• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

வில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

Recommended Posts

வில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

 

by : Dhackshala

af0664f768f39076ef7666d777f8d3b2d8e19ff3

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் 27ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி சுற்றுச்சூழல் நீதி மையத்தால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது முற்றாக சட்டத்திற்கு முறனானது என்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வில்பத்து-காடழிப்பு-குறி/

Share this post


Link to post
Share on other sites

பணத்துக்கு சோரம் போகாமல் அரசாங்கம் இந்த வழக்கை முன்னெடுக்குமென்று எதிர்பார்க்கிறோம்। வில்பத்து மட்டுமல்ல சன்னார், பெரிய மடு போன்ற பகுதிகளிலும் பெருமளவில்  காடுகள் அழிக்கப்பட்டுள்ளது। அடைக்கலம் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும்போது சோனவனுக்கு கொண்டாட்டம்தான்।

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்த, சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்பு பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய  மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2019. ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞர்யிறு தின குண்டுத்தாக்குதல் இடம் பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் நிறைவுப் பெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றகரத்தன்மை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு இன்று பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்த ஊடக பிரிவில் கலந்துக் கொண்டு  தெளிவுப்படுத்துகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடக பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதராட்சி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                     https://www.virakesari.lk/article/76020
  • ‘எனது பெயர் வேண்டாம்’ ஹஸ்பர் ஏ ஹலீம் புதிய கட்டடங்களுக்குத் தனது பெயரை வைத்துத் திறக்க வைக்க வேண்டாம் எனவும் பொதுப் பணத்தைத் தான் வீட்டுக்குக் கொண்டுபோவதில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார். கந்தளாயில் உள்ள கந்தலாவ பாடசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டமொன்றை, இன்று (18) திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், "கல்வித்துறையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்க்கும் ஓர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன். கல்வி விவகாரங்கள் குறித்து கல்விச் செயலாளருடன் நாங்கள் நீண்ட விவாதம் நடத்தினோம்” என்றார். கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதே நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமெனக் கூறிய அவர், “நமது எதிர்காலத்துக்குத் தேவையான கல்வியை நம் குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறோம்” எனவும் தெரிவித்தார். மேலும், பெரிய, சவாலான பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்கப்பட வேண்டும். அதன்படி, ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் முக்கியமானதாகும் என்றார். http://www.tamilmirror.lk/திருகோணமலை/எனது-பெயர்-வேண்டாம்/75-245771
  • கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பக்கச்சார்பாகச் செற்படுவதாகவும் அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிகை எடுக்குமாறும் கோரி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இன்று (18) ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பல்லின சமூகங்களைக் கொண்ட பல மொழி, கலாசாரங்களை உடைய சமூக அமைப்பே இங்குள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், “இம்மாகாணத்தில், ஆட்சியாளர்களின் ஒருபக்கச் சார்பான செயற்பாடுகளுக்கு அடிபணிந்து சில அரச நிர்வாகங்கள் செயற்படுத்தப்பட்டதன் காரணமாக, சமூகங்களுக்கு மத்தியில் இன முரண்பாடுகள் ஏற்பட்டதே வரலாறாகும்” எனக் கூறியுள்ளார். “இம் மாகாணத்தில் உயர் பதவிகளுக்காக, அரசியல் ரீதியாக நியமன விதிமுறைக்கு முரணாக நியமனங்கள் செய்வதாலேயே, பக்கச் சார்பான செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன” எனவும் அவர் கூறியுள்ளார். “இதன்காரணமாக, மீண்டும் மீண்டும் இம்மாகாணத்தில் இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் அரிதாகிக் கொண்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ள அவர், “எதிர்காலத்தில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் மேற்கொள்ளப்படுகின்ற நிர்வாக ரீதியான செயற்பாடுகள், அனைத்து இன மக்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு அமைதல் வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி அமைப்பாளர்களைப் பதவிகளுக்கு நியமித்து, கட்சிகளுக்கான செயற்றிட்டங்களை அமுலாக்குமாறு கோருவதால்  மறைமுகமான தாக்கங்கள் உருவாகின்றன என விமர்சித்துள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் செய்யப்படும் போது, சரியான கொள்கையின் அடிப்படையில் நியமனங்கள் செய்யுமாறும் கேட்டுள்ளார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கு-ஆளுநர்-பக்கச்சார்பென-குற்றச்சாட்டு/73-245769
  • -எஸ்.குகன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதற்றடவையாக, 3 வருடங்களில் காய்க்கும் உயர் ரக தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன என்று, யாழ்ப்பாணப் பிராந்திய தென்னைப் பயிர்செய்கைச் சபையின் முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார். இது தொடர்பாகத் தொடர்ந்துரைத்த அவர், இந்தத் தென்னங்கன்றுகள், கைபிரட் தென்னை இனத்தைச் சேர்நதவையெனவும் ஒரு பயனாளிக்கு 2 தென்னம் கன்றுகள் வீதம் 20,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளனவெனவும் கூறினார். எனவே, உரிய பராமரிப்பு, நிலவசதிகள் உள்ளவர்கள், பிரதேசத்தில் உள்ள கற்பகதருச் சங்கங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனக் கேட்டுக்கொண்ட அவர், இதற்கான பதிவுகள் நிறைவடைந்தவுடன் இரண்டு வாரங்களில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுமெனவும் கூறினார். இந்தத் தென்னங்கன்றுகளை 26  அடி  இடைவெளியில் நடவேண்டுமெனவும், வைகுந்தன் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கைபிரட்-தென்னை-இனம்-யாழில்-நடப்படவுள்ளது/71-245749
  • ஒரு காரணம் இதை விட்டால் எயர் பஸ். அங்கும் நீண்ட காலம், 5 வருடங்களுக்கு மேலாக  காத்திருக்கவேண்டும். அடுத்தது, பலரும் பழைய, அதிகம் எரிபொருளை உள்வாங்கும் விமானத்தை பயன்படுத்தி இலாபத்தை அது குறைத்தும் வருகின்றது.