Jump to content

இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்!


Recommended Posts

இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்!

1579871971-9182.jpg
 
 
பல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன
 
இதனை தவிர்க்கும் வகையில் கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கேப்ஸ்யூலை கண்டுபிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இந்த கேப்சூலில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். இந்த கேப்சூல் ஒன்றை மட்டும் எடுத்து வாயில் போட்டு லேசாக கடித்தால் போதும் அதன் உள்ளே இருக்கும் பற்பசை வெளியே வந்துவிடும். அதன்பின்னர் பிரஷ் வைத்து பற்களை தேய்த்துக்கொள்ளலாம்
 
இதன் மூலம் பற்பசையை பேஸ்ட் அடைக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சிக்கு கனடாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து மற்ற நாடுகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய இதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் இது இந்தியாவுக்கும் வரப்போகிறது என கூறப்படுகிறது இதேபோல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மற்ற பொருட்களையும் கண்டு பிடிக்கப் போவதாக டாமியென் வின்ஸ் மற்றும் மைக் மெடிகாஃப் தெரிவித்துள்ளனர்,
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சோலியும் இல்லாதது எண்டால் எங்கடை கரியும் உமிச்சாம்பலும் தான்.....இதெல்லாம் எங்கை விளங்கப்போகுது?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாஞ்ச்  அண்ணையின்  கருத்துக்கு...  பேராசிரியர்  சுப. சோமசுந்தரம் ஐயா அவர்கள் எழுதிய கருத்தும்,  அதன் பின்... சசிவர்ணம் எழுதிய கருத்தும், மனதிற்கு இதமாக இருந்தது. சசி வர்ணத்தின், பார்வையில் தான்... நானும்  அந்தக் கருத்தை வாசித்தேன். அதற்குப் பின்... நடந்த உங்களது கருத்து பரிமாற்றங்கள் நெகிழ வைத்தது மட்டுமன்றி, நீங்கள் இருவரும்... பண்பட்ட மனிதர்கள் என்பதை எமக்கு காட்டியது. மனிதர் எல்லோரும்... எல்லா நேரமும், ஒரே... மன நிலையில் இருக்க  மாட்டார்கள். காலையில் உற்சாகமாகவும், மாலையில் சோம்பலாகவும்... இருப்பார்கள். சிலர், அதற்கு எதிரான...  சிந்தனையில் இருப்பார்கள். சில நாட்களில்...  முதல் நாள், நான் பதிந்த கருத்துக்களை.... அடுத்த நாள்... நானே, வாசிக்கும் போது...  எழுதிய எனக்கே... ஏன் அப்படி எழுதினேன் என்று, ஒரு மாதிரி இருக்கும். இது மனித இயல்பு  என நினைக்கின்றேன்.   உங்கள் இருவரின்.... கருத்துப் பரிமாற்றம், மிகவும் சிறப்பானது என்பதே உண்மை. முக்கிய பிற் குறிப்பு: நாங்கள், முக்கனிகளில்... ஒன்றான, மாங்கனியை பற்றி...  12 வருடத்துக்கு முன்பு,  2009´ம்  ஆண்டே... இதைப் பற்றி ஆராய்ந்து,  கலைமாமணி (டாக்டர், முனைவர்,PhD) பட்டம்  பெறுகின்ற அளவிற்கு, ஆராய்ச்சி  செய்துள்ளோம் என்பதனை, தங்களுக்கு... தாழ்மையுடன், தெரிவித்துக் கொள்கின்றேன்.      
    • லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.  சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk
    • தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.       தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,          'தமிழகத்திலுள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்கள் நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் அரசின் இலக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.         அந்தவகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன்' என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ் குடும்பங்களிடமும், அவர் தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டு சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனி தமிழும், தமிழகமும் வெல்லும்.         உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனதில் வைத்து தமிழக அரசு 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை திட்டங்களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.'என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்ற பெயரில் அமைச்சக பெயர் மாற்றம் : மு. க. ஸ்டாலின் அறிவிப்பு | Virakesari.lk
    • உங்கள் பதிலில் எந்த இடத்திலும் என்கருத்து பிழையென நிறுபிக்கப்படவில்லை. திருத்தங்களும் செய்யவில்லை மாறாக போராட்டம் பிழை என்கின்றீர்கள் . நான் போராடவில்லை.  எனவே அது பற்றிக் கருத்து கூறமுடியாது  பிரபாகரனின். மாவீரர்  உரைகளைப் படித்துப்பார்க்கவும். நான். அதிலிருந்து  அறித்ததையே  மேலே எழுதியுள்ளேன் .
    • உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம், (Tedros Adhanom)  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது.   கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உலக சுகாதார தாபனத்தின் பாராட்டுக்களைத் தெரதிவித்த டெட்ரோஸ், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம் கூறினார். முதல் கொவிட் அலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய தலைமைத்துவத்தை டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார்.  இதன் போது உலக சுகாதார தாபனத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாடுகளில் இலங்கையின் வெற்றி குறித்து கலந்துரையாடப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறையும் கொவிட் வைரஸ் பரவுவதை விரைவில் கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை தெரிவித்தது. இரண்டாவது கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு 20 மில்லியன் “அஸ்ட்ராசெனகா“ தடுப்பூசிகளுக்கான தேவை உலகளவில் உள்ளது. நாட்டில் அதன் தேவை 600,000 தடுப்பூசிகளாகும். அந்த தேவையை பூர்த்தி செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் உதவுமென தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார். “சைனோபார்ம்“ தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று டெட்ரோஸ்  குறிப்பிட்டார். அந்த அனுமதியுடன் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு “சைனோபார்ம்“ தடுப்பூசியை வழங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உலக சுகாதார ஸ்தாபனம் பிராந்திய மட்டத்திலும் அதன் கொழும்பு அலுவலகத்தின் ஊடாகவும் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். மூன்று நாட்களில் “சைனோபார்ம்“ தடுப்பூசிக்கு அனுமதி - ஜனாதிபதி  | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.