• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
போல்

சரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர்!

Recommended Posts

gota-colombo-telegraph-720x480-1.jpg

விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய உதவிகளை வழங்கமுடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது  தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/war-missing-claimed-dead/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்படித் திமிராக் கதைக்கும் கோட்டாவை எதிர்கொள்வதற்கு சுயநலமற்ற தமிழ் தலைமையை ஈழத்திலுள்ள புலத்திலுள்ள தமிழர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்குரிய முயற்சியாகவே வேரோரு திரியில் ஒரு healthy debate ஐ பற்றிய கருத்தை வைத்தேன் பலர் வந்து கருத்து வைத்தார்கள் ஆனால் நான் எதிர்பார்த்தது போல் எல்லோரின் பங்களிப்பும் இல்லை 

ஒரு நண்பர் கருணாவைத் தெரிவு செய்திருந்தார். ஒரு வகையில் அது சரியாக்கூட இருக்கலாம். இப்படியான ஆனாதரவாக இருக்கும் நேரத்தில் தமிழர்கள் எதிரிகளை கூட்டாமல் நண்பர்களை அதிகரித்து கோட்டா மகிந்த கும்பலை வெல்ல ஒரு வழியமைப்போம்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அந்த முரளிதரன்  கோத்தாவின் கைபொம்மையே.  தமிழரின் வாக்கு வாங்கி அதன்மூலம் கோத்தபாயவே   தமிழரின்  ரட்ஷகர் என்று சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்து எஜமானை சர்வதேச போர்குற்றத்திலிருந்து விடுவிக்க  இந்த கரெட்டி ஓணானும்,  தமிழரின் தலைவர்கள்  என்று  காட்டிக்கொடுத்த கூட்டத்தை சர்வதேசத்துக்கு காட்டி சந்திப்புகளை ஏற்படுத்தி தனக்கு சான்றிதழ் பெற சிங்களமும்  காத்திருக்குது. சிங்களத்தின் காவலில், தடுப்பில் இருந்து கொலை செய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆதாரங்களையும், உறவினர்களால் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆதாரங்களையும் திரட்டி சர்வதேசத்துக்கு அனுப்பி, இந்த கோத்தபாய ஒரு பொய்யன் என நிருபிக்க ஆவன செய்ய வேண்டும்.  ராஜதந்திரிகள் என பிதற்றுபவர்கள் இதைக்கூட செய்யல எண்டா இவர்கள் என்னதான் செய்து தமிழ்த் தலைவர்கள் என்று பேரம் பேசப்போகினம்?

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, satan said:

தமிழரின் தலைவர்கள்  என்று  காட்டிக்கொடுத்த கூட்டத்தை சர்வதேசத்துக்கு காட்டி சந்திப்புகளை ஏற்படுத்தி தனக்கு சான்றிதழ் பெற சிங்களமும்  காத்திருக்குது.

அதுக்கு சுமந்திரன், மாவை, ... இப்பிடி ஒரு கூட்டம் அண்டா குண்டாகளோட ரெடியா இருக்கீனம்.

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

சரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர்!

 

 

[Wednesday 2020-01-22 08:00]

இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே இதை தெரிவித்தார்.

இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே இதை தெரிவித்தார்.

   
 

போரின் இறுதி கட்டங்களில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவத்திடம் சரணடைந்தனர். எனவே பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். மேலும் இறுதிப் போரின்போது பலர் இராணுவத்தில் சரணடைந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விவகாரங்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் முறையான தீர்வொன்று கிடைக்கப்படாவிட்டால், உலகில் நிராகரிக்கப்பட்ட இனமான தமிழினம் மாற்றமடையும் என்றும் அவர் கூறினார்.

https://www.seithy.com/breifNews.php?newsID=239551&category=TamilNews&language=tamil

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and people sitting

ஆம்  கெளரவ ஜனாதிபதி அவர்களே! 
அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்ததுபோல் எங்களுக்கும் தெரியும் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்றுதான் கேட்கிறோம். அது உங்களுக்கு மாத்திரம்தான் தெரியும்

அவர்களை சுட்டுக்கொன்றீர்களா? இல்லை வெட்டிப்புதைத்தீர்களா? சுறாவுக்கு தீனியாக போட்டீர்களா? இதற்கு பதில் சொன்னால் போதும் காணாமல் போனோரை நாம் இனி தேடமாட்டோம்...

