• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

இளங்கோ

யேசு அழைக்கிறார்" தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!!

Recommended Posts

யேசு அழைக்கிறார்" தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!!

- தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை"(மே 1-15) இதழில் வெளிவந்த கட்டுரை -

மதத்தை மூலதனமாக வைத்து வணிகம் செய்யும் மதவாதிகள் இப்போதெல்லாம் காலத்திற்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்-கள். கருத்தால் மாற்றிக் கொள்ளவில்லை. கரன்சிக்காக மாறிக் கொள்கிறார்கள். இந்து மதத்தைத் தக்க வைத்துக்கொள்ள தியானம், யோகம், வாழும் கலை என்று புதிய பெயர்களுடன் கும்பலைத் திரட்டுகிறார்கள். கிறித்துவப் பிரச்சாரகர்களோ இன்னும் புதிய வழியைத் தேடுகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன் 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வு சமயம் தேர்வில் வெற்றி பெற பிரார்த்தனை என்று ஒரு கூட்டத்தைத் திரட்டினார் திருவாளர் பால் தினகரன். இவர் நீண்ட நாட்களாக இயேசுவை அழைத்துக் கொண்டிருக்கும் தினகரனின் மகன். தொலைக்காட்சிகளில் பார்க்கலாம், தனது மனைவி, குழந்தைகளோடு ஆடல் பாடல் மூலம் பிரார்த்தனை செய்வார். எல்லா வயதினரையும் ஈர்க்க இப்படி பகுத்தறிவோடு (?) புறப்பட்டு விடுகிறார்கள். மக்களும் தங்களது மூளைக்கு வேலை கொடுக்காமல் முண்டியடித்துக் கொண்டு வரிசை கட்டுகிறார்கள்

இந்த பால் தினகரனும் இவரது தந்தை தினகரனும் பிரார்த்தனை செய்யும் படத்துடன் வெளியாகியுள்ள இயேசு அழைக்கிறார் என்ற நூலின் நகலை நமக்கு வாசகர் திருநெல்வேலி ப.குமார் அனுப்பி வைத்துள்ளார். அந்தப் படங்களைப் பாருங்கள். அட்டையில் சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்த சகோதரர்கள் கைகுலுக்குகிறார்கள். இலங்கைக்காகப் பிரார்த்தனை என தலைப்பு. இதழ் 2006 ஜூன் என நாளிடப்பட்டுள்ளது.

உள்பக்கத்தில் “ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9 தேதிகளில் (அதாவது 2006 ஏப்ரல்) சிறப்புக் கூட்டங்கள் மூலம் ஆண்டவர் தமது அன்பை வெளிப்படுத்தினார்” எனவும் “அரசு விருந்தினராக டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன், டாக்டர் பால் தினகரன் குடும்பத்தினர் வரவேற்கப்பட்டனர்” எனவும் செய்தி தரப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இலங்கை தேசியக் கொடியை பற்றியபடியே இலங்கையின் சமாதானத்திற்காக பிரார்த்தனை செய்தார்களாம். சர்வ மத குருக்களும் வருகை தந்தார்களாம். அடுத்த பக்கத்தில் தான் காமெடியே ஆரம்பம் படியுங்கள்.

டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் மூலம் வெளிப்பட்ட தீர்க்கதரிசனம்:

1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)

2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!

3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.

4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.

5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும், வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.

6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.

இதையெல்லாம்ஆண்டவர் அருளியதாக அள்ளிவிட்டுள்ளார் தினகரன். இந்த திருவாய் மலர்ந்ததெல்லாம் ஓராண்டுக்கு முன்பு. அதாவது கடந்த 2006 ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9-களில்.

இந்த ஓராண்டில் என்னென்ன நடந்து விட்டது ஈழ மண்ணில். எத்தனை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளார்கள். செஞ்சோலையில் பிஞ்சுகள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசிக் கொன்றதே. குடியிருப்பு-களில் குண்டு மழை பொழிந்தார்களே. சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீதே தாக்குதல் தொடுத்துக் கொன்றதே.

டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் மூலம் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனத்தில் இந்த உண்மைகளெல்லாம் வெளிப்படவில்லையே! ஏன்?

தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்தக் கறை படிந்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சேயின் கையைக் குலுக்கும் தினகரனுக்கு தன் தமிழினத்தை விட தன் மதமே பெரிதாய்ப் போய்விட்டது என்பதுதானே மெய்.

இந்த 2007ஆம் ஆண்டில் இலங்கை நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புச் செலவுகளுக்கு அதிக நிதியை மகிந்த ராஜபக்சே அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தினகரனின் தீர்க்க தரிசனத்தில் பாதுகாப்பு செலவு குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் தனது கடையைத் திறக்க வேண்டும் என்பதற்காக டி.ஜி.எஸ். தினகரன் வார்த்தைகளை வாரி இறைத்து விட்டு வந்துள்ளார்.

சிங்களப் பேரினவாத அரசு மக்கள் மீது குறி வைத்து பல ஆண்டுகளாக தாக்கி வருகிறது. அதன் இலக்குகளுக்கு இந்துக் கோயில்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பியதில்லை. ஜோசப் பராஜசிங்கம், என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தேவாலயத்திலேயே கொல்லப்பட்டார். இந்தச் செய்தியெல்லாம் அற்புதச் செய்தி சொல்லும் தினகரனுக்குத் தெரியாதா? இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ள அந்த இயேசுவும் வரவில்லை.

