• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

மட்டக்களப்பு.. தமிழ் ஊடகவியலாளர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்

Recommended Posts

Batti-2-2-720x450.jpg

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு. ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது.

மட்டு. ஊடக அமையத்திற்குள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்று அலுவலகத்தை திறந்தபோது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை! இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ்.

இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் துண்டு பிரசுரத்தில் ஊடகவியலாளர்களின் ஒளிப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

Batti-4-1.jpg

Batti-1-2-640x480.jpg

Batti-5-1-640x480.jpg

http://athavannews.com/தமிழ்-ஊடகவியலாளர்களுக்க/

 

Share this post


Link to post
Share on other sites

எப்படி எதியோபியன் தன் தோலையும் சிறுத்தைப்புலி தன் புள்ளியையும் மாற்ற முடியாதோ (எரேமியா 13 ; 23 ) இந்த அரசின் பழைய குணத்தையும் மாற்ற முடியாது போலத்தான் தெரிகிறது। உண்மையாக என்ன நடந்தது என்பதை அங்குள்ளவர்கள்தான் தெரிவிக்க வேம்டும்। சில வேளைகளில் அரசுக்கு அபகீர்த்தி வருவதட்காக விஷமிகள் செய்ததாகவும் அரசு கதை விடலாம்। 

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, Vankalayan said:

சில வேளைகளில் அரசுக்கு அபகீர்த்தி வருவதட்காக விஷமிகள் செய்ததாகவும் அரசு கதை விடலாம்। 

அப்பிடி சொல்லிக் கொண்டும்,  தூண்டி விட்டும் எல்லா அட்டூழியங்களையும் செய்து முடிக்கவேண்டியது. அது இப்போ அவர்கள் பக்கம் திரும்பும் காலமும் நெருங்கி விட்டது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக  தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சை படுதினால் அவருக்கு எதிராக போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துல்லனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டுறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் சுகந்தி ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்டாவது, நீதியரசர் விக்னேஸ்வரன்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாழ்வதாக அண்மையில் கூறியதனூடாக  எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி சாயாம் பூசி சிறிலங்கா அரசின் ஓஎம்பிக்குள் முடக்க எத்தனிக்கிறாரா? தமிழர்களை காணாமலாக்கிய ஒட்டுக்குழுக்களை ஒன்றாக்கி ஒட்டுக்குழுக்களின் கூட்டணி அமைத்திருக்கும் விக்கினேஸ்வரனுக்கு எம்மையும், எமது போராட்டத்தையும் எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்.விக்கினேஸ்வரன் நீதியரசர் என்ற பெயரை வைத்துக்கொண்டு நீதிக்கும் ,நேர்மைக்கும் உண்மைக்கும் எதிரான கருத்தை வெளிகொண்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். எமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாழ்கின்றார் என்றால் அதற்கான ஆதாரங்களை விக்கினேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும். எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி  நீதி வேண்டி போராடி வருகின்றது ஓ.எம்.பியை வெளியேறக்கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். எமது அமைப்பு கடந்த பிப்ரவரி 4 திகதி அன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்பு கொடிகளை தாங்கி போராடி எமது எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறு தூய்மையான போராட்ட அமைப்பின் மீது அரசியல் சாயத்தை பூசி அதை இல்லாமல் ஒழிக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? எனவும் கனகரஞ்சினி உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் ஓ.எம்.பி யை ஆதரித்து அவர்களுடன் பல தடவை ரகசிய பேச்சுக்களை நடத்தி யாழில் ஓ.எம்.பியைத் திறக்க வழி கோலிவிட்டு இலங்கை அரசாங்கத்திடம் நீதியை கோரி வருகின்றனர். அரசிடம் நீதியை கோருகின்ற தரப்புக்கு விக்கினேஸ்வரன் ஆதரவா?என்ற கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஐ.நா பாதுகாப்புச்சபை ஊடாக நீதியை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனை அரசியல் சாயத்தை பூசி இல்லாமல் ஒழித்து கோத்தா அரசை பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? எனவும் நாம் ஓ.எம்.பியை வெளியேற கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு இன்றுடன் 162 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் திரு விக்கினேஸ்வரன் இது வரைக்கும் எமது போராட்ட கொட்டகைக்கு வந்து ஏன் இதில் இருக்கிறீங்கள்?எதற்க்காக இருக்கிறீர்கள் ? என்று கூட கேட்காத விக்னேஸ்வரன் தனது கட்சி லாபத்திற்காக வாக்கு வேட்டைக்காக எமது தூய்மையான போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கிறார். காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை இலங்கை அரசு பிரித்தாழ்கிறது என்பது விக்கினேஸ்வரனுக்குத் தெரியாத விடயமல்ல ?அல்லது தெரியாது போல் நடிக்கிறாரா? தமிழின அழிப்பிற்கான நீதியை சொகுசான வாழ்க்கைக்காகவும்,தமது அரசியல் இருப்பிற்காகவும் விலைபேசி விற்ற கூட்டமைப்புப் போன்று கூட்டணி அமைத்து கும்மாளம் போட்டு தமிழர் தேசத்தை கூறுபோடும் விக்கினேஸ்வரனின் உண்மை முகம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இனிவரும் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை வேண்டி உறவுகளின் வலி சுமந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிந்தால் வரலாம் இல்லையேல் எமது போராட்டம் பற்றி வாய் திறக்கக்கூடாது.இல்லை கதைப்பேன் என நினைத்து எம்மைச் சீண்டினால் நீதியரசருக்கெதிராகவும் எமது போராட்டம் திரும்பும்.என்பதினை அறியத்தருகின்றோம் எனவும் காட்டமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/75996           
    • 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு என, அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அந்த பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/30-1-தரமனததல-இரநத-வலக-அரசஙகம-தரமனம/150-245789
    • திருக்கேதீஸ்வரத்தில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பு   -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாந்தை திருக்கேதீஸ்வர வீதியில், கேதீஸ்வரம் சிவத் தொண்டர்களால் தற்காலிக அலங்கார வளைவானது, இன்று காலை    அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், சிவராத்திரி தினத்தன்று  உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக  மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.  இதேவேளை, திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஷ்டிப்பதற்காக ஏற்கெனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு   நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி  கோரி இருந்தனர். அதற்கமைவாக, மன்னார் மேல் நிதிமன்றத்தால்  இன்றில் (19) இருந்து எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை  வரையான  5 நாள்களுக்கு  வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக, இன்றைய தினம் காலை குறித்த தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/தரககதஸவரததல-தறகலக-அலஙகர-வளவ-அமபப/72-245793