Jump to content

‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Sivaboomi-Museum-Open.jpg

தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்

யாழ்ப்பாண வரலாற்றில் முதன்முறையாக ‘சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி (சனிக்கிழமை) இந்த அரும்பொருட் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.

சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் ஆகியோரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமன்றி எமது முன்னோர்கள் பயன்படுத்திய வண்டிகள், கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உட்பட எங்களுடைய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன்படி 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.

அத்துடன், தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாகனம் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

முதலாவது, தளத்திலே எங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பித்தளைப் பாத்திரங்கள் தொடக்கம் ஆரம்ப காலத்தில் வெளிவந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, எம் முன்னோர் பயன்படுத்திய அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உட்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்கள் என இவையெல்லாம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இரண்டாவது தளத்தில், ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் எமது சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வரலாற்றை வெளிப்படுத்துகின்ற பெயர்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியிலேயே வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மூன்றாவது தளத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு ஒரு பிரமாண்டமான அரும்பொருள் காட்சியகமாக இது உருவாக்கப்படவுள்ளது.

Jaffna-Sivaboomi-Museum-Open-2.jpg

Jaffna-Sivaboomi-Museum-Open-3.jpg

http://athavannews.com/தமிழர்-வரலாற்றைப்-பறைசாற/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நாளை “சிவபூமி”அரும்பொருள் காட்சியகம் திறப்பு

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் நாளை சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமன்றி எமது முன்னோர்கள் பயன்படுத்திய வண்டிகள், கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உட்பட எங்களுடைய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன்படி 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.அத்துடன், தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாகனம் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் எமது சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வரலாற்றை வெளிப்படுத்துகின்ற பெயர்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.3

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு ஒரு பிரமாண்டமான அரும்பொருள் காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது.அத்துடன் 1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியிலேயே வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.2

மேலும் தமிழர் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.பித்தளைப் பாத்திரங்கள் தொடக்கம் ஆரம்ப காலத்தில் வெளிவந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, எம் முன்னோர் பயன்படுத்திய அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உட்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்களும் காணப்படுகின்றது.

சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் ஆகியோரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-நாளை-சி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில்  மிக மிக அவசியமான ஒன்று. சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்.....!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

இன்றைய காலகட்டத்தில்  மிக மிக அவசியமான ஒன்று. சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்.....!  💐

உண்மை.... சுவி.
ராஜனிக்கு... 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து,  படம் எடுக்கும் நிறுவனங்கள் போன்றவை...
இந்த விடயத்திற்கு...  "அள்ளிக்  கொடுக்கா விட்டாலும், கிள்ளிக்  கொடுத்தாலே"..  காணும்.
அந்த இடத்தை... இன்னும் சிறப்பாக செய்வார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.