கடவுள், மத மோசடிப் பித்தலாட்டங்களுக்கு இது ஒரு உதாரணம்தான். இந்த இயேசு அழைக்கிறார், புத்தகத்தைப் போலவே, பிற மத நூல்களையும் ஓராண்டு கழித்து எடுத்துப் பாருங்கள். இதேபோல நல்ல ஜோக்குகளாகத்தான் இருக்கும். அந்தந்த சீசனுக்கு சரக்கு விற்கும் தந்திரம்தான் இந்த ஆன்மிக ஆசீர்வாதங்கள்.

அன்பை போதித்த புத்தரின் உருவச் சிலைகளை ஆராதித்துக் கொண்டு உயிர்களைக் கொன்று குவிக்கிறது சிங்களப் பேரின வாதம். அந்த அரசோடு இயேசுவை அழைக்கும் தினகரனும் கைகுலுக்குகிறார். மதம் மதவாதிகளுக்குப் பயன்பட்டிருக்கிறதேயொழிய மக்களுக்குப் பயன்பட்டதுண்டா?

நன்றி : www.webeelam.com

Share this post


Link to post
Share on other sites

மதம் என்றாலே மடமையின் பிறப்பிடம், உருப்படாதவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற உளறல்களின் களஞ்சியம். இதற்கு எம் மதமும் விதிவிலக்கல்ல.

மூட நம்பிக்கைகள் என்று பார்க்கும்போது கிறிஸ்தவமானது இந்துமதம் இஸ்லாமைக் காட்டிலும் பல மடங்கு மோசமாக உள்ளது.

அது மட்டுமல்ல மதமூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் பல தமிழர்களைப் பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு தமிழின உணர்வு கிடையாது.

Share this post


Link to post
Share on other sites

தவறு மதங்கள் எதுவுமே தவறான எதையும் கூறுவதில்லை..

மனிதனை செம்மைப்படுத்த பக்குவப்படுத்த நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவையே மதங்கள்..

மனிதன்தான அவற்றை தவறாக உபயோகப்படுத்துகிறான்..

விஞ்ஞானம் வளர முதல் எழுதப்பட்ட குரானாலும்..

பைபிளாலும்..

என் இந்துமத வேதங்களாலும் நான் கவரப்பட்டவன்..

சில வாசகங்கள் மிக ஆச்சரியமானது..அழ்ந்த கருத்தைக்கொண்டது..

நாம்தான் மதத்தை சுயநலத்துக்காக துஸ்பிரயோகம் செய்கிறோம்

Share this post


Link to post
Share on other sites

நானும் தினகரன் குடும்பத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

சகிக்க முடியவில்லை. சில வேளைகளில் பிரார்த்தனை செய்யும்போது நகைச்சுவையாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

தவறு மதங்கள் எதுவுமே தவறான எதையும் கூறுவதில்லை..

மனிதனை செம்மைப்படுத்த பக்குவப்படுத்த நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவையே மதங்கள்..

மனிதன்தான அவற்றை தவறாக உபயோகப்படுத்துகிறான்..

விஞ்ஞானம் வளர முதல் எழுதப்பட்ட குரானாலும்..

பைபிளாலும்..

என் இந்துமத வேதங்களாலும் நான் கவரப்பட்டவன்..

சில வாசகங்கள் மிக ஆச்சரியமானது..அழ்ந்த கருத்தைக்கொண்டது..

நாம்தான் மதத்தை சுயநலத்துக்காக துஸ்பிரயோகம் செய்கிறோம்

என் கருத்தும் அதுவே

ஆனால் ஏமாற நாம் தயாராக இருக்கும்வரை

ஏமாற்றுபவரை குறைசொல்லி என்ன பயன்???

நானும் 1990 களில் தினகரனின் திருவிளையாட்டுக்களைப்பார்த

Share this post


Link to post
Share on other sites

ஜயோ கடவுளே (இருந்தால்)இவங்களின்ட அட்டகாசத்தை தாங்கமுடியவில்லை

இப்படிதான் மெல்பனில் இலங்கையில் சமாதானம் வேண்டி கிறிஸ்தவாமைப்பை சேர்ந்தவர்கள் உபவாசம் இருந்து ஒரு நாள் பிரார்தனையும் மெல்பமில் சேர்தார்கள்.இதற்கு பிரபல வானொலிகளும் அவுஸ்ரெலியாவில் உள்ள தமிழ்பிரபல பத்திரிகைகளும் விளம்பரம் கொடுத்தன.

