Jump to content

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை


Recommended Posts

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை

23-year-old student from Tamil Nadu was stabbed, 23-year-old Tamil student was stabbed at Toronto, கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கத்திக்குத்து, தமிழக மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து, Tamil girl stabbed in canada, tamil student attacked by unidentified man in canada, girl attack in Canada
 

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை

 

கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர…

கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் என்ற பெண் முதுகலை படித்துவந்தார். ரேச்சல் டொரோண்டொவில் பல்கலைக்கழக வளாகம் அருகே லெய்ட்ச் அவின்யூ அசினிபோயினே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, புதன்கிழமை காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் அவரைத் தாக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் மாணவியின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த ரேச்சலின் குடும்பத்தினர், தனது மகளைப் பார்க்க கனடா செல்வதற்கு விசா நடைமுறைகளை விரைவாக்க உதவி செய்ய வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உதவியைக் நாடியுள்ளனர்.

மேலும், மாணவி ரேச்சலின் உடல்நிலை ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு சீராக இருப்பதாவும் இருப்பினும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

கனடா போலீசார் பொதுமக்களுடன் உதவியுடன் மாணவி ரேச்சலை தாக்கிய அந்த மர்ம நபரைப் பற்றி விசாரித்துவருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த நபரின் வயது 20களின் மத்தியில் இருக்கும் என்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மாணவி தாக்கப்பட்டது குறித்து டொரோண்டோ போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடிவருகின்றனர்.

 


ரேச்சலின் சகோதரி ரெபேக்காவின் டி.என்.எம் உடன் பேசுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்க விசாவைப் பெறுவது எனது குடும்பத்தினருக்கு காலத்தின் தேவை. விசா செயல்முறை சிக்கலானது. நாங்கள் இன்னும் அதைக் கண்டுபிடித்து வருகிறோம். நாங்கள் வெளிவிவகார அமைச்சரின் உதவியை நாடுகிறோம். ”

ரேச்சலின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்கச் செல்ல விரைவாக விசாவைப் பெறுவது என்பது சிக்கலானது. நாங்கள் அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் உதவியை நாடியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ரேச்சல், மூளைக்கு இரத்த விநியோகத்தை துண்டிக்கும் வகையில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. ரேச்சலின் கழுத்துப் பகுதியில் பல முறை குத்தப்பட்டதாகத் தெரிகிறது, தவிர இருபுறமும் கீறல்கள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளனர்.

நன்றாகப் ரேச்சல் தற்போது கனடாவில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்டில் பல்கலைக்கழக உதவித்தொகை உதவியுடன் படித்து வருகிறார். ரெச்சல் இந்த ஆண்டு மே மாதம் பட்டம் பெற உள்ளார். மேலும், தனது செலவுகளுக்காக அங்கே அவர் பகுதிநேரமாக வேலை செய்து கொண்டுவந்தார்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து ரேச்சலின் உறவினர் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் படிப்பதற்காக கனடா சென்றார். அங்கே அவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். இந்த செய்தி உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. ரேச்சலின் பெற்றோர் குன்னூரில் இருப்பதாகவும் அவர்களுடைய மொபைல் எண்ணையும் குறிப்பிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கனடாவின் டொரோண்டோவில் இந்திய மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மீதான மோசமான தாக்குதலை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். அவருடைய குடும்பத்தினருக்கு எளிதில் விசா கிடைக்க நான் வெளிவிவகார அலுவலர்களிடம் கேட்டுள்ளேன். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பொன் எண்களைக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

https://tamil.indianexpress.com/international/23-year-old-student-from-tamil-nadu-was-stabbed-at-toronto-in-canada/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து!

January 25, 2020

RachelAlbertTNCanada.jpg?resize=750%2C50

கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

23 வயதான ரேச்சல் அல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த அல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்த அவர், பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பின், சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.

பாடசாலை, கல்லூரி கல்வியில்  சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் “விநியோகச் சங்கிலி மேலாண்மை” (Supply chain management) பயின்று வருகிறார்.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவற்துறை  ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த நபர், சுமார் 5´11´´ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டொரொண்டோ நகர  காவற்துறை அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொரொண்டோ நகர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேச்சலை பார்ப்பதற்காக, கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை அல்பெர்ட்டை இதுதொடர்பாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என்று அல்பர்ட் சந்தேகிக்கிறார்.

“எனது மகள்தான் அவளது வகுப்பறையிலேயே இளைய மாணவர். 30-35 வயதை சேர்ந்தவர்கள் கூட அவளுடன் படிக்கிறார்கள், ஆனால் ரேச்சல்தான் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறாள். இந்நிலையில், தன்னிடம் ´எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய்´ என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு. எனவே, அந்த சக மாணவர்தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், கடந்த வாரம்தான் ரேச்சல் தான் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

“எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று அல்பர்ட் கூறுகிறார்.

ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதுடன் பின்புறம் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக அவரது தந்தை கூறுகிறார்.

“எனது மகளின் உடல்நிலை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அவர் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக கூறினர். ஆனால், இதுதொடர்பாக ஏன் தங்களது செய்தியில் கனேடிய ஊடகங்கள் குறிப்பிடவில்லை என்று எனக்கு குழப்பமாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன். நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விடயங்களும் தெரிய வரும்” என்று ரேச்சலின் தந்தை அல்பர்ட் கூறுகிறார்.

ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் டொரொண்டோ நகர காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், தனது மகளின் உடல்நிலையை கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

BBC

 

http://globaltamilnews.net/2020/136534/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.