் கட்டார் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் உள்ளனர் என தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.   http://thinakkural.lk/article/44365
    • கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை Bharati May 31, 2020கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை2020-05-31T13:38:06+00:00 யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தம்மை சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த குழு அங்கிருந்து 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் சென்று, அட்டகாசம் புரிந்தனர். பின்னர் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யுவதியை கடத்திச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யுவதி விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யுவதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   http://thinakkural.lk/article/44387 மந்துவிலில் வீடு புகுந்து யுவதி கடத்தப்பட்டு விடுவிப்பு – இருவர் சிக்கினர் யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மந்துவில் வடக்கு முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இன்று (30) அதிகாலை ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு ஒன்றுக்குள் புகுந்த குழுவினர் தந்தையை கட்டி வைத்துவிட்டு மகளான யுவதியை (20-வயது) கடத்திச் சென்றுள்ளனர். வாள், கத்தி மற்றும் கொட்டன் போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த 7 முதல் 10 பேர் கொண்ட குழுவே குறித்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளது. இது தொடர்பில் யுவதியின் தந்தை தெரிவிக்கையில், ‘தம்மை பொலிஸ் சிஐடி எனக்கூறியபடி குழு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. பொலிஸாருக்கு முறையிட முயன்ற போது எனது கைபேசியை தட்டிவிட்டு என்னை தாக்கி கட்டிப்போட்டு மகளை கடத்தி சென்றனர்’. – என்றார். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட யுவதியை சில மணி நேரங்களில் யுவதியின் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் விடுவித்து குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது. இதனையடுத்து யுவதியை மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இருவரை கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணை ஒரு வருடமாக காதலித்த ஒருவரே இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஊரடங்கை மீறி, வீட்டுக்குள் அத்துமீறியமை, யுவதியை கடத்தியமை தொடர்பில் இருவரை கைது செய்தோம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மேலதிக சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து வருகிறது. யுவதியை நாளை (01) சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   https://newuthayan.com/மந்துவிலில்-வீடு-புகுந்/
    • சானிடைய்சர் சரவணன்  கை கழுவு கணேஷ்  தனிமை படுத்து தனுஷ்  சமுதாய இடைவெளி சந்தோஷ்  வெட்டுக்கிளி வெங்கி வெட்டுகிளி   வெண்ணிலா  லாக்டவுன்     லதா கோவிட் கோவிந்தன் முகமூடி      முணியாண்டி கொரோனா  கோகிலா முகமூடி   மும்தாஜ்  சானிட்டைசர்   சாம்பவி  லாக்டவுன்   லாவண்யா  ஊரடங்கு   ஊர்வசி  வெட்டுக்கிளி    வெள்ளையம்மா  அகல் விளக்கு    அகல்யா  டார்ச் லைட்    டயானா.