Jump to content

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

 

யாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது.

01.jpg

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியது.

பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்து வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த நவம்பரில் பணித்தது.

இலங்கை இராணுவத்தின் அழுத்தத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமிக்கு வழங்கியது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அந்தக் காலப்பகுதியிலிருந்த பேரவையும் ஒப்புதல் வழங்கியது.

அத்துடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் நீதிமன்றங்களில் முன்னிலையாகி சட்டத்தரணியாகக் கடமையாற்ற முடியாது என்ற சுற்றறிக்கையையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த நவம்பரில் வெளியிட்டது.

இந்த நிலையில் பல்கலைக்கழங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் இணைப்பதற்காக தன்னை சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்ய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஆவணங்களை வழங்குமாறு மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் ஊடாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் கோரியிருந்தார்.

அந்த ஆவணங்களில் 2019 ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மறுத்துவிட்டது. அந்தக் கடிதத்தை பகிரங்கப்படுத்தவேண்டாம் என்று இராணுவம் ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய அந்தக் கடிதத்தை வழங்க முடியாது என்று கலாநிதி கு.குருபரனுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பதிலளித்திருந்தது.

இதுதொடர்பில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு கலாநிதி கு.குருபரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதுதொடர்பில் இரு தரப்பையும் அழைத்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று விசாரணை நடத்தியது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த கம்மம்பில தலைமையில் உறுப்பினர்கள் நீதிபதி ரோஹினி வல்கம, மூத்த சட்டத்தரணி கிஷாலி பின்ரோ ஜயவர்தன, மூத்த சட்டத்தரணி. எஸ்.ஜி.புஞ்சிஹேவா, கலாநிதி.செல்வி திருச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் செயலகத்தில் இன்று இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

“கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பகிரங்கப்படுத்த முடியாது என்ற வாசகம் இடம்பெறாத நிலையில் அதனை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மறுப்பது தகவல் அறியும் எனது உரிமையை மீறும் செயலாகும் என்று கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டார்.

கடிதத்தின் தன்மையை ஆராய்ந்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, அந்தக் கடிதத்தை மேன்முறையீட்டாளரான கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பணித்தது.

2019 ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/73749

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

இந்த நிலையில் பல்கலைக்கழங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஒரே வேலைநேரத்தில் இரண்டு சம்பளம் பெறுவது சட்டவிரோதம் என்ட அடிப்படை புத்தி இல்லாத சட்டத்தரணி.

இது போன்ற பேர்வழிகளால் மாணவர்களுக்கு எப்பிடி பயனுள்ள வகையில் வகுப்பெடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

ஒரே வேலைநேரத்தில் இரண்டு சம்பளம் பெறுவது சட்டவிரோதம் என்ட அடிப்படை புத்தி இல்லாத சட்டத்தரணி.

இது போன்ற பேர்வழிகளால் மாணவர்களுக்கு எப்பிடி பயனுள்ள வகையில் வகுப்பெடுக்க முடியும்.

நீங்கள் சொல்லுவது சரிதான்। இருந்தாலும் பொதுவாக இவர்களுக்கு வேலை செய்வதட்கான நேர அடடவனை இருக்கும்। அவர்களது விரிவுரை தவிர்ந்த நேரங்களில் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்। அப்படியான நேரங்களில் இவர் தனிப்படட வேலைகளை செய்திருக்கலாம்।

எனக்கு தெரிந்தபடி பொறியியல் பீட விரிவுரையாளர்கள் அவ்வாறு வேலை செய்வதுண்டு। ஆலோசக (Consultant ) வைத்தியராக இருப்பவர்களும் அப்படி செய்வதுண்டு।

எனவே இவர் எல்லாவற்றையும் கருத்திலெடுத்துக்கொண்டுதான் இந்த வேலையே செய்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன் ।

Link to comment
Share on other sites

6 hours ago, Vankalayan said:

எனக்கு தெரிந்தபடி பொறியியல் பீட விரிவுரையாளர்கள் அவ்வாறு வேலை செய்வதுண்டு। ஆலோசக (Consultant ) வைத்தியராக இருப்பவர்களும் அப்படி செய்வதுண்டு।

உங்களுக்கு தெரிஞ்சது மட்டும்தான் உண்மை என்று நினைக்காமல் முதல்ல நீங்களெல்லோ எல்லாத்தையும் கருத்துல எடுத்து கருத்தெழுதியிருக்கோணும்.

வைத்தியர்களோ பொறியலாளர்களோ வேலை செய்யும் நேரத்தில வெளிவேலை செய்ய ஏலா. ஆனா அப்பிடி சட்டவிரோதமான செய்றாக்களை நீங்க பாத்திருக்கலாம். ஆனா இவர்கள் தங்கட வசதிக்கேற்ப ஏனைய நேரங்களில வெளிவேலைகளை பிளான் பண்ணலாம். ஆனா புறபஸ்ஸர் மாணவர்களை இரவுல வந்து சந்திங்கோ என்று சொல்லேலா.

நீதிமன்று மாணவர் வசதி பார்த்து வழக்குத் தவணை கொடுக்காது. பிறகு இவர் மாணவர்களை அம்போ என்று விட்டுட்டு கோட்டிலதான் குடியிருப்பார்.

 

Link to comment
Share on other sites

15 hours ago, Gowin said:

உங்களுக்கு தெரிஞ்சது மட்டும்தான் உண்மை என்று நினைக்காமல் முதல்ல நீங்களெல்லோ எல்லாத்தையும் கருத்துல எடுத்து கருத்தெழுதியிருக்கோணும்.

 

 

நான் எழுதினதுதான் உண்மை என்று சொல்லவில்லை। எனது கருத்தை கூறினேன்। உங்களுக்கு தமிழ் கொஞ்சம் மட்டுபோல தெரியுது। நான் எழுதினத்தை மீண்டும் வாசித்து பாருங்கள்।

பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு இது விளங்கும்। வைத்தியருக்கும், ஆலோசக வைத்தியருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு। அவர்களுடைய  வேலை செய்யும் நேர அளவுகளிலும்  வித்தியாசம் இருக்கு। இருந்தாலும் நீங்கள் ஒரு மகா ஞானி।

 

Link to comment
Share on other sites

18 hours ago, Vankalayan said:

உங்களுக்கு தமிழ் கொஞ்சம் மட்டுபோல தெரியுது।

உலகில நீங்க மட்டும் தான் சகலகலாவல்லவன் என்டு அவிழ்த்துவிடுறீங்கள். அதுக்கு மேல பல்கலைக்கழகத்துல நீக்க படிச்சபடியா மற்ற ஆட்களுக்கு ஒன்டும் விளங்காது என்டு வேற அவிழ்த்துவிடுறீங்கள். போக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

5 hours ago, Rajesh said:

உலகில நீங்க மட்டும் தான் சகலகலாவல்லவன் என்டு அவிழ்த்துவிடுறீங்கள். அதுக்கு மேல பல்கலைக்கழகத்துல நீக்க படிச்சபடியா மற்ற ஆட்களுக்கு ஒன்டும் விளங்காது என்டு வேற அவிழ்த்துவிடுறீங்கள். போக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.

அதாவது சடட துறையில் பேராசிரியராக இருக்கும் ஒருவருக்கு சடடம் தெரியாத படித்த முடடாள் என்றும் நீங்கள் படி-------- மேதை என்றும் சொல்ல வருகிறீர்கள்। இப்போது வழக்கு நிலுவையில் இருக்கிறது । முடிவு வந்தபின் தெரியும் யார் முடடாள் யார் மேதை என்று। அது வரையும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நல்லது। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.