Jump to content

கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இது பரவினால் 18 மாதங்களில் உலகம் முழுவதுமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவ பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த மருத்துவ பரிவோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவம் எரிக் டொனர் கூறுகையில் முதற்தடவையாக சீனா புகான் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவியிருந்தமை தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் இந்த வைரஸ் இதற்கு முன்னர் இருந்த சார்ஸ் வைரஸை விடவும் வேகமாக பரவும் வைரஸாக காணப்படுவதாகவும் இது உலகம் முழுவதும் 6 மாதத்திற்குள் பரவும் நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஆட்கொல்லி வைரஸ் வேகமாக பரவிய சம்பவம் 1918 காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் ஸ்பானில் பரவிய காய்ச்சலை தொடர்ந்து அதனால் உலகம் முழுவதும் 500 மில்லியன் பேர் வரையிலானோர் பீடிக்கப்பட்டதுடன் 50 மில்லியன் வரையானோர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தற்போதைய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு பரவினால் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஆரம்பமான வைரஸ் தொற்று அவுஸ்திரெலியா , அமெரிக்கா , பிரான்ஸ் , சிங்கப்பூர் , கொங்கொங் , தாய்லாந்து , தென்கொரியா , நேபாளம் , தாய்லாந்து , தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-வைரஸ்உலகம்-முழுவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வைரஸ்ன்ரை  பெயர் ஆண்பாலா பெண்பாலா?😎
ஒரு சில செய்திகளை ஊடகங்கள் மூடி மறைக்குது போல தெரியுது. ரிவிட்டரிலை வாற ஒரு சில வீடியோக்களை பாக்க படு பயங்கரமாய்த்தான் கிடக்கு..
மருந்து வேறை இல்லை எண்டுறாங்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே கண்ட கண்ட களிசடைகளை உண்ணும் இனமெண்டால் அது உந்த சீனப்பெரும் இனம் தான்.
உந்த வெளவால் சூப்பாலைதான் உந்த வைரஸ் பரவ வெளிக்கிட்டது எண்டு இஞ்சை கதைக்கிறாங்கள்.

https://www.bild.de/video/clip/news-ausland/26-menschen-tot-was-diese-fledermaus-suppe-mit-coronavirus-zu-tun-hat-67534344,auto=false.bild.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உலகத்திலேயே கண்ட கண்ட களிசடைகளை உண்ணும் இனமெண்டால் அது உந்த சீனப்பெரும் இனம் தான்.
உந்த வெளவால் சூப்பாலைதான் உந்த வைரஸ் பரவ வெளிக்கிட்டது எண்டு இஞ்சை கதைக்கிறாங்கள்.

சிலர் வேகாத பாம்பு என்று சொல்லுறாங்கள் எது உன்மையென தெரியவில்லை 

சீனாக்காரன் இயற்கையை மொத்தமாக விழுங்க நினைக்கயில் இயற்கை அவனை விழுங்குகிறது அவ்வளவுதான் இதில் சம்பந்தமில்லாத பலர் பாதிப்படையும் போது கவலை ஏற்படுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் மூவர் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக இன்றைய மாலைச் செய்தி சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை.

எல்லாரும் வாசலில மஞ்சள் வாங்கி கட்டுங்கோ.... ஒரு வைரசும் அண்டாது 😂

வைரஸ் பின்வாசல் வழியா வராதா? என்பதாக கேள்வி கேட்டால் - உங்கள் மீது எம் கலாச்சார, மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக வழக்குப் போடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் பரவும் வேகம்  வலுவடைந்து வருகிறது - சீனா எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் வலுவடைந்து வருவதாகவும், இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று தெரிவித்துள்ளது.

china.JPG

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவில் 56 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சீனாவின் தேசிய சுகாதார ஆணையக அமைச்சர் 'Ma Xiaowei' மேற்கண்டவாறு கூறினார்.

கொரோனா வைரஸ் குறித்த அதிகாரிகளின் அறிவு குறைவாகவே உள்ளது, மேலும் வைரஸால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெளிவாக தெரியவில்லை.