இவர்களின் இச்செயற்பாடு இவ்வளவு காலமும் போராடிய நம்மவர்கள் எதையும் சாதிக்கமுடியாது,இந்த உபாவாசம் மூலம் சாதிக்கலாம் என்ற தொனிபொருளில் அமைந்திருந்தது இவர்களின் பிரசாரம்.இவர்களால் ஏன் களத்தில் நின்று பிரசாரம் செய்யமுடியவில்லை புலத்தில் மட்டும் பிரசாரம் செய்கிறார்கள் இதை பற்றி நான் அடுத்த சிட்னி கோசிப்பில் எழுதுகிறேன்(என்னை பிரபலயபடுத்த தான்)

1 மாதத்திற்கு முதல் உலக சமாதன வேண்டு சாய்பாபா கோஷ்டிகளும் மெல்பனில் பாதஜாத்திரை நடத்தினார்கள் இதை நடத்தியதும் எம்மவர்கள் தான் இந்த பாதஜாத்திரையில் பாபா பஜனை அதிகம் பாடபட்டது அதுவும் ஆங்கிலத்தில்.ஏன் இவர்கள் புலத்திலோ அல்லது ஈராக்கிலோ சென்று பாதஜாத்திரை ஏன் நடத்த முடியாது?

Share this post


Link to post
Share on other sites

மதத்தின் பெயரில் வியாபாரம் செய்வோர் இல்லவே இல்லை என்று எவரும் கூறமுடியாது. அதுவும் நீங்கள் குறிப்பிடும் |இவான்ஜலிஸ்ற்| வகையறாக்கள் பற்றி கூறவே தேவையில்லை. நேற்றைய தினம், அமெரிக்காவில் இந்த இவான்ஜலிஸ்ற் இயக்கத்தை அரசியல் வீரியமுடையதாக்கிக ஜெரி பல்வெல்என்னும்

நபர் இறந்து போனது இந்தக் கூட்டத்திற்கு ஒரு பலத்த அடியாகக் கருதப்படுகின்றது. இந்த நபர் தான் ரெலிரபீஸ் என்ற சிறுவர் நிகழ்ச்சியில்வரும்அனிமேற்ர

Share this post


Link to post
Share on other sites

மதம் என்ற ஒன்று மனிதனால் மனிதர்களுக்காக படைக்கப்பட்டது.

அது பல காலங்களுக்கு முன்பிருந்தே மனிதனுடன் இழுபடுகின்றது.

அந்தந்த காலத்திற்கேற்ப மனிதனை பக்குவபடுத்த சில அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்குள் கடவுள் புகுத்தப்படுகிறார். அல்லது மனிதனிடத்தில் இருக்கும் கடவுள்பயத்தை காட்டி மனிதனை பக்குவபடுத்த அவர்கள் முனைந்திருக்கலாம்.

இது கலிகலாம் கடவுளை யார் அறவே நம்புவதில்லையோ அவன்தான் கோயில்களை கட்டுகிறான். கடவுளுக்கு தொண்டு செய்வதாக கூறி ஏமாருவோரின் பணத்தை கொள்ளை அடிக்கிறான்.

கடவுள் என்ற ஒன்றிருக்க எந்த வாய்ப்புமில்லை.

எந்த மதமானாலும் ஆதாரமாக தமது மூல நூல்களை சாடுகின்றனவே தவிர இந்த விஞ்ஞான உலகிற்கேற்ப விளக்கம் எவரிடத்திலுமில்லை. இதில் ஒரு வேடிக்கையிருக்கிறது. எல்லா மதங்களின் நுல்களிலும் கடவுளின் பெயர் குறிப்பிடபடுகின்றது. எல்லா மனிதர்களையும் படைத்தவர் அவரெனில் தானாக தோன்றிய அவருக்கு பெயர் சூட்டியிருக்க யாரும்மிருந்திருக்கவும் சாத்தியமில்லை. பெயர் தேவையுமில்லை. ஏன் அவருக்கு பெயர் ?

மற்ற மதங்கள் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு மனிதனிதனின் உருவத்தை வணங்குவதோடு நின்றுவிட்டது. இந்து சமயத்தை தொன்று தொட்டே ஏமாற்றுகாரர் வளர்த்ததால் பாம்பு எலி நாய்களும் கடவுளாகி இன்று பாம்புக்கு கோயில் கடடும் நிலையில் மனிதன்.......

கடவுளொருவர் இருந்திருப்பின் மனிதனை படைக்க வேண்டி எந்த அவசியமும் அவருக்கில்லை.

ஆனால் இந்த ஏமாற்றுகாரர்களுக்கு கடவுளை படைக்கவேண்டிய காரணம் நிறையவே இருக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

ஜயோ கடவுளே (இருந்தால்)இவங்களின்ட அட்டகாசத்தை தாங்கமுடியவில்லை

இப்படிதான் மெல்பனில் இலங்கையில் சமாதானம் வேண்டி கிறிஸ்தவாமைப்பை சேர்ந்தவர்கள் உபவாசம் இருந்து ஒரு நாள் பிரார்தனையும் மெல்பமில் சேர்தார்கள்.இதற்கு பிரபல வானொலிகளும் அவுஸ்ரெலியாவில் உள்ள தமிழ்பிரபல பத்திரிகைகளும் விளம்பரம் கொடுத்தன.

