Jump to content

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 14ம் ஆண்டு நினைவு நாள் மட்டு காந்தி பூங்காவில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_23370_1579757025_BC90220D-E5FC-48AB-9FAC-1A48AF11834E.png

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது 

படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன்   படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகளாகின்ற போதிலும் இதுவரை   நீதி கிடைக்கவில்லை என  ஊடக அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இவ் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். 

மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன.

சுகிர்தராஜன் யுத்த சூழலிலுல் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆந் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம், தாயார் அருள் ஞானம்மா. அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக  பணியாற்றினார். அத்துடன்,  சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் - வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் -  எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றா நியூசில் - ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களால் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மிதுசா(19), சதுர்சன் (17) என்று 2 பிள்ளைகள் இருக்கின்றனர். உள்ளதை உள்ளபடி உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடக பணியை, நேர்மையாக செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருப்பதில்லை. இதில்  பலியானவர்களின் தொகை எண்ணிலடங்கா.  அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன், அவர்களின் நினைவு நாளில் அவர்களுக்கான மரியாதையை செலுத்துவதும், அவர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நினைவு கூருவதுமாகும்.

தனது 36 ஆவது வயதில் உயிரிழந்த சுகிர்தராஜன் 14வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு    நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன் போது அனைத்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும்  கலந்து கொண்டு அவரது  ஆன்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது 

http://battinaatham.net/description.php?art=23370

Link to comment
Share on other sites

இன்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள். (Jan 24, 2006)

2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட இந்த மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன.

அத்துடன், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள், அரசு சார்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை, இவர் சுடரொளியில் வெளியிட்டிருந்தார்.

சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக பணியாற்றினார். அத்துடன், சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் - வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் - எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றோ நியூசில் - ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.

இவருக்கு மிதுசா(19), சதுர்சன் (17) என்று 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.

உள்ளதை உள்ளபடி உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடக பணியை, நேர்மையாக செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருப்பதில்லை. இதில் பலியானவர்களின் தொகை எண்ணிலடங்கா. அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன், அவர்களின் நினைவு நாளில் அவர்களுக்கான மரியாதையை செலுத்துவதும், அவர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நினைவு கூருவதுமாகும்.

தனது 36 ஆவது வயதில் உயிரிழந்த சுகிர்தராஜன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகட்டும்!

அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் !

Image may contain: 1 person, selfie and closeup
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.