Jump to content

சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம்

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது அங்கு பல நகரங்களிலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வைரஸ் பரவும் வேகம் அசாதாரணமான வகையில் அதிகரித்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸினால் 200 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பீஜிங், ஷங்காய் மக்களும் அதில் அடங்குகின்றனர். வைரஸ் தாக்கத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான், தாய்லாந்து, மற்றும் தென் கொரியா நாடுகளிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானோருக்கு நியூமோனியா காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத் தரப்பினர், ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு இலகுவாக தொற்றக்கூடியது என தெரிவித்துள்ளனர். லுனா புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு சீன மக்கள் தயாராகியுள்ள நிலையிலேயே, வைரஸ் தொற்று பரவி வருகின்றது. -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/சீனாவில்-தீவிரமாக-பரவும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதத்தில் சிங்கப்பூர்,  மலேசியா, தாய்லாந்து  போக யோசித்து  டிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தியா . . .!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கறுப்பி said:

மார்ச் மாதத்தில் சிங்கப்பூர்,  மலேசியா, தாய்லாந்து  போக யோசித்து  டிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தியா . . .!

அங்காலை பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா பக்கமும் போகலாம் தானே?
சும்மா பகிடிக்கு சொன்னனான்.  பிறகு கோபிக்கப்படாது.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஐரோப்பாவில்... பறவை காய்ச்சலும்  ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ATHAVAN-NEWS-57.jpg

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சீனாவிலிருந்து கடந்த 15ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்ற ஒருவரே, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் பரவிய குறித்த வைரஸினால் சுமார் 350 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த வைரஸின் தாக்கல் சீனாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தற்போது பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைரஸ் தொற்று காரணமாக, வட கொரியா தமது எல்லைப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸினால்-பாதிக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கொரோனா வைரஸ் அமெரிக்கா வரை பரவியது: மருந்து இல்லாததால் சிக்கல்

New China virusபடத்தின் காப்புரிமைKEVIN FRAYER

மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

tamil.gif

அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 வயதுகளில் இருக்கும் நபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் சமீபத்தில் சீனாவின் வுகான் மாகாணம் சென்று திரும்பியவர்கள்.

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வட கொரியா தற்காலிகமாக வெளிநாட்டவர்களுக்கு தங்களது எல்லையை மூடியுள்ளது.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகள் வுகான் மாகாணத்தில் இருந்து வரும் விமானப் பயணிகளை சோதனை செய்தே அனுமதிக்கின்றன.

வைரஸ் பரவுவது எங்கு தொடங்கியது?

2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.

இந்த வைரஸ் பரவல் சீன நகரமான வுகானில் தொடங்கியது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த வைரஸ் பரவல் சீன நகரமான வுகானில் தொடங்கியது.

11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.

வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இபோலா, பன்றிக் காய்ச்சல் ஆகியவை பரவியபோது அறிவிக்கப்பட்டதுபோல, இந்த வைரஸ் பரவலையும் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று முடிவு செய்யவுள்ளது.

சர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்?

2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.

கொரோனா வைரஸ் வகைகளில் இதுவரை ஆறு மட்டுமே அறியப்பட்டிருத்தன. (கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகொரோனா வைரஸ் வகைகளில் இதுவரை ஆறு மட்டுமே அறியப்பட்டிருத்தன. (கோப்புப்படம்)

இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.

சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

இதற்கு என்ன சிகிச்சை?

இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.

இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும்.

மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-51202463

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

ATHAVAN-NEWS-57.jpg

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

 

 

விதைச்சவனுக்கும் பங்கு வேண்டும் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பரவப் போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 1/21/2020 at 8:18 PM, கிருபன் said:

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது அங்கு பல நகரங்களிலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

1-B116249-2-CF1-42-DD-992-C-EA9-C4-A2467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wuhan.jpg

கொரோனா வைரஸ் : சீனாவின் ஹூபே மாகாணம் மூடப்பட்டது

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக சீனாவின் ஹூபே மாகாணத்தில் அனைத்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹூபேயின் தலைநகரான 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட வுஹானிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.

அங்கு 17 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த நகருக்கு உள்ளேயும் வெளியேயும் பேருந்து, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறைந்தது நான்கு மாகாண நகரங்களில் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தேநீர்ச் சாலைகள், திரையரங்குகள் மற்றும் கண்காட்சிகள் என்பன மூடப்பட்டுள்ளன.

சந்திரப் புத்தாண்டு விடுமுறைக்காக மில்லியன் கணக்கான சீன மக்கள் நாடு முழுவதும் பயணம் செய்வதால் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தலைநகர் பெய்ஜிங்கில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

500 க்கும் மேற்பட்டவர்ளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் வுஹானில் உள்ள ஒரு கடல் உணவுச் சந்தையில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

நகரில் முகமூடி (mask) அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ரப்பர் கையுறைகள் மற்றும் அறுவைச் சிகிச்சையின்போது பயன்படும் முகமூடிகளுக்கான தேவை அங்கு அதிகரித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-சீனாவின்-ஹூ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Capture-6-720x450.jpg

கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது? விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய கொரோனா வைரஸ், வுவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வுவான் நகரில் உள்ள கடல் உணவு சந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸ் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயற்பட்டன.

மத்திய வுவானில் உள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் கோலாக்கள், எலிகள் மற்றும் ஓநாய் குட்டிகள் விற்கப்படுகிறது.

இதற்கிடையில் வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க வுவான் நகரில் உள்ள யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், சீனாவின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் வுவான் நகருக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனிதர்களின் நுரையீரலை தாக்கி, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை உருவாக்கி, மரணத்தை ஏற்படுத்தக் கூடியது கொரோனா வைரஸ். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது.

சீனாவின் வுவான் நகரில் உருவாகி உள்ள இந்த வைரஸ், தற்போது சீனா மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 550 இற்க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-எப்படி-உருவ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.