இவர்களின் இச்செயற்பாடு இவ்வளவு காலமும் போராடிய நம்மவர்கள் எதையும் சாதிக்கமுடியாது,இந்த உபாவாசம் மூலம் சாதிக்கலாம் என்ற தொனிபொருளில் அமைந்திருந்தது இவர்களின் பிரசாரம்.இவர்களால் ஏன் களத்தில் நின்று பிரசாரம் செய்யமுடியவில்லை புலத்தில் மட்டும் பிரசாரம் செய்கிறார்கள் இதை பற்றி நான் அடுத்த சிட்னி கோசிப்பில் எழுதுகிறேன்(என்னை பிரபலயபடுத்த தான்)

ஆமாம் இதற்காக இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்தார்கள். அதனைப் பார்க்கும்போதே நகைப்பாக இருந்தது. இலண்டனில் உள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள் பல அநாதரவாக இருக்கும்போது எம்மவர்கள் மட்டும் (அண்மைக்காலமாக) இளம் பெண்கள், சிறு பிள்ளைகளுடன் வீடுவீடாகச் சென்று மதப்பிரசாரம் செய்கிறார்கள். ''நாம் கிறீஸ்தவர்கள் அல்ல" என்று கூறினாலும் ''பரவாயில்லை இதனை வாசித்துப் பாருங்கள்" என்று தமது பிரச்சாரப் பத்திரங்களை திணிக்க முற்படுவார்கள். ''அதுவும் வேண்டாம்" என்று சொல்லியதும் ஒரு கடுமையான பார்வை பார்ப்பார்கள். ''இதற்காக உங்களுக்கு எவ்வளவு பணம் தருகின்றார்கள்" என்று கேட்கவேண்டும் போல் தோன்றும். இப்படிப் பல.....

Share this post


Link to post
Share on other sites

தினகரனில் பிழையில்லை. அவர் பின்னால் பாரப்பட்டு ஜெபித்துக்ககொண்டு திரியும் எம்மவர்களில்தான் பிழை. அங்கிலிக்கன் திருச்சபை பேராயரும் இலங்கை அரசின் விருந்துண்டபின் யுத்தத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். அதேபோல் தினகரன் போன்றவர்களும் விவிலியத்தை கையிலும் கொடுவாளை நெஞ்சிலும் கொண்டுள்ளார்கள். உண்மையில் இவர்கள் மக்களில் அன்பு கொண்டவர்கள் என்றால் வாகரையிலிருந்து வெளியேறி மரங்களுக்குக் கீழ் வாழும் மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூற வேண்டுமேயொழிய ராஜபக்சவின் இடியப்பத்துக்கும் சொதிக்கும் நாக்கை இழுத்திருக்கக்கூடாது. அல்லேலூயா.

Share this post


Link to post
Share on other sites

மதம் என்ற ஒன்று மனிதனால் மனிதர்களுக்காக படைக்கப்பட்டது.

அது பல காலங்களுக்கு முன்பிருந்தே மனிதனுடன் இழுபடுகின்றது.

அந்தந்த காலத்திற்கேற்ப மனிதனை பக்குவபடுத்த சில அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்குள் கடவுள் புகுத்தப்படுகிறார். அல்லது மனிதனிடத்தில் இருக்கும் கடவுள்பயத்தை காட்டி மனிதனை பக்குவபடுத்த அவர்கள் முனைந்திருக்கலாம்.

இது கலிகலாம் கடவுளை யார் அறவே நம்புவதில்லையோ அவன்தான் கோயில்களை கட்டுகிறான். கடவுளுக்கு தொண்டு செய்வதாக கூறி ஏமாருவோரின் பணத்தை கொள்ளை அடிக்கிறான்.

மனிதனிற்கு எவற்றின் மீதெல்லாம் ஈடுபாடுள்ளதோ அதையெல்லாம் வியாபார மூலதனமாக்குவது வியாபாரிகளின் இயல்பு. கல்வியில் தமிழர்க்கு ஈடுபாடு அதிகம் என்பதனால், இலவசமாய்ப் பள்ளியில் கற்பிப்பதற்குப் பதில் ரியூசன் நடாத்தினார்கள் பல வாத்தியார்கள். தாம்கற்பிப்பதற்காக ஊதியம் பெறுகின்ற பள்ளி வகுப்பறைளகிற் கூட பகிரங்கமாகத் தமது ரியூற்ரறிகளிற்கு வருமாறு பள்ளி மாணவர்களை அவர்கள் விளம்பரம் செய்து அழைத்தார்கள். நிலமை இவ்வாறு உள்ளதனால், அதாவது உண்மையான குருவாக அமைந்து அறிவைப் பகிர முயலாத வியாபாரிகள் தான் இன்று அதிகம் கற்பித்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பதனால், கற்பதைப் புறக்கணிப்போம் என்று எவரும் சொல்வதில்லை எப்போதும் சொன்னதில்லை.

விஞ்ஞானத்தை வைத்து வைத்தியர் முதல், மருந்துக் கொம்பனிகள் விஞ்ஞானிகள் என்று செய்யாத வியாபாரம் எதுவும் இல்லை. உதாரணத்திற்கு வறுமைப் பட்ட நாடுகளில் மாற்றப்படக்கூடிய வருத்தங்களால் மக்கள் மடிகையில், அவ்வருத்தங்களிற்கான மருந்து கையில் இருந்தும் கூட பணம் வராததால் அதை அனுப்பி வைக்க மறுக்கும் விஞ்ஞான வியாபாரம் தான் மேற்கில் உள்ளது. அதற்காக, உண்மையான மனித சேவையை அடிப்படையாகக் கொண்டியங்காத பணம் பண்ண விரும்புவோர் தான் இன்று வைத்தியராயும் விஞ்ஞானியாயும் வருகின்றனர் எனவே மருத்துவ விஞ்ஞானத்தைப் புறக்கணிப்போம் என்று எவரும் சொல்வதில்லை. மருத்துவ விஞ்ஞானம் அல்ல விஞ்ஞானத்தின் அனைத்துக் கூறுகளிற்கும் இது பொருந்தும்.