சுப்ரமணிய பிரபா

Share this post


Link to post
Share on other sites
On 1/20/2020 at 6:55 PM, Gowin said:

அதுக்கு சுமந்திரன், மாவை, ... இப்பிடி ஒரு கூட்டம் அண்டா குண்டாகளோட ரெடியா இருக்கீனம்.

அப்படியே விக்கி, சுரேஷ், கஜேந்திரன் , அனந்தி, சிவசக்தி, செல்வம்   இன்னும் அடுக்கலாம்।

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

ஆம்  கெளரவ ஜனாதிபதி அவர்களே! 
அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்ததுபோல் எங்களுக்கும் தெரியும்

:rolleyes:

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தமக்கு காட்டும்படி, ஒப்படைக்கும் படி அல்லவா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் தெரிவித்தனர்.

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

:rolleyes:

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தமக்கு காட்டும்படி, ஒப்படைக்கும் படி அல்லவா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் தெரிவித்தனர்.

நீங்கள் சொல்வது,  உண்மையாக இருக்க வேண்டும் என்றே நானும் விரும்புகின்றேன்.
அப்படி அவர்கள் இன்னும்..  இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால்,

எதிர்க் கட்சி தலைவராக இருந்த  சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்...
மைத்திரி, ரணிலுடன்... ஒட்டி உறவாடிய போது,
சாமர்த்தியமாக அவர்களை, வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும்.

அந்த புத்திசாலித் தனமும்.. கூட்டமைக்கு இல்லாமல் போனது...
தமிழ் மக்களின் தலைவிதி என்றே கூற வேண்டும்.   

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் சொன்னது சரி

On 1/24/2020 at 5:18 AM, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வது,  உண்மையாக இருக்க வேண்டும் என்றே நானும் விரும்புகின்றேன்.
அப்படி அவர்கள் இன்னும்..  இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால்,

எதிர்க் கட்சி தலைவராக இருந்த  சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்...
மைத்திரி, ரணிலுடன்... ஒட்டி உறவாடிய போது,
சாமர்த்தியமாக அவர்களை, வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும்.

அந்த புத்திசாலித் தனமும்.. கூட்டமைக்கு இல்லாமல் போனது...
தமிழ் மக்களின் தலைவிதி என்றே கூற வேண்டும்.   


ஆனால் சுப்ரமணிய பிரபா என்பவர் மிகவும் இலகுவாக அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் எங்களுக்கும் தெரியும் என்றது காணாமல் போனவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு எதிரானது.

Share this post


Link to post
Share on other sites
On 1/20/2020 at 6:55 PM, Gowin said:

அதுக்கு சுமந்திரன், மாவை, ... இப்பிடி ஒரு கூட்டம் அண்டா குண்டாகளோட ரெடியா இருக்கீனம்.

இதுல முக்கியமா சம்பந்தன், செல்வம் பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு சின்னத்தில கேட்டு பாராளுமன்றம் போய் சம்பந்தன் சாதிச்ச ஒரு விஷயம் தனக்கு கொழும்புல ஒரு வீட்டை பெற்றுக்கொண்டது தான்.

Share this post


Link to post
Share on other sites
On 1/24/2020 at 9:48 AM, தமிழ் சிறி said:

எதிர்க் கட்சி தலைவராக இருந்த  சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்...
மைத்திரி, ரணிலுடன்... ஒட்டி உறவாடிய போது,
சாமர்த்தியமாக அவர்களை, வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும்.

அந்த புத்திசாலித் தனமும்.. கூட்டமைக்கு இல்லாமல் போனது...
தமிழ் மக்களின் தலைவிதி என்றே கூற வேண்டும்.   

அப்பிடி சிங்களத்துக்கு ஒத்து ஊதினத்துக்கு பரிசா சம்பந்தனுக்கு ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this