இதுவரை சீனாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத் மற்றும் பயணத் தடைகள் மற்றும் விசேட நிகழ்வுகளை இரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவளை சீனவின் சந்தைகள், உணவகங்கள் மற்றும் இணைய தளங்களூடாக வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு நாடு தழுவிய ரீதியில் தடை விதிப்பதாக இன்றைய தினம் சீனா அறிவித்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/74179

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Is Beijing suppressing the true scale of infections? Nurse treating coronavirus sufferers in China claims 90,000 people have already been infected

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்தொழில்நுட்ப.. பரிசோதனைக் கூடங்களில் இருந்து தப்பியதாகக் கூட இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

அதாவது சீனா  உண்மையை மறைக்கின்றது அரசு சொல்வது போல் 1970 பேர் அல்ல 90ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சீனாவில் பாதிக்கப்ட்டுள்ளார்கள்

ஒரு மாகாணத்தையே(Hubei)மூடிமறைத்து தடை செய்திருக்கின்றார்கள் என்றால் ஓதோ ஒரு பெரிய அபாயம் இருக்கின்றதாகவே கருதவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

coronavirus-may-have-origins-in-china-s-biological-warfarelab-in-wuhan-4.jpg

கொரோனா எப்படி உருவானது?- சீனாவின் மருத்துவ ஆய்வுகூடம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

சீனாவை உலுக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்த நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் உயிர் ஆயுதங்கள் (Bio Weapon) தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகிற்குத் தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வு கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயற்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவியிருக்கலாம் என தி வொஷிங்டன் ரைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

மத்திய சீன நகரமான வுஹான் மாகாணத்தில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

coronavirus-may-have-origins-in-china-s-biological-warfarelab-in-wuhan-2.jpg

இதனிடையே, சீனாவில் வுஹான் மாநிலத்தில் மட்டும்தான் சீன அரசு உயிர்-ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வு கூடத்தை உருவாக்கி இருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து வுஹான் வைராலஜி ஆய்வு நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இந்த ஆய்வு நிறுவனம் மட்டுமே முழுமையாக ஆபத்தான கிருமிகளைப் பற்றி மட்டும் ஆய்வு செய்யும் நிறுவனமாகும்.

இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியும், சீனாவின் உயிர்-ஆயுதங்கள் குறித்து அறிந்தவருமான டெனி ஷோஹம் வொஷிங்டன் ரைம்ஸ் நாளேட்டுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “சீனாவின் வுஹான் நகரில் மட்டும்தான் அந்நாட்டு அரசு ஆபத்தான கிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தையும், ஆய்வுகூடங்களையும் உருவாக்கி நடத்தி வந்தது. இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

ஒருநேரத்தில் தங்களிடம் எந்தவிதமான உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுகூடமும் இல்லை என சீனா மறுத்தது. ஆனால், அந்நாட்டில் அதுபோன்ற ஆய்வுகூடங்கள் மூலம் உயிர் ஆயுதங்கள் தயாரிப்பது உலகிற்குத் தெரியவந்தது. இந்த ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கிறேன்.

பொதுவாக ஆய்வகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஆய்வாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுப் பரவியிருக்கலாம். அல்லது ஆய்வகத்தில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம். ஆனால், இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் இல்லை.

மேலும் கனடாவில் பணியாற்றும் சீனாவின் வைராலொஜி ஆய்வாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சீனாவுக்கு மாதிரிகளை அனுப்பி வருகின்றனர். அவ்வாறு அனுப்பும்போது பரவியிருக்கலாம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி சீனாவில் வுஹான் நகரில் 4 பெரிய ஆய்வகங்கள் செயற்பட்டு வருகின்றன. அதில் ஒரு ஆய்வகத்தில் உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன எனத் தகவல்கள் கிடைத்தன” என அவர் தெரிவித்துள்ளார்.

coronavirus-may-have-origins-in-china-s-biological-warfarelab-in-wuhan.jpg

ஆனால், சீனா இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. சீனாவின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு அமைப்பின் இயக்குநர் கவோ பு கூறுகையில், “வுஹான் நகரில் மிகப்பெரிய வீட்டு விலங்குகள், இறைச்சி சந்தை செயற்படுகிறது. இங்கிருந்துதான் கொரோனா வைரஸ் உருவாகியிருக்கும். இதற்கு வேறு காரணம் ஏதுமில்லை. அது அமெரிக்காவின் விஷமப் பிரசாரம்” எனத் தெரிவித்துள்ளார்.