இது போன்றே சட்டம், பொறியியல், அரசியல், விவசாயம் என்று எந்தத் துறையை எடுத்தாலும் அங்கு முதலாளித்துவம் கால்பதிக்கத் தவறுவதில்லை. இவைகளைப் போன்று தான் மக்களின் கடவுள் தொடர்பான ஈடுபாட்டையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

எனவே உண்மையில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இதயசுத்தியான மனிதநேயத்தாலும் சமூகஅக்கறையாலும் உந்தப்பட்டு ஒருவர் கடவுள் நம்பிக்கை என்ற விடயத்தை அணுகும் போது, அங்கு கடவுள் நம்பிக்கை வியாபாரமாக்கப்படுவதால் அது ஒழிக்கப்படவேண்டும் என்ற கறுப்பு வெள்ளைப் பார்வையை ஒத்த வாதங்கள் உருவாக வாய்ப்பில்லை.

அது தவிர மக்கள் தமக்குள் என்னத்தை உணர்கின்றனர், தாம் உணரும் உணர்வுகள் பற்றி எதற்காக தம்மை ஒத்த உணர்வுடையோரிடம் அவர்கள் கருத்துப் பகிர்கின்றனர், அத்தகைய கருத்துப் பகிர்வுகளிற்கு அவர்கள் என்ன பெயர் கூட்டுகின்றாhக் என்பதெல்லாம் அவரவர் சுதந்திரம். சக மனிதரின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் மக்கள் எந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் அதை அவர்கள் நிறுத்தவேண்டும் என்று நினைப்பதற்கு எவரிற்கும் உரிமை இல்லை. மேலும, மாபெரும் அறிவாளி எனக்கே கடவுள் என்ற உணர்வு வரவில்லை இந்த அற்பப் பதர்களிற்கா கடவுள் உணர்வு வரும், சரி அப்படியே தான் வருகின்றது என்றாலும் கூடு அந்த உணர்வைப் பிரதிபலிக்க அதற்கு என்ன பெயர் வைக்கிறார்கள் என்று பாருங்கள,; சற்றுமே அழகாயில்லையே என்ன இரசனை இவர்களிற்கு முதலிய கேள்விகளைப்பொறுத்தவரை அவை அவற்றின் பேசுபொருளைக் காட்டிலும் பேசுபவரைப் பற்றி அதிகம் சங்கதிகள் சொல்கின்றனவோ என்று கூடச் சிலரிற்குத் தோன்றலாம்.

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கு மேலான சத்தி ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து. சமயம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது ஆனால் இன்று பணம் சம்பாதிக்க பகடக்காயாக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பெரியவர்கள் இங்கு பெரிய பெரிய கருத்துக்கள் கூறுகின்றார்கள். நானும் இங்கு ஏதாவது எழுத அனுமதி உண்டோ அல்லது பேசாமல் எனது வாயை மூடிக்கொண்டு இன்னும், இன்னும் சுமக்கின்ற பாவ மூட்டையை பெரிதாக்காமல் இருப்போமா? :lol::unsure::blink:

Share this post


Link to post
Share on other sites

இலக்கியன் சொன்னது தான் உண்மை! இதுதான் என் கருத்தும்

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கு மேலான சத்தி ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து. சமயம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது ஆனால் இன்று பணம் சம்பாதிக்க பகடக்காயாக்கப்பட்டுள்ளது.

இதை தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் கூட கடவுள் பயத்தினால்தான் இதை நம்புகின்றீர்கள்.

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

Share this post


Link to post
Share on other sites

மருதங்கேணி

இங்கே நான் எழுதினால் விதாண்டாவாதங்கள் தான் வரும். இருந்தாலும் ஒன்று சொல்கின்றேன்.

மனிதனால் என்றைக்கு உலகத்தை, அல்லது இந்தப் பிரபஞ்சத்தை தன் கட்டளைக்கு அமைய செலுத்த முடிகின்றதோ, அன்று வரைக்கும் எமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்ற நம்பிக்கையை மாற்ற ஒரு போதும் முடியாது. இலக்கியன் சொன்னது பயமல்ல. அது தான் உண்மை.

இன்று கண்டு பிடிப்புக்களை வைத்துக் கொண்டு, கடவுளை வென்று விட்டோம் என்று மார்தட்டிட முடியாது.

இன்றைக்கு மனிதனுக்குப் பிரச்சனை கொடுத்து வரும் இயற்கையைக் கூட மனிதனால் வெல்லவே முடியவில்லை. மழை வருவதையோ, புயல் வருவதையோ, இம்மியளவும் தடுக்க அவனால் முடிந்துள்ளதா? அதை அறிந்து தற்பாதுகாப்பு மட்டுமே செய்ய முடிகின்றதே தவிர, அதை நம் வழிக்குள் கொண்டு வரவே முடியவில்லை. இன்றைக்கு ஐநா சூழலில் வெப்ப அதிகரிப்பால் ஏற்படப் போகின்ற பிரச்சனை குறித்து எச்சரிக்கை விடுகின்றது.

