• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்!

Recommended Posts

5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்!

 

5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்!

 
அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர்.

19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது.

அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார்.

இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார்.

அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார்.
 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, nunavilan said:

ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார்.

CA623-E39-4283-42-EC-AEE4-A85-C37793-E45

Share this post


Link to post
Share on other sites

மகிந்த கப்சிப்.

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வெளிவர முடியாத எத்தனை துன்பங்களுடன் தினமும் உழர்கின்றனர் இவரைப்போல் பலர்.   பொடிக்கு வியாழ மாற்றம் நல்லா வேலை செய்யுது.
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
    • டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா     By Akeel Shihab     ICC   தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது.  அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டி20 சர்வதேச போட்டி இன்று (23) போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது.  முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டிக்காக எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாத நிலையில் படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி 3 மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டுவைன் பிரிடோரியஸ் மற்றும் அண்ரிச் நோட்ரியா ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட ஜொன் ஜொன் ஸ்மட்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அணியிலிருந்து தூக்கப்பட்டனர்.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் குயின்டன் டி கொக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.  குயின்டன் டி கொக் அதிரடியாக ஆட முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் 7ஆவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த முன்னாள் அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் 15 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.  மறுமுனையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த அணித்தலைவர் குயின்டன் டி கொக் 31 பந்துகளில் டி20 சர்வதேச அரங்கில் தனது 6ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்த நிலையில் 15ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் மொத்தமாக 70 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த ரைஸ் வென் டர் டைஸன் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் மொத்தமாக 37 ஓட்டங்களை பெற்று 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  ஆரம்பத்தில் முதல் பவர்-பிளே ஓவர்களில் கிடைத்த ஓட்டவீதம் பின்னர் கிடைக்காத காரணத்தினால் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆடுகளத்தில் டேவிட் மில்லர் 11 ஓட்டங்களுடனும், பைட் வென் பில்ஜொன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.  அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பெட் கம்மிண்ஸ் மற்றும் அடம் ஸம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். 159 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவு சிறந்த ஆரம்பம் கிடைத்தது.  ஐந்தாவது ஓவரில் அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களை குவித்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கிடையில் 50 ஓட்டங்கள் பகிரப்பட்டது.  இவ்வேளையில் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி இக்கட்டான நிலைக்கு உள்ளானது. தொடர்ந்து 18ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியது.    இறுதி 2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் மீதமிருக்க அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மெத்யூ வேட் வந்த வேகத்திலேயே 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதி ஓவரில் அஸ்டன் அகார் 5 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இறுதியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது.  மறுமுனையில் டேவிட் வோர்னர் டி20 சர்வதேச அரங்கில் தனது 16ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாலும் அவர் 56 பந்துகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் லுங்கி ங்கிடி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அண்ரிச் நோட்ரியா, ககிஸோ ரபாடா, மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.  போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் தெரிவானார். தென்னாபிரிக்க அணியின் இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி டி20 சர்வதேச போட்டி எதிர்வரும் புதன்கிழமை (26) கேப்டவுணில் நடைபெறவுள்ளது.