வுஹான் ஆய்வு கூடங்களில்தான் மிகவும் ஆபத்தான சார்ஸ், ஹெ5என்1 இன்புளூவன்ஸா வைரஸ், ஜப்பானின் என்சிபொலிட்டிஸ், டெங்கு போன்ற வைரஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus-may-have-origins-in-china-s-biological-warfarelab-in-wuhan-3.jpg

http://athavannews.com/கொரோனா-எப்படி-உருவானது-ச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-in-France-latest-news-1233129-720x450.jpg

பிரான்ஸிலும் கொரோனா வைரஸிற்கு இருவர் இலக்கு!

சீனாவில் தீவிரமாக பரவிவந்த கொரோனா வைரஸ், தற்போது பிரான்ஸிலும் பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் பரவி வந்த கொரோனா வைரஸ், பிரான்ஸில் இரு நகரங்களில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஏக்னஸ் புசின் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி போர்டியாஸ் நகரில் உள்ள 48 வயதுடையவருக்கு கொரோனா வைரஸ், பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர் சீனாவில் இருந்து ஜனவரி 22ஆம் திகதி பிரான்சுக்கு வந்துள்ளார்.

இரண்டாவது நோய்த்தாக்கம் பரிசில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அது குறித்த தகவல்கள் தற்சமயம் பொதுமக்களுக்கு வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேறு யாருக்காவது இது போன்ற வைரஸ் தொற்று உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/பிரான்ஸிலும்-கொரோனா-வைரஸ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில், அந்நாட்டின் உயிர் ஆயுதங்கள் (Bio Weapon) தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

20-7am-arivu-delayed-tax-excemtion-sc-as

முருகதாசு அவ்வளவு தீர்க்கதரிசியா தோழர்.. 👌 ரி. என்.ஏவுக்காக அவையள் காஞ்சிபுரம் வருவினமோ..? 👍போதிதர்மன்தான் காப்பாற்ற வேண்டும் ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2020 at 12:17 AM, goshan_che said:

நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை.

எல்லாரும் வாசலில மஞ்சள் வாங்கி கட்டுங்கோ.... ஒரு வைரசும் அண்டாது 😂

வைரஸ் பின்வாசல் வழியா வராதா? என்பதாக கேள்வி கேட்டால் - உங்கள் மீது எம் கலாச்சார, மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக வழக்குப் போடுவோம்.

சீனாவில் - வுஹானுக்கும் மஞ்சள் வாங்கி கட்டி கொண்டு பயம் இல்லாமல் போய்வரலாம்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

coronavirus-gty-aa-200121_hpMain_16x9_992-720x450.jpg

கொரோனா வைரஸ் தாக்கம் -100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு இலக்காகி 80 பேர்  உயிரிழந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு இலக்காகி வருகின்றனர். அத்தோடு வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரம் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களில் போக்குவரத்து சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ரயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கம்-100-இற்/

Link to comment
Share on other sites

சீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்!

வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளிலிருந்து இராஜதந்திரிகளையும், தமது குடிமக்களையும் வெளியேற்ற உலகெங்கிலும் உள்ள நாடுகள் திட்டமிட்டுள்ளன.