என்றைக்கு உங்களால் இத்தனை தடையையும் தகர்க்க முடிகின்றதோ அன்று வந்து கடவுள் பற்றி சவாலை விடுங்கள். அதுவரைக்கும் எமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்பதை மறுப்பதற்கில்லை

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்குப் பதில் என்பது தேடலாகும். நாஸ்திக சிந்தை கொண்டிருந்த விவேகானந்தரும் இப்படி ஒரு தேடல் செய்யவெளிக்கிட்டுத் தான் சைவத் துறவியானார். நீங்களோ நானோ எப்படிப் பிறந்தோம், எதற்காகப் பிறந்தோம், எங்கிருந்து பிறந்தோம், மறைந்த பின் எங்கே போவாம் என்று தெரிந்திருந்தால் இத்தனை மனச்சஞ்சலங்கள் வந்திருக்காதே. அதற்கு வைத்திருக்கின்ற பதில்கள் தான் மதக்கோட்பாடு. உங்களுக்கு வேறு தெரிந்திதால் சொல்லலாம்.

Share this post


Link to post
Share on other sites

கடவுள் என்ற சொல் சங்ககாலத்தில் முனிவர்களை குறிபிட்டது என்று சில புத்தகங்கள் கூறுகிறது.சில உதாரணங்கள்.

"கடவுள் நண்ணிய பாலை போல

ஓரீனன் ஓழுகும் என்னைக்குப்

பரியலேன் மன்யான் பண்டொரு காலே"

வாயிலாக குறுந்தொகை பாட்டில்(203) துறவியாக முனிவர் கடவுள் என்று கூறபடுவது காண்க

மதுரைகாஞ்சியிலே

"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்

றொன்முது கடவுள் பின்னர் மேய

வரைதாழ் அருவிப் பொருப்பிற் பொருந"

என வரும் அடிகளில் கடவுள் என்னும் சொல்லுக்கு முனிவனாகிய அகத்தியன் என்று பொருள்.

Share this post


Link to post
Share on other sites

புத்தன்

கடவுள் என்று மனிதர்களைக் குறிப்பிடுவது தவறல்ல. அதையும் இந்து மதம் ஏற்றுக் கொள்கின்றது.

கதிர்காமத்திற்குச் செல்கின்ற பக்தர்கள் மற்றவர்களைச் சுவாமி என்று தான் அழைப்பார்களாம். அதன் அர்த்தம் மனித உருக் கொண்டு கடவுள் வருவார் என்ற நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர்களையும் கடவுளுக்கு நிகராக கணிக்கப்படுவது தான்.

கணவன், மனைவியைத் தேவி என்று அழைப்பதும், மனைவி கணவனைச் சுவாமி என்று அழைப்பதும் அந்த அர்த்தமாக இருக்கலாம்.

ஒரு மனிதன் இறந்து சவமாக இருக்கின்ற நிலையில் இருந்து அதைச் சிவமாக்கத் தான், இறுதிக்கிரிகைகள் நடத்தப்படுகின்ற விதம் அமைந்திருக்கும். அதாவது ஒரு மனிதன் இறந்த பின்னர் இறைவனோடு ஒன்றித்து விடுகின்றான் என்பதே அதன் பொருள். அதன் பின்னர் எட்டு நிகழ்வும், அந்தியோட்டியும், வருடாவருடம் திதி கொண்டாடி அவர்கள் வணங்கப்படுவார்கள். அப்போது இறந்தவர்களையே முதன்மைப்படுத்தி வணங்குவார்கள்.

சொல்லப் போனால் இந்து மதப் பக்தி என்பது மனிதவாழ்வில் ஒன்றித்தாதாக, கடவுளுக்கும் மனித உருக் கொடுத்து வழிபடுவதால் தான் இப்படியான ஒன்றித்த எண்ணங்களுக்கு காரணமாக இருக்கலாம். எனவே முனிவர்களைக் கடவுள்களாக விளிப்பதில் தவறில்லை.

Share this post


Link to post
Share on other sites

கடவுள் இருப்பது நல்லம்தான்.

காசுக்கு காசாப் போச்சு..

சாப்பாடுக்கு சாப்பாடாப் போச்சு...

இன்பத்துக்கு இன்பம்(பிரேமானந்தா)...

எல்லாம் சும்மாவே கிடைக்கும்.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே அதிக உயிர்களைப் பலி கொன்ற கொன்றுகொண்டிருக்கும் கண்டுபிடிப்பு மதம்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு இலையானுக்கு மனிதன் ஒரு கடவுள். இலையானின் அறிவுக்கு மனிதன் செய்வதெல்லாம் விந்தைதானே! அதுபோல மனிதர்களும் எதையாவது கண்டிருப்பார்கள் அந்தக்காலத்தில்.. (பறக்கும்தட்டு...? :o )

எனக்குத்தெரிந்து ஆத்திகர்கள் நாத்திகவாதிகளைவிட நன்றாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை. நான் இன்னும் ஆத்திகன்தான். ஆனால் முந்தின அளவுக்கு இல்லை.. :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

கடவுள் இருப்பது நல்லம்தான்.

