• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை!

Recommended Posts

 

யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை! Top News

 

 

[Wednesday 2020-01-22 16:00]

யாழ்ப்பாணம்-  பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

யாழ்ப்பாணம்- பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

   
 

இந்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்தனர். திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

jaffna-murder-220120-seithy%20(1).jpg

 

 

jaffna-murder-220120-seithy%20(2).jpg

 

 

jaffna-murder-220120-seithy%20(3).jpg

 

 

jaffna-murder-220120-seithy%20(4).jpg

 

 
https://www.seithy.com/breifNews.php?newsID=239567&category=TamilNews&language=tamil  
 
    

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nunavilan said:

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்தனர். திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த அரசால் இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு, லண்டன் தூதரகத்தில் கழுத்தறுப்பதில் வல்ல பிரியங்காவின் வேலைக்கு அமர்த்தப்படுவார் என்று  நம்பலாம்.

ஒரே இடத்தில தான் உதைக்குது.

செத்தது சிங்களப் பிள்ளை ஆச்சே.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

காதலி ஏமாற்றியதால கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

கழுத்தை கத்தியால் அறுப்பேன் என்றதை ஊரெல்லாம் ஓவியம் வரைந்ததால் வந்த வினை..

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கொலை செய்தது அவவின் கணவனாம்...அவ யூனிக்கு படிக்க வரு முன்னரே அவர்கள்  பதிவு திருமணம் செய்து கொண்டார்களாம்...படிக்க வந்த பிறகு கூட  படிக்கின்ற பெடியனோட தொடர்பு என்று சந்தேகப்பட்டு  வெட்டியுள்ளார்....நல்ல காலம் உடனே பிடிச்சிட்டினம்.இல்லாட்டில் யாராவது தமிழ் பெடியனின் தலையில் விழுந்திருக்கும் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/23/2020 at 12:55 AM, ரதி said:

.நல்ல காலம் உடனே பிடிச்சிட்டினம்.இல்லாட்டில் யாராவது தமிழ் பெடியனின் தலையில் விழுந்திருக்கும் 

எல்லார் பேச்சும் அதுவாத்தான் இருந்திச்சு!

Share this post


Link to post
Share on other sites
On 1/22/2020 at 2:25 PM, MEERA said:

கழுத்தை கத்தியால் அறுப்பேன் என்றதை ஊரெல்லாம் ஓவியம் வரைந்ததால் வந்த வினை..

சரியான கூற்று. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு!   by : Jeyachandran Vithushan பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பரவலாக்கலானது முழு நாட்டிற்கும் அமுலாக வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் இதன்போது  வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது, கருத்து வெளியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸ்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடானது மிகவும் ஆக்கப்பூர்வமான ஒன்றென குறிப்பிட்டுள்ளார் அத்தோடு நியாயமாக தீர்வினை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். http://athavannews.com/சிங்கள-மக்களும்-ஏற்றுக்க/
    • கபித்தான், என்ன செய்வது। இப்படி இந்துக்கள் தனியே போனால் , கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் தனியேதான் போக வேண்டும்। வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை। பார்ப்பம் மாற்று  தலைமையும் வந்துவிட்ட்து।  இணையப்போராளிகளும் இருக்கிறார்கள்। அவர்களாவது எதாவது செய்யட்டும்।பிரபாகரன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது।
    • அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?   ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா! இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !
    • ஈழத்தில் போராளிகளின் காலத்தில் பாலியல் தொழில் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தது. மேல் எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களின் தாக்கம் இருக்கவே இல்லை. எதையும் சாத்தியமா என்றத்தில் இருந்து ஆரம்பிக்காமல்.. தேவையில் இருந்து ஆரம்பிப்பதே சிறப்பு. விபச்சாரத்தை அடியோடு அழிக்க முடியும். ஒரு வளமான சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.. எப்போது என்றால்.. விபச்சாரத்தின் தேவையை நோக்கி ஓடும் பெண்களினதும் ஆண்களினதும் தேவையை சரியான வழியில் இனங்கண்டு தீர்த்து வைப்பதன் மூலமும் இறுக்கமான சட்ட அமுலாக்கம் மூலமுமே... ஆகும்.  மாறாக விபச்சாரத்தை சட்ட ரீதியாக்கிவிட்டு.. சமூகச் சீரழிவுகளை இன்னும் இன்னும் தலைமேல் சுமக்கக் கூடிய அளவுக்கு எமது சமூகங்கள் பொருண்மிய பலம் பொருந்தியவை அல்ல. செயராலியோன் எனும் ஆபிரிக்க தேசம்.. விபச்சாரத்தால் சீரழிந்த தேசமாகி கிடக்கிறது. அங்கு மக்கள் தொகையில் பாதிப்பேர் எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.  விபச்சாரம் சட்டமாக்கப்பட்ட மேற்குலக நாடுகளில் விபச்சாரத் தொழில் முகவர்களின் சுரண்டல்கள்.. ஆட்கடத்தல்கள்.. தொடர் கொலைகள்.. சித்திரவதைகள்.. பால்வினை நோய்களின் தாக்கம் என்பன இன்றும் அரசுக்கும் சமூக அமைப்புகளுக்கும் தலையிடியான விடயமாகவே உள்ளன. ஆகவே இவற்றை சட்டமாக்கி.. சமூகத்தை சீர் செய்ய முடியாது. இல்லாதொழிப்பதன் மூலமே சமூகத்தை இவை சீண்டாதிருப்பதை உறுதி செய்ய முடியும். 
    • நல் வரவேற்பு நட்புடன் நனி நன்றிகள் துனியின்றி பிணியின்றி வாழந்திட வாழ்த்துக்கள் யாவர்க்கும்......