அதன்படி பிரான்ஸ், வடகொரியா, ஜப்பான், கஸகஸ்தான், ஜேர்மனி, மொராக்கோ, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா, மியன்மார் மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களே இவ்வாறு தனது நாட்டு பிரஜைகளையும், இராஜதந்திரிகளையும் சீனாவிலிருந்து நாட்டுக்கு அழைத்துவர இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரான்ஸ்  வுஹானிலிருந்து தமது நாட்டினை கொண்டுவர பிரான்சின் முதல் விமானம் புதன்கிழமை பாரிஸிலிருந்து புறப்பட்டு, மறுநாள் சீனாவிலிருந்து தமது பிரஜைகளுடன் நாடு திரும்பும். இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இரண்டாவது விமானம் ஒன்றையும் சீனாவுக்கு அனுப்பி தமது பிரஜைகளை வரவழைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. எனினும் இதற்கான உறுதியான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. தென்கொரியா  தென்கொரியா தனது பிரஜைகளை வுஹானிலிருந்து அழைத்துவர விசேட விமானங்களை இந்த வாரம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ஜப்பான்  இன்றிரவு ஜப்பான் தமது நாட்டு பிரஜைகளை அழைத்துவர வுஹானுக்கு ஒரு சிறப்பு விமானத்தை அனுப்பவுள்ளது. இந்த விமானத்தில் சுமார் 200 பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர முடியும். எனினும் சுமார் 650 பேர் வரை நாடு திரும்புவார்கள் என்றும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதனால் டொக்கியோ புதன்கிழமைக்கு முன்னதாக வுஹானுக்கு அதிக விமானங்களை அனுப்ப ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள்ளானவர்கள் டோக்கியோவின் ஹனெடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவார்கள்.

அதே நேரத்தில் வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லலாம். எனினும் அவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

கஸகஸ்தான் : தமது நாட்டைச் சேர்ந்த 98 மாணவர்களை வுஹான் நகரத்தை விட்டு வெளியேற்ற அனுமதிக்குமாறு பீஜிங்கிற்கு கஸகஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக அந் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

ஜேர்மனி :சீனாவின், வுஹான் நகரில் வாழும் தமது நாட்டைச் சேர்ந்த 90 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை ஜேர்மனி ஆரம்பித்துள்ளது.

மொராக்கோ வுஹான் பகுதியில் பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய 100 தமது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்ற மொராக்கோ அரசாங்கம் ஸ்பெயின், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

அமெரிக்கா அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தனது வுஹான் தூதரகத்தின் உதவியுடன் தமது பிரஜைகளை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பல அமெரிக்கர்கள் ஜனவரி 28 திகதி வுஹானிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு அழைத்து வரப்படவுமுள்னர்.

பிரிட்டன் பிரிட்டன் மற்றும் ஏனைய வெளிநாட்டு பிரஜைகளை வுஹானை விட்டு வெளியேற உதவும் திட்டம் தொடர்பில் பங்காளி நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

கனடா வுஹான் பகுதியில் உள்ள 167 பிரஜைகளை தமது நாட்டுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையை கனடாக எடுத்துள்ளது.

இதுதவிற மேலும் எட்டு பேர் சீனாவில் உள்ள கனட தூதரக உதவியை நாடியுள்ளனர்,

ரஷ்யா ஹூபே மாகாணத்திலுள்ள தனது நாட்டினை அழைத்துவருவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யாவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து நெதர்லாந்து அரசாங்கம் வுஹானில் உள்ள தனது நாட்டின் 20 பிரஜைகளை அழைத்துவருவதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

மியன்மார் மியான்மாமர் அரசாங்கம் வுஹானில் உள்ள தமது நாட்டைச் சேர்ந்த 60 மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தயுள்ளது.

எனினும் குறித்த மாணவர்களை 14 நாட்களுக்கு பின்னர் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையையும்  மியன்மார் எடுத்துள்ளது.

வெடிப்பின் மையப் புள்ளியாகவும், 11 மில்லியனுக்கும் அதிகமான சனத் தொகையை கொண்டதுடதுமான ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவே தற்போதும் உள்ளது.

https://www.virakesari.lk/article/74360

Link to comment
Share on other sites

வெளிநாட்டுப் பயணத்தைக் கட்டுப்படுத்தும் சீனா

கொரனாவைரஸால் 106 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதன் மையமான மத்திய சீன நகரான வுஹானிலிருந்து தமது பிரஜைகளை வெளியேற்ற ஏனைய அரசாங்கங்கள் முயலுகையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்பாராத நடவடிக்கைகளை சீனா விரிவாக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு பயணஞ் செய்வதை பிற்போடுமாறு இன்று வலியுறுத்தியுள்ளது.