காசுக்கு காசாப் போச்சு..

சாப்பாடுக்கு சாப்பாடாப் போச்சு...

இன்பத்துக்கு இன்பம்(பிரேமானந்தா)...

எல்லாம் சும்மாவே கிடைக்கும்.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே அதிக உயிர்களைப் பலி கொன்ற கொன்றுகொண்டிருக்கும் கண்டுபிடிப்பு மதம்.

எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் வருது

:P

புத்தன்

கடவுள் என்று மனிதர்களைக் குறிப்பிடுவது தவறல்ல. அதையும் இந்து மதம் ஏற்றுக் கொள்கின்றது.

கதிர்காமத்திற்குச் செல்கின்ற பக்தர்கள் மற்றவர்களைச் சுவாமி என்று தான் அழைப்பார்களாம். அதன் அர்த்தம் மனித உருக் கொண்டு கடவுள் வருவார் என்ற நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர்களையும் கடவுளுக்கு நிகராக கணிக்கப்படுவது தான்.

கணவன், மனைவியைத் தேவி என்று அழைப்பதும், மனைவி கணவனைச் சுவாமி என்று அழைப்பதும் அந்த அர்த்தமாக இருக்கலாம்.

ஒரு மனிதன் இறந்து சவமாக இருக்கின்ற நிலையில் இருந்து அதைச் சிவமாக்கத் தான், இறுதிக்கிரிகைகள் நடத்தப்படுகின்ற விதம் அமைந்திருக்கும். அதாவது ஒரு மனிதன் இறந்த பின்னர் இறைவனோடு ஒன்றித்து விடுகின்றான் என்பதே அதன் பொருள். அதன் பின்னர் எட்டு நிகழ்வும், அந்தியோட்டியும், வருடாவருடம் திதி கொண்டாடி அவர்கள் வணங்கப்படுவார்கள். அப்போது இறந்தவர்களையே முதன்மைப்படுத்தி வணங்குவார்கள்.

சொல்லப் போனால் இந்து மதப் பக்தி என்பது மனிதவாழ்வில் ஒன்றித்தாதாக, கடவுளுக்கும் மனித உருக் கொடுத்து வழிபடுவதால் தான் இப்படியான ஒன்றித்த எண்ணங்களுக்கு காரணமாக இருக்கலாம். எனவே முனிவர்களைக் கடவுள்களாக விளிப்பதில் தவறில்லை.

குறிப்பாக மக்கள் காலத்துக்கு காலம் மதம் மாறி கொண்டு வருகிறது உதாரணமாக தமிழரை எடுத்தால் வைதீக மதம்,சமண மதம் பெளத்த மதம்,வைணவ,சைவ,இப்பொழுது இந்துவாக,கிறிஸ்தவன்,இஸ்லாம் ஆக மாறி நிற்கிறார்கள் இதற்கு என்ன காரணம்?

கடவுள் நம்பிக்கை குறைவாலேயா அல்லது கடவுள் ஒன்றும் செய்யமாட்டார் நாம் செய்வதே செய்வோம் என்று செய்து கொண்டு போறானா.

Share this post


Link to post
Share on other sites

இதை தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் கூட கடவுள் பயத்தினால்தான் இதை நம்புகின்றீர்கள்.

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

வணக்கம் மருதங்கேணி உங்கள் கேள்விகளுக்கு தூயவன் நல்ல கருத்துக்கள் தந்துள்ளார்

இதை தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் கூட கடவுள் பயத்தினால்தான் இதை நம்புகின்றீர்கள்.

நான் கடவுள் பயத்தினால் இந்தக்கருத்தை முன்வைக்கவில்லை சிந்து வெளிநாகரிக காலத்தில் இருந்த மக்கள்தான் இயற்கை மீது கொண்ட பயத்தின் காரணமாக இடி மின்னல் மழை காற்று கல் மரம் என்பவற்றை கடவுளாக வழிபட்டார்கள் என ஆராட்சியாளர்கள் கூறுகின்றார். அந்தக்காலத்துக்கு அது பொருந்தக்கூடியது அமைந்திருக்கலாம். சித்தாந்த இலக்கியங்கள் கடவுள் பற்றிக்கூறும் கருத்து

எமது உடல் ஜடம் ( தானாக இயங்கமாட்டாதவை) இந்த உடலை இயக்க ஒரு சத்தி வேண்டும் அதுதான் ஆன்மா அல்லது உயிர் என்கின்றோம். அதே போல இந்த உலகம் ஒரு ஜடம் அதை இயக்கும் சத்திதான் கடவுள் என்கின்றது

அந்த சக்தி இவ்வுலகில் என்னதான் செய்தது?

இன்னமும் எதுவும் செய்யாமிலிருக்க காரணம் என்ன?

நாம் செய்யும் பாவங்களுக்கு ஒரு பரிவிடை தேட கடவுளை நம்புகிறோம் அவ்வளவுதான்.

கடவுள் ஒருவர் இருந்திருப்பின் எந்த அடிப்படை வசதியிமில்லாமல் மனிதனை படைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன்?

