Sign in to follow this  
தமிழ் சிறி

காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம்

Recommended Posts

Modi-trumph.jpg

காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.

ட்ரம்ப்பின் சமரச முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், “காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்சினை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடமுடியாது.

பயங்கரவாத ஆதரவை முதலில் பாகிஸ்தான் கை விடட்டும். அதன் பின்னர் எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

மேலும் காஷ்மீர் பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்சினையைத் தீர்க்க தயாராக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஏற்கனவே ட்ரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்தபோதும் மீண்டும் ட்ரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையிலேயே இதனை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது.

http://athavannews.com/காஷ்மீர்-விவகாரத்தில்-ட்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • 5G வந்தா இங்கே உயிர் நிலைக்குமா?      
    • இத்தனை அழிவுகளைக் கேட்ட பின்னரும், அறிந்த பின்னரும் மதிகெட்டு அலையும் மடையார் கூட்டம்!   மதிகெட்டு அற்ப சொற்ப சலுகைகளுக்கு பின்னால் அலைந்து பழகியவர்களாக இருக்கவேண்டும்.
    • 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு. இந்நிலையில் 24 மணிநேரத்தினுள் எந்தவொரு சுகவீனமுமின்றி நல்ல சுகாதார நிலைமையைக்கொண்ட 5 வயது குழந்தை உட்பட 708 பேர் உயிரிழந்துள்ளமையோடு இதுவரையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4313 ஆக காணப்படுகின்றது. கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக சிற்சில நாடுகள் மிக கடுமையான முடக்கல்களை அமுல்ப்படுத்தியிருந்தாலும் பிரித்தானியா கடுமையாக முடக்காதுவிடினும் மக்களுக்காக சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது. ஆனாலும் அதை மக்கள் செவிமெடுக்காது கடந்த மாதம் அன்னையர் தினத்துக்காக வெளியிடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காது ஒன்றாக பொது இடங்களில் கூடியிருந்ததை பிரித்தானிய ஊடகங்கள் வெளிக்காடி இருந்தமையை அடுத்து மீண்டும் அரசு மக்களை வீடுகளில் முடங்கியிருந்து மருத்துவ பணியாளர்களை உற்சாகப்படுத்தி கொரோனா வைரஸ் பிடியில் சிக்குண்ட நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுமாறும் கேட்டிருந்தது. இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் மற்றும் பிரதமர் உட்பட இன்னும் சில உயரதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின்னரும் பிரித்தானியாவில் நாளாந்த உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றது. இந்நிலையில் பிரித்தானியாவில் இன்றைய காலநிலை மிகவும் நன்றாக இருப்பதனால் பல இடங்களில் பொதுமக்கள் கூடி இருப்பதை மீண்டும் பிரித்தானிய ஊடகங்கள் வெளிவிட்டிருக்கின்றன. இவ்வாறு தொடரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதனால் பிரித்தானிய மக்கள் அரச அறிவுறுத்தல்கள் எதனையும் கருத்திற்கொள்ளாது, கொரோனாவுக்கு பயப்படாது தத்தம் வேலைகளில் ஈடுபடுவதோடு வார இறுதி நாட்களில் சூரிய வெளிச்சத்திற்காக பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவே முடியாது. இதனாலேயே கொரோனா தொற்று இன்னும் அதிகமாக ஏற்படும் என்பதை அரசு அடிக்கடி சுட்டிக்காட்டினாலும் மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதும் பொலிஸாரால் அதைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதையும் பிரித்தானிய ஊடகங்கள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. https://www.tamilwin.com/uk/01/242680?ref=home-imp-parsely
    • என்னப்பா, மீண்டும் முதல்ல இருந்தா ?🙏