வுஹானிலுள்ள காட்டுவிலங்குச் சந்தையொன்றிலிருந்து கடந்த மாதம் பரவியதாக நிபுணர்களால் நம்பப்படும் குறித்த கொரனாவைரஸானது சீனா முழுவதும், டசின் கணக்கான ஏனைய நாடுகளிலும் எதிர்பாராத போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பரவியுள்ளது.

அதிகம் போக்குவரத்து நிகழும் சந்திரப் புத்தாண்டு விடுமுறை வந்த நிலையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக ஆரம்பத்தில் வுஹானையும், மத்திய ஹுபூ மாகாணத்திலுள்ள ஏனைய நகரங்களையும் கடந்த வாரம் அதிகாரிகள் மூடியுள்ள நிலையில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு சிக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் குழுச் சுற்றுப்பயணங்களை சீனா இடைநிறுத்தியிருந்ததுடன், நீண்ட தூர பஸ்கள் உள்ளடங்கலாக சீனாவுக்குள்ளுல் பரவலாக போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில், புதிதாக 26 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று அறிவித்துள்ள நிலையில், கொரனாவைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. புதிய இறப்புகளில் பெரும்பாலோனோர் வயது வந்தவர்கள் ஆவர். சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷங்காயிலும் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றல்களுக்கு உள்ளானோர் 4,515 என தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில், இது நேற்றைய எண்ணிக்கையின் ஏறத்தாழ இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும்.

கைத்தொழிற்பேட்டையான 11 மில்லியன் பேரைக் கொண்டுள்ள வுஹானில் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ள நிலையில், அங்குள்ள 650 ஜப்பானியர்களில் 200 பேரை வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் மூலம் இன்று மாலை வெளியேற்றுவதாக ஜப்பான் அறிவித்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்க இராஜங்கப் பணியாளர்கள், சில ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகளை ஏற்றிய விமானமொன்று ஐக்கிய அமெரிக்க வாடகை விமானமொன்று வுஹானிலிருந்து கலிபோர்னியாவை நோக்கி நாளை புறப்படவுள்ளது.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வளநடடப-பயணததக-கடடபபடததம-சன/50-244665

Link to comment
Share on other sites

கொரோனா வைரசை முன்கூட்டியே கணிக்கத் தவறி விட்டோம் - உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரசை கணிக்கத் தவறி விட்டோம் என்று உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கணிக்கத் தவறியதாக கூறி தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்காக உலக நாடுகளிடம் அந்த அமைப்பு மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் சீனாவுக்கு வெளியே 15 நாடுகளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/98519/கொரோனா-வைரசை-முன்கூட்டியேகணிக்கத்-தவறி-விட்டோம்---உலகசுகாதார-அமைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: drink

கொரோனா.... எக்ஸ்ரா.   இது தானா... அது?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பை தொடர்ந்து வரும் மற்றுமொரு வைரஸ்.

LASSA.jpg

சீனாவில் உருவாகிய உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்றுமொரு வைரஸ் உருவாகியுள்ளது.

இதனால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த புதிய வகை நோய் நைஜீரியாவில்  பரவிவருகின்றது.

நைஜீரியாவில் பரவிவரும் லஸ்ஸா (Lassa) வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த காய்ச்சல் காரணமாக நைஜீரியாவில் 11 மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் லஸ்ஸா வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நைஜீரியா அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

http://www.vanakkamlondon.com/கொரோனா-பாதிப்பை-தொடர்ந்த/

டிஸ்கி :

kaliyukam4-21-1500631010.jpg

* பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.

* மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.

* மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

* பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.

* கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.

கலி முத்திடிச்சா.. ரெல் மீ .. கிளியர்லி..😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.