ஏன் அவர் மனிதனை படைக்க வேண்டும்?

உங்களுக்கு எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை யாராலும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய கேள்விதான் யாராவது பதில்தரவும். மேலிருந்து அப்பிள் பழம் விழுந்த போது யாருக்கு புலப்படவில்லை ஏன் கீழ் நோக்கி அப்பிள் பழம் விழுகின்றது என அதை நியூட்டன் கண்டு பிடித்தார் இதற்கு காரணம் பூவியீர்ப்பு விசை என. இதைப்போல இந்த உலகை இயக்கும் சத்தி எது எனக்கண்டு கொள்ளும் காலம் வரும்வரை ஏமாற்றும் வித்தைகள் தொடரும் .

கடவுளின் அவதாரம் அல்லது தூதுவர் என்று சொல்லும் சிலர் திருநீறு சிவலிங்கம் மணிக்கூடு என்பவற்றை அற்புதம் மூலமாக எடுப்பதாக சொல்கிறார்கள் அந்த சிவலிங்கம் அல்லது திருநீறு இந்த பிரபஞ்சத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகவே உள்ளன இது அற்புதம் என்றால் இந்த உலகத்தில் இல்லாத தாதுப்பொருள்களினால் அது ஆக்கப்பட்டு இருக்க வேண்டுமே :lol:

என்னைப்பொறுத்தவரை ஆதிமனிதன் பயத்தினால் ஏற்படுத்திய கடவுள் இன்று பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது என்பதேயாகும்

கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்து நல்ல கட்டுரை

Share this post


Link to post
Share on other sites

உலகை ஒரு சக்தி இயக்குகிறது அதுதான் கடவுள் என்று பலர் நினைக்கிறார்கள். உலகை இயக்கும் சக்திகளை அறிவியல்மேதை ஐன்ஸ்டீன் வரையறுத்துக் கூறுகிறார். மொத்தம் நான்கு சக்திகள்.

1. அணுக் கருவுக்குள் உள்ள லேசான ஈர்ப்பு விசை,

2. அணுக் கருவுக்கு வெளியே உள்ள வலுவான ஈர்ப்பு விசை,

3. மின் காந்த விளைவு,

4. புவி ஈர்ப்பு

அடுத்து நீயூட்டனின் முதலாவது விதிப்படி (அசைய நிலை விதி). ஏதாவது பொருளின் மீது விசை ஏதும் செலுத்தப் படாமல் இருந்தால் அது இருந்த இடத்தில்இருக்கும் அல்லது முன்பு இருந்தது போல் அசைந்து கொண்டு இருக்கும்.

ஐன்ஸ்டீன் கூறிய நான்கு சக்திகளும்ஏதாவது திடப் பொருள்மீது படும் போது இயக்கம் உண்டாகிறது. கடவுள்தான் உலகத்தை இயக்குகிறார் என்பது மிகைப் படுத்தப் பட்ட ஒன்று.

இந்த நான்கு சக்திகளையும் ஒன்று படுத்தினால் கடவுளின் இருப்பு பொய்த்து விடும் என்பது ஐன்ஸ்டீனின் கருத்தாக இருந்தது. ஆனால் அவரால் அது முடியவில்லை. அனால் அவருக்கு பின் வந்தவர்கள் அந்த நான்கு சக்திகளில் இரண்டை ஒன்றிணைத்து நோபிள் பரிசு பெற்றிருக்கிறார்கள். இனி வரும் விஞ்ஞானிகள் இந்த நான்கையும் ஒன்றிணைக்க மாட்டார்களா?

தத்துவார்த்த அடிப்படையில் பார்க்கப்போனால் கடவுள் இருக்கிறார் என்ன கருத்து இவ்வுலகத்தில் தோற்றம் பெறும் போதே கடவுள்இல்லை என்ற கருத்தும் தோற்றம் பெற்று விட்டது. கடவுள் இல்லை என அறிவியல் அடித்து கூறவில்லை ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் கடவுளின் இருப்பை பொய்ப்பித்துக் கொண்டுதான் வருகிறது.

Share this post


Link to post
Share on other sites

கடவுளை மனித உருவில காண விரும்புறவங்களும் காண விரும்பாதவங்களும்.. அடிப்பட்டிட்டு இருக்காங்க.. அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கத் தேவையில்ல..கடவுள் இல்லையா இருக்கா என்று.

அறிவியல் விளக்கங்கள் சக்தியின் மாறுபட்ட வடிவங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளை பற்றிச் சொல்கின்றனவே தவிர சக்தியின் முதல் எது என்பதை இன்னும் தான் தேடிக் கொண்டிருக்கின்றன. கடவுள் என்பது சக்தியின் மூலமாக இருக்கிறது..! அவ்வளவும் தான்..! இதை விளங்கிக்க ஏன் தான் கஸ்டப்படுறாங்க மனிசாள்..! :P :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

என்னைப்பொறுத்தவரை ஆதிமனிதன் பயத்தினால் ஏற்படுத்திய கடவுள் இன்று பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது என்பதேயாகும்

இதுதான் உண்மை.

இதுவே தான் என்னுடைய கருத்தும்.

Share this post


Link to post
Share on other sites